சுற்று – ஒரு பக்க கதை

 

தீம் பார்குக்குள் நுழைந்ததும் சேகர், ‘அப்பா! ஜயண்ட் வீல்லே ஏறணும்பா’ என்றான்.

அம்மா, ‘’சேகர்! நோ இதுவரைக்கும் நீ ஏறினதில்லை. மேல போகும்போது ஜயண்ட் வீல்லே தலை சுத்தும், வயித்தைப் புரட்டும்’ என்று தடுத்தாள்,

ஆனால் சேகருடைய பிடிவாதமே வென்றது. ஆயிரம் பத்திரம் சொல்லி அம்மா சேகரை அப்பாவுடன் அரை மனதுடன் அனுப்பி வைத்தாள்.

ஜயண்ட் வீலில் ஏறி உட்கார்ந்ததும் சேகர் அம்மாவுக்குக் கை ஆட்டினான். கொஞ்சம் கொஞ்சமாக வீல் சுற்றவும் சேகர் மேலே மேலே சென்றான்.

‘அய்யோ! பயமா இருக்கே! இறக்கி விடறீங்களா’’ என்ற குரல் பயங்கரமாய்க் கேட்டது.

முழு சுற்றும் முடிந்த பின்னரே ஜயண்ட் வீல் நின்றது. ‘தள்ளுங்க! தள்ளுங்க! காத்து வரட்டும். முதல்ல தண்ணி கொடுங்க’ என்ற வார்த்தைப் பரிமாறல்கள்.

அம்மா நடுவில் படுத்திருந்தாள். ஏதும் அறியாதவராய் சேகரும் அப்பாவும் கூட்டத்தில் நுழைந்தார்கள்.

- மு.சிவகாம சுந்தரி (27-10-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஐஸ் கிரீம் பார்லரில் இவ்வளவு பிரச்சினை வரும் என எதிர் பார்க்கவில்லை தான். இனிமேல் பேச்சில் கவனம் தேவை. எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். என்னப்பா இது வெண்ணிலா ஐஸ் கிரீம் மேல தேன் மட்டும் உட்டு கொடுத்திருக்காங்க. எனக்கு சாக்கலேட் சிப்ஸ், ...
மேலும் கதையை படிக்க...
"சுத்தம் சோறு போடும்.." வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை நிறுத்தி நிதானமாக வாசித்து விட்டு வீட்டைச் சுற்றிப்பார்ப்பதற்காக நகர்ந்தனர் புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தவர்கள். “சும்மா சொல்லக்கூடாது. வீட்டை நல்லா பார்த்துப் பார்த்துதான் கெட்டியிருக்கான் உம்ம மருமவன்..” என்றார் ஒரு பெரியவர். “ஏன் பெரியத்தான் ...
மேலும் கதையை படிக்க...
அந்த கிணத்து மேட்டுகிட்ட களை எடுத்தாச்சா? கேட்ட ஆத்தாவுக்கும்..என்று தலையாட்டிய சாமியப்பண்ணனை கூர்மையாக பார்த்தார் ஆத்தா என்று அழைக்கப்படும் திரிவேதியம்மாள். அந்த கூர்மையான பார்வைக்கு பதில் தர முடியாமல் நெளிந்தார் சாமியப்பண்ணன். அதற்கு அர்த்தம் தான் சொன்னது பொய் என்று ஆத்தாவுக்கு தொ¢ந்து ...
மேலும் கதையை படிக்க...
மாலை நான்கு மணிக்கு என்னை சென்னை மத்திய சிறையில் இருந்து விடுவித்தார்கள். ஒரு திருட்டு கேஸ்ல ரெண்டு வருஷம் உள்ள போய்ட்டு வெளிய வரேன். எனக்கு வயது இருபது. விவரம் தெரிந்த நாளிலிருந்தே வீட்டுக்கு அடங்கியதில்லை. திருட்டு, ஏமாற்று, பொய், குடி, பீடி, ...
மேலும் கதையை படிக்க...
நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறைகள்
நடுநிசியைத் தாண்டிய மூன்றாம் ஜாமத்தில், அசைவற்றுப் புதருக்குள் பதுங்கியிருந்து, திடீரெனப் பிரவேசிக்கும் ஒரு துஷ்டவிலங்கைப் போல, ஊமையன் எங்கிருந்தோ அத் தெருவுக்குள் நுழைந்தான். அசைவற்றுக்கிடந்த அத்தெருவின் உறக்கம் அவன் எதிர்ப்பார்த்ததுதான். இத்தெரு வீடுகள் ஒவ்வொன்றும் எப்போதோ அவனுக்குள் பதிவாகியிருந்தன. தெரு மனிதர்களின் ...
மேலும் கதையை படிக்க...
மனதின் குரல்
ஒரு வீடு பெயரிடப்படுகிறது..
மேன்மக்கள்
கடைசி மூச்சு
நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)