சுமங்கலி வேஷம்

 

யமுனை நதிக்கு அப்பால் கிழக்கு டெல்லியின் அரசு அதிகாரிகளுக்கான காலனி. புலர்ந்தும் புலராத டிசம்பர் மாத அதிகாலை பனி மூடி இருந்தது. குளிர் சற்று அதிகம். ரஜாயின் கதகதிப்பில் எழுந்திருக்க மனம் இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தான் சுந்தரம். அம்மா எழுந்து விட்டிருக்க வேண்டும். சமையறையிலிருந்து சத்தம் கேட்டது.

வெளிகேட்டிலிருந்து காலிங் பெல் சத்தம் கேட்டது. இந்த அதிகாலைக் குளிரில்- யாராக இருக்கும்?. நியூஸ் பேப்பர்காரன் வருவதிற்கு கூட நேரம் இருக்கிறதே?. படுக்கையிலிருந்து ஹாலுக்கு வந்தான். அதற்குள், அம்மா கேட்டைத் திறக்க யத்தினிக்க யாராக இருக்கும் என்று சுந்தரம் பின்னால் சென்றான்.

திடீரென்று அங்கு இருந்த நபரைப் பார்த்து அம்மா திடுக்கிட்டடாள். பதறிப் போய், பின்வாங்கினாள். குமுறும் அழுகையை அடக்க, வாயைப் பொத்திக் கொண்டு வீட்டிற்கு உள்ளே ஓடினாள்.

சுந்தரத்திற்கு தூக்கி வாரிப்போட்டது. அம்மாவிற்கு என்ன ஆயிற்று?. அந்த நபர் யார்?. அம்மா ஏன் இப்படி- அந்த ஆளைப் பார்த்து பயந்து ஓட வேண்டும்?.

சுந்தரம் ஓடிப்போய் பார்த்தான. அழுக்குச்சட்டை- தாடி- பரட்டைத் தலையுடன் ஒரு முதியவர். குளிரைத் தாங்காத ஒரு மெல்லிய ஸ்வெட்டர். உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது யார் என்று புரியவில்லை. கூர்ந்து பார்த்தான்.

கண்கள் விரிந்தன. நரம்பு சிலிர்த்தது. அந்த குளிரையும் தாண்டி- உடம்பெல்லாம் வியர்த்தது. அந்த முகம்….. அந்த முகம்….. சில விநாடிகள் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்து விட்டு பிறகு குனிந்து கொண்ட அந்த முகம்….. அந்த சிவப்பேறிய கண்கள்…….. தனக்கு மிகவும் பரிச்சயப்பட்டது……… யார் அது?………

இப்போது புரிந்து விட்டது…… அம்மா ஏன் அப்படி ஓடினாள் என்று. அது அப்பாதான்……… கடைசியாக அந்த முகத்தை பார்த்தது எப்போது?……

அம்மா ஒரு காலையும், சுந்தரம் ஒரு காலையும் பிடித்துக் கொண்டு கதறக் கதற- அப்பாவின் மூர்க்கம் அதிகம் தான் ஆகியது.

‘வேண்டாங்க……. நம்ம சுந்தரத்தை பாருங்க ……. நாங்க ரெண்டு பேரும் எங்கே போவோம்?. இந்த வீட்டையும் வித்திட்டா….? – அம்மா பாக்கியம்.

எட்டி ஒரே ஒரு உதை. பாக்கியமும், சுந்தரமும் தெருவில் போய் விழுந்தார்கள்………..

இருபது வருடம் ஓடி விட்டது. எப்படி தங்களுடைய டில்லி விலாசத்தைக் கண்டு பிடித்திருப்பார்……? தங்கள் கிராமத்திற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையே?…………

சுதாரித்துக் கொண்டு, “உள்ளே வாங்க………!” என்றான் சுந்தரம்.

அப்பா உள்ளே வந்து, சோபாவில் உட்கார்ந்தார். உள்ளே அம்மாவின் விசும்பல் சத்தம் கேட்டது.

அப்போது சுந்தரம் ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவ்வளவாக புரியாத வயது. அப்பா தினமும் குடித்து விட்டு வந்து அம்மாவை போட்டு அடிப்பார். ஓடு மேய்ந்த வீடு. தாத்தாவிடமிருந்து வந்தது. அப்பாவிற்கு வேலை என்றோ – வருமானம் என்றோ ஏதும் கிடையாது.

வீட்டிற்கு பக்கத்தில் பள்ளிக்கூடம், இட்லி, பலகாரம் செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு விற்கும் சொற்ப வருமானத்தில் ஷீவனம். தாங்கள் சாப்பிட்டது போக, மீறும் பணம் மளிகைக் கடை பாக்கிக்கு சாpயாய் போய்விடும். பல நேரங்களின் கொஞ்சங் கூட ஈவு, இரக்கம் இல்லாமல் மளிகைக் கடைக் காரருக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும், அம்மாவை அடித்து, உதைத்து எடுத்துக் கொண்டு போய் குடிப்பார் அப்பா. பாக்கி கொடுக்க முடியாமல் போய், அடுத்த நாள், மளிகைக் கடைக்காரர் சாமான்; ஏதும் கொடுக்க மாட்டார்.

‘ஏற்கனவெ கொடுத்த கடனே பாக்கியிருக்கு- எப்படி புது சரக்கு கொடுக்கிறது?’
அம்மா கெஞ்சுவாள். சில நேரங்களில் மளிகைக் கடைக்காரர் மனம் இரங்கி சரக்கு கொடுப்பார். பாக்கி அதிகம் இருந்தால்- சரக்கு கொடுக்க மாட்டார். அன்றைக்கு இட்லி கடை கிடையாது. சுந்தரமும், அம்மாவும் பட்டினிதான்.

பக்கத்து ஊரில்தான், அம்மாவின் அண்ணன், அதாவது- தாய்மாமன்- வெங்கிட்டு மாமா இருந்தார். மாமா ரொம்பவும் நல்லவர். ஆனால், அத்தைக்கு அம்மாவையும், சுந்தரத்தையும் கண்டாலே, பிடிக்காது.

‘சனியன்கள் வந்துட்டது’ என்பாள். மாமாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தன் மனைவி மேல் இருக்கும் பயனத்தினால் அடங்கி விடுவார். சில சமயம் அத்தைக்கு தொpயாமல் சுந்தரத்திற்கு உதவி செய்தது உண்டு. பள்ளிக் கூட புத்தகங்கள் வாங்குவதற்கு.

சில சமயம், ‘நீ போய்டு பாக்கியம்’ என்று உள்ளே பார்த்துக் கொண்டே பயத்துடன் சொல்லுவார். அம்மா அதிக நேரம் வீட்டை விட்டு வெளியே இருக்க மாட்டாள். குடிப்பதற்காக, வீட்டில் உள்ள சமையல்; பாத்திரங்களை- இட்லி பானையை எடுத்து விற்று விடுவார் அப்பா என்கிற பயம்.

ஒரு நாள், பொரிய மீசையுடன் மூன்று நபர்களை அப்பா கூட்டி வந்தார்.

‘வீட்டை நல்லா சுத்திப் பாத்துக்குங்க. இப்பிடி மெயின் ஆன எடத்தில் வீடு கெடைக்காது……’

அம்மா பயந்து போய் கேட்டாள்.

“ஏங்க, வீட்டை வாடகைக்கு விடப் போறீங்களா? நாம எங்க போறது?”

அப்பா பலமாய்ச் சிரித்தார்.

“அடி போடி போக்கத்தவளே? இவங்களப் பாத்தா, நம்ம வீட்டை வாடகைக்கு எடுக்க வந்தவங்க மாதாரியா தோனுது? நம்ம வீட்டை வாங்கி……. இதை இடிச்சிட்டு இந்த இடத்திலே மிலிட்டரி ஓட்டல் கட்டப் போறாங்க……”

அம்மா பதறிப் போனாள்.

“என்னங்க, இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடறீங்க? இதையும் வித்திட்டா, நாம சாப்பாட்டிற்கு என்ன பண்ணறது? ஒண்டறதுக்கு வேற இடம் இருக்கா நமக்கு? இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்……” அம்மா வழியை மறித்தாள்.

அப்பாவுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது கண்கள் சிவந்தன.

“நீ யாரடி சம்மதிக்கிறதுக்கு? நீ போடி வெளியே!”

மளமளவென்று காரியங்கள் நடந்தன. அப்பா வீட்டை இழுத்து பூட்டி, மீசை நபர்களிடம் சாவியைக் கொடுத்தார். உதைத்து தள்ளிய மனைவி, மகனைத் திரும்பி கூட பார்க்காமல் சாராயக் கடையை நோக்கி நடக்க…..

எதிர் வீட்டு அம்மா, கடையிலிருந்து டீ தரவைத்துக் கொடுத்தார்கள்.

“பாக்கியம்! இந்த ஆளுக்கிட்ட உன்னால ஜெயிக்க முடியாது ….. நீ போய் உன் அண்ணனைப் பாரு…….”

கையில் பஸ்ஸுக்கு கூட பணம் கிடையாது. நடந்தே போனார்கள், மாமாவைத் தேடி…

அத்தை வீட்டில் இல்லை.

மாமாவுக்கு நடந்ததைக் கேட்டவுடன், தங்கச்சியும், மகனும் தன்னுடனேயே தங்கி விடுவார்களோ என்ற பயம் தொத்திக் கொள்ள………

“பாக்கியம்! உன் புருமூன், அந்த வீட்டை சாராயக் கடைக்காரனுக்கு வித்துப்புட்டான். இனிமே, சரிப்பட்டு வர்றாது. என்கிட்ட இருக்கிறதுக்கும், சரியாக வராது. உன்னோட அண்ணியைப் பத்தி ஒனக்கு தொரியும். உனக்கு ஒரு உதவி செய்யறேன். நம்ம போஸ்ட் மாஸ்டர் ரிடையர்டு ஆயிட்டு, டெல்லியிலிருக்கிற தன் மகனோட இருந்திக்கிடலாம்னு, சம்சாரத்தைக் கூட்டிக்கிட்டு போனாரு. போன இடத்திலே, அவங்க சம்சாரத்துக்கு பக்கவாதம் வந்து ஒடம்புக்கு முடியாம இருக்காங்களாம். அவரோட சம்சாரத்துக்கு பணிவிடை செய்ய ஆள் வேனும்னு லட்டரு போட்டிருந்தாரு. அதுல விலாசம் இருக்கு- பேசாம டெல்லிக்கு போயிடு……”.

‘ வேலைக்காரியாவா……”? அம்மா.
“நீ ஏன் அப்பிடி நெனக்கிறேடூ இங்கே நீ நாலு பேருக்கு இட்லி சுட்டுப் போட்டு, ரெண்டு பேரும் வயிறு கழுவுனீங்க…… அங்கேயும், அதேதான் செய்யப்போறே….. நான் டெல்லிக்கு ரெயில் ஏத்தி உடறேன். இவ்வளவுதான் என்னால செய்ய முடியும்……”

இரயில் ஏறும் போது அம்மாவின் முகம் தெளிவாக இருந்தது. கலக்கம் ஏதும் இல்லை. வண்டி ஸ்டேஷன் தாண்டியவுடன் தாலிக்கயிற்றை கழட்டி எறிந்தாள்.

டெல்லியில் பாக்கியமும், சுந்தரமும் நிறைய சிரமப்பட்டார்கள். ரிடையர்டு போஸ்ட் மாஸ்டர் வீட்டு வேலை கொஞ்சநாள்தான் தாக்குப் பிடித்தது. போஸ்ட் மாஸ்டர் மனைவி, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போக ……. வீட்டில் தங்க இடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். பின்னர் பல இடங்களில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம்…. பல வீடுகளில் வேலை- பல பலப் பல சோதனைகள்…….

இத்தனைக்கும் நடுவே பாக்கியத்தின் கனவு, கலனம் எல்லாம் ஒன்றே ஒன்றின் மீது மட்டும் தான் இருந்தது. அது சுந்தரத்தின் படிப்பு. படிப்பில் சுந்தரம் குறை ஏதும் வைக்கவில்லை. தமிழர்களால் நடத்தப்படும் பள்ளி ஒன்றில் முதல் மாணவனாக படித்து தேறி, இன்று மத்திய அரசுப் பணியில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறhன். சுந்தரம்…..

கிராமத்தைப் பற்றியோ, துரத்தி அடித்த அப்பாவைப் பற்றியோ சுந்தரமோ, அம்மாவோ நினைத்ததில்லை. டில்லியிலேயே, ஒரு பெண்ணைப் பார்த்து சுந்தரத்திற்கு கல்யாணம் செய்ய, பாக்கியத்திற்கு எண்ணம்……..

அப்பா, சோபாவில் குனிந்து, குருகி உட்கார்ந்திருந்தார். இப்போது அம்மாவிடமிருந்து அழுகைச் சத்தம் வரவில்லை. எழுந்து போய், தானே காப்பி போட்டு எடுத்து வந்து அப்பாவுக்கு கொடுத்தான் சுந்தரம். அப்பா வாங்கி குடித்தார். ரொம்ப பசி போலத் தொரிந்தது. டிபன் சாப்பிட விரும்புவதாகத் தோணியது.

சுந்தரம் அலுவலகத்திற்கு போன் செய்து, தான் இன்று விடுப்பு என்று கூறினான். காலனியில் அக்கம் பக்கத்தில் இருப்போர், வந்திருக்கும் முதியவர் யார் என்று தொரிந்து கொள்ள பிரயத்தனப்பட்டனர்.

அம்மா கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வந்தாள். நேராய் குளியலறை சென்றhள். வெளியில் வரும்போது நெற்றியில் மஞ்சள், குங்குமம்…… கழுத்தில் புதிதாய் தாலி….. சுந்தரத்திற்கு வியப்பாய் இருந்தது.

அம்மா பேசினாள்……

“உன் அப்பா செஞ்சதையெல்லாம், மன்னிச்சிட்டேன்னோ, எனக்கு ஒரு சுமங்கலிக் கோலம் கிடைக்கனும்னோ, இதை நான் செய்யலே. உன்னோட அப்பா இறந்திட்டார்னு, நாம சொல்லியிருக்கிற இந்த சுழ்நிலையிலே, இவர் வீட்டுக்கு வந்திருக்காரு. நான் தொடர்ந்து விதவைக் கோலத்தில இருந்தா, அக்கம் பக்கத்திலே ஏதாவது பேசுவாங்க…… பல குழப்பத்தை இது உண்டு பண்ணும். அது, உனக்கும் நீ இருக்கிற வேலைக்கும் தொந்திரவா போயிடும்…… உன் கௌரவத்திற்கு குறைவா போயிடும்….. உனக்கு ஆக வேண்டிய கல்யாணத்திற்கு இது தடையா போயிடலாம்….. நாம இறந்து விட்டதா, நெனச்சுகிட்டு இருக்கிற உன்னோட அப்பா திரும்பக் கெடச்சிட்டார் வைச்சுக்கணு[ம்..... எப்பவும் உன்னோட, சந்தோமூம், கவுரவம்தான் எனக்கு முக்கியம்....... அதுக்காக, இந்த சுமங்கலி வேஷத்திற்கும் நான் தயார்தான்.....”

அம்மா பேசிக்கொண்டே போனாள், சுந்தரம் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வள்ளிக்கு எதையும் நம்ப முடியவில்லை. தனக்கு நடந்தது கல்யாணம் என்பதும், இனிமேல் விளையாட்டு வாத்தியார் குமார் தான் தனக்கு புருஷன் என்பதும் ...
மேலும் கதையை படிக்க...
அணு ஆயுதத்தின் தீமை பற்றி  சிறுகதை எழுத வேண்டும் என்று ஒரு போட்டி வைத்தார்கள் எங்கள் கல்லூரியில். நான் இந்த சிறுகதையை எழுதிக் கொடுக்க, அணு ஆயுதத்தை பற்றி எழுதச் சொன்னால், இது என்ன கத்திச்சண்டையைப் பற்றி எழுதி கொடுத்து இருக்கிறாய், உன்னுடைய ...
மேலும் கதையை படிக்க...
மதுரையின் பிரபல மருத்துவமனை அது. சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தனம், தன்னை தள்ளிக் கொண்டு வரும் இசக்கியை திரும்பி பார்த்தாள். டில்லியில் கூட இதே மாதரிதான் அந்த மருத்துவமனைக்கும் ஓடிவந்தான்.. இவனுக்கு என்ன ஆயிற்று... இவன் என்னமோ சொல்லுகிறானே... இவன் உண்மையாகத்தான் சொல்லுகிறானா.. தான் தொட்டதெல்லாம் துலங்காது என்றும், ...
மேலும் கதையை படிக்க...
பங்களாவின் கேட் அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை, மீனாட்சி ஏற்கனவே பார்த்திருக்கிறாள். தங்கள் அரிசி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்யும் சதாசிவத்தின் பெண் தான் அவள் என்பது புரிந்தது. பத்து வயது இருக்கும் என்று தோன்றியது. தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்த ...
மேலும் கதையை படிக்க...
டில்லிருந்து சுப்பு கிளம்பும் போது, சக ஊழியன் திலீப் கிண்டலடித்தான். “சேர்மன் கூட ஹெலிகாப்ரில் இது வரைக்கும் பயணித்திருப்பாரா என்பது சந்தேகம். உங்களுக்கு இந்தவாய்ப்பு கிடைத்திருக்கு”. கௌகாத்தியில் இறங்கியவுடன், வட கிழக்கு மாநிலம் ஒன்றின் தலை நகருக்கு புறப்பட தயாராய் இருந்தது அந்த ...
மேலும் கதையை படிக்க...
விளையாட்டு வாத்தியார்
கத்திச் சண்டை
மீண்டும் முறை மாப்பிள்ளை…
ரேவதிக்கு நாய்க் குட்டி வேணுமாம்…
தாமதமான மன்னிப்பு

சுமங்கலி வேஷம் மீது 6 கருத்துக்கள்

 1. Pugal says:

  வெரிகுட் ஸ்டோரி. கபாலியின் மனமாற்றம் ஏற்படுத்த உண்டான காரணத்தை இன்னும் அழுத்தமாக கூறலாம்.

 2. Pugal says:

  அருமையான கதை. அறிவுபூர்வமான அன்னையின் தியாகம் நெகிழ செய்கிறது.

 3. Deborah says:

  A great story line!!

 4. manovasant says:

  கதை நன்றாக இருந்தது. மிகச் சாதாரண மனிதர்கள் பல சமயம் மிக அற்புதமான முடிவுகளை கூட‌அனாசியமாக எடுத்து விடுவார்கள்.

 5. Sankar Kottar says:

  அருமையான கதை, எளிய நடையில் ,தீர்க்கசூமங்கலியாக திகழ்கிறது

 6. Manimekalai says:

  Valavan, the story is touching. Narration is good. Keep it up.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)