சுட்டும் விரல் – திருக்குறள் கதை (448)

 

தவறு எங்கே நடந்தது ?. இந்த வருட விற்பனையும் லாபமும் கடந்த ஐந்து வருடங்களை விட குறைந்திருந்தது. வீட்டில் மனைவியிடம் என் குழப்பத்தை பகிர்ந்து கொண்டேன்.

மனைவி ஆரம்பித்தாள் ” ஒரு வேளை நீங்கள் எல்லா டிபார்ட்மெண்டுக்கும் டார்கட் சரியாக … … அதற்குள் இடை மறித்து சொன்னேன் எல்லா டிபார்ட்மெண்டுக்கும் டார்கட் நிர்ணயித்ததே நான் தானே. கடந்த ஒரு வருடமாகவே பிளானிங், உற்பத்தி, விற்பனை, மார்க்கட்டிங் எல்லோரையும் விடாமல் வேலை வாங்கி இருக்கிறேன்.

மனைவி மீண்டும் ஆரம்பித்தாள் ” ஒரு வேளை முழு ஒத்துழைப்பு கொடுக்காமல்……..என்றவுடன் மறித்து சொன்னேன். மீட்டிங்கிலேயும் எல்லாரும் ஒத்துழைத்தார்கள், என் கருத்தை ஒப்புக் கொண்டார்கள். யாரும் எதிர்த்துப் பேசினதே இல்லையே ? என்றேன்.

ஒரு வேளை அனுபவம் இல்லாமல்……… என்ற மனைவியை மேலே பேச விடாமல் சொன்னேன் ” எல்லோரும் சுமாரான அனுபவம் உள்ளவர்கள்தான், . நான் டெக்னிகலாக சொல்லுவதை மறுத்துப் பேசும் அளவு யாரும் முதிர்ந்தவர்களோ, அனுபவசாலிகளோ கிடையாது . ஆனாலும் நான் தான் கிட்டத்தட்ட எல்லா டிபார்ட்மெண்டிலும் அனுபவம் உள்ளவன் ஆச்சே ? என்றேன்.

சிரித்துக் கொண்டே “வீட்டைப் போல்தான் ஆபீசிலும் இருப்பீர்களோ” ? என்றாள் ஒரு உள் அர்த்தத்துடன். .

புரியவில்லையே ! என்றேன்.

என்னை ஒரு முறை கூட முழுசாகப் பேசவே விடவில்லை. நான் என்ன கருத்தை சொல்லப் போகிறேன் என்பதை நீங்களாகவே யூகித்து ஒரு முடிவுக்கும் வந்து விட்டீர்கள். இதில் என்னுடைய கருத்துக்கோ அல்லது மாற்றுக் கருத்துக்கோ எங்கே இடம் கொடுத்தீர்கள் ?

உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான் ஆனாலும் உங்கள் முடிவுகளில் உள்ள தவறுகளைச் நேருக்கு நேராக சுட்டிக் காட்டும் ஒரு சூழ் நிலையை நீங்கள் உருவாகித் தரவில்லை.. பலர் கூடி வேலை பார்க்கும் இடத்தில் மாற்றுக் கருத்துகளுக்கு மரியாதையும் மறுத்துப் பேசுபவர்களுக்கு மதிப்பும் இல்லையென்றால் இப்படித்தான் ஆகும் என்றாள்.

இதைத்தான் திருவள்ளுவர் 448 வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் ( 448 )

பொருள் : குறையை எடுத்துச் சொல்லுவோர் அருகில் இல்லாத போது, கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் கூட மன்னன் கெட்டுப் போவான்.

இதில் எனக்குப் புரிந்தது ஒன்று புரியாதது ஒன்று

புரிந்தது : இந்த தாடி வைத்த வள்ளுவக் கிழவன் எப்படியெல்லாம் யோசித்திருக்கிறான்.

புரியாதது : மனதில் பட்டதை பளிச்சென்று, பட்டவர்த்தனமாய்ச் சொல்லும் இந்த மேலாண்மைத் தத்துவத்தை இந்த மனைவிமார்கள் எங்கிருந்து கற்றார்கள் ? 

தொடர்புடைய சிறுகதைகள்
இதெல்லாம் சகஜம்தான்
பத்து மணிக்கு உயிரோடு இருந்த அந்த மூன்று பேரும் பத்து இரண்டுக்கு உயிரோடு இல்லை. அந்த சாரம் பத்தாவது மாடியில் இருந்து சரிந்து விழுந்த போது அதில் வேலை செய்து கொண்டிருந்த அந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த பில்டர் ...
மேலும் கதையை படிக்க...
சுகவனம் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் மிகவும் தளர்ந்து போயிருந்தார். சார் ! அந்த சிவராஜ் உங்களுக்கு செஞ்ச துரோகத்திற்குப் பிறகாவது நான் சுதாரிச்சிருக்கனும் ! இப்படி ஆயிடுச்சே ! என்று புலம்பினார். நான்கு வருடம் முன்பு நானும் ...
மேலும் கதையை படிக்க...
நான் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, சரியாக சென்னை எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்குள் வந்துகொண்டிருந்தது. ரயிலில் ஏறி என் சீட்டில் ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டேன். நிதானமாக பெய்து கொண்டிருந்த மழை ரயிலின் கூரையில் சீராக தாளம் போட்டுக்கொண்டிருந்தது. வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். மனது, மாலை ...
மேலும் கதையை படிக்க...
மனிதனைப் படைத்த போது கடவுள் நினைக்கவில்லை மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. அதே போல், மதங்களைப் படைத்த போது மகான்களும் நினைக்கவில்லை, மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. வழக்கம் போல இன்றும் கடவுள் தன் வேலையைத் தொடங்கினார்.. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களின் மனதை ...
மேலும் கதையை படிக்க...
மற்றவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வாஸ்து பார்த்துக் கட்டியதால்தான் தன்னுடைய புதுவீடு ராசியாகி விட்டதாக சொக்கலிங்கம் உறுதியாக நம்பினார். வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லிடமும் ஒவ்வொரு மரத்திடமும் கூட அவர் பேசியிருப்பார் அப்படி ஒரு ஈடுபாட்டுடன் அந்த ...
மேலும் கதையை படிக்க...
இதெல்லாம் சகஜம்தான்
கெட்ட நேரம் – திருக்குறள் கதை (109)
விருந்தோம்பல்
இன்னொரு கடவுளின் தரிசனம்
வாஸ்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)