Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

சிவேன சகநர்தனம்

 

அந்த அû என் மனம் போலவேதான் என எனக்கு தோன்றியது. ஊர் திரும்பும் பயணத்திற்கு தயாராகி அû முழுவதையும் இன்னொரு முû நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். இரவில் வீசிய காற்றில் தரையில் பந்து விழுந்த ஒரு இலை மட்டும் அûயின் சீரொழுங்கை குலைத்திருந்தது. அனுராதாவைக் குறித்துள்ள என் அவலங்கள் போல. அந்த ஒற்û இலை þ காற்றில் வட்டமடித்து தரையில் உரசி சலனமிட்டு இரவு முழுவதும் என்னை உருத்திக்கொண்டிருந்தது. வீடு மிகவும் நிசப்தமாயும், ஏகாந்தமாயும் எனக்கு அனுபவப்படத் தொடங்கியது.

அனுராதா கீழே என்ன செய்துக்கொண்டிருப்பாள்? நேரம் பிற்பகலாகியிருந்தது. ரமேஷ் திரும்பி வரும் நேரம் ஆகியிருக்குமோ? நான் மெல்ல கதவைச் சாத்திவிட்டு கீழ்தளத்திற்கு நடந்தேன். படிக்கட்டில் பாதி இங்குவதற்குள் நான் பார்த்தேன். அனுராதா வரவேற்பûயில் அவளுடைய திருமண போட்டோவை துடைத்துச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்ததை.

அந்தக் காட்சி þ அது என் மனது முணுமுணுத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கான துல்லியமான பதிலாய் தோன்றியது. அதோடுக் கூட மனதிற்கு ஒரு ஆசுவாசம் ஏற்பட்டது. ஒரு பவை சிகடித்து பந்து போனதைப் போல! அனுராதா என்று அழைத்துக்கொண்டு நான் சென்தும் þ இது சிறுபிள்ளைத்தனமாய் இருக்கலாம், ஆனாலும் þ “என்ன, புப்பட வேண்டிய நேரம் வந்துடுச்சா அம்மா?’ அப்படி ஏதாவது அவள் அதிசயமாய் கூலாம் என்றுதான் நான் நினைத்தேன்.

இல்லையென்ால் பயணத்தை ஒத்திப்போட வைப்பதற்கு ஒரு வற்புறுத்தல், முன்பு இருந்ததுபோல. ஆனால் அனுராதா சொன்னதோ þ “”எப்படி காற்டித்தது நேற்று! இந்த வீட்டையே அடித்துத் தூக்கிக்கொண்டு போய்விடும் என்று தோன்றியது.” ஒரு மெல்லிய புன்முறுவல், அவளுடைய உதடுகளில் நெளிவது எனக்குத் தென்படவும் செய்தது. ஒரு அன்னைக்கே உரிய இயல்பினால் இருக்கலாம்.

நான் திடீரென்று சுதாரித்துக்கொண்டது என்னவோ, அந்த வார்த்தைகளில் காற்று இன்னும் ஓயாது, வீசிக் கொண்டிருக்கிது என்று எனக்கு தோன்றியது. அந்த காற்றில் மீண்டும் ஒரு இலை பந்து விழுவது அûயிலேயா இல்லை என் மனதிலேயா என்ùல்லாம் ஒருவித திகிலில் மூழ்கினேன். பதிலுக்கு அவளோடு சிரித்திருப்பேனோ இல்லை ஏதாவது கூறியிருப்பேனோ என்று எனக்கு நிச்சயமில்லை. சோபாவில் சாய்ந்து கண்கள் மூடியது மட்டும் ஞாபகமிருக்கிது.

என் மனதில் மூன்று மாதத்திற்கு முன் நிகழ்ந்த ஒரு சாயங்காலம் வந்து நிரம்பிக்கொண்டிருந்தது.

விவாகரத்து தீர்மானத்தில் உறுதியாய் நின்றிருந்தனர் அனுராதாவும், ரமேஷøம். ஓயாது பெய்யும் மழை. விவாதங்களும், குற்ச்சாட்டுகளும் சீறிப் பாய்ந்து பரஸ்பரம் சகதியை வீசி எறிந்த ஒரு சாயங்காலம். எவ்வளவு பெய்தாலும் சுத்தமாகாத உலகம் போல அவ்விருவருடைய மனசுகள். ஒரு கடைசி முயற்சியாக, கவுன்சிலிங்கிற்கு ஒத்துக்கொண்ட பிகு மட்டுமே விவாகரத்து என் முடிவுக்கு அவர்களை கொண்டுவர நானும் அனுராதாவின் அப்பாவும் முயன்று களைத்த அந்த சாயங்காலம். இறுதியில் வானத்தைப் போல வழிந்துக்கொண்டிருக்கும் மனதுடன் எங்களின் ஊர் திரும்பும் பயணம்.

காற்û குறித்த அனுராதாவின் வார்த்தைகள் வரப்போகும் மழையை பற்றிய ஒரு முன்னறிவிப்பு என்பதுபோல இப்போது அந்த சாயங்காலத்தை நினைவிற்கு கொண்டு வந்தது எது என்று எனக்கு விளங்கவேயில்லை.

மூன்று மாத “கவுன்சிலிங்’கிற்கு பிகு அனுராதா ரமேஷினுடைய மகிழ்ச்சிகரமான அழைப்பை ஏற்று இரண்டு நாட்கள் தங்க வந்தவள்தான் நான். இன்று மழையில்லை. பருவநிலை முற்றிலும் மாறியிருக்கிது. ஒருவித வண்ட காற்றும், உதிர்ந்துக்கொண்டிருக்கும் இலைகளும் மட்டும்தான். வந்த அன்று முதல் நான் ரமேஷ், அனுராதாவினுடைய அசைவுகளை உய்த்து அறிந்துக்கொண்டிருந்தேன். மகிழ்ச்சி தான் என்று ரமேஷின் ஒவ்வொரு பார்வையும் வார்த்தையும் பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தது. இடையிடையே தென்பட்டு மûந்த அனுராதாவின் பிரகாசமான புன்னகை அவளுடைய சந்தோஷத்தைப் பற்றி என்னிடம் அûகூவிக் கொண்டிருந்ததே! எதிர்பார்ப்புகளுடன் பத்திரிகை படிக்கின் தோரணையில் வழிமேல் விழிகளை நிலைக்குத்தியிருக்கும் அவள் தந்தையிடம் என்ன சொல்ல வேண்டும் என்பது நான் மனதில் உருவகப்படுத்தியிருந்ததே.

அப்பொழுதுதான் சூழ்நிலையில் எங்கேயோ நிர்ணயிக்க இயலாத இந்த உறுத்தல். இது என் சகிப்புத்தன்மைக்கும் அப்பாற்பட்டதாய் இருந்தது. அதனால் திருமண போட்டோவை ஷோகேஸில் வைத்துக்கொண்டிருந்த அனுராதாவின் அருகில் சென்று நான் மனப்பூர்வமாக சாதாரணமாக ஏதோ விசாரிப்பதுபோல் கேட்டேன், “”அனுராதா, ஊர் திரும்பியதும் உன் அப்பாவிடம் நான் என்ன கூவேண்டும்?”

மூன்று வயதாய் இருந்தபோது ஷø அணிந்த கால்களுடன் பந்தை உதைத்து தள்ளிய அதே இலாவகத்தோடு ஒரு வெடிச் சிரிப்புடன் என் கேள்வியை உதைத்துத் தள்ளிவிட்டு அவள் சோபாவில் உள்ள தூசிகளை தட்ட தொடங்கினாள். அûயில்மின்விசிறிக் காற்றில் தரையில் கிடந்த அந்த இலை மீண்டும் சலனம் உண்டாக்க தொடங்கியது. திகிலை மûப்பதற்கான அவசரத்துடன் நான் கேட்டேன்.

“”கவுன்சிலிங் போனது எவ்வளவு நன்ாக இருந்தது என்று இப்பொழுது தெரிகிது அல்லவா?”

தூசி தட்டுவதற்கு இடையில், “”எனக்கு சந்தோஷம்தான் என்று உங்களுக்கு தோன்வில்லையா?” என் பதில் கேள்வியும் புன்னகையுமாக அனுராதா அம்மாவை பார்த்தாள்.

பரஸ்பரம் இரண்டு கேள்விகளாக நாங்கள் எதிரெதிரே நின்úாம். மெல்ல நான் பின்வாங்கும் போது þ அப்போதுதான் அனுராதா சொன்னாள்.

“”அவ்வளவுதான் தேவை. சந்தோஷம் என்று உணர்த்தினால் போதும். சந்தோஷமா இருக்கணும்னு இல்லை!” என் பரிதாபமான மனம் எவ்வளவு ஸ்தம்பித்துவிட்டது. திடீரென்று உள்ளும் புமும் வீசுகி காற்றில் அந்த கொடூர வட்சி எனக்கு ஏற்பட்டது சற்றும் எதிர்பாராத நேரத்தில். என்ன ஓர் வண்ட காலம்! மனங்களும் உலகமும் கூட ஒரு கொடூரமான வட்சியில் அமிழ்வதைப்போல….

ஸ்தம்பித்துப் போன என் மெüனம் அனுராதாவையும் உலுக்கியிருக்க வேண்டும். காரணம், மிகவும் மெல்லிய குரலில் அவள் கூறினாள்.

“”கவுன்சிலிங் போயிருந்தபோது ஒரு சமயம் நான் மெய்யாகவே டாக்டரிடம் கூறினேன் அம்மா, ஒன்ாய் வாழ்ந்துக்கொண்டிருக்கையில் எப்போதோ எங்களுக்கு பரஸ்பரம் நேசிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் முடியாமல் போனது என்று….”

என் மனதில் சருகாய் உதிர்ந்த ஏராளமான இலைகள் ஒன்ாய் சேர்ந்து பந்து வீழ்ந்தது போல் தோன்றியது எனக்கு.

“”டாக்டர் திமைசாலியாகத்தான் இருந்தாரம்மா. அவர் சொன்னார், ஒரு திருமணம் வெற்றி பெறுவதற்கு நேர்மை, ஸ்நேகம் எதுவுமே தேவையில்லையென்றும் அதெல்லாம் இருப்பதாக ஒருவர் மற்வரை நம்ப வைத்தால் மட்டும் போதும் என்று.”

அவள் அதை கூறிய விதம்! எவ்வளவு மென்மையானது, எவ்வளவு நம்பிக்கையின்மை உடையது! அனுராதாவின் கண்களை சந்திக்க எனக்கு இயலவில்லை எனத் தோன்றியது. இவ்விதமாக அந்தக் காற்று எங்களுக்கிடையில் புகலிடமற்று கதறி அழுது அலைவதைப் போல. அனுராதாவும் இதை அறிந்திருக்க வேண்டும். காரணம் அவள் வந்து எதுவுமே கூாமல் என் தோளில் தலை சாய்ந்தவாú நின்ாள். நான் அவளிடம் ஏதாவது சொல்லியாக வேண்டும். ஆனால் என்ன சொல்வது? அவள் குழந்தை பருவத்தில் காயப்பட்டு வந்த சமயத்திலெல்லாம் கூறி வந்ததைப்போல “”கவலைப்படாதே, கவலைப்படாதே” என்று மட்டும் கூறினேன்.

சட்டென்று அனுராதா தலை உயர்த்தினாள். “”கவலைப்பட வேண்டியிருக்கம்மா. எவ்வளவு காலம் கவலையில்லை என்று நடிப்பது? ஒன்ாக வாழ்வதற்கு கப்பம் செலுத்துவது போல் உடன் உங்குதல். இன்பத்தில் ஒவ்வொரு நொடிக்கும் இரட்டிப்பு வரி, சந்தர்ப்பத்திற்கு ஏற்ாற்போல் சிரிப்பும், மெüனமும் மாறி மாறி அணிந்து ஒவ்வொரு நாளும் வாழ்ந்துகொண்டே போதல். சலித்துப்போனது!

“”என் வாழ்க்கை வெறும் தோற்ம் மட்டுமாகவே ஆகிப் போச்சம்மா: இன்னொருவருக்கானத் தோற்ம்.”

அனுராதாவின் பெருமூச்சு என் இரத்தத்திலே புகுந்து கலந்துவிட்டதாக எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு இதய துடிப்பிலும் அது என்னை விடாமல் பின் தொடருவதைப் போல. அம்மாவும் மகளுமாய் இல்லாது, கேவலம் இரண்டு பெண்களாகி நாங்கள் அந்த அடைக்கப்பட்ட அûயில் குறிக்கோளில்லாமல் வெறுமனே சுற்றிக்கொண்டிருக்கத் தொடங்கினோம். சுற்றிக்கொண்டிருப்பதற்கு இடையிலே அனுராதா சொல்லிக் கொண்டிருந்தாள், சொல்லித் தீர்த்துக்கொண்டிருந்தாள்.

“”சில சமயங்களில் நினைத்துப் பார்ப்பேன் þ எல்லாமே சலித்துப்போன நேரத்தில் þ சொந்தமாக ஒரு இருத்தலுக்காக வேண்டி ஒரு கள்ள புருஷன் இருந்திருந்தால் நன்ாய் இருக்குமே என்று. பிகு எதற்காக என்றும் தோன்றும்.” அனுராதா சிரித்தாள்,”"கணவன் வெளியே போனதும் மீண்டும் படுக்கையûயிலிட்டு பூட்டிக்கொள்ள இன்னொருவன்!”

அனுராதாவின் சிரிப்பு அந்த அûயின் ஒவ்வொரு புமும் பட்டுத் தெரித்து வருவதாய் எனக்குத் தோன்றியது. மாடியில் எங்கேயோ காற்றில் ஒரு ஜன்னல் மூடிக்கொண்டது. இல்லையென்ால் அது திந்துக்கொண்டதா? எனக்கு புலப்படவில்லை. நான் என்னையே கேட்டுக் கொண்டிருந்தேன்.

இதுதானா முப்பது வருஷங்கள் நீண்ட எனது மண வாழ்க்கையின் சூக்குமம்? இப்படித்தான் இருந்திருக்குமோ என் தாயினுடைய, பாட்டியினுடைய ரகசிய சூத்திர வாக்கியமும்? þ எதையெல்லாமோ சரி செய்ய வேண்டும் என்று எனக்கு தீவிர வேட்கை தொடங்கியது அப்போதுதான்.

நான் அனுராதாவின் கையைப் பிடித்து நிதானமாக ஜன்னலருகே நடந்தேன். “வாழ்க்கையை இப்படி துண்டுத் துண்டாய் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று’ அவளிடம் கூ வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒருமித்த வெகுதூர பயணத்தின் போது பயணிகள் முண்டிக்கொள்வதிலும் தள்ளிக் கொள்வதிலும் அறிதலிலும் அறியாததிலும் பெற்றுக்கொள்ளும் பரஸ்பர நிûவு ஒன்று உண்டு. ஆனால் அது எத்தகைய ஆழமான அனுபவ ரகசியம்! இது உணர்ந்தவர்கள் மட்டுமே அறிந்துக்கொள்ளத்தக்கது! அதனால் நான் சொன்னேன்,

“”திருமணத்தின்போது காணிக்கை செலுத்தி ஆசிர்வாதம் பெறும் வேளையில் என் பாட்டி வளர்ந்து தொங்கும் தனது காதுகள் ஆட சிரித்தபடி கூறினாள், “தாம்பத்தியங்கது ஒரு நாட்டியம் தான் குழந்தே. சிவனே சக நர்தனம் என்று பெரியவங்க சொல்லுவாங்க.”’

அனுராதாவின் உதடுகள் மிகுந்த ஏளனத்தில் கோணிக்கொண்டது. அவள் சொன்னாள்.

“”நாட்டியம் தான் அம்மா. ஆனால் கீழே போகப் போக சுற்ளவு குûந்துக் கொண்டே வரும் ஒரு கிணற்றுக்குள் ஆடும் நாட்டியமே அது!

எனக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. ஜன்னல் கண்ணாடியினுடே தெருவும் அதில் நெரிசலும் காண முடிந்தது.

வாக்கிங் ஸ்டிக் ஊன்றி மெல்ல மெல்ல நடந்து போகும் எதிர்புத்து ரங்கனாத ஐயரின் சுவடுகளில் தன் சுவடை அர்ப்பணித்து பின்னாடி நடக்கும் பாட்டி, கைகோர்த்து பிடித்து தெருவைக் குறுக்காக கடந்து செல்லும் இளம் தம்பதியர், கைக்குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அனைத்து கணவனுடன் ஓட்டமும் நடையுமாக அவசரப்படும் ஒரு இளம் நங்கை.

உலகம் முழுவதும் ஒரு நாட்டியத்தின் அடிச் சுவடுகளில் உழல்வதைப்போல் இருந்தது.

அப்போது வெளியில் ரமேஷின் கார் வந்து நின்து. “”அம்மா புப்பட்டீங்களா” என் கேள்வியுடன் ரமேஷ் உள்ளே நுழைய, நொடியில் ஏற்படுத்திக்கொண்ட பிரகாசமான ஒரு சிரிப்புடன் அனுராதா சொன்னாள் “”என்னாங்க இதோ இப்போ டீ கொண்டு வரேன்” என்று கொஞ்சலுடன் சமையலûக்கு ஒரு நடனத்தை ஞாபகப்படுத்தும் விருவிருப்புடன் மûந்தாள்.

டையை கழற்றிக்கொண்டே ரமேஷ் சொன்னான், “”என் மனைவி என்னை இதற்கு முன் இவ்வளவு சிநேகித்தது கிடையாது. நெü விஆல் ரியலி ஹேப்பி.”

ரமேஷை உற்றுப் பார்த்து சிரிக்கக் கூட முடியாமல் நான் அப்படியே நின்úன். அனுராதாவைப் போல் ரமேஷøம் பயன்படுத்தும் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு சூத்திர வாக்கியத்தின் சாத்தியப்பாடுகள் என்னை அதிர்வூட்ட தொடங்கவே, அனுராதா வருவதற்குள் நான் விடைப்பெற்று நடந்தேன்.

மலையான மூலம்: அஷிதா
தமிழில்: வசந்தகுமார்.

- ஜூலை 2000 

தொடர்புடைய சிறுகதைகள்
பாரதி நினைவு நாள் பேச்சுப் போட்டி, அந்தப் பள்ளியில் விமரிசையாக நடந்துகொண்டு இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்ற சுமார் இருபது மாணவ, மாணவிகள் பெயர் தந்திருந்தனர். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக ஆங்கில ஆசிரியர் மைக்கேல், தமிழ் ஆசிரியர் பரசு இருவரையும் நியமித்திருந்தார் ...
மேலும் கதையை படிக்க...
அது மட்டும்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)