சிறுவன்! – ஒரு பக்க கதை

 

ஐஸ் வாங்க இரண்டு ரூபாய் கேட்டு அழுது கொண்டிருந்தான் சிறுவன் ரவி.

“ஜுரம் விட்டு இரண்டு நாள்தான் ஆகுது ஐஸ் சாப்பிடப் போறாராம். என்ன பண்ணாலும் தரமாட்டேன்,’ என்று மயிலம்மா கண்டிப்புடன் கூறினாள்.

ஆனாலும் சிறுவன் அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

வயல் வேலை முடித்தவிட்டு வீட்டுக்கு வந்த ரவியின் தந்தை ஆதிமூலம், “ஏண்டா, அழறே’ என கேட்க, “அம்மா ஐஸ் வாங்க காசு கொடுக்கலை’ என்று அழுகையோடு கூறினான்.

ரவி இரண்டு ரூபாய் எடுத்து நீட்ட, சந்தோஷமாக வாங்கிக் கொண்டு பறந்தான்.

“ஜுரம் அடிச்ச புள்ளைக்கு ஐஸ் வாங்க காசு கொடுக்கறீங்களே… எதேதுக்கு செல்லம் கொடுக்கறதுன்னு தெரிய வேணாமா?’

“புள்ள ஆசைப்படுது காசு கொடுக்காம அழறதை வேடிக்கை பார்க்கச் சொல்றியா – போடி போ…கஞ்சி ஊத்து,’ என்று சொன்னபோது, சிறுவன் வெறும் கையுடன் வந்தான்.

“ஐஸ் வாங்கலையா?’

“அப்பா, ஐஸ் வாங்கத்தான் போனேன். ஒரு பாட்டி பசின்னு கடைக்காரரிடம் பன்னு கேட்டாங்க – கடைக்காரர் தரலை. நான் அந்தப் பாட்டிக்கு பன்னு வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்டேன்பா!’

“நம்ம வூட்டுக்குக் கூப்பிட்டுவர வேண்டியது தானே?’

“உங்களுக்கு மட்டும்தான் கஞ்சி இருந்துச்சு – குடிச்சுட்டு இருப்பீங்கன்னுதா…’ என்று கூறிய மகனிடம் மூதாட்டியை அழைத்து வர சொன்னான்.

- எஸ். சீதாராமன், திண்டிவனம் (நவம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
“என்னங்க…என்ன பேசாம நின்னுட்டிருக்கீங்க…போங்க…போங்க…போய்க் கூப்பிடுங்க…” – என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை வாசலை நோக்கி விரைவு படுத்தினாள் சாந்தி. இவள் எதற்காக இப்படிப் பரத்துகிறாள் என்பது எனக்குத் தெரியும். அறையிலிருந்தே மேனிக்கே ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ராஜப்பாதான் போய்க் கொண்டிருந்தார். ‘பாவம், ...
மேலும் கதையை படிக்க...
ரவி செல்போனை வீட்டிலே வெச்சட்டுப் போயிட்டான். அவனோட ஃப்ரெண்ட்ஸ் அதுலே ஒரு மெஸேஜ் அனுப்பிச்சிருக்காங்க. நாங்களெல்லாம் அரியர்ஸ் இல்லாம பாஸ் பண்ணிட்டோம். நீதான் இன்னமும் அரியர்ஸ் வெச்சிருக்கே … ஸாரி மச்சான்! ‘’‘என்னங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு! நல்லா படிக்கிற நம்ம ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிறு கம்பெனிக்கு முதலாளியான ராமசாமி தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் பாஸ்கா¢டம் "தம்பி" உனக்கு என் பொண்ணு கமலாவை கட்டிக்க விருப்பமா? நான் உன் விருப்பத்தை கேட்ட பின்னாடிதான் உங்க அப்பா அம்மாவை போய் கேக்கனும்னு நினைக்கிறேன்,என்றவரை சங்கடத்துடன் பார்த்தான் ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ” “சேஷாத்ரி இருக்காருங்களா?” “ஆமா...பேசறேன்..நீங்க?” “ஸ்டேஷன்ல இருந்து பேசறோம். உங்க பையன் பாலாஜியை இங்க வெச்சிருக்கோம் வந்து கூட்டிட்டு போங்க” “எந்த ஸ்டேஷன்? எதுக்கு சார்” “எஸ்.ஐ நேர்ல பேசணும்ன்னு சொல்லுறாரு வாங்க சார்” “சார் நாங்க நல்ல ஃபேமிலி” “அதை இங்க வந்து சொல்லுங்க சார்” “ஹலோ...சார்...சார்” *** “என்னங்க ஆச்சு?” ”உம்பையனை போலீஸ் ஸ்டேஷனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
இறந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதியமல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டையுடன், நீட்டி நிமிர்ந்து அந்திமத்துயில் கொள்கிறார். கறுப்பு உடம்பு, வயசாளி, மேல்வரிசைப் பல் கொஞ்சம் பெரிசு, உதட்டை மீறி ஏளனச் சிரிப்பாக அது வெளித் ...
மேலும் கதையை படிக்க...
வரும்….ஆனா வராது…
மெஸேஜ்! – ஒரு பக்க கதை
உறவுகள் உருவாகின்றன
வயசு
நாயனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)