சிறகு பிடுங்கிய மனிதன்!

 

வைத்தி ரொம்ப முரடன். எடுத்ததுக்கெல்லாம் அடிதடிதேன். அதுலயும் பொம்பளைகன்னா அவனுக்கு ஒட்டுன தூசிதேன். எங்கேயாவது பொம்பளைக கொஞ்சம் சத்தமா பேசிட்டா போதும்.. ‘‘ஏய்.. என்னடி வாயீ.. பொம்பளையின்னா ஆம்பளைக சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருக்கணும்’’னு அவள அதட்டுறதுமில்லாம, அவ புருசன்கிட்ட ‘‘ஏலேய்.. அப்படியே அவள தூக்கிப் போட்டு மிதிடா’’னு ஏவி விடுறதோட சமயத்தில இவனும் கை நீட்டிருவான்.

இப்படி இவன் பொம்பளைகள கிள்ளுக்கீரையா பேசுறதப் பார்த்து, ஒருத்திகூட இவனுக்கு வாக்குப்பட மாண்டேன்னு பதறிப்போயி ஓடுதாக. இவனுக்கு ஒரு அத்த மக மணிமேகலைனு இருந்தா. அவ பிறந்ததுமே அவளோட தாயீ, தகப்பனும் செத்துப்போக, பாட்டிகிட்டதான் வளந்தா. அவள வைத்தி, பொண்ணு கேட்டு வந்தான்.

மணிமேகலையோட பாட்டி, ‘‘அய்யய்யோ.. இவனுக்கு எம் பேத்திய கொடுக்கதோட, அவள நானே கிணத்துல புடிச்சித் தள்ளிருவேன்’’னு சொன்னா. ஆனா மணிமேகலை, ‘‘பாட்டி.. அவனுக்கு கோடி காடு, கர இருக்கு. அக்கு, தொக்குனு யாருமில்ல. நானு அவனுக்கே வாக்குப்பட்டுக்கிடுதேன். நீ பயப்படாத. நானு அவன்கூட மறுவீடு போவும்போது மட்டும் நானு சொல்றபடி செய்’’னு சொல்லிட்டா.

வைத்திக்கும் மணிமேகலைக்கும் கல்யாணம் முடிஞ்சி, மறுவீடு புறப்பட்டுட்டாக. அப்ப, ஒரு கோழி. ஒரு கிளி, ஒரு நாய்.. மூணையும் பேத்திகிட்ட கொண்டாந்து கொடுத்த கிழவி, ‘‘இந்தா தாயீ.. நீ உசுருக்குசுரா வளத்த நாயும் கிளியும். அதோட, இந்தக் கோழியையும் வெச்சுக்க. போனதும் அடிச்சி குழம்பு வச்சிக் கொடு’’னு சொன்னா.

ரெண்டு பேரும் கௌம்பிப் போவும்போது, இவ கோழி. நாயி, கிளி மூணுகிட்டயும் ‘‘இந்தா பாருங்க.. நாங்க போற வழியில உங்கள கணக்கா எல்லாம் இருக்கும். அதுகளப் பார்த்து ஏதாவது சத்தம் கொடுத்தீகளோ.. கொன்னு போடுவேன். நானு பொல்லாத அரக்கி!’’னு சொன்னா.

அப்ப அந்தத் தெருவுல இருந்த ஒரு கோழி இவ கையில இருந்த கோழியப் பார்த்துக் கெக்கரிக்க, இதுவும் கெக்கரிக்க.. இவ அப்பவே அந்தக் கோழிய கொதவளைய முறிச்சிப் போட்டுட்டா. ரெண்டாவது தெருவுக்குப் போகையில ஒரு நாக்குட்டி இவ கையிலிருந்த நாக்குட்டியப் பார்த்து குரைக்க.. இதுவும் குரைக்க.. ‘‘இரு.. உன்ன கெணத்தில போட்டுடறேன்’’னு கிணத்துப் பக்கம் போயி, நாய கண் மறவா விட்டுட்டு, ஒரு கல்லத் தூக்கி கிணத்துல டமால்னு போட்டுட்டு வந்தா. மூணாவதா, சோளக்காட்டுத் திக்கமா பறந்துபோன கிளிக இந்தக் கிளியைப் பார்த்துக் கத்த.. இதுவும் கத்துச்சி. இவ, ‘‘நீயும் சரியில்ல. உன் செறவப் புடுங்கி உன்னக் காட்டுல விட்டெறியுதேன்’’னு கிளிய வீசி எறிஞ்சா. பெறவு மடியில முத நாளு மறவா பெறக்கி வச்சிருந்த கிளி செறக எடுத்துப் போட்டா.

அம்புட்டுதேன்! வைத்தி கதிகலங்கிப் போனான். ‘ஆகா, நம்மதேன் கோவக்காரன்னா.. இவ அதுக்குமேல இருப்பா போல. இவகிட்ட நம்ம அடங்கித்தேன் போவணும்’னு நினைச்சி, அன்னிக்கு அடங்குனவன்தேன். இன்னமும் அடங்கிக் கெடக்கான்!

- மார்ச் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
அலமேலு அதிசயிச்சுப் போய்ட்டா. பொறவு? பத்து வருசத்துக்கு முன்னால, தன்னோட பதினஞ்சு வயசு மவன் பன்னீரை இவ கையில ஒப்படைச்சிட்டு ஊரை விட்டே போயிட்ட அண்ணன் வைராண்டி, இப்ப திரும்பி வந்திருக்கறதைப் பார்த்தா அதிசயமா இருக்காதா? ‘‘என்ன அலமேலு... எப்படி இருக்கே?’’ன்னாரு வைராண்டி. ‘‘நானு ...
மேலும் கதையை படிக்க...
பொய்ச்சாமி! அமாவாசை நெருங்க நெருங்க கோகிலிக்கு மனசு கெடந்து அடிச்சுக்கிட்டது. புருசன் அமுதராசு எல்லாத்துலயும் கெட்டிக் காரனாத்தேன் இருக்கறான்னு நினைச்சப்போ, அவளுக்குப் பெருமையாத்தேன் இருந்துச்சு. கல்யாணமாகி இந்த ஒரு வருசத்துல அவளை வெடுக்குனு ஒரு வார்த்தைகூட சொன்ன தில்லை. ரெண்டு பேரும் கவுறும் ...
மேலும் கதையை படிக்க...
தன் பொண்டாட்டி கவிதாகூடப் பேசி ஏழெட்டு நாளைக்கு மேல ஆச்சி என்பதை நினைத்தபோது, சரவணனுக்கு நெஞ்சு கனத்தது. பகலில்கூட அவ்வளவாக தெரியவில்லை; இரவில்தான் தனிமைப் பட்டுப் போன வெறுமையிலும், வெக்கைத் யிலும் அவன் தவியாய்த் தவித்தான். சண்டை வந்ததற்குக் காரணம் சின்ன விஷயம்தான்.. ...
மேலும் கதையை படிக்க...
சோலையனுக்கு முப்பத்தி மூணு வயசுக்கு மேல ஆகிடுச்சு. தன்னோட இளமையை தாங்கிக் கிட்டுத்தான் கல்யாணத்துக்கு காத்திருக்கான். ஆனா, அவனுக்கு பொண்ணு கொடுக்க நெனக்கற வங்க எல்லாருமே, அவன் ஆத்தா சங்கம்மாளை நெனச்சு பயந்துபோயி பதினாறு அடிக்கு அந்தப் பக்கம் ஓடோ ஓடுனு ...
மேலும் கதையை படிக்க...
பொண்ணும் பொன்னும்! ‘‘தாலி கட்டின அன்னிக்கே எங்காத்தா உன்ன வெச்சி வாழவேண்டாம்னு சொன்னா, அப்பவே உன்ன விட்டுடுவேன்’’ என்ற தேவாவை மனைவி தாசனாக மாற்றியது எது? களவெட்டுக்காக வந்த சாந்திக்கு வேலையே ஓடல. தேவாவோட தல எங்கிட்டாச்சிலும் தெரியுதான்னு சுத்தியும், முத்தியும் பாக்கா... பாத்துக்கிட்டே இருக்கா. அவன் ...
மேலும் கதையை படிக்க...
கரிசல் காட்டு காதல் கதைகள்! – 5
கரிசல் காட்டு காதல் கதைகள்! -12
கரிசல் காட்டு காதல் கதைகள்! – 11
கரிசல் காட்டு காதல் கதைகள்! – 18
கரிசல் காட்டு காதல் கதைகள்! – 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)