Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சின்னம்மா

 

காட்சி 1:
——–
சார்…பஸ் எத்தன மணிக்கு எடுப்பீங்க

10:20

எத்தன மணிக்கு ஜெயங்கொண்டத்துல இருப்போம்

5 மணிக்கு

இடையில ஆண்டிமடம் நிறுத்துவீங்களா…

ஏறு…ஏறு….

என்னய்யா போவுலாமான்னு சூப்பர் பாக்கை பிரித்து வாயில் கொட்டினார் ஓட்டுநர்.

காட்சி 2:
——–

எங்கம்மா இந்த நேரத்துல போற

எங்கயாவது போறன் ஒங்களுக்கு என்ன?எந்த சொந்தமுமா எனக்கு இல்ல ஒரு நாளைக்கி ஒரு வூட்ல கஞ்சி குடிச்சாலும் ஆயிசு முடிஞ்சிடும்.

ஒங்கிட்டலாம் பேச முடியாது…எங்கயாவது போய் தொல

நரம்பு பையொன்றில் இரண்டு,மூன்று சேலையையும் ஒரு தண்ணி பாட்டிலையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் பொன்னம்மா.

எங்கே போவதென்ற உத்தேசமில்லை.இரவு 10 மணிக்கு புறப்படும் அவளுக்கு எந்த ஊருக்கும் பேருந்து இல்லை.இடுப்பில் சுருக்கு பையொன்றை செருகி இருக்கிறாள்.பணம் இருப்பதாக தெரியவில்லை.

உள் கிராம சாலைகளை கடந்து நெடுஞ்சாலை வரவே நான்கு கி.மீ ஆகும்.இங்கு அரை மணி நேரத்திற்கு ஒரு அதிவேக பேருந்து செல்லும். அதில் இவள் ஏறப்போவதுமில்லை.

காட்சி 3:
——–
ஆயி…நான் அண்ணன் பேசுறேன்

எங்கேர்ந்து பேசுறீங்க

சிலுவச்சேரிலேர்ந்து…

ஓ….பன்னீரு அண்ணனா நல்லா இருக்கீங்களா…புள்ளிவோ எப்புடி இருக்கு.என்ன போனு பண்ணிலாம் பேசுறீங்க…

சும்மாதான் ஆயி…சின்னாம்மாள பாத்து எம்மோம் நாளு ஆவுது வெசாரிக்கலாம்னுதான்.

இப்பதான் சாப்ட்டு தூங்குச்சி…மணி பத்தர ஆச்சில்ல…

சரி ஆயி காலைல பேசுறேன்.

கெரண்டு வேற இல்ல போனுல சார்ஜி இருக்காது.மதியானம் போல பேசுங்க அம்மா வூட்லதான் இருக்கும்.

காட்சி 2-ன் தொடர்ச்சி:
——————–
இரண்டு மகன்களை பெத்தவள் பொன்னம்மா.நாலு ஏக்கர் வயலை ஆளுக்கு ரெண்டாய் பிரித்துத் தந்துவிட்டாள் ஆம்பள செத்த வொடனே…

இரண்டு பேரில் ஒருவன் கூட பொன்னம்மாளை சேர்த்துக் கொள்ளவில்லை.

ஒரு வருடம் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தவள்.இன்று கோபத்துடன் வெளியேறி விட்டாள்.

நெடுஞ்சாலையை தொட்டு வெகு தூரம் முனகிக்கொண்டே நடந்தாள்.மணி 2 இருக்கும்.

காட்சி 1-ன் தொடர்ச்சி:
——————–
விருத்தாச்சலம்லாம் எறங்கு….அடுத்தது ஆண்டிமடம் எறங்குறவங்க தூங்கிடாதீங்க…

காட்சி 2-ன் தொடர்ச்சி:
———————
தூக்கம் கண்ணை உசுப்பியது பொன்னம்மாளுக்கு…தூக்க கலக்கத்திலேயே நடக்கிறாள்.அவ்வப்போது நடு ரோடு என உணர்ந்து ஓரத்திற்கு நகர்ந்து நடக்கிறாள்.

தொடர்ச்சியான ஹாரன் சத்தம் எழுப்பியபடி கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் அடித்த ப்ரேக்கில் பாதி தூரம் இழைந்து சக்கரத்தில் சிக்கி இடது கையின்,வலது காலின் சதைகள் தேய்ந்து எலும்புகள் தெரிய வாய் பிளந்து பெருமூச்சு விட்டு அடங்கியது பொன்னம்மாள் உயிர்.

மணி 4 இருக்கும் ஒட்டுக் கண்ணு வக்கெப் போற ஆளுவோ எப்பயாச்சும் ரெண்டு பேரு டி.வி.எஸ் 50 யில் கடந்தபடி இருப்பார்கள்.

யோவ் பன்னீரு அங்க ஏதோ ஆக்சிரண்டு பஸ்சு நிக்கிது பாரு…

நிப்பாட்டு…நிப்பாட்டு…

நடத்துனரின் தகவலுக்கு போலிசும் வந்து சேர்ந்தது.

ஓட்டுநர் முந்திரிக் கொல்லைக்குள் அமர்ந்திருந்தார்.(போலிசுக்கு உண்மையாவே தெரியாது)

ஓட்டுநரிடம் விவரங்கள் கேட்டுக்கொண்டிருந்தார் ஏட்டு.

அய்யோ…சாமீ…சின்னாம்மா…சின்னாம்மா…

ஏட்டு விறு விறுவென வந்தார்.

யோவ் எந்தூரு நீ….எங்க போற… இது யாரு ஒனக்கு

சிலுவச்சேரிங்க…கண்ணு ஒட்டப் போறேன்… இது ஏஞ் சின்னம்மாளாங் காட்டியும்னு பதறிட்டேன்.

எந்தூரு அவங்க

கீரப்பாளயங்க…

இவங்களா…

இல்லீங்க…ராத்திரிதான் வெசாரிச்சேன் வூட்லதான் இருக்காங்கன்னு தங்காச்சி சொன்னுது.

இப்போ கேளுய்யா…

போனு சொச்சாப்புங்க…

சரி ஒம் பேரு,ஊர எழுதிக் குடுத்துட்டுப் போ…வெசாரிச்சி ஆளு அனுப்புறேன்.

காட்சி 4 :
——–
அலோ…பன்னீரா…அது ஒங்க சின்னம்மாதான் ஜெயங்கொண்டம் தருமாசுபத்திரிக்கு வா….

கணேசா…காலைல ஆக்சிரண்டுல செத்துது எஞ் சின்னம்மாதானாம்…நான் சேங்கணம் போயிட்டு என்னன்னு பாத்துட்டு போனு பன்னுறேன்.

காட்சி 5 :
——–
நாங் கணேசம் பேசுறேன்.பன்னீரு சின்னம்மா எறந்துட்டாங்க ஆளுவோ எழவுக்கு போவுனும்.பணங் காசி ஒன்னுங் கையில இல்ல….

கொல்லயில இருங்க வர்றேன்.

கொமாரு நீ மால கட்டிட்டு வண்டிக்கு சொல்லிட்டு வா…வர்ற வழியில 450 ரூவா அரிசி மூட்ட ஒன்னு எடுத்துட்டு வா…வாக்கரிசி கூட எடுக்கனும்.

காட்சி 4-ன் தொடர்ச்சி:
——————–

இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க…

என்னதுங்க மேடம் இது

போஸ்ட்மார்ட்டம் செய்யப் போறோம்…

அது எங்க சின்னம்மாளா என்னன்னே தெரிலங்களே…

அவங்கதான்…அவங்கதான்…

பன்னீரின் கைபேசி ஒலிக்கிறது.!

அண்ணே நாந்தான் பேசுறேன் அம்மாகிட்ட பேசனும்னு சொன்னீங்கள்ல…

சின்னம்மா…சின்னம்மா…

செத்தனா வாழ்ந்தனானு இப்போதான் ஞாபகம் வந்துருக்கு என் அக்கா மொவனுக்கு…நல்லாருக்கியாப்பா புள்ளிவோ எப்புடி இருக்கு….

நல்லாருக்கேஞ் சின்னம்மா…

இங்க பன்னீரு யாருங்க

நாந்தாங்க…

ஒங்க சின்னம்மாவோட சுருக்கு பையி இந்தாங்க…

சின்னம்மாவிடம் பேசிக்கொண்டே சுருக்குப் பையை திறந்தான். நான்கு 1 ரூபாய் திட்டுகள் இருந்தன. 

தொடர்புடைய சிறுகதைகள்
தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து மஞ்சத்திடல் செல்ல வேண்டும். அடிக்கடி செல்வது வழக்கம் வேலையொன்றுமில்லை பெரியப்பா வீடு அங்கு. எக்ஸ்பிரஸ் நிக்காது. பெரும்பாலும் நான் பேசஞ்சரில் செல்வதே வழக்கம். நடைபாதை வியாபாரிகளுக்கு டிக்கட்டே தேவையில்லை அடுத்தடுத்த ஸ்டாப்பில் ஏறி இறங்கி வியாபாரம் செய்வார்கள். கீரை ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள அப்பாவிற்கு, உங்களை மாமா என்று இதுகாரும் அழைத்ததில்லை. என் அம்மாவின் தம்பி என்று ஊரார் சொல்லித்தான் தெரியும்.எனக்கு நினைவு தெரிவதற்கு முன்பே இருவரும் இறந்துவிட்டபடியால் நீங்கள்தான் எனக்கு எல்லாமும். முதல் முறையாய் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். நான் எழுதும் முதல் கடிதம் ...
மேலும் கதையை படிக்க...
என் கணவர்க்கு வீடு என்றால் நிறைய புத்தகங்கள் இருக்கணும். எனக்கு நிறைய பூனைகள் இருக்கணும். இப்போ ஓரளவுக்கு புத்தகங்கள் இருக்கு.... ஆனால் இன்னும் பூனைகள் இல்லை. அவருக்கு ஜாலி.... எனக்கு அவர் சொன்னது சாரி.......!?(எங்கோ படித்தது) நாங்கள் அறிமுகமானதே புத்தகத்தின் மூலம்தான். பெருநகரத்தின் பிரதான சாலையில் இயங்கும் ...
மேலும் கதையை படிக்க...
பெரியவனுக்கு சேதி சொல்லியாச்சா...வெடி வாங்க யாரு போயிருக்கா... எலேய்...கொண்டையா அழுவுறத வுட்டுபுட்டு ஆற சோலிய பாரு... மனச கல்லாக்கிக்கிட்டு பர பரப்பா அலஞ்சாரு மணிவாசகம் மாமா... அலோ....யாரு சேராமனா(ஜெயராமன்)....அப்பா...... அடுத்த பஸ்சில் ஏறியாச்சு... முதலாமாண்டு கல்லூரி படிப்பிலிருந்து பெறகு பட்டணத்து வேல பெறகு வெளிநாடு மறுவடியும் பட்ணமுன்னு அப்பா ...
மேலும் கதையை படிக்க...
எழுத்தாளன் என்றாலே ஜிப்பா,கண்ணாடி,சோல்னா பை இவைதான் நாம் உருவகப்படுத்தியிருப்போம். "டிவோட்டா" அப்படி இல்லை. உலகின் சிறந்த எழுத்தாளர்களில்,இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களில், தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் இப்படி எதுவும் இல்லை. அடியக்காமங்கலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். ஆம் டிவோட்டாவோடு சேர்த்து அடியக்காமங்கலத்தில் 13 எழுத்தாளர்கள். ...
மேலும் கதையை படிக்க...
இருபத்தியோராம் நூற்றாண்டின் அழகி.!
காரை வீட்டு கவிஞர் எழிலனுக்கு……
அடிக்கோடிட்ட ஆசைகள்
உருவாஞ் சுருக்கு
டிவோட்டா என்கிற மணி மகுடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)