கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 10,951 
 

ராம் தூக்கத்தில் வரும் கொட்டாவிக்கு வாயைபிளந்து மூடும்போது அவனது மொபைலில் அழைப்பு, எடுத்து பார்த்தான். அதில் செந்தில் காலிங் என்று இருந்தது, உடனே போனை “சொல்றா செந்தில்”
……..
“நான் ஆபிசில் இருக்கேன்”
…….
“எதுக்கு”
……….
” 6மணிக்கு தாண்டா ஆபிஸ் முடிஞ்சு வரேன்”
……….
” டேய் இப்ப மணி 3 இன்னும் 3 மணி நேரம்தான்டா”
.,……
“பர்மிஷன் போடனும்மா நெறிய வேலைஇருக்குட சாயங்காலம் 6 மணிக்கு வா பேசலாம்”
………
” அப்படி என்னடா அவசரம் என்றான்”
……….
“சரிசரி வரேன் எங்க உங்க விட்டுக்கா”
………
“சரி அங்கிருந்து பொண்ணு விட்டுக்க எதுக்கு….. ”
………..
“சரி வரேன் வை” என்றுகூறிவிட்டு இரண்டு கையையும் தலைக்கு பின்னால் கழுத்தில் வைத்து ஒருமூழி முறித்தான்.

மீண்டும் ஒரு கொட்டாவி விட்டு விட்டு மேனஜரின் அறைகதவு திறந்திருப்பதை பார்த்துவிட்டு மேனேஜர் உள்ளே இருக்கிறாரா என்று எட்டி பார்த்தான். உள்ளே மேனஜரின் தலை தெரிந்ததால், அப்படியே மேனேஜரிடன் சென்றான்.

“சார்…. ஒரு 3 மணி..நேரம் பர்மிஷன் வேணும்”

” பர்மிஷனா எதற்கு”

“சார் என் பிரண்டுக்கு பொண்ணு பார்க்க போறாங்க, என்னையும் அவசியம் வரச்சொல்றான் அதான்” என்றான்.

ராமின் இந்த பதிலை கேட்ட மேனஜர் குனிந்த படியே சிரித்துக் கொண்டே,

“யோவ் உனக்கு பெண் பார்க்க போகனும் பர்மிஷன் வேணும்னு கேட்டா ஒரு அர்த்தம் உண்டு, அது நடக்குதா இல்லையானு தெரியல. இதுல உன் பிரண்டுக்கு வேற. ஏன்னா.. நீ பொண்ணு பார்க்க போறேன் ஒரு இருபது தடவையாவது லிவு பர்மிஷன் போயிருக்க அப்படி போயிமே உனக்கே எதவும் செட் ஆகல இதுல உன் பிரண்டுக்கு பொண்ணு பார்க்க பர்மிஷன் கேக்குற… போயா போய் வேலையை பாரு” என்றார் நையாண்டி சிரிப்புடன்.

சற்று கோபத்துடன் பர்மிஷன் கொடுக்கவிட்டால் கூட பரவாயில்ல அந்த நக்கல் சிரிப்பை கண்ட ராமுக்கு வந்த கோபம்.

“சார் இல்ல சார் நான் அவசியம் போகணும் நான் போகலைன அங்க எதுவும் சரிய நடக்காது ஏன்ன பொண்ணுவிட்ல என்னதான் நல்ல தெரியும் என்ன வைத்துதான் நண்பன் விட்டுக்கும் நல்ல மரியாதை கிடைக்கும் அதனால் நான் அவசியம் போயே ஆகணும் வேணும்ன லாஸ் ஆப் பே கூட பண்ணிக்கங்க என்றான்” இந்த பதில கேட்ட மேனஜர் சற்று கோபத்துடன்

“அப்படியா… சரி போ நான் 3 ஹவர் லாஸ் ஆப் பே புடுச்சுகிறேன் கிழம்பு” என்றார். தேங்ஸ் கூட சொல்லாமல் கோபத்துடன் அறயைவிட்டு வெளியேற “போ போ அங்க உனக்கு என்ன மரியதைகிடக்குதுங்கறத நானும் பாக்கறேன்” என்றார். யோவ் போயா நீதான் லாஸ்ஆப் பே புடிக்கரேன்டியல்ல அப்புறம் என்ன சாபம் உடறது உன் சாபம் என்ன ஒண்ணும் பண்ணாது சொட்டதலையா என்று மனதுக்குள்ளேயே திட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

தன் கேபின் வந்து பேக் ஐடி கார்ட் டைனு எல்லாத்தையும் எடுத்துட்டு பக்கத்து கேபின் சங்கர்கிட்ட,

“மச்சி! நான் கிளம்றேன்”

“ஏன் மச்சி”

“மச்சி! என் பிரண்ட் செந்தில் இருக்கான்ல அவனுக்கு பொண்ணு பாக்க போறாங்க அவன் அவசியம் வரச்சொலறான். அதான் போயி சொட்டயன்கிட்ட பர்மிஷன் போட்டா தரமாட்டேன்னுட்டு நக்கல் வேற பன்றான். அதான் என்னானலும் சரினு லாஸ் ஆப் பே ல கிளம்பிட்டேன் அதுக்கே சாபம் உடுறான்” என்றான்.

“மச்சி பார்த்துடா! ஒரு சில நேரம் அந்த ஆளோட சாபம் பலிக்குது”

“அப்படியெல்லாம் நடக்காது நீ.. உன் வேலையபாரு என்னை கடுப்பேத்தாத நான் லீவுல போட்டுட்டேன் செந்தில் கூட நான் பொண்ணு பாக்க போறேன் நல்ல பச்சி சொச்சியெல்லாம் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு நேரத்துலேயே வந்து வீட்ல நல்ல தூங்க போறேன்” என்றான்.

சங்கரிடம் சொல்லி விட்டு சந்தோஷமா வெளியே வந்து ஆபிஸின் வாசப்படி இறங்கும்போது கால் லேச சருக்கி கீழேவிழுந்தான் பின்னாடி நல்ல அடி அதனால நல்ல வலி “அம்மா”னு கத்திட்டு பக்கதுல யாரும் இருக்காங்கலானு பார்த்தான் யாரும் இல்லததாலே கிழ விழுந்த மாதிரியே காட்டிக்காம எழுந்தரிச்சு கால சண்டி சணடி வண்டிக்கிட்ட போயி வண்டில ஏறி உக்காந்தான். அப்போது போன் அடித்தது.

“சொல்றா…ஏண்டா… வரேன்டா…. இப்பதான் ஆபிஸ்ல பர்மிஷன் போட்டு வெளியவந்தேன் அதுக்குள்ள உன் போனு நான் வீட்டுக்கு போயி ரெடியாயிட்டு 5 மணிக்கு உங்க வீட்டுக்கு வரேன்”என்று சொல்லிவிட்டு போன் வைத்தான். வீட்டிற்க்கு புறப்பட்டான்.

வண்டி ஓட்டும் போது தனக்கு பொண்ணுபாக்க போன நிகழ்வுகள் அங்க நடந்தவைகள்னு யோசிச்சுட்டே ம்ம்… நமக்குதான் பத்து பொண்ணபாத்தும் ஒன்னுக்கு கூட நம்மள புடிக்கல நம்ம கூட சுத்தறதுகளுக்காவது சீக்கிரம் கல்யாணம் ஆகனும் என்று யோசிச்சுகிட்டே வண்டி ஒட்டினான்.

அப்போ சிக்கனல் விழ முன்னே சென்ற வண்டி பிரேக் அடிக்க இவனும் பிரேக் அடிக்க ஆனாலும் இவன் வண்டி நிக்காமல் முன்னே நின்ற வண்டி மீது மோத நிமிர்ந்து பார்த்தால் ஏக்டிவாவில் ஒரு பொண்ணு ஆக அடுத்த ஏழரையானு யோசிக்கிறதுக்குள்ள அந்த பொண்ணு இவனை பார்த்து “அறிவில்லா”

“இல்ல உங்கிட்ட இருந்த கொஞ்ச குடுங்கங்க”

“ம்ம் மனிசனுக்குதான் அறிவ குடுக்க முடியும் கொரங்குக்கெல்லாம் குடுக்கமுடியாது”

“ஒரு குரங்கு இன்னொரு குரங்குக்கு குடுக்கலாங்க”

“என்ன திமிரா”

“இல்ல திமிருபிடிச்ச கொரங்கு”

“யோவ் என்ன நானும் பொருமையா பேசுன ரொம்ப நக்கல் பன்ற”

“யாரு நீ பொருமையா பேசற போமா போ ஒழுங்க லைசன்ஸ் வாங்கிட்டு வந்துரோட்டுல வண்டி ஒட்டு” என்றான்.

“யாருக்கு எனக்க லைசன்ச… வண்டிஒட்டறதுல இருந்து எல்லா லைசனசும் எனக்கு இருக்கு”

“அட பாறே… இங்கே லைசன்ச காட்டு”

“நீ யென்ன போலிஸா லைசன்சு கட்ட வந்து இடுச்சுபோட்டு லொள்ள பாரு” “இந்தமா நீ ஏம்ம எனக்கு முன்னாடி பிரேக் போட்ட பிரேக் போடம நீ முன்னாடி இருந்த வண்டியில இடுச்சிருந்த எங்கிட்ட நீ சண்டை போடவேண்டியது இல்லைல” ங்க ஆமா இவன் சொல்றது சரிதனோ நாம பிரேக் அடிக்கலைன இவன் வந்து இடிக்க மாட்டன்ல ஒருவேளை நாம பிரேக் அடிச்சதுதான் தப்போனு யோசித்துகொண்டே அந்தபெண் திரும்பி பார்க்க ராம் குனிந்து சிரிச்சுக்கிட்டு இருக்க சில நொடியில் சுதாரித்து,

“யோவ் சிக்னல் போட்ட வண்டிய நிறுத்தாம”

“வண்டிய நிறுத்துமா பிரேக்க ஏமா அடிச்ச” என்று கேட்க அருகில் இருந்தவங்கெல்லாம் சிரிக்க.

“ம்ம் வண்டிய நிறுத்த பிரேக் பிடிக்காம என்ன பண்ணுவாங்கலாம்” கோபத்துல

“உன்னையெல்லாம் மனுசன படச்சான் பாரு அது ஆன்டவன் செஞ்ச தப்பு”

” அப்ப உன்னையெல்லாம் படச்சது ஆண்டவன் செஞ்ச புண்ணியமா” “உனக்கு கல்யாணம் ஆயிருச்சா”

“இல்ல ஏன் புரோக்கரா வந்து பொண்ணு பாக்கரையா”

“எங்க.. உனக்கெல்லாம் வாழ்க்கையில பொண்ணே கிடைக்கமாட்ட கிடைச்சாலும் உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கவே மாட்ட உன்ன கல்யாணம்பன்றதுகு பதில வாழ்க்கையையே தியாகம் பன்னிட்டு போயிருவா”

“ம்ம்….உன்ன சொல்ல கூடாது உன்னையே கலயணம் பண்ணுண பாரு ஒரு தியாகி அவனை சொல்லனும்” னு சண்ட வளர அதற்குள் சிக்னல் ஒபனாக அந்த பெண் நேராக செல்ல ராம் வலது புறம் திரும்ப அந்த பெண் வண்டிய ஒட்டிக்கிட்டே

“போயா”

“ஏ நீ போ” ன பொசுக்குனு அந்த பெண் “போட”னு சொல்லிட்டு வண்டிய வேகமா ஒட்ட ராம் என்ன சொலறதுனு தெரியாம அமைதியா எப்படியோ சிக்னல் விழுந்ததால தப்பிச்சேன் இல்ல அவ்வளவுதானு நினைத்துக் கொண்டே இருந்தாலூம் போடனுடுருச்சே சரிவிடு நாம.. இதுவிடவெல்லாம் பேச்சுவாங்கியச்சு இதுக்கென்ன அதுவும் கல்யாண ஆன பொண்ணுவேற அக்கானு நினைச்சுக்க வேண்டியதுதானேனு நினைச்சுகிட்டே ராம் இதுக்கெல்லாம் கவலைபடறதானு அவனுக்கு அவனே சமாதானமம்னு நினைச்சுக்கிட்டு கிழ விழுந்தாலும் மீசையில மண்ஒட்டுலனு அவனுக்குள் சொல்லிக்கோண்ட விட்டுக்கு வந்து காலிங்க் பெல் அடித்தான்.

விட்டின் கதவை அம்மா திறந்து கொண்டு

“வப்பா வந்துட்டயா ரெடியாகு” என்று சொல்லும் போது அம்மா ரெடியாகி இருந்தாள் ராம் குழப்பமாக

“அம்மா எங்கமா நீங்க கிளம்பிட்டிங்க என்ன கிளம்ப சொல்றீங்க”

“டேய் செந்திலுக்கு பொண்ணு பாக்க… அம்மாவும் போகனுமல்லடா”

“அவனுக்கு பொண்ணு பாக்க அவங்கம்மா போவங்க நீங்க எங்க போறீங்க”

“ஐ ஜோக்கு பொண்ணு பாத்திட்டு வந்து சிரிக்கலாம் கிளம்பு”

“அம்மா ஏன்மா நீ எதுக்குமா”

“டே செந்திலம்மாதான் போன் பண்ணி என்னை உன்கூட வரச்சொன்னாங்க ஏதோ சாங்கியமா மொத்த அவங்க வீட்டு உறவுக்காறங்க நீ னு சேர்த்து எட்டு பேர்தான் இருக்காங்களா அதனால என்னோட சேத்தா ஒன்பது ஆகிருமா அதுக்குதான் வரச்சொன்னாங்க”

“ஓ கவுண்டிங்க ஷாட்டேஜீக்கு வரயா… இங்கபாரு நீ கவுண்டிங்க் ஷாட்டேஜுக்கு தான் வர அங்க வந்துட்டு சவுண்டெல்லா குடுக்க கூடாது பேசாம அவங்க குடுக்கறத வாங்கி சாப்படமா பொண்ணு நல்ல இருக்குனு கருத்து சொல்லி கல்யாணதேதி பிக்ஸ் பண்ணுணமாங்கறதுக்கு மட்டும் வாய தொறக்கனும் எதாவது இது கொற அது கொறனே அவ்வளவுதான் தெரிஞ்சுக்க” என்றான்.

“அவன்னவ பொண்ணு கிடைக்காம படறபாடு அவனவனுக்குதான் தெரியும் எதாவது கலாட்ட பண்ணுண அப்புறம் நான் சாமியார போயிருவேன்”

“டேய் சேரிடா வா போகலாம் சீக்கரம் ரெடியாகு” ராம் உள்ளே சென்று ரெடியாகி வெளியே வர அம்மா ரெடியாகி நிற்க இருவரும் செந்தில் விட்டுக்கு செல்ல அங்கிருந்து அனைவரும் பெண்விட்டிற்கு கிளம்ப ராமும் செந்தில் மற்றும் செந்திலின் மாமா அத்தை என ஒருகாரில் பயனிக்க செந்தில் ராமின் காதில் மட்டும் விழும்மாறு

“டேய் அங்க வந்து குடுத்தத வாங்கி சாப்டோமா.. காபி குடுச்சோமா…கைய கலுவினோமா… இருக்கனும் எதாவது கவுண்ட்டர் கீது குடுத்த நீ செத்த” ஐயே இது நம்ம அம்மாவுக்கு நாம சொன்ன டயலாக் சிக்னல் நம்மேக்கே காட்டுது என்று நினைத்துக் கோண்டே

“சரி சரி பாக்கலாம் “என்று சொல்ல இருபது நிமிட பயணித்தில் பெண்ணின் விட்டை அடைந்தனர்.

அனைவரையும் பெண்வீட்டார் “வாங்க வாங்க” உள்ளே அழைக்க உள்ளே சென்று பெண்கள் கிழே ஜமக்காளத்திலும் ஆண்கள் நாற்காலியிலும் செந்தில் அருகில் ராமும் அமர்தார்கள்.
மஞ்சள் பட்டு புடவை பிரௌன் பார்டரில் அதேநிறத்தில் ரவிக்கையும் சிறிய முகம் ஆனால் சிரித்த முகம் முகத்திற்கு தகுந்தவாறு மூக்கு அழகான கண்கள் அதன்மேல் புருவம் பிரித்து வகுடெடுத்த கூந்தல் கூந்தலின் அழகை மெருகெற்ற அதன் பின்னல் பின்னலையும் கூந்தலையும் செந்தில் ரசித்தான். மாப்பிள்ளைவீட்டாரையும் மாப்பிளையையும் மயக்க மலரின் மனத்தோடு மங்கை கையில் திண்பண்டங்களோடு வந்து செந்திலிடம் நீட்ட அரைமயக்கதுடன் பெண் முகத்தை பார்த்தவாறே திண்பண்டங்களை எடுக்க பெண் அப்படியே ராம்மிடமும் நீட்டினாள்.

ராமும் ஒரு பிளேட் எடுக்க பெண் நகரும் போது செந்தில் ராமிடம் சொல்வதுபோல்

“சூப்பரல்லடா”னு சொல்ல ராமும்

“ஆமாம் கேசரி சூப்பர்” ங்க பெண் இந்த கிண்டலை ரசித்து சிரித்தவலாக நகர அப்போது செந்தில் சொன்னான்

“டேய் பாவி நான் பொண்ண சொன்னேனான்”.

“ஓ அப்படியா நான் பொண்ணையே பாக்கல”

“நீ… திங்கறதுலேயே இரு”னு செந்தில் சொல்ல பெரியோர்கள் பேச திடீர்னு பேச்சு கசமுசாங்க கடைசிய எண்ணணு பார்த்த பொண்ணுக்கு செந்தில பிடிக்கலையாம் ராமைத்தான் பிடித்திருக்கிறதாம். சிறிது நேரம் கோப பட்ட செந்திலும்… செந்தில் குடும்பமும்… பெண் நேராக தைரியமாக பேசிய எதார்த்தை மதித்து கண்ணியபடுத்தி “அதனால என்னங்க அதுவும் எங்க பையன்தான் அவங்க அம்மா வந்திருக்காங்க அவுங்க சரிண்ணா ஒகே” ங்க ராமின் அம்மாவோ,

“நான் என்ன சொல்ல பையன் சொன்னா தான் எல்லாம்” ங்க ராமை நோக்கி என்னட “கண்ணா லட்டு தின்ன ஆசையா”னு செந்திலே கேட்டான்.

“டேய் என்னட.. உனக்கு பார்க்க வந்த பொண்ணு என்னை புடிக்குதுங்குது அதகல்யாணம் பண்ண எனக்கு சம்மதமானு நீ கேட்கறே”

“டேய் இதுல என்னட தப்பு மனசுல இருக்கறத எதார்த்தம வெளிப்படைய தயங்கம தைரியமா சொல்லிருச்சு இதுதாண்ட இந்த காலத்துல வேணும் இப்படி இருக்கற பொண்ணுங்க வாழ்க்கையில இதோபோல மனசுல எதுவும் வெச்சுகாம எதார்த்தமா பேசுவாங்க இந்த மாதிரி கிடைக்கறதெல்லாம் லக்குனு சொல்லிட்டு ராம் காதருகில் வந்து,

“டேய் நம்மள எத்தன பொண்ணுக வேணான்னுது இது புடுச்சுருக்குதுங்குது இதுதான் நல்ல சந்தர்ப்பம் அதனால நல்லயோசிச்சு புரிஞ்சுகிட்டு உன் முடிவ சொல்லு ” கொஞ்ச நேரம்யோசித்து விட்டு நான் பொண்ணு கிட்டு கொஞ்சம் தனியா… பேசனும் என்றான் ராம்.

பெண்விட்டுகறார் சிறிது நேரம் ஆலோசித்து விட்டு “சரிங்க”னு பெண்ணையும் ராமையும் வீட்டின் பின் உள்ள தின்னையில் தனியாக விட்டனர் இருவரும் சிறிதுநேரம் வெளிபடையாக பேசி முடிவெடுத்து சந்தோஷமாக சம்மதம் சொன்னார்கள் அதனால் அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி ராமின் அம்மா உள்பட. ராம் செந்தில் அருகில் வர பெரியோர்கள் அடுத்து ஆக வேண்டியகாரியங்களை பற்றி பேச ராம் செந்திலிடம் சொன்னான்.

“பொண்ணு நல்ல கேரக்டர் யாதர்த்தமா தெளிவா நிதானமா பொருமைய அழக உண்மைய பேசுது நானும் அதே மாதிரி எல்ல விஷயங்களையும் பேசிட்டேன்” என்றான்.

“ஆன ஒன்னே ஒன்னுதான்னு” நிறுத்தினான் ராம்.

“என்னான்னு” செந்தில் கேட்க, அதற்கு ராம்,

“இது அத்தனையும் அவங்க அக்கா கிட்டதான் கத்துகிச்சாம் அக்காவுடைய கேரக்டர் அப்படியே தங்கிட்ட இருக்காமா.. னுச்சு அப்படிபட்ட அந்த அக்காவயாருனு தெரியலே” ங்க உடனே செந்தில்.

“பொண்ணோட அக்கா யாருங்க” னு கேட்க வீட்டின் இன்னொரு அறையில் இருந்து வெளயே வந்த அந்த அக்காதான் ராம போடானது.

நாம் எதிர்பார்கும் போது அமையாதது! எதிர்பார்க்காத போது அமஞ்ச அதுவும் மகிழ்வே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *