கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 4,732 
 

சங்கீத்தா அவசரமாக காலையில் சமையலை முடித்து விட்டு காப்பி போட்டாள்,திவாகர் எழுந்தவுடன் காப்பி குடிக்கும் பழக்கம்,பிரஷ் பன்னிவிட்டு வந்து குடிக்களாம் தானே என்பாள் சங்கீத்தா,எனக்கு காப்பி குடித்தால் தான் பாத்ரூம் போகவே முடியும் என்பான் திவாகர்,முதலில் தண்ணி குடித்து விட்டு பிறகு காப்பி குடிங்கள் என்றால்,அவன் அதை கேட்ப்பதற்கு தயாராக இல்லை,இவளும் தற்போது சொல்வதை விட்டுவிட்டாள்,ஐந்து வருடமாக மாற்ற முடியாத திவாகரை இனி எப்படி மாற்றுவது,இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா,சங்கீத்தா எழுந்து குளித்து விட்டு,இரண்டு கப் தண்ணி குடித்தப் பிறகே வேலை செய்ய ஆரம்பிப்பாள்,பிள்ளைகளுக்கும் அதே பழக்கம்,வாய்கொப்பளிக்காமல் கூட காப்பி குடிக்கும் திவாகரை பார்க்கும் போது இவளுக்கு கோபம் வரும்,அமைதியாக இருப்பாள் மகன் அர்ஷனுக்கு நான்கு வயது,மகள் ஆஷாவிற்கு இரண்டு வயது

திவாகர் ஒரு கம்பனியில் வேலை செய்கிறான்,சொந்த வீடு,வாகனம் என்று வசதியாக வாழ்பவர்கள் தான்,சங்கீத்தா வீட்டில் இருந்தாலும் ஓய்வான நேரங்களில் சேலைகளுக்கு எம்ப்ராய்டரி போட்டு கடைக்களுக்கு கொடுப்பாள்,அர்ஷன் வீட்டு பக்கத்தில் இருக்கும் மழலையர் பள்ளிக்கு போய் வருவான்,ஆஷா வீட்டில் இருந்தாலும் அவளை கவனித்துக் கொள்ளும் சங்கீத்தா நேரம் கிடைக்கும் போது அவளின் வேலைகளையும் செய்து கொள்வாள்,முன்பு திவாகர் வேலை செய்யும் கம்பனியில் தான் சங்கீத்தாவும் வேலை செய்தாள்,அப்போது திவாகர் அந்த கம்பனியில் வந்து சேர்ந்தான்,பார்பதற்கு சாதாரணமான தோற்றம்,அதிகம் உயரம் இல்லை,பொது நிறம்,எதை பார்த்து சங்கீத்தா திவாகரை லவ் பன்னினாள் என்று தெரியவில்லை,ஆனால் இருவருக்கும் லவ்,அது கம்பனி முழுதும் தெரிய வந்து,மற்றவர்களின் பார்வை முழுவதும் இவர்கள் மீதே இருந்தது,சங்கீத்தாவிற்கு அது பிடிக்கவில்லை,வேலையை விட்டு நின்றுவிட்டாள்,திவாகர் சங்கீத்தா வீட்டிற்கு முறைப்படி பெண் கேட்டு வந்தான்,சங்கீத்தா பெற்றோர்கள் ஒத்துக் கொண்டார்கள்,சங்கீத்தா ஏற்கெனவே அவல்களுடைய லவ்வை வீட்டில் சொல்லியிருந்ததால் எந்த பிரச்சினையும் இல்லாமல் திருமணம் முடிந்தது.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள் அது சங்கீத்தா வாழ்க்கையில் நிஜமானது,திவாகரின் பல செய்கைகள் அவளுக்கு பிடிக்கவில்லை,இரவில் பல் தேய்க்காமல் திவாகர் வந்து படுப்பதுவே அவளாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,அவள் பல் தேய்த்து உடம்பிற்கு தண்ணி ஊத்திக் கொண்டு,நைட்டி மாற்றி விட்டு வந்துப் படுப்பாள்,அவன் கால் கூட கழுவ மாட்டான்,பக்கத்தில் படுக்கும் போது அவனின் வேர்வை மணம்,வாய் நாற்றம் என்று அவளுக்கு கஷ்ட்டமாகவே இருக்கும்,தூங்கும் போது அவனின் குறட்டை சத்தம்,பல்லை நெறு நெறு என்று கடிக்கும் சத்தம் இவளின் தூக்கத்தை கெடுக்கும்,பாதி நேரம் மூக்கில் உள்ள முடியை பிடுங்குவதாக மூக்கில் தான் திவாகர் கை இருக்கும்,அதை பார்க்கும் போது சங்கீத்தாவிற்கு அறுவறுப்பாக இருக்கும்.அவன் கையும் கழுவ மாட்டான் என்ன மனுஷன் இவன் என்று மனதில் திட்டிக் கொள்வாள் அவள்

திவாகர் சாப்பிட உட்கார்ந்தால் அதை விட அறுவறுப்பாக இருக்கும் குழம்பை அள்ளி ஊத்தி பிசைந்து வாயில் அள்ளி வைப்பான்,கை முழுவதும் குழம்பாக இருக்கும்,சாப்பிடும் போது சத்தம் அதிகமாகவே கேட்க்கும்,வயிறு நிறைய சாப்பிட்டு ஏப்பம் விடும் சத்தம் பெரிதாக இருக்கும்,திவாகர் பாத்ரூம் போய் அடி தொண்டையில் இருந்து காரும் சத்தம் இவள் சாப்பிடும் போது இவளுக்கு குடலை பிரட்டும்,என்னங்க சாப்பிடும் போது காராதீங்கள் என்று சொன்னால் கேட்க்கவே மாட்டீங்களா என்று சில நேரம் சங்கீத்தா கோபபடுவாள்,அதுவும் அவனுக்கு கணக்கில்லை,எப்படி இவனோடு குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளுக்கு தாயானேன் என்று அடிக்கடி தன்னை தானே கேட்டுக் கொள்வாள் சங்கீத்தா,கம்பனியில் உட்கார்ந்து வேலை பார்த்தே தொப்பை தீவாகருக்கு,வீட்டில் இருக்கும் நாட்களிலும் எந்த உடல் உழைப்பும் இல்லை,சாப்பிட்டு படுத்து தூங்குவது,எங்கையாவது போக வேண்டும் என்றால் வாகனத்தில் போவது என்று உடம்பை அநியாயத்திற்கு வளர்த்து வைத்திருந்தான் திவாகர்

பாதி நாட்கள் குழந்தைகளுடன் படுத்துக் கொள்வாள் சங்கீத்தா,திவாகர் பக்கத்தில் படுப்பதற்கு அவள் பெரிதாக விரும்புவது இல்லை தற்போது எல்லாம்,திவாகர் குளித்து விட்டு வந்து ஈர டவலை பெட் மீது போடும் பழக்கம் அவனுடையது,மடித்து வைத்திருக்கும் துணியெல்லாம் அள்ளி பெட்டில் போட்டு தனக்கு தேவையான துணியை தேடுவான் ஏதாவது ஒன்றை எடுத்து விட்டு மற்றயதை அப்படியே ஈரத் டவலுடன் சேர்த்து போட்டு வைத்துவிட்டுப் போய்விடுவான்,ஏன் இவன் இப்படி இருக்கான் எதிலும் கொஞ்சமாவது சுத்தம் இருக்கனும் என்று மனதில் திட்டி தீர்ப்பாள் சங்கீத்தா,எதுவும் சொன்னால் முறைப்பான் அதுவே அவளுக்கு பிடிக்காது,அடக் கடவுளே என்னை இப்படி இவனிடம் மாட்டிவிட்டீயே லவ் என்ற பெயரில் என்று அழாத குறையாக நினைத்துக் கொள்வாள் சங்கீத்தா,நாட்கள் ஓடியது

ஒரு நாள் பிரசாந்தனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான் திவாகர்,அவனும் இவன் கம்பனியில் வேலை செய்பவன் தான்,இரண்டு தடவை ஏற்கெனவே வந்திருக்கான் பிரசாந்தன்,இந்த தடவை வாடகைக்கு அறை கேட்டு வந்திருந்தான்,இவ்வளவு நாட்களும் பிரசாந்தன் வாடகைக்கு இருந்த வீட்டை அவசரமாக விற்கப் போவதாகவும் இவனை வேறு இடம் பார்த்து போகும் படி வீட்டு உரிமையாளர் சொன்னப் பிறகு,அவனுக்கு அவசரத்திற்கு வாடகைக்கு அறை கிடைக்காமல் தடுமாறி இருக்கான்,திவாகரிடம் கேட்டு இருக்கான்,ஏதாவது வாடகைக்கு அறை இருக்கா என்று திவாகரும் நம் வீட்டில் ஓர்அறை காளியாக தான் இருக்கு என்று அவனை அழைத்துக் கொண்டு வந்து விட்டான் அதன் பிறகு சங்கீத்தாவிடம் கேட்க்கும் போது அவளுக்கு ஏதும் மறுப்பு சொல்ல முடியவில்லை,அன்றிலிருந்து அவர்கள் வீட்டில் தங்க ஆரம்பித்தான் பிரசாந்தன்,அவனும் திருமணம் முடித்து மூன்று வயது குழந்தை உள்ளது,அவர்கள் ஊரில் இருக்கார்கள்,மனைவி ரதிதேவி ஆசிரியர் தொழில் ஊரில் செய்வதால் உடனே இங்கு வரமுடியாத சூழ்நிலை,இவன் மாதம் ஒரு முறை ஊருக்கு போய் வருவான்

முன்பு இருந்த அறையில் தனியாக பிரசாந்தன் சமையல் செய்து கொள்வான்,அவர்களின் உணவு பழக்க வழக்கம் இவனுக்கு ஒத்துவறாது அவர்கள் பஞ்சாபியர்கள்,இங்கு திவாகர் வீட்டில் சாப்பாட்டுக்கும் சேர்த்து பணம் கொடுத்து விடுவதாக கூறிவிட்டான் பிரசாந்தன்,சங்கீத்தாவிற்கு கொஞ்சம் வேலை அதிகம் என்றாலும்,முடியாது என்று அவள் கூறவில்லை திவாகரின் நண்பன் என்பதால்,பிரசாந்தன் அதிகாலையில் எழுந்து விடுவான் முதல் வேலையாக அருகில் இருக்கும் மைதானத்தில் ஓடப் போய்விடுவான்,வேர்த்து வருவான் அதன் பிறகு குளியல்,காப்பி என்று அவனுடைய நாள் ஆரம்பமாகும்,அவனுடைய அறை அவ்வளவு சுத்தமாக இருக்கும் எந்த ஒரு குப்பையும் இருக்காது,ஒவ்வொரு நாளும் குளிக்கும் போதே துவைக்கும் ஆடைகளை துவைத்து காயவைத்து விட்டு போய்விடுவான் மழை வந்தால் மட்டும் சங்கீத்தா உடைகளை எடுத்து உள்ளே வைப்பாள்,பிரசாந்தன் வந்தவுடன் உடைகளை அழகாக மடித்து அடுக்கி வைத்துவிட்டு தான் மற்ற வேலைகளை செய்வான்,திவாகர் வந்து அப்படியே சோபாவில் உட்கார்ந்து தூங்குவான் குறட்டை சத்தமாக இருக்கும்,இருவருக்கும் காப்பி போட்டு எடுத்து வருவாள் சங்கீத்தா,பிரசாந்தன் காப்பியை ரசித்து ருசித்து குடிப்பான்,திவாகர் சத்தமாக உறிஞ்சி குடித்து விட்டு எழுந்து போவான்,ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கிய பிரசாந்தன் தற்போது சங்கீத்தாவின் சமையல் அறையில் சமைக்கும் அளவிற்கு முன்னேறி இருந்தான் என்றாவது ஒரு நாள் நான் இன்றைக்கு சமைப்பதாக சமையல் அறையில் புகுந்து கொள்வான் பிரசாந்தன் அந்த பக்கமே வர மாட்டான் திவாகர்

சங்கீத்தாவும் பிரசாந்தனும் நன்றாக பழக ஆரம்பித்தார்கள்,சங்கீத்தாவின் சமையலை பாராட்டுவான்,அவளின் சேலையின் வேலைப் பாடு அழகாக இருக்கின்றது என்பான்,அவளும் அவனின் சமையலை பாராட்டுவாள்,எப்படி நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கீங்கள் வயதே சொல்ல முடியாது உங்களுக்கு என்பாள் சங்கீத்தா அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து தான் சாப்பிடுவார்கள்,பிரசாந்தன் சாப்பிடும் போது எந்த சத்தமும் இருக்காது,அளவாக அழகாக சாப்பிட்டு எழுந்து விடுவான்,திவாகர் அள்ளி கொட்டி சாப்பிடுவான் சங்கீத்தாவிற்கு சில சமயம் வெட்க்கமாக கூட இருக்கும்,மெதுவாக பிரசாந்தன் பக்கம் ஈர்க்கப் பட்டாள் சங்கீத்தா,ஒரு நாள் பிரசாந்தன் வேலைக்கு போகவில்லை ஏதோ உடம்பு முடியவில்லை என்று,அர்ஷன் பாடசாலைக்கு போய்விட்டான் ஆஷா தூங்கி கொண்டு இருந்தாள்,சங்கீத்தா குளித்து விட்டு அறையில் புடவை மாற்றிக் கொண்டு இருந்தாள் பக்கத்து அறையில் முனங்கள் சத்தம் சங்கீத்தா எட்டிப் பார்தாள் பிரசாந்தன் படுத்து கிடந்தான் இவள் காப்பி கலந்து கொண்டுப் போய் கொடுத்தாள் அகன்ற மார்புடன்,அவன் மேற்சட்டை இல்லாமல்,கருகரு முடியுடன் படுத்து கிடந்தான் அவன்,அவள் மெதுவாக அவனை எழுப்பினாள்,அவன் எழுந்து காப்பியை குடித்தான் ஏதாவது தேய்து விடவா என்றாள் சங்கீத்தா,வேண்டாம் என்றான் அவன்,பரவாயில்லை என்று அவன் அருகில் இருந்த தைலத்தை எடுத்து அவன் நெற்றியில் தடவி விட்டாள்,அவனுக்கு இதமாக இருந்தது,ஒரு நிமிடம் இருவரும் சலனம் பட்டார்கள்,அவன் அவளை கட்டிப் பிடிக்க,அவள் அவன் மார்ப்பில் சாய்ந்தாள்,ஒரு நிமிடத்தில் இருவரும் சுதாகரித்துக் கொண்டார்கள்,சங்கீத்தா சட்டென்று அறையை விட்டு வெளியில் வந்து விட்டாள்,ஏன் இப்படி நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை,பிரசாந்தன் என்னடா இப்படி நடந்துகிட்ட என்று தன்னை தானே திட்டிக் கொண்டான்

அதன் பிறகு இருவரும் எதுவும் நடக்காத்து போல் இருந்து விட்டார்கள்,இருவரும் இதை பெரிது படுத்திக் கொள்ளவில்லை,சந்தர்ப்ப சூழ்நிலை,பிரசாந்தன் மனைவியை விட்டு தனியாக இருப்பவன்,சங்கீத்தா திவாகர் பக்கத்தில் இருந்தும் விலகி இருப்பவள்,இதில் யார் மீது தப்பு என்று இருவரும் விவாதிக்க விரும்பவில்லை,மனைவி விரும்புவதுப் போல் கணவன் அமையாவிட்டால் இந்த மாதிரி சலனம் ஏற்படும் இதில் யாரையும் குற்றம் கூறி பயனில்லை,கணவன் விரும்புவது போல் மனைவி அமையா விட்டாலும,இது போல் சிக்கல்கள் ஏற்படும்,பேசி வைத்த திருமணம் என்றாலும்,காதலித்து செய்த திருமணம் என்றாலும் பரவாயில்லை தயவு செய்து உங்கள் பழக்க வழங்களை மாற்றிக் கொள்ளுங்கள் பல குடும்பங்கள் பிரிவதற்கு இதுவும் ஒரு காரணம்.

Print Friendly, PDF & Email

1 thought on “சலனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *