சந்தேகம் – ஒரு பக்க கதை

 

ரகுவின் மனைவி போன் வந்தால் எதிரில் பேசாமல் தனியாக எங்காவது போகிறாள் … பேசியது யார் என்றும் சொல்லுவது இல்லை … இதனால் சமிபகாலமாக ரகுக்கு தன் மனைவி மஞ்சு மேல் சந்தேகம் … அதனால் அலுவலகத்திலிருந்து .. அடிக்கடி வந்து, மஞ்சுவுக்கு தெரியாமல் அவள் நடவடிக்கையை … கண்காணிக்க ஆரம்பித்தான் …..
இதனால் ஏகப்பட்ட கேள்வி கேட்டாள் மஞ்சு …சட்டை ஏன் எவ்ளோ வேர்வை ஆபீஸ் ac தானே …பைக் ஏன் இத்தனை கிலோமீட்டர் ஓடி இருக்கு என்று…இப்படி இவள் கேட்கும் கேள்விகளை தட்டு தடுமாறி சமாளித்து வைத்தான் ….இதனால் இவன் நிம்மதி கேட்டது தான் மிச்சம் … இப்படி எல்லாம் முயற்சித்தும் அவளை பற்றி எதுவும் அறிய முடியலை ..எனவே தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடினான் ….

ஒரு வாரம் கழித்து துப்பறியும் நிறுவன அதிகரி அவனை அழைத்தார் ….

sir நீங்க சந்தேகப்பட்டது உண்மைதான் ..உங்க மனைவி மஞ்சு , நாங்க ஆபீஸ் போன உடனே கிளம்பி ஒருத்தரை தேடி போறாங்க …அவர் பின்னாடியே சுத்துறாங்க ….
அவங்க யார் பின்னாடி சுத்துறாங்கனு தெரிஞ்ச ஷாக் ஆய்டுவிங்க…..

ஆர்வத்தையும் கோபத்தையும் அடக்க முடியாமல்….. சொல்லுங்க, அவன் யாரு என்றான் ரகு …..

உங்க பின்னாடி தான் ! சமீபமா உங்க மனைவிகிட்ட உண்மை பேசாம .. நிறைய போய் சொல்லிருகிங்க … அவங்க உங்க மேல் சந்தேகப்பட்டு உங்களை fallow பண்ணிருக்காங்க!…
ரகுக்கு தன் தவறு உரைத்தது.

- 09 Apr 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
சற்றுமுன் வரை தன்னில் அலங்காரமாயிருந்த அத்தனையும் மெத்தையில் கலைந்து கிடந்தது.சுடிதாருக்கு மாறினாள். இது எத்தனையாவது அலங்காரம்?அவளுக்கே ஞாபகமில்லை. மனமெங்கும் குமுறல், அழுகையாக உருவெடுக்கும் முன் நிதானத்தை பற்றிக் கொள்ளனும் என்று எண்ணியவாறே துண்டை எடுத்துக் கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தாள் சுபத்ரா. சுபத்ரா,சாமுத்ரிகா லட்சணம் ...
மேலும் கதையை படிக்க...
கனடாவில் கை லாண்ட் மெமோரியல் கார்டனில் அப்படி ஒன்றும் சனம் அலை மோதவில்லைத்தான். நூறுபேர்வரை அங்கு கூடியிருந்தார்கள். அக்கார்டனில் மைக் ஒன்றின் முன் நின்று கொண்டு தம்மை ஒரு நாட்டுப்பற்றாளர் எனத் தாமாகவே அறிமுகப்ப்டுத்திக் கொண்ட சிவக்கொழுந்தர் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சில் ...
மேலும் கதையை படிக்க...
நீங்க யாராவது பரீட்சையிலே ஃபெயிலாகியிருக்கீங்களா? அதனாலே… அப்பா, அம்மாட்டே திட்டு வாங்கியிருக்கீங்களா? அந்த வேகத்தில் தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கீங்களா? அந்த நிலைமைதாங்க நம்ம ஷர்மிக்கு வந்துடிச்சி! ஆனா….அதுக்கு முன்னாலே சமந்தா மிஸ்ஸை மட்டும் பார்க்கணும்னு ஆசை? மிஸ் வீட்டுக்கு போனாள், பார்த்தாள்…. அழுதாள்! தற்கொலையை மட்டும் மறைத்து ...
மேலும் கதையை படிக்க...
நாலு பேரு கூடி வாழ்த்த…
பிலால் சொன்ன அந்த நல்ல சேதியைக் கேட்டதும், அவரை நெஞ்சோடு அணைத்து, முஸாபா செய்தார் அப்துல்லா. ""நல்ல சேதி சொன்னீங்க பிலால்... அல்லாவுடைய கருணை, இப்பதான் நம்ம மேல பட்டிருக்கு... என் மகள் யாஸ்மீனைவிட, உங்க மகள் ஆயிசா, இரண்டு வயசு மூப்பு... ...
மேலும் கதையை படிக்க...
குமரேசனுக்கு வயது இருபத்தெட்டு. சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது சென்னையின் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான்.   திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனில் தனி அறை எடுத்து தங்கியிருக்கிறான். இன்னும் இருபது நாட்களில் அவனுக்கு சுமதியுடன் கல்யாணம்.  கடந்த ஒரு வருடமாக அவன் திருமணத்திற்காக பெண் ...
மேலும் கதையை படிக்க...
கல்யாணக் குருவி
சதாசிவம் இறுதிச் சடங்கு
தற்கொலை – ஒரு பக்க கதை
நாலு பேரு கூடி வாழ்த்த…
இம்பல்ஸிவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)