சத்தம் – ஒரு பக்க கதை

 

குளித்துவிட்டு அவசரமாக வந்த லலிதா கணவனிடம் முறையிட்டாள்.

‘‘பாருங்க, இன்னிக்கும் ஆரம்பிச்சுட்டாங்க அந்தப் பசங்க… கத்தல் தாங்கல!’’ அவள் கோபம் பரசுவுக்குப் புரிந்தது.

பக்கத்துக்கு வீட்டு பசங்களுக்கு ஸ்கூல் லீவு விட்டது முதல் இப்படித்தான். கேட் முன்னால கூடி ஒரே சத்தம், ஆரவாரம், லூட்டிதான்! என்னதான் இரண்டு பேருமே வேலைக்குப் போகிறவர்கள் என்றாலும், காலையிலும் மாலையிலும் காது கொள்ளாது. இன்னும் ரெண்டு மாதம் அவர்கள் ரகளைதான்.

‘‘இன்னிக்காவது ஆபீஸ் புறப்படறப்போ அவங்களை ரெண்டு வார்த்தை கண்டிச்சு வையுங்க…’’ – சொல்லிவிட்டு அவசரமாக அவள் முதலில் புறப்பட்டுப் போய்விட்டாள்.

மாலையிலும் அதே சத்தம், ஆரவாரம்…

பரசு இன்றைக்கும் வாயைத் திறக்கவில்லை என்று தெரிந்தது.

‘‘என்னங்க, இப்படி கண்டுக்காம இருந்தா என்ன நினைப்பாங்க அவங்க? இன்னும் துளிர்விட்டுப் போகாதா?’’

அவளை அமைதிப்படுத்திவிட்டு சொன்னார் பரசு… ‘‘நானும் கண்டிக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனா, யோசிச்சுப் பாரு… இப்பதான் நாம ரெண்டு பேரும் ஆபீசில் நிம்மதியா இருக்கிறோம். ‘வீட்டைப் பூட்டிட்டு வந்திருக்கோமே… தெருவில ஈ, காக்கை நடமாட்டம் இருக்காதே. எவனாவது உள்ளே புகுந்திடுவானோ’ன்னு ஒரு கவலை மனசுல ஓடிட்டே இருக்குமே! அதிலேர்ந்து நமக்கு விடுதலை தர்றதுக்காகவாவது இந்தப் பசங்களோட ஜாலி கத்தலை மன்னிச்சுடுவோமே…’’
லலிதா புன்னகைத்தாள்.

- 09 Apr 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அவசரமாகக் கண்ணாடியை அணிந்துகொண்டு வந்த அழைப்பை ஏற்றான் செல்வம். மறு முனையில் அவனது நண்பர் கோவா சங்கர். "செல்வம் எனக்கு ஒண்ணுமே புரியல. நான் இப்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் "என்றார் அவர். " எங்க ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு ஒரு சமையல்காரர் தேவை. அப்படி ஒருவர் கிடைத்தால் அவருடைய வேலை மிகவும் சுலபமானதாக இருக்கும் என்று என்னால் உத்திரவாதம் தர முடியும். அவர் சமைக்க வேண்டியது என் ஒருவனுக்கு மட்டுமே. அதுவும் காலை உணவை நானே தயாரிக்கும் வல்லமை பெற்றிருந்தேன். ...
மேலும் கதையை படிக்க...
எப்படி இது நேர்ந்தது? எல்லோருடனும் அன்புடன் பழகிய பின் ஏன் இந்த விரிசல்? நினைக்க நினைக்க எனக்குள் வேதனை பொங்கியது. நேற்றுவரை பேசிவந்த மணியக்கா கூட இன்று மெளனமாய் முகத்தைத் திருப்பியபடி போகிறாள். எனக்குள் குழப்பமாக இருந்தது. நான் எதுவும் தவ்று ...
மேலும் கதையை படிக்க...
புறாக்காரர் வீடு என்பது தான் எங்கள் வீட்டின் அடையாளமே. அப்பாவுக்கு சிறு வயதிலிருந்தே புறா வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். பல வருடங்களாக தன் உயில் போல் வளர்த்து வருகிறார். எங்கள் வீடு சொந்த வீடு என்பதாலும், நாங்கள் நிறைய வருடங்களாய் அங்கேயே ...
மேலும் கதையை படிக்க...
எதிர் வீட்டில் வழக்கம் போல் இன்றும் சண்டை. எப்போதும் போல் பெண்ணின் குரலே ஓங்கி ஒலித்தது. கேசவன் நூத்துக்குப் பத்து வார்த்தைகள் ஆரம்பத்தில் பேசினான். இப்போது ஒரு வார்த்தைகூட பேசவில்லை. குரல் கேட்கவில்லை. "நீங்க ரோசபாசமில்லாதது போல இப்படி மௌனமா இருந்தே என் கழுத்தை ...
மேலும் கதையை படிக்க...
மரணத்தின் வாசலில்
ரோறாபோறா சமையல்காரன்
வீடு
புறாக்காரர் வீடு
மூத்தவள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)