நமசிக் கிழவனுக்கு இரண்டு நாளாய் காய்ச்சல். வேலைக்குப் போகவில்லை. இன்று கஷாயம் காய்ச்சி குடித்துவிட்டு பார்க்குக்கு கிளம்பினான். அங்கே தோட்டப்பராமரிப்பு அவன் பணி.
எதிரே வந்த பரமு, ‘’என்ன நமசி! ரண்டு நாளா உன்னைக் காணலே! பார்க்ல பயிர் பச்சை எல்லாம் உன்னைத் தேடுது..!’ ’என்றான்
‘’ம்…ம்….அறிவிலா தாவரமாவது என்னத் தேடுறதா சொல்றியே’’ என்றான் நமசி ஒரு வித மனத்தாங்கலுடன்.
பரமு, ‘பெத்தவங்களை கவனிக்காத பிள்ளைகளை அரசாங்கமே கண்டிச்சு செலவைக் கொடுக்க வழி பண்ணுதாம். பேப்பர்ல படிச்சேன். நீயும் கலெக்டருக்கு ஒரு மனு போடேன். உன் புள்ளைதான் பட்டணத்துல நல்ல வேலையிலிருக்கானே’’
‘’அடப் போப்பா! அரசாங்கம் சொல்லியா தாயில்லா என் புள்ளையைக் கஷ்டப்பட்டு வளத்துப் படிக்க வச்சேன்.
அப்பனைக் கவனிக்கணும்னு அடிமனசுலே தோணனும். சட்டம் போட்டு பாசத்தையும் கடமையையும் உணர்த்தறதுல எனக்கு உடன்பாடு இல்ல.’’ என்றவாறே நகர்ந்தான்.
- மு.சிவகாமசுந்தரி (1-12-10)
தொடர்புடைய சிறுகதைகள்
அந்தப் பழங்கால பிரிட்டிஷ் கட்டடத்தை விட்டு வெளியே நடந்தாள். வெயில் முகத்தைச் சுட்டெரித்தது. இதைப் போன்ற உயரமான மேற்கூரையும் வளைவுகளையும் நீளமான தாழ்வாரங்களையும் கொண்ட கட்டடம் இன்னும் வேறு ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாள். ராஃபிள்ஸ் பிளேஸில் இல்லை. டோ ...
மேலும் கதையை படிக்க...
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அகலமான ஜரிகை பார்டர் போட்ட சிவப்பு நிற மதுரைச் 'சிந்தோடி' தாவணியைத் தன் துணைவிக்குப் பொறுக்கி யெடுத்தபோது அப்துல் காதரின் முகமெல்லாம் மலர்ந்தது.
அதற்காக அறுபது ரூபாயை அலட்சியமாக வீசி ...
மேலும் கதையை படிக்க...
சென்டிரல் ரயில் நிலையக் கட்டடத்தில் சுதந்திரத் தினத் தீப அலங்காரம் மிகப் பிரமாதமாக இருந்தது. இரவு நேரத்தில் வான இருளின் பின்னணியில் தோரண வரிசையாக விளங்கும் மின்சார தீபங்கள் வண்ணமீன்கள் முளைத்தனவோ எனத் தோற்றமளித்தன.
எதிரே ஜெனரல் ஆஸ்பத்திரிச் சுவரில் சாய்ந்து ...
மேலும் கதையை படிக்க...
அக்கா சற்று சந்தோஷமான மனநிலையில் இருப்பதுபோலத் தென்பட்டது. இன்று ஷெல்லடிச் சத்தம் இல்லை. இடம் பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பலாம் என்ற அறிவித்தலும் வந்திருக்கிறது. சொந்த இடங்களைப் போல் சொர்க்கம் வேறேது?
இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரு ...
மேலும் கதையை படிக்க...
'தாத்தா!' என்று ஓடி வந்த பேத்தி ராகவியை அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார் பெரியவர் சிங்கமுத்து.
அந்த கிராமத்திலே இருக்கும் வீடுகளிலே மிகப்பெரிய வீடானா ஜமீன் மாளிகைக்கு சொந்தக்காரர் அவர். அதில் தன் மனைவி ராஜேஸ்வரி, மகள், மருமகன் மற்றும் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார்.
ராகவிக்கு தன் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-23 | அத்தியாயம்-24
நடராஜனுக்கு கமலா போ¢ல் இன்னும் நம்பிக்கை வரவில்லை.’இவள் இப்படித் தான் சொல்லுவா.நாமும் ஏமாந்து போய் உண்மை காரணத்தை சொல்லி விடுவோம்.உண்மை காரணம் தொ¢ஞ்சவுடன் பூகம்பம் தான் வெடிக்குமே ஒழிய, இவள் குழந்தையை வளக்க ஒத்துக் கொள்ள மாட்டா.நாமே ஏமாந்துப் ...
மேலும் கதையை படிக்க...
அன்று கோர்ட்டில் அதிக வேலை இருந்தது, இரண்டு கேஸ் விசயமாக நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது திருமதி லலிதாமணி அவர்களுக்கு! ஆகவே அக்கடாவென தன் அலுவலகத்தில் உட்கார்ந்தவர் தலைசாய்ந்து மெல்லிய குறட்டையுடன் நித்திரையில் மூழ்கிவிட்டார்.அப்பொழுது மணி பகல் இரண்டு இருக்கும். உள்ளே ...
மேலும் கதையை படிக்க...
ஜீவித்தா மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்,பின்னால் யாரோ கூப்பிடுவது போல் இருந்தது,திரும்பி பார்த்தாள் அவள்,மாலினி ஓடி வந்து ஜீவித்தாவை கட்டிப் பிடித்துக் கொண்டாள்,எப்படி இருக்க,கண்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது,ஏன் இவ்வளவு மெலிந்து போய்விட்ட என்றாள் மாலினி,உனக்கும் தான் தலையெல்லாம் நரை விழுந்து விட்டது ...
மேலும் கதையை படிக்க...
அந்த கிராமம் அவ்வளவு அழகானது அல்ல. ஒரே ஒரு பெரிய ஆலமரம் அதை சுற்றி முப்பது முதல் நாற்பது வீடுகளே இருக்கும். அதிலும் பாதிக்கு மேல் குடிசை வீடுகள்.
அந்த ஊரில் நாய்கள் அதிகம். அந்த நாய்கள் எதுவும் பார்ப்பதற்கு தெரு நாய்கள் ...
மேலும் கதையை படிக்க...
வீட்டில் மளிகை தீர்ந்து விட்டது என்பதை முருகன் மனைவி குழ்ந்தைகள் முன்னால் சப்தமிட்டு கூறிய போது இவனுக்கு என்றும் வரும் கோபம் அன்று அதிசயமாய் வராமல் 'பார்க்கலாம்' என்று சொன்னதை அவன் மனைவி அதிசயமாய் பார்த்தாள்.
'பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டானே தவிர அண்ணாச்சி ...
மேலும் கதையை படிக்க...