சக்திலிங்கம்..!

 

” வடிவேலு வாத்தியாருக்குத் திருமணம்..! ” – செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவருக்கு வயது ஐம்பது. இன்னும் பத்தாண்டுகளில் எங்களைப் போல் ஓய்வு.

” உண்மையா..?? ! ” நம்ப முடியாமல் தகவல் சொன்ன நண்பரைப் உற்றுப் பார்த்தேன்.

” சத்தியம்ப்பா…! ” அவர் என் தலையிலடித்தார்.

நான் அப்படியே அசந்து போனேன்.

” பொண்ணு யார் தெரியுமா…? ” – நண்பர் கேட்டார்.

” எனக்கு எப்படித் தெரியும்..? ”

” சொல்றேன். சக்திலிங்கம் அம்மா..! ” அவர் அடுத்த இடியை இறக்கினார்.

ஆள் புரிய அப்படியே சிலையானேன்.

பத்து வருடங்களுக்கு முன் எங்கிருந்தோ வடிவேல் எங்கள் நடுநிலைப் பள்ளிக்கு மாற்றலாகி வரும்போது கையில் டிரங்கு பெட்டியுடன் தனி ஆள். எங்கள் பள்ளி நகரத்தைத் தள்ளி வெகு தூரம். சாப்பாடு, தங்க வசதி இல்லாத ஊர். எப்படி இருக்கப் போகிறார்..? – என்று யோசித்த எங்களுக்கு பள்ளியிலேயே தங்குவதற்கு இட வசதி செய்து கொடுத்தோம்.

அடுத்து சாப்பாடு..!

வடிவேலுக்குச் சமைக்கத் தெரியாது. அடுத்து… பள்ளியிலேயே சமைத்து சாப்பிடுவது என்பது சரிப்படாது. இரண்டு நாட்கள் அவர் நரகத்திற்குப் போய் சாப்பிட்டு வர சிரமப்படடார். இதற்கும் ஏதாவது வழி செய்யவேண்டுமென்று யோசிக்கும்போதுதான்….

எட்டாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவன் சக்திலிங்கம் எங்கள் கண்ணில் பட்டான்.

ஒரு நாள் மாலை வடிவேலுவை அழைத்துக் கொண்டு அந்த வீட்டு வாசலில் போய் நின்றோம்.

‘ பையன் பள்ளிக்கூடத்துல தப்புத் தண்டா ஏதாவது பண்ணிட்டானா…?! ‘ – என்கிற கலவரத்தில் அவனின் தாய் பரமேஸ்வரி – விதவை கலவர முகத்துடன் வெளியே வந்தாள்.

”கவலைப்படாதீங்கம்மா. ஒரு உதவி கேட்டு உங்ககிட்ட வந்தோம். ” நண்பர் சொன்னார்.

அவள் புரியாமல் பார்த்தாள்.

” இவர் வடிவேல் வாத்தியார். இந்த ஊர் பள்ளிக்கூடத்துக்குப் புதுசா வந்திருக்கார். . குடும்பம் இல்லாதவர். பள்ளிக்கூடத்துல தங்க வச்சிட்டோம். சாப்பாட்டுக்கு மட்டும் சிரமப்படுறார். மாசம் கொஞ்சம் பணம் வாங்கிக்கிட்டு இவருக்கு சாப்பாடு போட்டீங்கன்னா.. உதவியா இருக்கும். இவருக்காக நீங்க அஞ்சு கறியும் சோறும் சமைக்க வேணாம். நீங்க வழக்கமா சமைக்கறதையே கொடுத்தா போதும். உங்களுக்குத் சிரமம் வைக்காம வாத்தியாரை இங்கே வந்து சாப்பிடச் சொல்றோம். இந்த ஊர்ல உங்ககிட்ட மட்டும் இந்த உதவியை ஏன் கேட்கிறோம்ன்னா… இந்தப் பணம் சிரமப்படுற உங்களுக்குக் கொஞ்சம் உதவியா இருக்கும். கொஞ்சம் மறுக்காம பெரிய மனசு பண்ணுங்க..” சொல்லி கெஞ்சலாக அவளைப் பார்த்தேன்.

பரமேஸ்வரி கொஞ்சம் யோசித்தாள். பின்….

”சரி ! ” தலையாட்டினாள்.

அன்றிலிருந்து வடிவேலுக்கு அவள் வீட்டில் சாப்பாடு. மூன்று வேளையும் அங்கே போய் சாப்பிட்டுவிட்டு இரவில் பள்ளிக்கூடத்தில் படுக்கை.

பையன் பள்ளிக்கூடத்தை விட்டு நின்று….. இப்போது வயது இருபதுக்கு மேல். பத்தாம் வகுப்புவரை படித்து முடித்துவிட்டு வேலைக்காக அலைகிறான். வாத்தியாருக்கு இன்னும் பரமேஸ்வரி வீட்டில் சாப்பாடு.

திருமணம் எப்படி…?

அவரும் அனாதை. அவளும் விதவை. வயதும் ஏறக்குறைய கொஞ்சம் ஏற்றத்தாழ்வு. ஒத்துப்போய் தொடர்பேற்பட்டுவிடாதா..? உண்ட வீட்டிற்கு இரண்டகமா..? திருமண வயதில் பையன் இருக்கும்போது பரமேஸ்வரி எப்படி இதற்கு ஒத்துக்கொண்டாள்..? ! சக்கிதிலிங்கம் அவமானப்படாமல் எப்படி சம்மதித்தான்.???….. எனக்குள் கேள்வி மேல் கேள்வி.

அப்போதுதான் சக்திலிங்கம் வீட்டு படி ஏறி வந்தான். வெகு நாட்களாக அவனைப் பார்க்கவில்லை. ரொம்ப உடைந்து உருமாறிப் போயிருந்தான்.

” என்ன சக்திலிங்கம்..? ” ஆளை ஏறிட்டேன்.

” அம்மாவுக்கும் வாத்தியாருக்கும் திருமண ஏற்பாடு செய்திருக்கேன் சார். நாளைக்கு காலையில நம்ம ஊர் மாரியம்மன் கோயில்ல திருமணம். நீங்க ரெண்டு பேரும் வரணும்…” சொன்னான்.

இது நாங்கள் எதிர்பாராதது. நானும் நண்பரும் உள்ளுக்குள் துணுக்குற்று ஒருவரை ஒருவர் பார்த்தோம் .

பின் எனக்குள் கொஞ்சம் துணிவு வந்து….

” சக்தி ! கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது. இப்போ இந்த திருமணம் அவசியமா…? ” கேட்டேன்.

” அவசியம் சார் ! ” அவன் தாழ்ந்த குரலில் சொன்னான்.

” ஏன்ப்பா..? ” – நண்பர்.

” தொடர்பு அது இதுன்னு ஊரெல்லாம் அவுங்களைப் பத்தி தப்பாய் பேசுறாங்க. ஆனா… உண்மையை உங்ககிட்ட மட்டும் சொல்றேன். எனக்கு உடல்நிலை சரி இல்லாம மருந்து மாத்திரை சாப்பிவிட்டு வர்றேன். கிட்னி பழுது. !! ” நிறுத்தினான்.

” சக்தி ! ” இருவரும் அலறினோம்.

” பிழைக்கிற அளவுக்கு செலவு செய்ய வசதி இல்லே என்கிறது உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம். யார்கிட்டேயும் கையேந்த மனசில்லே. அவ்வளவு பெரிய தொகை யார் கொடுப்பா..? வசூலிச்சு மருத்துவம் பார்க்கிற அளவுக்கு கால நேரம் இல்லே சார்.ரொம்ப முத்திப் போச்சு.”

உறைந்தோம் .

”எனக்குப் பிறகு அம்மா அனாதையாகிடுவாங்க. நான் இல்லாம வாத்தியார் வீட்டுக்குச் சாப்பிட வரமாட்டார். ஆக மொத்தத்துல ரெண்டு பேருமே கஷ்டப்படுவாங்க. அதனால இவுங்களைச் சேர்த்து வைச்சா கஷ்டம் தீரும். ஒருத்தருக்கொருத்தர் துணையாய் இருக்கிறதோட இல்லாம ரெண்டு பேரும் சேர்ந்து என்னை சீக்கிரம் மறப்பாங்க இது எல்லாம் யோசிச்சி முடிவெடுத்துதான் சார்… அம்மாகிட்டேயும் வாத்தியார்கிட்டேயும் விபரம் சொல்லி சம்மதம் கேட்டேன். லேசுல மசியலை. கால்ல விழாத குறையா ரொம்பநேரம் கெஞ்சி….. ஒரு வழியா சம்மதிச்சாங்க. நீங்க ரெண்டு பேரும் வந்தீங்கன்னா…இந்த திருமணத்துக்கும் அவுங்களுக்கும் தெம்பு, தைரியம்.! கண்டிப்பா வாங்க சார்..! ” சொல்லி கையெடுத்துக் கும்பிட்டான்.

” சக்தீஈஈ….” நானும் நண்பரும் ஆடிப்போய் படீரென்று எழுந்து அவனை ஆரத்தழுவினோம்.

‘ சக்தி எவ்வளவு பெரிய மனிதன் ! ‘ – பொங்கிய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் விம்மினோம். 

தொடர்புடைய சிறுகதைகள்
அமாவாசை. மீன் பிடி இல்லை. மணி 7.00. சவகாசமாக எழுந்தான் கண்ணன். வயசு இருபத்தி எட்டு. பொறியியல் படிப்பு. இன்னும் மணமாகாகவில்லை. வேலை கிடைக்காததினாலும் போக விருப்பமில்லாததாலும் அப்பாவுடன் சேர்ந்து சுயதொழில் முயற்சியில் கடல் தொழிலில் இறங்கி விட்டான். தற்போது அப்பாவிற்குச் ...
மேலும் கதையை படிக்க...
"பெரிய பொல்லாத சைக்கிள். ஓட்டை வண்டி. ! தொடைக்கனுமாம் தொடைக்க..!" - பத்தாவது படிக்கும் நிர்மல் வெறுப்பும் சலிப்புமாய் வாசலில் நிற்கும் சைக்கிளை ஒரு உதை விட்டுவிட்டு பொறுமிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான். "அம்மா..! அம்மா !" கூப்பாடு போட்டான். நளினிக்கு இவனென்றால் உயிர். செல்லம். "என்னம்மா..?" ...
மேலும் கதையை படிக்க...
கட்டிலில் பக்கத்தில் படுத்து அவள் இடையை அணைத்தவனிடம்..... "என்னங்க..! எனக்கொரு உதவி...இல்லே சேதி...."என்றாள் மாலினி. "என்ன...? "என்றான் ரஞ்சன். அவனின் கை சில்மிசத்தில் நெளிந்த அவள் , அவன் கையை இறுக்கிப் பிடித்து நிறுத்தி ... ''உங்களுக்குத் திருமணம் ஆயிடுச்சா...? "கேட்டாள். "ஏன்...?" "பதில் சொல்லுங்க...?" "இல்லே..'' "இது பொய்யா, நிஜமா...?" "உண்மை. !'' "அப்படியா...?... ...
மேலும் கதையை படிக்க...
'அட்டையாய் ஒட்டி படுத்தி எடுக்கிற மனைவி அஞ்சு நிமிசம் பிரிஞ்சாலே அமிர்தம் ! அதுவே அஞ்சு நாள்ன்னா.....?!!' எனக்குத் தலைகால் புரியவில்லை. மாட்டாதவரை நானும் என் பொஞ்சாதியும்...ரெண்டு புள்ளைங்க பெத்தும் ரொம்ப அன்னியோன்யம். எசகுபிசகாய் ஒருநாள் வீட்ல அடுத்தத் தெரு நிர்மலாவோட இருக்கும்போது ...
மேலும் கதையை படிக்க...
கூரை குடிசைக்குள் கூதற்காற்று இறுக்கமாக அடித்தது. போர்த்தியிருந்த போர்வையையும் மீறி உடம்பிற்குள் குளிர் ஊசியாகக் குத்தியது. மாலினிக்கு...ஏதோ ஒன்று உறுத்த போர்வையை விலக்கி எழுந்து வெளியே வந்து பார்த்தாள். கேசவன் மண் தரையில் வெற்றுடம்போடு படுத்துக் கிடந்தான். ஒரு புழுவைப் போல் சுருண்டு கைகளிரண்டையும் ...
மேலும் கதையை படிக்க...
நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான். "என்னப்பா அது...?" என்றேன். "கோதுமை சார் ."என்றான். "எங்கே இருந்து வாங்கி வர்றே..? '' "நியாய விலைக் கடையில சார்" சொல்லிச் சென்றான். அடுத்த வினாடி எனக்குள்ளும் வாங்க வேண்டும் என்கிற ...
மேலும் கதையை படிக்க...
காலையில் கண் விழிக்கும் பொது மணி 6.30. ! 'ஐயோ..!' அடித்துப் பிடித்து எழுந்தேன். "நிர்மல் ! விமல் !"- அருகில் மெத்தையில் படுத்துறங்கியவர்களைத் தட்டி எழுப்பினேன். சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தார்கள். அவரசரமாக வந்து வாசல் திறந்தேன். படியில் பால் பாக்கெட் இருந்தது. எடுத்துக் கொண்டு விடுவிடுவென்று ...
மேலும் கதையை படிக்க...
ஆள் கம்பெனியில் உயர் பதவி. நல்ல சம்பளம். அப்புறம் ஏன் சைடு பிசினஸ். ஐந்து பத்து லட்சம் போட்டு வியாபாரம் ? பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறான் ? சம்பாதிப்புக்கு வேலை. இருக்க ஒரு வீடு. திடீர் செலவிற்குக் கொஞ்சம் சேமிப்பு. மனைவி ...
மேலும் கதையை படிக்க...
நான்...நிற்கவும் முடியாமல், நெளியவும் முடியாமல், இருக்கப் பிடிக்காமல், உட்காரவும் முடியாமல் ஒரு அவஸ்தையான ஆத்திர இம்சையில் அந்தக் கிளினிக்குள் உள்ளுக்கும் புறத்துக்குமாக நடந்தேன். மருத்துவரைப் பார்க்கும் அவசியத்தில் என் அம்மா என் முகத்தைப் பார்க்கவேப் பயந்துகொண்டு தலையை வேறு புறம் திருப்பி கூட்டத்தோடு ...
மேலும் கதையை படிக்க...
இரவு பத்து மணி. கட்டிலுக்கு வந்த மகேசுக்குள் மகிழ்ச்சித் துள்ளல். காரணம் இன்றைக்குத் தாம்பத்திய நாள். கணவன் மனைவி மாதச் சம்பளக்காரர்கள், அலுவலக உழைப்பாளிகள் என்றாலே தாம்பத்தியத்தில்கூட கட்டுப்பாடு என்பது காலத்தின் கோலம். என்னதான் ஆண் பெண்ணுக்கு உதவி ஒத்தாசை அனுசரணையாக இருந்தாலும் காலை...சமையல் ...
மேலும் கதையை படிக்க...
காத்தான் குளம்…!
பாடம்…!
கலியாணம் பண்ணிக்கிறீங்களா…?!
பய புள்ள….!
நூலிழை நேசம்…!
சாபம்..!
அடுப்படி இல்லறம்..!
சைடு பிசினஸ்
காத்திருத்தல்
ஞாயிறு…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)