சக்குவின் சின்னிக்குட்டி

 

“உங்கள் மனைவிக்கு ஹிஸ்டீரியா!”

மருத்துவர் கூறியபோது, கருணாகரனுக்கு நிம்மதிதான் ஏற்பட்டது. எங்கே `பைத்தியம்’ என்று சகுந்தலாவைக் கணித்துவிடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தவன் ஆயிற்றே!

காரணமின்றி அழுதவள். எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பவள். அவளுடைய மனக்குறை என்னவென்று அவனுக்குப் புரியவில்லை.

திருமணமாகிய முதல் மூன்று வருடங்களில் சாதாரணமாகத்தானே இருந்தாள்? இப்போது, இரண்டு வருடங்களாக ஏன் இப்படி?

தான் அடிக்கடி வேலை விஷயமாக வெளிநாடு போவதால், தனிமை அவளை வாட்டுகிறதோ? பெரிய உத்தியோகம் என்றால், பொறுப்புகளும் அதிகமாகத்தானே இருக்கும்! இதுகூடவா புரியவில்லை அவளுக்கு?
கேட்டும் பார்த்துவிட்டான். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏதாவது கேட்டால், ஒரே அழுகை.

கடைசி முயற்சியாக, வைத்தியம்.

“இன்னும் பிள்ளை பிறக்கலியேன்னு அவங்களுக்கு ரொம்ப ஏக்கம். நம்ப சமூகத்தைப்பத்தி ஒங்களுக்குத் தெரியாதா! யார் வீட்டு விசேஷத்துக்காவது போனா, அக்கறையா, துக்கம் விசாரிப்பாங்க. சின்னக் குழந்தைங்களைத் தூக்க விடமாட்டாங்க!”

தன்னிடம் மனைவி இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கோபமும், உடனே பச்சாதாபமும் ஏற்பட்டன.

சகுந்தலாவிடம் நைச்சியமாகப் பேச்சுக்கொடுத்தான். ‘சில பேருக்கு, கல்யாணமாகி, பத்துப் பதினஞ்சு வருஷம் கழிச்சுக்கூட குழந்தை பிறந்திருக்கு. ஒனக்கு அவ்வளவு ஆசையா இருந்தா..,” அவன் சொல்லி முடிப்பதற்குள், அவள் குறுக்கிட்டாள்: “தத்து எடுக்கிற சமாசாரமே வேண்டாம்”.

அதன் காரணத்தைக் கேட்கவெல்லாம் அவனுக்குப் பொறுமை இருக்கவில்லை.

`எப்படியோ போ!’ என்று மனத்துக்குள் திட்டத்தான் அவனால் முடிந்தது.

நல்லவேளை, அனுதினமும் இவளுடைய அழுமூஞ்சித்தனத்தைச் சகித்துக்கொண்டிருக்க வேண்டாம் என்ற ஆறுதல் எழுந்தது.

அயல் நாட்டில் இரு வாரங்களைக் கழித்துவிட்டு வீடு திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

சிரித்த முகத்துடன் சகுந்தலா!

“இங்க வாங்களேன்,” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள். அவள் காட்டிய இடத்தில் ஒரு பூனைக்குட்டி தூங்கிக்கொண்டிருந்தது. சொகுசாக, மெத்து மெத்தென்று மடிக்கப்பட்டிருந்த ஒரு ஜமக்காளத்தின்மேல்.
“இது எங்கேயிருந்து வந்தது?” சற்று எரிச்சலுடன் பிறந்தது கேள்வி.

“தானே வருமா? நான்தான் நேத்து கொண்டுவந்தேன், என் ஃப்ரெண்ட் கோகிலா இல்லே, அவ வீட்டிலேருந்து!” பெருமையாகச் சொன்னாள்.

சிறு வயதில், `பூனைகிட்ட போகாதே, பிறாண்டும். தொட்டா, அலர்ஜி வந்து, அரிக்கும்,’ என்று பலவாறாக எச்சரிக்கை விடுத்திருந்தாள் அவன் தாய். இப்போது, அந்த அறிவுரை ஞாபகத்தில் எழ, “வீட்டுக்குள்ளே விடாதே. அசுத்தம் பண்ணிடும்,” என்றபடி, அப்பால் நகர்ந்தான்.

ஏதோ நினைத்துக்கொண்டவனாய், “இந்தக் குட்டி ரொம்ப சோனியா இருக்கே! ரோமமும் இல்லே. ஏன் சக்கு? ஒனக்கு ஆசையா இருந்தா, கடைக்குப் போய், அழகான, புசுபுசுன்னு இருக்கிற நாயோ, பூனையோ வாங்கிக்கிறது!”

அவளுடைய ஆத்திரம் அவன் எதிர்பாராதது. “ஒங்களுக்கு சோனியா, அழகில்லாம ஒரு குழந்தை பிறந்தா அதைத் தூக்கிப் போட்டுடுவீங்களா?”

எழுந்த வேகத்திலேயே அவள் ஆத்திரம் அடங்கியது. “இதுக்கு பேர் என்ன தெரியுமா? சின்னி! நல்லா இருக்கில்ல?”

இவள் என்ன, வளர்ந்த குழந்தையா? ஆயாசம்தான் எழுந்தது கருணாகரனுக்கு.

தாய்ப்பால் மறக்காத குட்டிக்கு அவள் தன் விரலைப் பாலில் நனைத்து, அதன் வாயில் வைத்தாள். அதுவும் தாயின் மடிக்காம்பு என்று நினைத்து சப்பியது.

ஆறுமாதங்கள் கழிந்தன. சின்னியின் உடலில் பருவ மெருகு ஏறியிருந்தது தெருவில் போகிற ஆண்பூனை ஒன்றின் கண்களுக்குத் தப்பவில்லை. அது உரிமையுடன், வீட்டுக் காம்பவுண்டில் நுழைந்து, சின்னியைத் துரத்தியதைக் கண்டு கருணாகரனுக்குப் பயம் ஏற்பட்டது.

போனால் போகிறதென்று மனைவிக்குத் துணையாய் ஒரு பூனைக்குட்டியைச் சகித்துக்கொண்டாயிற்று. இது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மூன்று அல்லது ஐந்து குட்டிகளைப் பிரசவித்தால் என்ன செய்வது! இது என்ன வீடா, அல்லது மிருகக்காட்சிசாலையா?

ஒரு நீண்ட கம்பை எடுத்துக்கொண்டு ஆண் பூனையைத் துரத்தினான்.

“என்ன செய்றீங்க?” அதட்டலாக வந்தது சகுந்தலாவின் குரல்.

“ஒன்னோட பூனையை டாக்டர்கிட்ட கூட்டிப் போகணும்,” என்று முணுமுணுத்தான்.

“எதுக்கு?” என்றாள், புரியாது.

அவன் விளக்கியதும், “எந்த ஜன்மத்திலே செஞ்ச பாவமோ, என் வயிறு திறக்கலே. அறுவைச்சிகிச்சை செஞ்சாவது சின்னியையும் மலடியா ஆக்கணுமா? பிள்ளை பெத்து, பால் குடுக்கிற இயற்கையான சந்தோஷத்தை அதுக்குக் கிடைக்காம பண்ணினா, அது பெரிய பாவங்க!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள் சகுந்தலா.

அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. சின்னி வந்த நாளிலிருந்தே அவளது அழுகை குறைந்து, உற்சாகமாக இருந்தாளே! இப்போது மீண்டும் தொடர் அழுகையா!

“நீயும் ஒன் பூனையும் எப்படியோ தொலைங்க”. மனம் வெறுத்துப் பேசினான்.

“அப்பா கிடக்கார்! நீ வாடி சின்னிக்குட்டி,” என்று அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சியபோது, அவனுக்குள் பொறாமை கிளர்ந்தது அவனுக்கே அவமானமாக இருந்தது. ஒரு பூனைக்குட்டியுடன் போட்டியா?
தன்னை அப்பா என்கிறாளே! அப்போது, அவள் அம்மாவா?

சில மாதங்களில் அதுவே உண்மை என்று தெரியவந்தது.

“சின்னியை மிருக வைத்தியரிடம் கூட்டிப்போகணும்”.

அவள் கூறியது புரியவே சில வினாடிகள் பிடித்தன. “எதுக்கு சக்கு? நீதானே வேண்டாம்னு சொன்னே?”

“அது அப்போ. நம்ப பிள்ளை பிறந்துட்டா, பூனைக்குட்டிங்களை யாரால பாத்துக்க முடியும்?” அலட்சியமாக வந்தது அவள் குரல்.

உணவும் சுத்தமான குடிநீரும் கொடுத்து, அதற்கு ஈடாக தன் அடிப்படை உரிமையைப் பறித்துக்கொள்ளும் மனிதர்களின் குணம் புரியாது, சகுந்தலாவின் காலடியில் அமைதியாக உட்கார்ந்து, தன் உடலை நக்கி சுத்தப்படுத்திகொண்டிருந்த அந்த பூனைக்குட்டியைக் கண்டு கருணாகரனுக்குப் பரிதாபமாக இருந்தது.

தனக்கு மட்டும் ஏன் குட்டிகள் இல்லை என்று என்றாவது அதற்கும் அழத்தோன்றுமோ? 

தொடர்புடைய சிறுகதைகள்
“பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி. “அதனால என்ன? வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க, இன்னும் புல்லாங்குழல் வாசிக்க, வயலின் வாசிக்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் பரம் ...
மேலும் கதையை படிக்க...
1910 "டேய்! இந்தக் கல்லு முடியுமா, பாரு!" "இதைத்தாண்டா இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருக்கோம். இனிமே இது வெறும் கல் இல்லே. சாமி!" அந்தக் கருங்கல்லை ஒரு பெரிய மரத்தடியில் நட்டுவிட்டு, தயாராக வைத்திருந்த சிவப்புத் துண்டை அதன்மேல் போர்த்தினார்ககள். மண் தரையில் விழுந்து, தலைமேல் ...
மேலும் கதையை படிக்க...
"ஏதாவது கடுதாசி வந்திருக்கா?" சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான் வீடு திரும்பியாயிற்று என்பதைத் தொ¢விப்பதுபோல், அதே கேள்வியைத் தினமும் கேட்கத் தவறமாட்டார். "ஆமாம்! நமக்கு யார் இருக்காங்க, அன்னாடம் எழுத!" என்றபடி, கோப்பையில் ...
மேலும் கதையை படிக்க...
பெரியநாயகி கொடுத்திருந்த தந்தி வெள்ளிக்கிழமை மத்தியானம் மூன்று மணிக்குத்தான் கிடைத்தது. `அப்பாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது!’ எதுவும் செய்ய இயலாதவளாக அந்த எழுத்துகளை வெறித்துப் பார்த்தாள் தேவானை. நினைத்தவுடன் புறப்பட்டுப் போக, இந்தியா என்ன, கூப்பிடு தூரத்திலா இருக்கிறது! அத்துடன், காலாவதியாகி இருந்த அவளுடைய மலேசிய ...
மேலும் கதையை படிக்க...
காலை ஏழு மணிக்குள் தலைக்குக் குளித்துவிட்டு, ஈரத்தலையில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண்டு, வாசலில் கிடந்த மலேசிய நண்பனை எடுக்க வந்தாள் பாரு. தொலைபேசி அழைத்தது. `யார் இவ்வளவு சீக்கிரம்?’ என்ற யோசனையுடன் உள்ளே போய், `ஹலோ, வணக்கம்!’ என்றாள் அசுவாரசியமாக. முகமன் சொல்லாது, “துர்கா போயிட்டாளாம்!” ...
மேலும் கதையை படிக்க...
“முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு! இன்னும் என்ன, அவனைப்பத்திப் பேச்சு?” சாருவின் குரலில் எரிச்சலும், பொறாமையும் கலந்திருந்தன. மகளுக்கு என்ன பதில் கூறுவது! தம்பி நான்கு வயதாக இருந்தபோது, அவன் தாயின் மடியில் அமர்ந்ததைப் பார்த்து, “என்னடா, நீ இன்னும் சின்னக் குழந்தையா?” என்று ...
மேலும் கதையை படிக்க...
அன்று அவனது பிறந்தநாள். அந்நினைவில் விரக்திதான் எழுந்தது சுப்பையாவிடம். அவனுடைய மகன் மோகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள். `இப்போது எத்தனை வயதிருக்கும் மோகனுக்கு? பத்தா?’ மனக்கணக்குப் போட்டுப் பார்த்தபோது, துக்கம் பீறிட்டது சுப்பையாவுக்கு. ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த பிளவு சரியாகிவிடும், தன் பிள்ளைக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பெரிய மண்டபத்துக்குள் நுழையும்போதே செல்லப்பா பாகவதருக்கு நா உலர்ந்துபோயிற்று. ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன. தோரணங்கள் என்ன, மேடையைச் சுற்றி வண்ண வண்ண விளக்குகள் என்ன என்று, கல்யாணக்கோலத்தில் இருந்தது மண்டபம். இருபதுக்குக் குறையாத வாத்தியங்கள் அன்று ...
மேலும் கதையை படிக்க...
அம்மா பெயர் மங்களம். அதை முதன்முதலில் தெரிந்துகொண்டபோது, "எப்படிம்மா இந்தப் பேரு வெச்சாங்க?" என்று கேட்டேன். "என் பாட்டி பேரு," என்றாள். "என் பேருமட்டும் ஏன் பிரேமா?" பாட்டியின் பெயர் பிரேமா இல்லை. "ஒன் கேள்விக்கெல்லாம் யாரால பதில் சொல்ல முடியும்?" என்று அம்மா அலுத்துக்கொண்டாள். ...
மேலும் கதையை படிக்க...
அன்று பிரேமாவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றிற்று. அவளுடைய கல்யாணத்திற்கு நேரில் வந்து, எவ்வளவு வற்புறுத்தி அழைத்திருந்தாள்! கோயிலில் நடந்த அந்த வைபவத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என் உடல்நிலைமேல்தான் பழி போடவேண்டும். சொன்னால் ஏற்றுக்கொள்வாளா? `இதெல்லாம் இயற்கை. தலைக்கு ஜலம் விட்டுக்கொண்டு வந்திருக்க ...
மேலும் கதையை படிக்க...
பஞ்சரத்னம்
கடற்கரைப் பிள்ளையார்
நேற்றைய நிழல்
சாக்லேட்
மன்னிப்பு
மறக்க முடியாதுதான்!
உன்னை விடமாட்டேன்
பந்தயம்
என் பெயர் காதல்
தொலைத்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)