கோலம் – ஒரு பக்க கதை

 

‘’உன்னை பெண் பார்க்க வரப் போறவருக்கு நல்ல படிப்பு, கை நிறைய சம்பளம் இருக்கு. உனக்கு மேட்ச் ஆகற மாதிரியே ஸ்மார்ட்டா இருக்காரு. எந்த குழப்பமும் செய்யாம, இவரையாவது ‘சரி’ ன்னு சொல்லுடி’’ என்றாள் மூச்சு விடாம அம்மா.

ம்ம்ம்…வீட்டு வாசலில், பெரிய கோலம் போட்டுடறேன், என்று சொல்லி வேகமாக கோலம் போட்டு முடித்தாள், அபி.

இதெல்லாம் எதுக்கு இப்ப பண்ணிக்கிட்டு!, சீக்கிரமா டிரஸ் பண்ணி ரெடியாகு என்றாள் அம்மா.

மாப்பிள்ளை வீட்டுக்குள் நுழைவதை மாடி ஜன்னல் வழியாகக் கூர்ந்து கவனித்தாள், அபி. பெண் பாரக்கும் படலம் முடிந்தவுடன், ’’இவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்மா’’ என்று கால் கட்டை விரலால் தரையில் கோலம் போட்டாள் வழக்கத்துக்கு மாறாக.

வர்ற பையன்களிடம், ஏதாவது குற்றத்தைக் கண்டுபிடிச்சு நிராகரிப்பியே…எப்படி இவரைப் பார்த்த உடனே சரின்னு சொன்னே? என்றாள் ஆச்சரிய அம்மா.

கஷ்டப்பட்டு போட்ட கோலத்தை மிதிக்காம, ஓரமா நடந்து வீட்டுக்குள் வந்தார். மத்தவங்க உள்ளத்தையும் உழைப்பையும்

புரிஞ்சுகிட்டு யார் மனசும் புண்படாம மதிச்சு நடந்துக்கற குணமுடையவரை எப்படி நிராகரிக்க முடியும்?, என்றாள். வெட்கமாக அபி..!

- எஸ்.ராமன் (12-4-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
நாலு வயது மகளோடு பீச்சுக்குப்போய் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். மகள் முதலில் ஐஸ்கிரீம் வேண்டுமென்று கேட்டாள். ‘தொண்டையில் பூச்சி வந்துவிடும்’ என்று பயமுறுத்தினேன். லாலிபாப் கேட்டவளை, ‘வயிற்றில் பூச்சி வந்துவிடும்’ என்று சொல்லி சமாதாப் படுத்தினேன். அந்தப் பக்கமாக பலூன்காரர் ...
மேலும் கதையை படிக்க...
“ஃபேக்டரியை என்கிட்ட நீங்க ஒப்படைச்சு ஆறு மாசம் ஆயிடுச்சு. ஆனா, இந்த கால கட்டத்தில, உற்பத்தி குறைஞ்சுக்கிட்டு வருது. அதுக்கான காரணம் என்னன்னு புரியலை’ என்று எம்.பி.ஏ. படித்து முடித்த மகன் சித்தார்த், தந்தை சதுர்வேதியிடம் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டான். “உற்பத்தியைப் பெருக்க ...
மேலும் கதையை படிக்க...
“பிள்ளை வீட்டுக்காரங்க, நாம எதிர்பார்த்ததைவிட அதிக வசதியானவங்களா இருப்பாங்கன்னு அவுங்க பேச்சிலிருந்து புரிந்தது. பையனோட அப்பா, இருபது கார் வச்சுக்கிட்டு, நல்லா டிராவல் பிஸினஸ் சைடில் ஓடிக்கிட்டு இருக்கு. ஒன்றுக்கு நாலுவீடு வச்சிருக்காங்க. ஒரே பிள்ளையானதால், அப்பாவின் சம்பாத்தியம் முழுவதும் பையனுக்குத்தான். அவங்க வசதிகளைப் ...
மேலும் கதையை படிக்க...
“என்னப்பா அரைகுறையா பெயிண்ட் அடிச்சிருக்கே…? உன்னோட சூப்ரவைசர்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணி கூலியை குறைக்கச் செல்றேன்…’ என்று பெயிண்டர் ஆறுமுகத்திடம் கோபமாக கத்தினேன். உள்ளே வந்து அந்தச் சுவற்றை எட்டிப் பார்த்து, “ஓ அதுவா… அங்க நான் வேணும்னுதான் பெயிண்ட் செய்யலை. அதுக்கு காரணத்தைத் ...
மேலும் கதையை படிக்க...
சார், நம் கம்பெனியில பெண்கள் வேலை செய்யிற பகுதிக்கு சூப்பர்வைஸர் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம் இல்லையா? அதுக்கு அப்ளை பண்ணவங்க எல்லாருக்கும் டெஸ்ட் வச்சு இன்டர்வியூ முடிச்சாச்சு. வனஜா, கிரிஜான்னு ரெண்டு பேரு சம தகுதியோட இருக்காங்க. அவங்கள்ல யாரை செலக்ட் பண்றதுன்னு ...
மேலும் கதையை படிக்க...
இள வயது – ஒரு பக்க கதை
பார்வையை மாற்று! – ஒரு பக்க கதை
மாற்றான் – ஒரு பக்க கதை
பெயிண்ட் – ஒரு பக்க கதை
தனிக்குடித்தனம் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)