கோடி புண்ணீயம்

 

எனக்கு வயசு எண்பத்து நாலு ஆவுதுங்க.நான் ஈஸி சேரில் படுத்து கிட்டே யோஜனைப்ப் பண்ணி கிட்டு இருக்கேன்.

ஐஞ்சு வருஷம் முன்னாடி வரைக்கும் என் சம்சாரம் என் கூட இருந்து வந்தா. முடிந்திச்சோ, முடியலையோ அவளுக்கு அவ உடம்பு முடியும் போது, உப்போ காரமோ,புளிப்போ போட்டு ஏதோ ஒரு சமையல்ன்னு பண்ணி வச்சுக் கிட்டு இருந் தாங்க.அந்த சாப்பாடே எங்க ரெண்டு பேர் உடம்புக்கு ஒத்துக்காம அடிக்கடி டாகடர் கிட்டே போய் அவர் உண்டியலில் அவர் கேக்கற பணத்தைக் குடுத்து விட்டு அவர் எழுதி குடுக்கும் மாத்திரைங்களை வாங்கி சாப்பிட்டு ஆண்டவன் குடுத்த இந்த உசிரை காப்பாத்திக் கிட்டு வந்தோம்.பல காய்ங்க வயசான எங்க உடம்புக்கு ஒத்து க்கறதிலே. சாப்பிட்டு விட்டு அவஸ்தை பட்டுக் கிட்டு இருந்தோம்.காலம் ஒடி கிட்டு இருந்திச்சிங்க.ஒரு மசால் வடை,பஜ்ஜி போண்டா, மைசூர்பாக்கு பூரின்னு வாய்க்கு சுவையா சாப்பிட முடியலீங்க.அது எல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரே.எப்படிங்க அவர் சொன்னதே மீறி நாங்க சாப்பிடறது. சொல்லுங்க.

அவ “காலம்” முடிநுப் போன பிறவு அவ போக வேண்டிய உலகத்துக்குப் போய் சேர்ந்துட்டா.நான் ஒரு “தனிமரம்” ஆயிட்டேனுங்க.ஒரு பிள்ளையும்,ஒரு பொண்ணும் கல்யாணம் கட்டி கிட்டு வெளி நாட்டிலெ குழந்தைங்க,வீடு, கார் பங்களான்னு,ரொம்ப சந்தோஷ மாக வாழ்ந்து கிட்டு வறாங்க.அவங்களுக்கும் சரி,அவங்க குழந்தைகளுக்கும் சரி,இந்த ஊரே கொஞ்சம் கூட பிடிக்கலீங்க.எப்பவும் மூஞ்சியெ சுளிச்சு கிட்டு, “ இது சரி இல்லே, அது சரி இல்லேன்னு சொல்லிக் கிட்டு இருப்பாங்க.தவிர அவங்களுக்கு வேண்டி இருக்கும் ஏ.ஸி.,,குளிக்க ஷவர்,வெள்ளைகாரங்க உபயோகப் படுத்தும் “பாத் ரூம்” எல்லாம் இங்கெ இல்லீங்களே.அவங்க எப்படிங்க இங்கெ சந்தோஷமா இருந்து வர முடியும்.ஐஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவையோ,இல்லெ ஆறு வருஷத்துக்கு ஒரு தடவை எங்களெ பாக்க வந்தா ரெண்டு மணி நேரமோ மூனு மணி நேரமோ,இங்கே இருந்து விட்டு ஒரு பெரிய ஹோட்டலுக்குப் போய் விடுவாங்க.அவ்வளவு தான் எனக்கும் அவங்களுக்கும் பெத்த “ உறவு” என்பது.வருஷத்துக்கு வருஷம் அந்த “”பெத்த உறவு”” என்கிற கருவேப்பிலை கன்னு கொஞ்ச கொஞ்சமாக வாடி இப்போ கருகி கிடக்குதுங்க.

என் சம்சாரம் இருந்தப்பவே என் கால் முட்டி ரெண்டிலும் ரொம்ப வலி.அதிகமா ரொம்ப தூரம் நடக்க முடியாதுங்க.அது போதாதுன்னு என் கண் பார்வை ரெண்டும் ரொம்ப மங்கலாகத் தாங்க தெரிஞ்சுக் கிட்டு இருந்திச்சு.பகல்லே தூக்கமே கிடையாது ங்க.தூக்க மாத்திரை போட்டு கிட்டு ராவு படுக்கப் போனா ரெண்டு மணி நேரம் தாங்க தூக்கம் வருது.மத்த நேரங்களிலே மோட்டு வளையத்தே தாங்க பார்த்து கிட்டு படுத்து கிட்டு இருந்து விட்டு மசூதில்லே அல்லா பாட்டு பாடும் போது எழுதரிச்சு,பல்லில் இருக்கும் ரெண்டு மூனு பலலை துலக்கி விட்டு,நெத்தியிலே கொஞ்சம் திரு நீர் இட்டு கிட்டு ஹாலில் இருக்கிற முருகப் பெருமான் படத்துக்கு முன்னாடி நின்னு வேண்டிக் கிட்டு வந்து, குந்திக் கிட்டு இருப்பேங்க.இப்போ “அவ” போட்டு குடுத்து கிட்டு இருந்த ‘டீ’ தான் இல்லேன்னு ஆயிடிடுச்சே.அத்னால்லே மனசே கல்லாக்கி கிட்டு,மெல்ல வூட்டே விட்டு எழுந்து, நடந்துப் போய் வாசலிலே, நாலு வீடு தள்ளி இருக்கும் பாய் டீ கடையில் முப்பது ரூவா குடுத்து, அவர் குடுக்கிற நாலு பிஸ்கெட்டையும், ‘டீ’யையும் குடிச்சுட்டு வூட்டுக்கு வந்து மறுபடியும் சேரில் குந்தி மோட்டு வளையத்தே பாத்து கிட்டு குந்தி கிட்டு இருக்கேனுங்க.

சரியா எட்டு மணிக்கு வேலைக்கார முடியம்மா வூட்டை பெருக்கி துடைக்க வருவா.அவ வேலையை ஆரம்பிக்கும் முன்னாடி எதிர் வாடையிலே இருகிற உடுப்பி ஹோட்டலுக்குப் போய் நாலு இட்லி வாங்கி வருவா.அதை துன்னுட்டு தன்னியே குடிச்சுட்டு வந்து ஈஸி சோ¢ல் குந்தி கிட்டு கொஞ்ச நேரம் டீ.வி.பாக்க்லாம்னு ஆசைப் பட்டா ஒரு சேனலும் பாக்க நல்லா இல்லிங்களே.ஒன்லே இந்த கட்சிக்காரன் அந்த கட்சிக்காரனே மாத்தி மாத்தி குறை சொல்லிட்டு இருக்கான். சரி இதே கேக்கறதுக்கா நாம டீ.வி.யே போட்டோம்ன்னு சீரியல் பாக்க மாத்தினா, எல்லாத்திலேயும், மாமியார் மருமவ சண்டை. இல்லாட்டி இவ சூழ்ச்சி பண்றது, அவ சூழ்ச்சி பண்றது. குத்து சண்டை, அடி தடி,அழுகை கத்தல், ஆஸ்பத்திரி I.C.U.இல்லேன்னா போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட் கேஸ் இப்படி ஏதாச்சையும் காட்டி ஏற்கெனவே வெந்த மனசிலே வேலை பாய்ச்சுறாங்க.ஏற்கெனவே ஏறிக் கிடக்கிற B.P.இன்னும் ஏறுது.பாக்கப் பிடிக்கலே. ஆப் பண்ணிட்டு கண்ணே மூடி கிட்டு குந்தி கிட்டு இருக்க வேண்டி இருக்குதுங்க.ஆசையா வந்து பேசிப் போறவங்க யாரும் இல்லே, பெத்த பிள்ளைங்க, பேரன் பேத்தி யாரும் கூட இல்லே. என் கிட்டே கழுத்தே நீட்டினவளும் அவ பொக வேண்டிய உலகத்துக்கு ‘ஹாய்யா’ போய் சேர்ந்துட்டா. அன்னியிலெ இருந்து நான் ஒரு தனி மரம்.சதா தனிமையை ஒழிய வேறே ஒன்னும் இல்லே.

வேலையே முடிச்சு கிட்டு போன முனியம்மா,மத்த வூட்டு வேலைங்களே எல்லாம் முடிச்சுட்டு, அவ வூட்டுக்கு போறதுக்கு முன்னாடி உடுப்பி ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வச்சுட்டு போவா.அந்த ஹோட்டால் வியாபாரத்துக்காக நல்ல காரம், உப்பு, தேங்கா எல்லாம் போட்டு தானேங்க சமைப்பாங்க,. எனக்காகவா சமைப்பாங்க. சாம்பார்லே கொஞ்சம் தண்ணியே உத்தி கிட்டு கொஞ்ச சாதத்தே சாப்பிட்டு, மீதி சாத்த்திலே தயிரை விட்டு என் சாப்பாட்டே முடிப்பேனுங்க.அதுக்கு அப்புறமா படுத்தா தூக்கம் வருதா என்னா. இந்த பக்கமும் அந்த பக்கமும் புரண்டு புரண்டு படுக்க வேண்டி இருக்கு.

சாயர¨க்ஷ வூட்டுக்கு போவும் போது முனியம்மா உடுப்பி ஹோட்டல்லே இருந்து நாலு இட்லி வாங்கி கிடுத்துட்டு போவா.அதாங்க ராத்திரி என் சாப்பாடு..டாகடர் எழுதிக் குடுத்து இருக்கிற மருந்து, மாத்திரேல்லே தாங்க இந்த ‘உசிரு’ ஒட்டிக் கிட்டு இருக்கு. இன்னும் எத்தினி நாளைக்கு இந்த நரக வாழ்க்கை.சரி,நிறைய தூக்க மாத்தரையே முழுங்கிட்டு செத்துப் போயிடலாம்ன்னா,அப்படி செத்து போனா, அதுக்கு அப்புறமா நாம ஒரு “பேயா” இந்த உலகத்திலே அலையுணுமாமே. படிச்சவங்க சொல்றாங்க.

ஏங்க அந்த கடவுளுக்கு எல்லாம் தெரியுமாமே. பெத்த பிள்ளைங்க அவர் கூட இல்லே, உறவுக்காரங்க யாரும் இல்லே,சம்சாரமும் இல்லே, அவர் தள்ளாத வயசு கிழவன், உடம்பு சுத்தமா முடியாத ஒரு “தனி மரம்” அவர் கஷ்டப் படாம இருக்கட்டுமேன்னு ஏங்க அவரா “இட்டு கிட்டு” போவமா இருக்காறு.நான் உயிரோடு இருக்கிறது இந்த பூமிக்கு தானேங்க பாரங்க.

யாராச்சும் நிறைய ‘பக்தி’ செஞ்சவங்க அவர் வேண்டி வரும் அந்த கடவுள் கிட்டே கொஞ்சம், எனக்காக சொல்லுங்க.நீங்க வேண்டி கிட்டு அப்படி நான் இறந்து போன, மெலே போய் கிட்டு இருக்கிற என் ஆத்மா உங்களுக்கு “கோடி புண்ணியம்” கிடைகட்டும்ன்னு நிச்சியமா வாழுத்துங்க!!!!!! 

தொடர்புடைய சிறுகதைகள்
அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 குப்புசாமி தன் கண்களைத் துடைத்துக் கொண்டே” பாவம் மரகதம்அத்திம்பேர்.அவர் கடை க்கு பக்கத்லே சென்னை,காஞ்சீவரம்,மதுரைலே இருந்து நிறைய பணக்காரா பொ¢ய பொ¢ய கடை எல்லாம் போட்டுண்டு வந்து இருக்கா.அதனால் அவர் துணிக் கடை வியாபாரம் நாளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 டாக்டர் கூப்பிட்டதும் காயத்திரி கனேசனை அழைத்துக் கொண்டு டாக்டர் ரூமுக்குள் போய் எல்லா ‘ரிசல்ட்டுகளை’ டாக்டா¢டம் கொடுத்தாள். டாக்டர் எல்லா ‘ரிசல்ட்டுக¨ளையும்’ வாங்கிப் பார்த்தார்.’ரிசல்ட்டுக¨ளை’ப் பார்க்கும் போது அவர் தன் நெற்றியை சுருக்கினார்.பிறகு டாக்டர் கணேசனை ...
மேலும் கதையை படிக்க...
விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் ஒரு புகழ் பெற்ற காலஷேப கலாநிதி.அவர் காலக்ஷபம் என்றால் சபையில் கூடம் நிரம்பி வழியும். அவருக்கு நாலு சிஷ்ய கோடிகள் இருந்தார்கள்.சாஸ்திரிகள் காலக்ஷபம் முடிய ஒரு அரை மணி நேரம் இருக்கும் போது, அவர்கள் நாலு பேரும் ஒரு பொ¢ய ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 உடனே சாந்தா “செந்தாமரை எங்க வீட்டுக்கு வந்த வேளை ரெண்டு வருஷத்துக்குள்ளாற எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்துங்க.எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததுங்க” என்று சொன்னாள்.செந்தாமரை “நான் பத்தாவது வகுப்பு படிக்கிற பிள்ளைங்களை இட்டு கிட்டு ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-1 பதினோறு மணி நேரம் கடலில் குளித்து விட்டு தன் சிவந்த மேனியை தண்ணீர் போக சிலிர் த்து விட்டு,மெல்ல தன் தலையை கடல் தண்ணீரில் இருந்து மேலே தூக்கி, வெளியே வந்தான் சூரியன். அவன் சிவந்த மேனியில் இருந்து வெளி வந்த கிரணங்களால் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 “நீ என்னே ஆச்சா¢யமாப் பாக்காதே.உண்மை அது தான்.எல்லாருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது.அவர் லீலையே லீலை” என்று கண்களை மூடிக் கொண்டு நடராஜரைப் பார்த்து கையைக் காட்டி சொன்னார் மஹா தேவ குருக்கள். நிறைய சேவார்த்திகள் அர்ச்சனைத் தட்டுடன் ...
மேலும் கதையை படிக்க...
ரமேஷ் அண்ணா பல்கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு B.E. படித்து வந்தான். ரமேஷ் பெற்றோர்கள் ஒரு பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள்.மிகவும் கர்னாடகமானவர்கள். மிகவும் ஆசாரமானவர்கள் கூட.இதை அறிந்த ரமேஷ் அவர்கள் பெற்றோர்கள் மனம் கோணாமல் நட ந்து வந்து,அவர்கள் சொல்தை கேட்டு வந்து,அவர்கள் ...
மேலும் கதையை படிக்க...
“அப்பா இந்த ‘செமிஸ்டர்’ காலேஜ் பீஸ் கட்ட இன்னும் இரண்டு நாள் தான்பா இருக்கு”என்று அப்பாவுக்கு ஞாபகம் பண்ணினான் பையன் ரகு.”அப்பா எனக்கு “எஜுகேஷன் எக்ஸ்கர்ஷன்” போக பணம் கட்ட இன்னும் மூனு நாள் தான்பா பாக்கி இருக்கு.கட்டாவிட்டா என் பேரை ...
மேலும் கதையை படிக்க...
‘ப்ளஸ் டூவில்’ நல்ல மார்க்குகள் வாங்கி இருந்த சண்முகத்துக்கு அண்ணா பல்கலைக் கழகத்தி ல்  B.E. கம்ப்யூட்டர் சயன்ஸ் படிப்பு படிக்க ‘சீட்’ கிடைத்தது.விழுப்புரம் ஸ்டேஷனில் அவனை சென் னைக்கு வழி அனுப்ப அவன் அப்பா ஆறுமுகம் அம்மா ரேவதி,மாமா முருகன்,மாமி ...
மேலும் கதையை படிக்க...
மேரி ஜானை நாலு வருடங்களாக ‘டேட்’ பண்ணீ கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இருவ ரும் ஒரு சின்ன ஊ¡¢ல் வசித்து வந்தார்கள்.அந்த ஊ¡¢ல் ஒரு சின்ன சர்ச்சும், ஒரு சின்ன மருத்தவ மணையும் தான் இருந்தது. முதல் மூணு வருடங்கள் அவரகள் ரெண்டு ...
மேலும் கதையை படிக்க...
ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
தீர்ப்பு உங்கள் கையில்…
உனக்கும் எனக்கும் இல்லேடா…
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
அப்பா, நான் உள்ளே வரலாமா…
சிக்கலைத் தீர்த்த சிங்கார வேலன்
ரகு…உறவுங்கிறது ஒரு…
அவன் போட்ட முடிச்சு
ஜாக்கிறதே,அந்த தூண்லே இடிக்காம…

கோடி புண்ணீயம் மீது ஒரு கருத்து

  1. வ.க.கன்னியப்பன் says:

    நிறைய முதியோர்கள் நிலை அதுதான்! மனைவிக்கு மட்டுமே கணவனின் தேவையறிந்து செய்யும் பண்புண்டு;

    ஆடையில்லாத மனிதன் அரைமனிதன் என்பது போல் மனைவியில்லாத கணவனும் அரை மனிதன்தான்!

    உணர்வின் வெளிப்பாடு அருமை, சங்கரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)