கொள்ளுத் தாத்தா

 

கதை கேட்க: https://www.youtube.com/watch?v=bSDLT_ORioU

அப்பா இனி பிழைக்க மாட்டார் என டாக்டர்கள் கையை விரித்து விட்டனர்.

அவரை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு தனியறையில் படுக்க வைத்தோம். உறவினர்களுக்கு உடனே தெரிவிக்கப் பட்டது.

எல்லோரும் வந்து அப்பாவின் இறப்பிற்காக காத்திருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. காத்திருந்து பிறகு ஒவ்வொருவராக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டார்கள்.

இது நடந்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு. அப்போதே அப்பாவுக்கு எழுபத்தியேழு வயது. பிழைத்துக் கொண்டது மட்டுமில்லாமல் தற்போது வீட்டிற்குள்ளேயே நன்றாக நடமாடுகிறார். தனக்குண்டான கடமைகளை தானே செய்து கொள்கிறார். டிவி பார்க்கிறார்; பேப்பர் படிக்கிறார்.

அப்பா ஒரு பிரபல மல்டி நேஷனல் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றவர். வயதாகி விட்டாலும் இன்றுவரை தினமும் மாலையில் தவறாது இரண்டு பெக் விஸ்கி குடிப்பார். ராசனையுடன் சப்புக்கொட்டி நிதானமாகக் குடிப்பார். ஆனால் அலம்பல் எதுவும் பண்ண மாட்டார். அப்போதெல்லாம் அவருடைய உரையாடல்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதை ஒருத்தர் பொறுமையாக கேட்க வேண்டும் என விரும்புவார். பெரும்பாலும் அது அவரது ஒரே மகனான நானகத்தான் இருப்பேன். ஷேக்ஸ்பியரையும், ஓதெல்லோவையும் எத்தனை இளசுகளுக்குத் தெரியும்? ரன்னன் மார்ட்டின் இப்பல்லாம் எவன் படிக்கிறான்?” என்பார்.

“எனக்கு ஆயுசு கெட்டிடா. நான் பாளையங்கோட்டையில் படிக்கும்போது அப்போது டாக்டர் சுந்தர்ராஜன் என்பவர் இருந்தார். தலைவலியில் இருந்து கால்வலி வரை அவர்தான் எல்லாத்துக்குமே! ஆனா இந்தக் காலத்துல கட்டை விரலுக்கு ஒரு டாக்டர்; மோதிர விரலுக்கு ஒரு டாக்டர்; சுண்டு விரலுக்கு ஒரு டாக்டர் என அலம்பல் பண்ணுகிறார்கள். கேட்டால் ஸ்பெஷலிஸ்ட்களாம்…

“இந்தக் கால டாக்டர்கள் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து அதைத்தான் டிரீட் செய்கிறார்கள். மனிதர்களை அல்ல. ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் முறையும் வேறு வேறு என்பதை அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்..” என்று நீண்ட வியாக்கியானம் செய்வார்.

அவர் இறந்த பிறகு அவரைப் புதைக்க வேண்டுமாம்.. அப்போது அவரது தலைமாட்டில் ஒரு ஸகாட்ச் பாட்டில், காலமாட்டில் ஒரு ஸகாட்ச் பாட்டில் விஸ்கி வைத்து விட வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

எங்கள் குல வழக்கப்படி இதுவரை நாங்கள் உடலை எரித்துதான் பழக்கம். ‘அதுசரி அப்பா செத்தப்புறம் முடிவுகள் எடுப்பது நாந்தானே, அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என நினைத்துக் கொள்வேன்.

நான் அடுத்த வருடம் ஏஜி ஆபீசிலிருந்து ஓய்வு பெறுகிறேன். என் ஒரே மகன் மூர்த்தி ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். மூல நட்சத்திரம் என்பதால் அவனது திருமணம் சற்றுத் தள்ளி போகிறது. அவனுக்கு தற்போது தீவிரமாக பெண் தேடிக் கொண்டிருக்கிறோம்.

என் அப்பாவுக்கு தன் ஒரே பேரானான மூர்த்திக்கு சீக்கிரமே ஒரு கல்யாணம் பண்ணி தான் கொள்ளுத் தாத்தாவாகி விடவேண்டும் என்கிற அவசரமும் ஆசையும் அதிகம். அதை அடிக்கடி சொல்லிக் காண்பிப்பார்.

“எனக்கு ஒரு கொள்ளுப் பேரன் பிறந்து என்னுடைய கோத்திரம் வளர வேண்டும். என் வம்சம் ஆல மரமாக விருத்தியாக வேண்டும். நான் இறப்பதற்கு முன் என் கொள்ளுப் பேரன் என்னை கொள்ளுத் தாத்தா என்று ஒரு முறையாவது கூப்பிட வேண்டும்.. சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் பண்ணு..” என்று என்னை விரட்டிக் கொண்டே இருப்பார்.

நான் என்ன மாட்டேன் என்றா சொல்கிறேன்? அவனுக்கு இன்னமும் நேரம் வரவில்லை.. அவ்வளவுதான்.

சில சமயங்களில் அப்பா மீது எனக்கு எரிச்சல் வரும். ‘சீக்கிரம் மனிதர் இயல்பாக இயற்கை எய்தினால் நல்லது என்றுகூட நினைத்துக் கொள்வேன்.

அன்று புதன் கிழமை. அப்பா மிகவும் சுறுசுறுப்புடன் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டார். உடனே என்னைக் கூப்பிட்டு, “வாத்தியாருக்கு போன் பண்ணி உடனே வரச்சொல்.. நல்ல நாள் பார்க்கணும்..” என்றார்.

“நல்ல நாளா எதுக்குப்பா ?”

“நானும் அம்மாவும் சதாபிஷேகம் பணணிக்கணும்..”

நான் விக்கித்து நின்றேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘அடுத்த பெண்மணி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இந்தக் கல்யாணம் நிச்சயமானத்தில் சபரிநாதனுக்கு இரண்டு விதத்தில் சந்தோஷம். முதல் சந்தோஷம், வறுமைக் கோட்டுக்குக் கீழே ஏழ்மையில் உழன்றாலும் ராஜலக்ஷ்மி ரொம்ப அழகான பெண்ணாக இருந்தாள். இரண்டாவதாக, பார்ப்பதற்கு ...
மேலும் கதையை படிக்க...
பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே கதிரேசனுடன் வகுப்பில் படித்த பல பையன்கள் அவரவர்களுடைய அப்பாக்களைப் பற்றி எதையாவது சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள். அதயெல்லாம் கேட்கும்போது கதிரேசனுக்கு மனதில் சோகமும் ஒருவித இழப்பு உணர்வும் வந்து கவிந்துகொள்ளும். அவனுடைய அப்பா மச்சக்காளை ...
மேலும் கதையை படிக்க...
பாண்டிய அரசன் பராந்தகப் பாண்டியன் (கி.பி 880-900) மதுரையை தலைமையிடமாகக் கொண்டு மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அறிவாளியான அந்த அரசனுக்கு ஒருநாள் இரவு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகத்தை உடனே தன் மனைவியும், நாட்டின் அரசியுமான வானவன் மாதேவியிடம் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘மனு சாஸ்திரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). ‘பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம்’ என்று வணிக குலப் பெண்ணான காரைக்கால் அம்மையார் பாடுவதால் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ‘எண்ணும் எழுத்தும்’ பெண்கள் கற்ற பாடங்கள் என்பதும் தெரிகிறது. பெண்கள் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘ஜன்னல்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) ராஜலக்ஷ்மியை சுப்பையா கோயிலில் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “குட் மார்னிங்... கோயிலுக்கு இந்நேரம் வந்திருக்கீங்க..?” பதில் புன்னகையுடன் கேட்டான். “தினம் தினம் இதான் நான் கோயிலுக்கு வர்ற நேரம்.” “நெஜமாவா ஒங்களை போட்டோ எடுக்கணும்?” “ரொம்பச் சின்னப் ...
மேலும் கதையை படிக்க...
மாலை நான்கு மணிக்கு வெளியே கிளம்ப ஆயத்தமானார் குப்புசாமி. “அப்பா இப்ப எங்க வெளிய கிளம்புறீங்க? ஒரு அரை மணி நேரம் பொறுங்க, நான் தயாரிக்கப் போகிற சுவீட் நல்லா இருக்கான்னு டேஸ்ட் பண்ணிப் பாருங்க” என்று வேண்டினாள் அவரது செல்ல மகள் ...
மேலும் கதையை படிக்க...
என் நண்பன் அருணாச்சலம் மகளுக்கு 2019 பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாலக்காட்டில் திருமணம். அதற்காக நானும் என் மனைவி சரஸ்வதியும் பெங்களூரில் இருந்து கிளம்பி ஒன்பதாம் தேதி பகல் ஒரு மணிக்கு பாலக்காட் சென்றடைந்தோம். இந்திர பிரஸ்தா ஹோட்டலில் அருணாச்சலம் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘ஜெயித்த நரி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) எங்கே போய் பெண் தேடுவது? எப்படிப் போய்க் கேட்பது? ‘அய்யா எனக்கு ஒரு வாரிசு வேண்டியிருக்கு, அதுக்காக நா இன்னொரு கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன். ஒங்க பெண்ணை எனக்குத் தருவீங்களா’ன்னா ...
மேலும் கதையை படிக்க...
அப்பல்லோ ஹாஸ்பிடல், சென்னை. பிரபல தமிழ் சினிமா டைரக்டர் மதனகோபால் டீலக்ஸ் அறையில் தனியாகப் படுத்திருந்தார். அவருக்கு லிவர் கேன்சர். தன்னுடைய நாட்கள் எண்ணப் படுகின்றன என்பது அவருக்கு நன்றாகப் புரிந்தது. வயது எழுபத்தைந்து ஆகி விட்டது. ...
மேலும் கதையை படிக்க...
திங்கட் கிழமை காலை ஒன்பது மணி. விஷயம் அதி வேகமாகப் பரவி அந்தச் சென்னை கிளை அலுவலகம் பரபரப்புடன் காணப் பட்டது. பெண் ஊழியர்கள் தங்களுக்குள் கூடி கூடி பேசிக் கொண்டனர். ராமநாதன் அந்த மாதிரி செய்திருக்க மாட்டார்... அவர் அப்படிப்பட்டவரில்லை என்று தங்கள் ...
மேலும் கதையை படிக்க...
புது மாப்பிள்ளை
கடைக் கதைகள்
வேசியிடம் ஞானம்
அதிதி
சில நிஜங்கள்
குப்புசாமியும் குலோப்ஜாமூனும்
தீட்டு
அடுத்த மனைவி
மரண சிந்தனைகள்
வாலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)