கொத்தைப் பருத்தி

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2022
பார்வையிட்டோர்: 14,166 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோனேரி செங்க்கன்னாவின் குடும்பத்தைப்பற்றி விசாரிக் கவா வேண்டும்: பெயரைச் சொன்னாலே சுத்துப்பட்டிகளில் ‘அடேயப்பா அவுகளுக்கென்ன?’ என்று சொல்லும் வாய்கள்.

பெயருக்கு இப்பவும் குறைச்சல் இல்லைதான்.

‘பெயர் இருந்து நாக்கு வழிக்கவா; ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்கானே என் பேரனுக்கு’ என்று நினைத்துத் தவுதாயப் பட்டார் கோனேரி,

இருநாறு ஏக்கர் கரிசல். அதுவும் தெய்க்கரிசல் நிலம்; நினைச்சுப் பார்க்கமுடியுமா யாராலும்?

அந்த வட்டாரத்திலேயே முதன்முதலில் காசு மாலை செய்த குடும்பம் அது ஒண்ணுதான். இன்னைக்குத் தேதிவரைக்கும் வேற கத்துப்பட்டிகளில் காசு மாலை செய்த குடும்பம் ஒன்று இருக்குன்னு யாராவது விரலை மடக்கமுடியுமா?

புஞ்சையிலிருந்து எல்லார்க்கும் பருத்திப் பொட்டாங்கள் தலைச் கமையாகத்தான் வரும். கோனேரி வீட்டுக்குப் பருத்தி தினோமும் வண்டி கொண்டுபோய்த்தான் பாரம் வைத்துக்கொண்டு வரவேணும்.

இப்பேர்க்கொத்த குடும்பத்துக்கு “சீமையிலாம்புட்ட நாயக்கன்” வந்தான் பொண்ணு பாக்க, கோனேரிக்கு ஏழு பொம்பளைப் புள்ளைகள்; ஆறு ஆம்பளைப் பயல்கள்,

“சீமையிலாம்புட்ட நாயக்கன்” என்று கோனேரியால் எக்கண்ட மாய்ச் சொல்லப்பட்ட அந்த நாயக்கருக்கு அம்பது அம்பத்தஞ்சி வயசுக்கிட்ட இருக்கும். ஆள் ‘ராஜ மோடியாய்’ இருந்தார். வந்து இறங்கியவருக்கு உபசாரம் பலமாக இருந்தது.

“ஜில்லாக் கலெக்டரின் அப்பாவுக்குப் பின்ன உபசாரம் குறைச்சலாவா இருக்கும்?”

வந்தவர் கோனேரியின் வீட்டில் “கை தனைக்க வில்லை. வந்தவர் களுக்கு முதலில் கொடுக்கிறமாதிரி கருப்பட்டியும் மோரும் பிறகு வெத்தலைப்பாக்கும், கருப்பட்டிப் போயிலையும், இப்படித்தான்

வத்தட்டி தாயக்கர் ‘கை நனைக்க’ மறுத்ததும் செய்தி வீட்டினுள்ளே பரவியது.

‘வத்தட்டி’ நாயக்கரை வீட்டுப் பெண்டுகள் வந்து ஜன்னல் வழியாகவும் சுதவு இடுக்கு வழியாகவும் கவனித்தார்கள் – அவருடைய வீட்டுப் பெயரையும் கோத்திரத்தின் பெயரையும் அறிந்துகொள்ள ஆவலாக இருந்தது அவர்களுக்கு,

அவருடைய நிறத்தையும் ஜாடையையும் உருவத்சாதயும் வைத்து அவருடைய பையன் எப்படி இருப்பான் என்று கற்பனை செய்து பார்த்தார்கள்.

முதல் பார்வையிலேயே அவருடைய நல்ல சிகப்பு நிறம் அவர்களுக்குப் பிடித்திருந்தது.

தங்கப் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியும் பளிங்குபோல் மிலுங்கும் அழகான வழுக்கையும்கூடப் புதுசாக இருந்தாலும் பிடித்துத் தானிருந்தது.

என்ள பிடித்திருந்து என்ன செய்ய? கோனேரி ஒரே போடாகப் போட்டுவிட்டார்.

வந்தவர் பாவம், விக்கியவரில்லை விரைத்தவரில்லை; முகம் இம்புட்டுப் போலாகிவிட்டது.

கல்த்திண்ணையின் திண்டின்மேல் அந்தஸ் தாகச் சாய்த்து கொண்டிருந்த அவர், முதலில் தமது வீட்டுப் பெயரையும், பிறகு கோத்திரத்தின் பெயரையும் சொன்னார். ( சரி; சம்மந்தக்காரர்தான் முறைக்கு’ என்று நினைத்ததுமல்லாமல் சந்தோஷமாகச் சொல்லவும் செய்தார் கோனேரி)

அப்புறம். தனது ஒரே பையன் “சீமையில்” போய்ப் படித்துவிட்டு வந்து இப்போ டிப்டி கலெக்டராக இருப்பதும், சீக்கிரமே ஜில்லாக் கலெக்டராகப் போவதைப்பற்றியும் பிரஸ்தாபித்தார்.

(ஆஹா, கலெக்டர் என்றால் சாமானியமா? ஒரு ஜில்லாவுக்கே சக்கரவர்த்தி மாதிரியில்லா; குடுத்து வைக்கணுமே இந்த வீட்டுக்கு ‘மகுந்து’ போனார் கோனேரி)

சம்பாஷணை தொயரத் தொயர உடனுக்குடன் தகவல் வீட்டுக் குள்ளே போய்க்கொண்டே இருந்தது. அந்த வீட்டின் கதவிடுக்கு, ஜன்னல்கள் முதலியவைகளுக்கெல்லாம் ‘காதுகள்’ உண்டு, நடுத்தெருவில் மணல்மீது ஒரு ஊசி தவறி விழுந்தாலும் அந்த வீட்டின் காதுகளுக்குக் கேட்டிடும்போது, வீட்டின் தலைவாசலில் வைத்துப் பேசும் பேச்சு கேட்காமல் போகுமா?

கோனேரியும் விஷயத்தைத் தெளிவாக ஒன்றுக்கு ரெண்டு தரம் நன்றாகத்தான் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அந்தக் குடும்பத்தில் இதுவரை நடந்த சம்பத்தங்களெல்லாம் செயலான – ஏல்க்கையான – சம்சாரிகள் வீடுகளில் தானே தவிர இப்படி “வேலைக்காரர்”களோடு அல்ல வேலைக்காரர் – உத்தியோகஸ்தர்). யோசனையில் கோனேரி மௌனமானார். குறியில்லாமல் கொஞ்சநெரம் தரையை வெறித்தார்.

இப்போது வீட்டினுள் அவருடைய மூத்த பாரியானிடமிருந்து அழைப்பு வந்தது. “இங்க கொஞ்சம் வந்துட்டுப் போங்க”

எழுந்து உள்ளே போனார்.

கல்த் திண்ணைமேல் பவானி பட்டு ஜமுக்காளத்தில் உட்கார்ந்து திண்டின்மேல் சாய்த்து சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த வத்தட்டி நாயக்கர் சம்மணத்தை மாற்றி ரட்ணக்கால் போட்டு லேசாக அந்த பாதத்தை ஒய்யாரமாக ஆட்டிக்கொண்டே தமக்கு முன்னாலும் பக்கங் கனிலும் மேலேயும் கவனித்துப் பார்த்தார். காட்டில் உழும் சாதாரணக் கால்நடைகளுக்கா இப்படி ஒரு கல்த்தொழு என்று வியந்தார். இந்தத் தொழுவை மட்டும் கட்டி முடிக்க இப்போ குறைஞ்சது ஒரு முப்பதினாயிரம் ரூபாவாவது வேண்டியிருக்குமே என்று நினைத்தார். இந்தக் கட்டிடம் மட்டும் டவுன்லே இருந்தா இதன் பெறுமானம் ரெண்டரை லட்ச ரூபா என்று கணக்குப் போட்டார்.

தொழுவத்தில் கட்டியிருக்கிற உழவு மாடுகளை எண்ணினார். ஏழு ஜோடி. அவ்வளவும் ஜாதி உயர்ந்த காங்கேயம் காளைகள்.

அடுத்த பக்கம் பசுமாட்டுத் தொழு, அதுக்கடுத்த பக்கம் எருமை மாடுகனின் தொழு, நாலைந்து தென்னை மரங்கள். திலாப் போட்ட கிணறு. திண்ணையை ஒட்டி ‘திருமால் நாயக்கர் மகால்’ தூண்கள் மாதிரி வரிசையாகத் தானியப் பட்டறைகள். பார்க்கப் பார்க்க அதிசயம், மலைப்புத் தோன்றவே ரட்ணக்காலை நீக்கிச் சாவதான மாகச் சம்மணமே போட்டு உட்கார்ந்து கொண்டார்.

வீட்டினுள்ளே போன கோனேரி வந்தார். நல்ல உயரம் ஓங்கு தாங்கான ஆள். கருப்பு நிறம். முக்கால் கைச் சட்டை முழங்கால் வரை. தோளில் ஏத்தாப்பு. கனமான மீசை உதடுகளை மறைத்திருப்பதால் புன்சிரிப்பைக் கண்கள் சொல்லித்தான் தெரிந்துகொன்ன வேண்டும்.

வந்து பக்கத்தில் உட்கார்த்தார். பாக்குகளைக் கையில் எடுத்துச் சரிபார்த்து வாய்க்குள் போட்டுக்கொண்டு மௌனமாக வெற்றிலை மேல் சுண்ணாம்பைத் தடவினார்.

வந்தவருக்காகத்தான் தாம்பாளத்தில் வெற்றிலை பரப்பப் பட்டிருந்தது. அவரோ வெற்றிலை போடுவதில்லை என்று சொல்லிச் சிரித்தபோது, மங்கலமில்லாமல் பற்கள் வெள்ளையாகத் தெரிந்தது.

பாக்குகளின் அதிதுவர்ப்பைச் சரிசெய்து கொள்ளத் தொண்டையை லேசாகச் செறுமிச் சரி செய்து கொண்டே.

“நமக்கு நிலம் எத்தனை குருக்கம் இருக்கும்?” என்று கேட்டார் கோனேரி.

நிலமே கிடையாது என்று உள்ளதைச் சொன்னார்.

வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டிருந்த விரல் சட்டென்று தின்றது. ‘என்ன; என்னது இன்னொரு தரம் சொல்லு அதை’ என்று கேட்பது போலிருந்தது அது.

முந்தி இவருக்கும் கிராமத்தில் நிலமும் இருந்தது; “ரெங்க விலாசம்” போல வீடும் இருந்தது. தமது ஒரே பையனைப் படிக்க வைக்கப் படிக்க வைக்க என்று எல்லாத்தையுமே விற்றுவிட்டார்.

இறந்து போன தமது மனைவியின் நகைகள், தமது தாயாரின் பூர்வீக நகைகள் எல்லாத்தையுமே விற்றுத்தான் இந்தப் படிப்பையும் பதவி யையுமே அடையவேண்டியதிருந்தது. பதவி வந்துவிட்டால் திரும்பவும் எல்லாத்தையும் சம்பாதித்துக்கொள்ளலாம் என்பது தான் முக் கியமாகப் பட்டது அப்போ.

தமது சின்னவயசில் தம்முடைய ஊரிலும் இப்படியாப்பட்ட ஒரு பண்ணை வீடு உண்டு. அந்த வீட்டைப் போய்ப் பார்க்கும் போதெல்லாம் ரயப்பா என்று மலைப்புத் தோன்றும் அங்கே ஒவ்வொரு விஷயமும்.

அந்த வீட்டின் தானியப் பட்டறைகளுக்கு விரிசல் விழாமல் இருக்க வண்டிப் பட்டைகளை ‘பெல்ட்டாக மாட்டி “வாங்கு” பிடித்திருப்பதைப் பார்த்து அதிசயப்பட்டவர் இவர். தமது பையன் படித்துப் பெரிய உத்தியோகத்துக்கு வந்தபிறகு இப்படியாப்பட்ட ஒரு வீட்டில் பெண் எடுக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

இப்போது என்னதான் இவர் மகன் கலெக்டர் உத்தியோகம் பார்த்தாலும் அந்த உள்ளூர்ப் பண்ணை வீட்டில் பொண்ணு கொடுக்க மாட்டார்கள். “கனான மூக்கு நல்லா நாயக்கர் பேரனைத் தெரியா தாக்கும்; பூ” என்று சொல்லி விடுவார்கள். அதனால் அதேபோல ஒரு வீட்டில் தம்முடைய மகனுக்குப் பொண் எடுத்துக் காட்டணும் என்கிற தாகத்தில் வந்தவராக்கும் இவர், இங்கே.

நிலம் ஒரு ஏக்கர்கூடக் கிடையாது என்று தெரித்ததுடன், பையன் கலெக்டராக இருந்தாலென்ன, கவர்னராகத்தான் இருந்தாலென்ன; இடையாது பொன்று என்று சுராலாகச் சொல்லிவிட்டார்கள்.

“என்னய்யா பையன் ஜில்லாக் கலெக்டராகப் போறான்; பொண்று கிடையாதுன்னு சொல்றீங்களே” என்று மலைத்துப்போய்க் கேட்டார் வந்தவர். ப – “கலெக்டரா இருந்தால் அது அவன்மட்டுக்கும். நாளைக்குப் பையனுக்கு ஏதாவது ஒண்ணு ஆகிவிட்டால் என் பொண்றுல்ல தெருவில் நிப்பா. பையறுக்கு நாலேக்கர் நிலமிருந்தா அவன் அதிலே இண்டிக் கிளறித் தன் பாட்டையாவது கழிச்சிடுவா. ஒன்று மில்லாதவனுக்கு உத்தியோகத்தை நம்பி யாரு கொடுப்பா பொண்று என்று ஓங்கிக் கேட்டார் கோனேரி

அப்போ அது சரிதான்னு பட்டது. அவருக்கு மாத்திரமில்லை; எல்லோருக்குமே, கரிசல்காட்டில் இந்தச் செய்தி ஓர் அபூர்வ விஷயமாக வியந்து வியந்து பேசப்பட்டது எங்கே கண்டாலும்,

கவிராயர்கள் வந்து பாடுவார்கள்: “மேழி பிடிக்கும் கை, வேல் வேந்தர் நோக்கும்கை” என்று.

“சம்சாரி ராஜா; சன்யாசி நாய்” என்றெல்லாம் பேசிச் சந்தோஷித்த காலம் அது.

இப்போ நிலைமை என்ன? – இப்போ?

அதே கோகோரி செங்கன்னாவின் பேரனுக்கே பொண்ணு குடுக்க முடியாது என்று செவிட்டில் அறைந்ததுமாதிரிச் சொல்லி விட்டான்கள்.

பொண்ணு கேக்கப்போனது யாருமில்லை; அதே அசல்க் கோனேரியேதான்.

வந்தட்டி நாயக்கர் வந்து பொண்ணு கேக்கும்போது கோனேரிக்கு நல்லா இருந்தா அப்போ அம்பது வயசு இருக்கும். இப்போ எம்பதுக் குக்கிட்டெ

இப்போ பதில்ச் சொன்னவர் உத்தியோகம் பார்ப்பவரில்லை; நல்ல அயனான சம்சாரி. அவர் வாயிலிருந்து வந்த பதில் இது,

“அடப் பாவிப் பயலுகளா; சம்சாரிக்குச் சம்சாரி சொல்ற சொல்லாடா இது!

டொக் டொக் என்று சும்யை கனன்றிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் கோனேரி.

செங்க்கள்னாவின் குடும்பம் முத்த கட்டுக்குடும்பமாகத்தான் இருந்தது. அப்புறம் அவர் வீட்டுக்கு வந்த மகாலட்சுமிகள்” ஒருத்தருக் கொருத்தர் பேச்சண்டை போட்டு, கூட்டுக் குடும்பத்தை உடைத்தார்கள்.

“பாத்தா ரொம்ப; பகுத்தாக் கொஞ்சம்” அந்த மோடாமோடி அந்தஸ்திலிருந்து கோனேரியின் குடும்பம் இறங்கிவிட்டது. இப்போ அந்தப் பெரிய வீட்டுக்குள் சிறிய ஆறு குடும்பங்கள் வசிக்கின்றன. குறுக்கே மறுக்கே சுவர்களை எழுப்பி, இடமில்லாத இடத்தில் உண்டாக்கிய சமையல் பிறைகளினால் புகை பிடித்துப் போய்விட்டது அந்த வீடு.

கூட்டுக்குடும்பங்கள் உடைந்ததோடு பழைய எண்கங்களும் உடைந்துகொண்டே வருகின்றன; முக்கியமாகப் பெண்டுகளிடத்தில், வெயிலில் போய்ச் சாகவேண்டிய அவசியமில்லை என்று தீர்மானித்து விட்டார்கள் அவர்கள்.

பிறந்த வீட்டிலிருந்து தன தளவென்று பசலிக் கொடியாய் வந்தவர்கள் தாங்கமுடியாத உழைப்பால், காஞ்சி கருவாடாய்ப் போவதில்லை இனிமேல் என்று தீர்மானித்துவிட்டார்கள். சிகப்பு நிறமெல்லாம் மங்கி, குரியச் சூட்டினால் கரிக்கட்டையாக ஏன் போக வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். சம்சாரியைக் கட்டிக் கொண்டதனால், விவசாயக் கூலிப்பெண்டுகளுக்கு இருக்கும் ஓய்வு கூடத் தங்களுக்கு இல்லை என்று கண்டுகொண்டார்கள் அவர்கள்,

கோனேரிக்கு, பெண்களைப் பெற்ற தகப்பன்கள் சொன்ன பதில், “சம்சாரிகளுக்கு இனிமேல் நம்ப பொட்டைப்பிள்ளைகள் வாக்கப் படாது; வந்து கேக்காதீக”

“காத்துட்டு சம்பளமானாலும் கவர்மெண்டு சம்பளம் இருக்கறும்; மாசம் இருநூறு சம்பாதிக்கிற வாச்மேனாக இருந்தாலும் சரி அவறுகளைக் கட்டத் தயார்.”

“காப்படி அரிசி பொங்க; தின்னுட்டு லாத்தலா ஒரு சினிமாவோ நாடகமோ போக, நல்லாப் படுத்து எந்திரிக்க; ஒரு பிள்ளையோ, ரண்டோ பெத்துக்கிட்டு குடும்பக்கட்டுப்பாடு செய்துக்கிட இப்படி ஆயிட்டது பொழைப்பு”

தலைகீழாய் நின்னு பார்த்தார் கோனேரி. பல இடங்களிலும் போய் “மூத்த பேரனுக்கு முப்பத்தொரு வயசாச்சி. அடுத்த வருசம் ரட்டை வயசு வந்துரும்; அதுக்குள்ளாக முடிச்சிறணுமே கல்யாணத்தை” என்று தவுதாயப்பட்டு அலைகிறார்.

எங்கேயும் பொண்ணு கொடுப்பாரில்லை; எவளும் கட்டத் தயாரில்லை.

அவருடைய பேரன் செங்கன்னாவுக்கு பத்து ஏக்கர் கரிசல் இருக்கு; “செல்” கிடையாது; தகை ஒன்றுமே வேண்டாம் பொண்ணுக்கு ஏல்க்கையாய் உண்டான நல்லது பொல்லது செய்தால் போதும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தாச்சே.

கோளேரி மனம் உடைஞ்சு போனார். ‘என்னடா எளவாப் போச்சி; எனவுலேயும் பேரெளவா இருக்கே. கடைசியிலே சம்சாரி கொத்தைப் பருத்தியிலும் கேவலமாப் போயிட்டானே…செ.

சிரிப்புத்தான் வந்தது; கோணல்ச் சிரிப்பு.

அந்தக் காலத்துலே ஜில்லாக்கலெக்டருக்கே பொண்ணு கிடையாதுரா போண்னு சொன்ன பாவம் வந்து இப்போப் பிடிச்சிருக்கு என்று சொல்லிச் சிரித்துக்கொண்டார்.

– கல்கி தீபாவளி மலர் நவம்பர் 1982

Print Friendly, PDF & Email

1 thought on “கொத்தைப் பருத்தி

  1. சமீபத்தில் வெளிவந்த கதைகளில் மிகவும் ரசித்து படித்த கதை…. அருமையான கரிசல் காட்டு நடை!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *