அந்த வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட நுழைந்தான் அஸிஸ்டென்ட் மேனேஜர் மாதவன். ஒரு லாக்கருக்குக் கீழே மினுமினுப்பாக ஏதோ தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தால் தங்க மோதிரம். சற்று முன்பு லாக்கரைத் திறந்து தன் பொருட்களை எடுத்த வாடிக்கையாளர்தான் விட்டிருக்கிறார் என்பது மாதவனுக்கு உறுதியாகத் தெரிந்தது.
இதை அவரிடமே ஒப்படைக்க வேண்டுமா? சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. மோதிரம் அரை பவுன் தேறும். லாக்கரில் வைக்கும் நகைகளுக்கு கஸ்டமர்களே பொறுப்பு என்பதால் பிரச்னை வர வாய்ப்பில்லை. சட்டென்று அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இருக்கையில் வந்து அமர்ந்தான் மாதவன்.மாலை உற்சாகமாய் வீடு திரும்பியவனை அழுதபடி வரவேற்றாள் மனைவி.
‘’ஏம்மா அழறே?’’
‘‘ஹவுசிங் லோன் கட்ட 10 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு பஸ்ல போனேங்க. எவனோ பையை கிழிச்சி பணத்தை எடுத்துட்டான். திரும்பி வரக் கூட காசில்லாம நடந்தே வந்தேன். நாம யாருக்கும் கெட்டது நினைச்சதில்லையே. ஏங்க இப்படி?’’ – கேட்ட மனைவியை அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. மறுநாள் முதல் வேலையாக அந்த வாடிக்கையாளரை வரவழைத்து மோதிரத்தைக் கொடுத்துவிட முடிவு செய்தான்.
- பத்மா சபேசன் (மார்ச் 2014)
தொடர்புடைய சிறுகதைகள்
முதியோர் இல்லத்தின் பிரமாண்டமான வரவேற்பறையில் அமர்ந்து, அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தார், தன் இரண்டு மகன்களால் அங்கு தள்ளப்பட்ட கிருஷ்ணன். அப்போது, புதிய இனோவா கார் ஒன்று , அந்த இல்லத்தின் போர்ட்டிகோவில் வந்து நின்றது. அதிலிருந்து, ஒரு இளைஞன் இறங்கினான்; ...
மேலும் கதையை படிக்க...
"வாசலிலே... உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்... வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன்...' என்ற பழைய பாடல், எத்தனையோ ஆயிரம் தம்பதிகளுக்கு, மிக, மிக பொருந்தவே செய்கிறது.
ஜெயராமன், தன் செருப்பை கழற்றி ஓரமாக வைக்கவும், ஜானகி வாசல் கதவை திறக்கவும் சரியாகவே ...
மேலும் கதையை படிக்க...
இரவு இரண்டு மணிக்கு ராகுலை தூக்கத்திலிருந்து எழுப்பி, “அப்பா இஸ் நோ மோர்” என்று அவன் மனைவி ஜனனி மொபைலில் சொன்னாள். மாரடைப்பினால் இறந்துவிட்டார் என்றாள். ராகுல் பதட்டப் படவில்லை. ஒரே மகனான அவன் அப்பாவின் தகனத்திற்கு பெங்களூர் உடனே செல்ல ...
மேலும் கதையை படிக்க...
அறுபத்து எட்டு வயதுக்கும், களையான தோற்றப் பொலிவு. சிறு சுருக்கங்களோ, தொய்வோ இல்லாத ஒரு திரேகக்கட்டு. துலக்கின தாமிர நிறத்தில், முன் நெற்றியில் இருக்கும் தழும்பு மட்டும் பளீரென்று, துலங்கும் செழுமைக்கு திருஷ்டி பதிப்பு போல.
முழுதாய் நரைக்க இன்னும் 20 சதவீதம் ...
மேலும் கதையை படிக்க...
சங்கரன்:
15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாரதி, அம்மா ராதை. சென்னையில் அண்ணா நகரில்.
சங்கரன் மூன்றாவது குழந்தை, இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு. நடுத்தர வர்க்க குடும்பம். சாரதி ஒரு சைவ ஹோட்டல் நடத்திக் ...
மேலும் கதையை படிக்க...