கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 4,728 
 

அத்தியாயம்-12 | அத்தியாயம் 13 | அத்தியாயம்-14

தனக்கு ஒரு ஆட்டோ டிரைவர் வேலை கிடைக்கும் வரை அவன் ஜோதியுடன் இங்கு இருப்பதாயும் வேலை கிடைத்தவுடன் அவன் வீடு பார்த்துக் கொண்டு தனியே போய் விடுவதாயும் அண்ணியிடம் கேட்டுக் கொண்டான். ஒரு வழியாக அண்ணி சம்மதிக்ககவே ஜோதியும் சேகரும் அங்கு தங்கினார்கள்.

காலையில் எழுந்து பார்த்தாள் செண்பகம்.ஜோதி படுத்து இருந்த இடம் காலியாக இருந்து.அவ தலையணை யின் மேல் ஒரு மடித்த காகிதம் இருந்தது. வெளிச்சத்தில் வந்து பிரித்துப் படித்தாள் செண்பகம்அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.“அடப் பாவி மவளே.உன்னை ஒரு நல்ல பையனாப் பாத்து நானும் உன் அக்காவும் கல்லாணம் பண்ணி வக்கலாம்ன்னு யோஜனைப் பண்ணிகிட்டு இருக்கும் போது நீ இப்படி எவனோடவோ ஓடிப் போயிட்டயே” என்று கத்திக் கொண்டு தன் குடிசையை விட்டு வேளியே ஓடி வந்து முத்தம்மாவிடம் அந்த காகிதத்தை காட்டினாள் செண்பகம்.

காகிதததைப் படித்துப் பார்த்த முத்தம்மா “அடி பாவி மகளே.எப்படியடி உனக்கு எங்களை எல்லாம் விட்டு விட்டு ஓடிப் போக தைரியம் வந்திச்சு.நன்னி இல்லாத கழுதைடீ நீ” என்று வாய்க்கு வந்த படி திட்டினாள் முத்தம்மா. தலையில் அடித்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருக்கும் தன் அம்மாவுக்கு ஆறுதல் சொன்னாள் முத்தம்மா.

முத்தம்மா யோஜனைப் பண்ணினாள் “அம்மா அந்த வூட்லே தனியாக இருந்து கஷடப்பட வேணாம். வெறுமனே வூட்டிலெ சோறு பொங்கி சமையலை கவனிச்சுகிட்டு இரு.ராணீயுடன் அவளுக்குத் துணையாக இருந்து வா” சொன்னாள்.“சா¢,சென்பு,நீ சொன்னா மாதிரி என் குடிசையை வித்து விட்டு உன் கூட வந்து தங்கி இருக்கேன்” என்று சொன்னாள் முத்தம்மா.செண்பகம் முத்தம்மாவுடனும் ராணீயுடனும் இருந்து வந்தாள்.

இரவு வீட்டுக்கு வந்ததும் லக்ஷ்மணன் ”யாரு சேகரா,எங்கேடா இந்தப் பக்கம், யாருடா இந்த பொண்ணு” என்று ஆச்சா¢யமாகக் கேட்டான். புருஷனுக்கு சோறு பறிமாறிக் கொண்டே தேவி சேகர் சொன்னா எல்லா விஷயத் தையும் விவரமாக சொன்னாள்.“நீ வந்தது நல்லதாப் போச்சு சேகர். இன்னைக்கு காலையிலே தான் என் நண்பன் ஒருத்தன் தான் ஒரு புது ஆட்டோ அவன் வாங்கி இருப்பதாயும்,அவன் பழைய ஆட்டோவை ஓட்ட யாராவது நல்ல பையனா தெரிஞ்சா சொல்லு தலைவான்னு சொன்னான்.நீ என்னோடு நாளைக் காலையிலே வா.நான் அவனை உனக்குக் காட்டி விடறேன்.நீ அவன் பழைய ஆட்டோவை ஓட்டி வா”என்று சொன்னார் லக்ஷமணன்.”ரொம்ப தாங்க்ஸ் அண்ணா.எனக்கு இவ்வளவு சீக்கிரம் வேலை கிடைக்கும்ன்னு நான் நினைக்கலே” என்று சொன்னான் சேகர்.

அடுத்த நாள் காலையிலே சேகர் தன் அண்ணனோடு கிளம்பிப் அவர் நண்பன் வீட்டுக்குப் போய் அவர் ஆட்டோவை ஓட்டி வர ஆரம்பித்தான் சேகர்.

மூன்று மாசம் ஓடி விட்டது.சேகர் ஆட்டோ ஓட்டி மெல்ல செட்டில் ஆனான்.கையில் கொஞ்சம் பணம் சேரவே அவன் தன் அண்ணனிடமும் அண்ணியிட மும் ஒரு நாள் “அண்ணே,அண்ணி நான் எத்தனை நாளைக்கு இங்கு இருந்துக் கிட்டு உங்க ரெண்டு பேருக்கும் இடைஞ்சலா இருந்து வரது.நான் ஜோதியை அழைச்சுக் கிட்டு தனியா இருந்து வரலாம்ன்னு நினைக்கிறேன்.இது வரை நாங்க ரெண்டு பேரும் தங்க இடம் கொடுத்த உங்களுக்கு நாங்க ரெண்டு பேரும் ‘தாங்க்ஸ்’ சொல்றோம்” என்று சொன்னான் சேகர்.“சா¢ உன் இஷ்டப் படியே பண்ணுப்பா” என்று சொல்லி லக்ஷ்மணனும் தேவியும் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

சேகரும் கே.கே. நகா¢ல் ஒரு சின்ன வீடாக வாடகைக்குப் பார்த்துக் கொண்டு ஜோதியுடன் அங்கு வந்து குடித்தனம் பண்ண ஆரம்பித்தான்.ஒரு தபால் அட்டையிலே ““அம்மா,அக்கா, நான் உங்களை எல்லாம் விட்டு விட்டு ஓடிப் போனதுக்கு உங்களிடம் நான் மிகவும் மன்னிப்பு கேக்கறேன்.நான் என் காதலன் சேகரோடு சென்னைக்கு ஓடிப் போய் விட்டேன்.இப்போ சேகர் ஒரு ஆட்டோ டிரைவராக வேலை பண்ணுராரு.அவர் என்னை நல்லா வச்சுக்கிட்டு இருக்காரு..நீங்க ரெண்டு பேரும் என்னை மன்னிப்பீங்களா.இப்போ எனக்கு அவர் ஒரு செல் போன் வாங்கி குடுத்து இருக்காரு அக்கா.என் நம்பர் வந்து 9978564534. முடிஞ்சப்போ எனக்கு நீங்க போனிலே பேசுங்க இப்படிக்கு ஜோதி” என்று எழுதி தன் விலாசத்தையும் கூடவே எழுதி இருந்தாள் ஜோதி. தன் விலாசத்துக்கு வந்த லெட்டரை பிரித்து செண்பகத்துக்குப் படித்து காட்டினாள் முத்தம்மா.இருவருக்கும் ஜோதி இந்த லெட்டரில் எழுதி இருந்த வா¢கள் மனதைத் தொட்டது. “ஆமாம்மா,எங்கோ அவ நல்லா இருகட்டும்.நல்லப் போண்ணு.வயசு கோளாறு.ஓடிப் போய் விட்டா.நாம் அவளை மன்னிக்கணும் அம்மா.அந்த பையன் நம்ம ஜோதியை நல்லா வச்சுகிட்டு,ஒரு செல் போன் கூட வாங்கிக் குடுத்து இருக்கான்” என்று சொல்லி தன்னையும் சமாதானப் படுத்திக் கொண்டு செண்பகத் தையும் சமாதானப் படுத்தினாள் முத்தம்மா.முத்தம்மவும் செண்பகமும் ‘டயம்’ கிடைக்கும் போதெல்லாம் ஜோதியிடம் போனில் பேசி அவள் நலனை விசாரித்து வந்தார்கள்.தன் அக்காவும் தன் அம்மாவும் போனில் பேசின போது ஜோதி அழுதே விட்டாள்.

ஜோதி வீட்டை விட்டு ஓடிப் போய் மூன்று வருஷங்கள் ஆகி விட்டது.

வார கடைசியில் ‘வைன் ஷாப்புக்கு ‘ பணம் கொடுத்து விட்டு தன்னிடம் என்ன பணம் மீதி இருக்குதோ அதை முத்தம்மாவிடம் கொடுத்து வந்து கொடுத்துக் கொண்டு இருந்தான் கதிர்வேலு. அவனால் குடிக்காமல் இருக்கவே முடியவில்லை.விலை வாசி ஏத்ததால் முத்தம்மா வீட்டு செலவுக்கு பணம் போதாமல் கஷடப் பட்டுக் கொண்டு வந்தாள்.அவள் பல வீடுகள் வேலை செஞ்சி வந்து எப்படியோ குடும்ப செலவை சா¢ கட்டி வந்தாள்.

கதிர்வேலு அதிகம் குடித்து குடித்து அவன் இதயம் மிகவும் பலவீனமாக ஆகி இருந்தது. அன்னைக்கு ‘கோடவுனில்’ மூட்டைகள் நிறைய தூக்கிய கதிர்வேலு உடம்பு வலி தாங்காமல்,மதியம் சாப்பாடு கூட சாப்பிடா மல்,நிறைய குடித்து விட்டு மண்டியில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.திடீரென்று ஒரு லாரி ‘லோட்’ வெங்காயம் வரவே முதலாளி கதிர்வேலுவைக் கூப்பிட்டு லாரியில் இருந்து வெங்காய மூட்டைகளை உடனே இறக்கச் சொன்னார். கதிர்வேலுவோடு மூட்டை இறக்கும் சாமி அப்போது எங்கோ போய் இருந்தான்.அவன் இல்லாததால் கதிர்வேலுவே எல்லா மூட்டைகளையும் இறக்கவேண்டி இருந்தது. கதிர்வேலு மூடைகளை இறக்கி வைத்துக் கொண்டு இருந்தான். முக்கா லாரி காலி ஆகி விட்டது.அவனுக்கு குடி போதை அவனை மயக்கியது.நிறைய மூட்டைகளை இறக்கியதால் அவன் உடம்பு தளர்ந்து, கால்கள் பின்ன ஆரம்பித்தன.ஒரு வெங்காய மூட்டையை தூக்கிக் கொண்டு வரும் போது அவன் கால்கள் தடுமாறி மூட்டையை தன் மேலேயே போட்டுக் கொண்டு ‘தொப்பென்று’ மார்கெட்டில் இருந்த ஒரு பெரிய கல்லின் மேல் கீழே விழுந்து விட்டான் கதிர்வேலு.எல்லோரும் ஓடி வந்தார்கள்.அங்கே வேலை செய்துக் கொண்டு இருந்த இரண்டு பேர்கள் வந்து மூட்டையை அப்புறப் படுத்தினார்கள்.கல்லின் மேல் அவன் மூட்டையுடன் விழுந்த்தால் அவன் தலையில் நல்ல அடிப் பட்டு ரத்தம் வந்துக் கொண்டு இருந்தது.கொஞ்ச நேரத்தில் அவன் மூச்சு நின்று போய் விட்டது.விஷயம் தெரிந்த முதலாளி ஓடி வந்துப் பார்த்தார்.

உடனே அவர் கதிர்வேலுவின் ‘பாடியை’ அவன் வீட்டுக்கு ஒரு ஆட்டோவில் அனுப்பி,ஒரு ஆயிரம் ரூபாயை யும் ஒரு ஆளிடம் கொடுத்து அனுப்பினார்.வந்தவன் நடந்ததை எல்லாம் சொல்லி விட்டு அந்த ஆயிரம் ரூபாயையும் கொடுத்து விட்டு கதிர் வேலுவின் ‘பாடியை’ ஆட்டோவில் இருந்து இறக்கி வைத்து விட்டுப் போனான்.கதிர் வேலுவின் ‘பாடியை’ப் பார்த்து கதறினார்கள் முத்தம்மாவும் செண்பகமும்.தலையில் அடித்துக் கொண்டு ‘ஓ’ வென்று அலறி அழுதார்கள் இருவரும்.ஏற்கெனவே இதயம் மிகவும் பலவீனமாக இருந்து வந்த செண்பகம் அழுது அழுது இன்னும் பலவீனமாய் போய் கதிர்வேலுவின் உடம்பின் பக்கத் திலேயே மயக்கமாய் விழுந்தாள்.சற்று நேரத்திற்கெல்லாம் அவள் மாரடைப்பால் இறந்து விட்டாள்.முத்தம்மாவுக்கு உலகமே இருண்டு விட்டது போல் தோன்றியது.சற்று நேரம் கழித்து ராணீ ஜோதிக்கு செல் போனில் நடந்த எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னாள். ஜோதியும் உடனே விழுந்தடித்துக் கொண்டு முதல் பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு திண்டிவனத்துக்கு ஒடி வந்தாள்.அவள் தன்னுடன் கொஞ்சம் பணமும் கொண்டு வந்து இருந்தாள்.

ஜோதி கொடுத்த பணத்தோடு,அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி முத்தம்மா தன் கணவனையும் அம்மாவையும் அடக்கம் பண்ணி விட்டு வந்தாள்.அவள் வீடே வொ¢ச்சோடி இருந்தது.ஒன்னும் சாப்பிடாமல் வெறுமனே படுத்து இருந்தாள் முத்தம்மா.ஜோதி தான் எல்லா வேலகளையும் ராணீயுடன் கவனித்து வந்தாள்.ரெண்டு நாள் திண்டிவனத்தில் இருந்து விட்டு ஜோதி சென்னைக்கு கிளம்ப ரெடி ஆனாள்.

”ஜோதி நான் சொல்றென்னு நீ தப்பா எடுத்துக்காதே..எனக்கும் நம்ம அம்மாவைப் போல என் முட்டிங்க ரெண்டும் ரொம்ப வலிக்குது.இதனாலெ நான் மாடியிலே இருக்கும் வூட்டுக்கு எல்லாம் வேலைக்குப் போறதில்லே. தரையில் இருக்கும் ரெண்டு வீட்டு வேலை தான் செஞ்சு வறேன்.எனக்கு மொத்தம் ஐனூறு ரூபாய் தான் மாசம் வருது.பாவம் ராணீ வயசுப் பொண்ணு.நல்லா சாப்பிட வேண்டிய இந்த வயசு காலத்துலே கால் வயிரும் அரை வயிறுமா சாப்பிட்டு வரா.பாக்க ரொம்ப கஷடமா இருக்கு.இந்த வயசிலே நல்லா சாப்பிட்டு வரவேண்டியவ இந்த பொண்ணு. பாதி ‘டயம்’ சாப்பாடு இல்லாம இருந்து வரா.அவளை வேலைக்கு அனுப்பவும் பயமா இருக்கு ஜோதி. ராணீ பாக்க நல்ல கலரா அழகா வேறு இருக்கா.காலம் கெட்டு கிடக்குது ஜோதி .நான் இப்படி முடியாத வயசானவ ன்னு தெரிஞ்சு,ஆண் துணை இல்லாத வீடு இதுன்னு தெரிஞ்சிகிட்டு .ராணீயை எந்த கயவாளி பையனாவது கெடுத்துன்னா அவ வாழ்க்கையே சூன்யமாயிடும்.நீ தயவு செஞ்சி ராணீயை உன்னோடு சென்னைக்கு அழைச்சுக் கிட்டுப் போய் உன்னோடு வச்சுக்கிட்டு,அவளுக்கு ஏதாவது வூட்டு வேலை வாங்கிக் குடுத்து அவளை உன் பாதுகாப்பிலே பத்திரமா வச்சு,ஒரு நல்ல பையனா பாத்து அவளுக்கு கல்லாணம் கட்டி வை ஜோதி.உனக்கு கோடிப் புண்ணியமா இருக்கும். ஒரு நல்ல பையனைத் தேடி அவ கல்லாணத்தை நான் பண்ணி முடிப்பேன்னு எனக்குத் தோணலே.தவிர இங்கே யாரும் நல்ல பையனா இவளுக்கு கிடைக்க மாட்டான்.நம்ப அப்பன் போல,இவ அப்பன் போல, எவனாவது ஒரு குடிகாரன் தான் இவளுக்கு இந்த ஊர்லே கிடைப்பான்.நீ தான் இந்த உதவியே எனக்குப் பண்ணனும்.இனிமே நீ தான் ராணீக்கு அப்பா அம்மா” என்று சொல்லி ஜோதி கையை பிடித்துக் கொண்டு அழுதாள் முத்தம்மா..

சற்று நேரம் கழித்து “அக்கா சென்னையிலே நான் இருக்கிற இடத்தில் நிறைய ‘·ப்ளாட்டுங்க’ இருக்குது.அங்கே புருஷன்,பெண்ஜாதி ரெண்டு பேரும் வேலைக்குப் போறதனாலே நிறைய பேர்களுக்கு வீட்டு வேலைக்கு ஆள் வேண்டி இருக்கு.சம்பளமும் நல்லா குடுக்கிறாங்க” என்று சொல்லி முடிப்பதற்கு முன்னால் “அப்படின்னா நீ இவளை இட்டு கிட்டு போய் ” ராணீயை உன் கூட வச்சு கிட்டு இவளுக்கும் ரெண்டு வூடு ஏற்பாடு பண்ணிக் கொடேன் ஜோதி.நீ இவளை இட்டுக் கிட்டு போறயா ஜோதி” ன்னு மீண்டும் கெஞ்சினாள் முத்தம்மா. ஜோதி.’தன் அக்கா சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கு என்று எண்ணினாள் ஜோதி.சற்று நேரம் கழித்து “கவலை படாதே முத்தம்மா, நான் ராணீயை என்னோடு சென்னைக்கு அழைச்சுக் கிட்டுப் போய் அவளுக்கு ரெண்டு மூனு வீட்டு வேலை நான் ஏற்பாடு பண்ணி, ஒரு நல்ல பையனா கிடைச்சா,நான் அவ கல்யாணத்து ஏற்பாடு பண்றேன். ஆனா நீ தனியா இருக்கணுமே அக்கா.அதை நினைச்ச தான் எனக்கு ரொம்ப கவலையாய் இருக்கு”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது என்று கேட்டாள் ஜோதி. “என்னைப் பத்தி நீ கவலை படாதே ஜோதி, நான் இங்கு தனியா இருந்துப் பேன்.பக்கத்து விட்டு பூங்காவனம்,அவங்க அக்கா,எதிர் வீட்டு செல்வி,இவங்க எல்லாம் என்னே கவனிச்சு க்குவாங்க.நான் சொல்றதை கொஞ்சம் கேளு” என்று மறுபடியும் மறுபடியும் கெஞ்சினாள் முத்தம்மா.

ராணீக்கும் இந்த திண்டிவனமே பிடிக்கவில்லை.’நம்ம சித்தியோட நாம சென்னைக்குப் போய் அந்த வாழ்க்கையே பாக்கலாமே.சித்தி கட்டிக்கிட்டு இருக்கும் புடவைங்க,அவங்க உபயோகிக்கும் உடம்பு சோப்பு,போட்டுக் கொள்ளும் பவுடர்,இதை எல்லாம் கவனித்த ராணீக்கு நாமும் சென்னை க்குப் போனா அந்த மாதிரி புடவை,சோப்பு, பவுடர் இதை எல்லாம் வாங்கி அனுபவிக்கலாமே’ என்று ஆசை பிறந்தது .ஒரு வயசுப் பொண்ணு தானே ராணீ,இந்த மாதிரி ஆசை எல்லாம் வருவது நியாயமானது தானே.ராணீ£ அதற்கு விதி விலக்கு இல்லையே!!!

அடுத்த நாள் காலையில் ராணீ தன் துணி மணிகளை எல்லாம் ஒரு பையில் போட்டுக் கொண்டாள்.தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டும்,எதிர் வீட்டில் இருப்பவர்கள், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லோரிடமும் ராணீ சொல்லிக் கொண்டு தன் சித்தியோடு சென்னைக்குப் புறப்பட்டாள்.ராணி கிளம்பிப் போன பிறகு முத்தம்மா தனக்கு என்று இருக்கும் ரெண்டு வீட்டு வேலைகளை செய்து வந்து தன் வயித்தைக் கழுவி வந்தாள்.

சென்னைக்கு வந்ததும் ஜோதி ராணீயை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள்.அப்போது சேகர் வீட்டில் இருந்தான்.ஜோதி சேகா¢டம் ”இவ என் அக்கா பொண்ணு.பேர் ராணீ.இங்கு இருந்துக் கிட்டு இவ ரெண்டு மூனு வீட்டு வேலை செஞ்சி வரப் போறா.இவ கையிலே கொஞ்சம் காசு சேர்ந்த பிறகு இவளை ஒரு நல்ல பையனுக்கு நான் கல்யாணம் கட்டிக் கொடுக்கலாம் ன்னு என்று இருக்கேன்.நான் இவளெ இங்கே இட்டு கிட்டு வந்தது தப்பாங்க” என்று கேட்டு சேகரைப் பார்த்தாள். சேகர் ராணீயைப் பார்த்தான்.அவ நல்ல கலரா,ரொம்ப அழகாக இருந்தாள். கொஞ்ச நேரம் ஆனதும் “ஜோதி, ராணீ ரொம்ப அழகா,கலராத் தான் இருக்கா.எனக்கு என்ன பயம்ன்னா,நான் இங்கே இல்லாத இருக்கும் போது எவனாவது என் நண்பன் நம்ப வீட்டுக்கு வந்து ராணீயைப் பார்த்தா ‘சேகர் அந்தப் பொண்ணு ராணீயை எனக்குக் கல்யாணம் கட்டி வைடான்னு பிடிவாதம் பிடிச்சா நான் என்ன பண்றதுன்னு கவலையா இருக்கு.நீ ராணீயை வச்சுக் கிட்டு இங்கெ தனியாத் தானே இருப்பே ஜோதி” என்று சொல்லி வருத்தப் பட்டான். உடனே ஜோதி “நீங்க கவலைப் படாதீங்க,நான் நீ ராணீயை ரொம்ப ஜாக்கிறதையா கவனிச்சுக்கிறேங்க. என்று சொன்னதும் சேகர் ஒத்துக் கொண்டான்.‘நாம எப்படியாவது ரெண்டு மூனு வீட்டு வேலையைத் தேடிக் கிட்டு கொஞ்சம் பணம் கையிலே சேர்ந்தவுடன் ஒரு நல்ல பையனாப் பாத்து சித்தி செஞ்சா மாதிரி காதலிச்சுக் கலயாணம் கட்டிகிட்டு அவனோடு சந்தோஷமா இருந்து வரணும்.மறுபடியும் அந்த திண்டிவனத்துக்கு நாம் போவவே கூடாது’ என்று மனதில் உறுதி செய்தாள் ராணீ.

பெரியவர்கள் சொல்வதை பொருட்படுத்தாமல் கமலாவும் நடராஜனும் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்த்ததும் மீதி இருந்த இடங்களுக்கு ஜாலியாகப் போய் சுத்திப் பார்த்து விட்டு வந்து வாழ்க்கையை இன்பமாக கழித்து வந்தார்கள்.கமலாவும் தன் புருஷன் ஆசைப் பட்டது போல் எல்லா இடங்களையும் அவர் பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என்று விரும்பினாள்.

அன்று அவள் முன் பஸ் பிடித்தும் வழியில் ‘டிரா·பிக் ஜாம்’ ஆனதால் அவள் அன்றும் ஆ·பீஸ்க்கு ‘லேட்டாய்’ போனாள்.அவள் மானேஜர் அவளை ஒரு மாதிரிப் பார்த்தார்.கமலா சீட்டில் போய் உட்கார்ந்ததும் “இதோ பார் கமலா. நாளையிலிருந்து ஆ·பீஸ்க்கு ‘டயத்திலே’ வாங்க.இப்படி லேட்டா வந்தா அரை நாள் லீவு நீங்க போட வேண்டியதாய் இருக்கும்” என்று கண்டிப்பாக சொன்னார்.கமலாவுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது.அவள் பக்கத்து சீட்டில் இருக்கும் பெண்மணி ஒரு டூ.வீலர் ‘வைத்து இருக்கிறாள்.இன்னொரு ‘லேடி க்ளார்க்கை’ அவன் புருஷன் தன் பைக்கில் ‘ட்ராப்’ பண்ணி விட்டுப் போகிறான்.அவர்கள் லேட்டாய் வருவதே இல்லை.நாஷ்டா பண்ணி, சமையல் பண்ணி,’லன்ச் பாக்ஸ்’ ரெடி பண்ணி விட்டு,கமலா சாப்பிட்டு விட்டு பஸ் பிடித்து வர அவளுக்கு நேரம் ஆகி விடுகிறது.வீட்டுக்கு வந்ததும் கமலா இந்த வாரம் பூரா ‘ஆ·பீஸில்’ நடந்ததை எல்லாம் அழ மாட்டாத குரலில் நடராஜனிடம் சொன்னாள். நடராஜனுக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. ‘என் டியூட்டி’ நேரம் கமலா ஆ·பீஸ் நேரத்திற்கு ஒத்து வராதே.என்ன பண்ணலாம்’ என்ரு யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தான்.“என்னங்க யோஜனைப் பண்றீங்க” என்று கேட்டாள் கமலா.”இந்த ப்ராப்லெத்தை சால்வ் பண்ண என்ன பண்ணலாம்ன்னு தான் யோசிச்சுக் கிட்டு இருந்தேன்”என்ரான் நடராஜன்.சற்று நேரம் கழித்து “நான் ஒரு ‘டூ வீலர்’ வாங்கிக் கிட்டா என்னங்க,நான் அதிலே சௌகா¢யமா ஆ·பீஸ் நேரத்திற்கு நான் போய் வர முடியு மாங்க” என்று கேட்டாள் கமலா.உடனே “நானே உனக்கு இந்த ‘ஐடியாவை’ச் சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன்.ஆனா உனக்கு ‘டூ. வீலர்’ ஓட்ட பிடிக்குமோ பிடிக்காதோ ன்னு எனக்கு தெரியாததாலே நான் உனக்கு சொல்லலே கமலா.நீ சொல்றது நல்ல ஐடியா” என்றான் நடராஜன். “சா¢ங்க நான் டூ.வீலர் ஒன்னு வாங்கி அதில் ஆ·பீஸ் போய் வரேணுங்க” என்றாள் கமலா.

அருகில் இருந்த ‘டிரைவிங்க ஸ்கூலுக்கு’ப் போய் கமலா அங்கு இருந்த ‘மாஸ்டர்’ சொல்லிக் கொடுத்தது போல் நன்றாக ஓட்டி வந்து ஒரு வாரத்திலேயே ‘டிரைவிங்க லைசன்ஸ்’ வாங்கி விட்டாள்.அடுத்த நாளைக்கே நடராஜன் கமலாவை அழைத்துக் கொண்டு போய் ஒரு ‘டூ வீலர்’ வாங்கிக் கொடுத்தான்.அடுத்த நாளில் இருந்து கமலா ஆ·பீஸ்க்கு ‘டூ வீலரை’ எடுத்துப் போக ஆரம்பித்தாள்.

அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டு மூன்று வருஷங்கள் ஆகி விட்டது.இருவரும் நாம் பார்த்த இடங்கள் எல்லாம் போதும்,வாழ்க்கையை ‘எஞ்சாய்’ பண்ணினது போதும் என்று எண்ணி பெரியவர்கள் சொன்னது போல் ஒரு குழந்தை பெத்து கொள்வதில் கவனம் செலுத்தி வந்தார்கள்.

நான்கு வருஷங்கள் ஓடி விட்டது.அவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இருவரும் மிகவும் கவலைப் பட ஆரம்பிதார்கள்.இருவரும் இரு நல்ல டாக்டர் இடம் போய் ‘ செக் அப்’ பண்ணிக் கொண்டார்கள். இருவரையும் பா¢சோதித்த டாக்டர் ‘உங்க ரெண்டு பேர் கிட்டேயும் ஒரு குறையும் இல்லை. குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது ‘என்று சொல்லி விட்டார்.இருவரும் நிம்மதி அடைந்தார்கள்.

பெரியவர்கள் சொல்வதை பொருட்படுத்தாமல் கமலாவும் நடராஜனும் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்த்ததும் மீதி இருந்த இடங்களுக்கு ஜாலியாகப் போய் சுத்திப் பார்த்து விட்டு வந்து வாழ்க்கையை இன்பமாக கழித்து வந்தார்கள்.கமலாவும் தன் புருஷன் ஆசைப் பட்டது போல் எல்லா இடங்களையும் அவர் பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என்று விரும்பினாள்.

அன்று அவள் முன் பஸ் பிடித்தும் வழியில் ‘டிரா·பிக் ஜாம்’ ஆனதால் அவள் அன்றும் ஆ·பீஸ்க்கு ‘லேட்டாய்’ போனாள்.அவள் மானேஜர் அவளை ஒரு மாதிரிப் பார்த்தார்.கமலா சீட்டில் போய் உட்கார்ந்ததும் “இதோ பார் கமலா. நாளையிலிருந்து ஆ·பீஸ்க்கு ‘டயத்திலே’ வாங்க.இப்படி லேட்டா வந்தா அரை நாள் லீவு நீங்க போட வேண்டியதாய் இருக்கும்” என்று கண்டிப்பாக சொன்னார்.கமலாவுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது.அவள் பக்கத்து சீட்டில் இருக்கும் பெண்மணி ஒரு டூ.வீலர் ‘வைத்து இருக்கிறாள்.இன்னொரு ‘லேடி க்ளார்க்கை’ அவன் புருஷன் தன் பைக்கில் ‘ட்ராப்’ பண்ணி விட்டுப் போகிறான்.அவர்கள் லேட்டாய் வருவதே இல்லை.நாஷ்டா பண்ணி, சமையல் பண்ணி,’லன்ச் பாக்ஸ்’ ரெடி பண்ணி விட்டு,கமலா சாப்பிட்டு விட்டு பஸ் பிடித்து வர அவளுக்கு நேரம் ஆகி விடுகிறது.வீட்டுக்கு வந்ததும் கமலா இந்த வாரம் பூரா ‘ஆ·பீஸில்’ நடந்ததை எல்லாம் அழ மாட்டாத குரலில் நடராஜனிடம் சொன்னாள்.நடராஜனுக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. ‘என் டியூட்டி’ நேரம் கமலா ஆ·பீஸ் நேரத்திற்கு ஒத்து வராதே.என்ன பண்ணலாம்’ என்று யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தான்.“என்னங்க யோஜனைப் பண்றீங்க” என்று கேட்டாள் கமலா.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *