கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 5,683 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம் -8 | அத்தியாயம்-9 |

“ஹாய் கமலா,என்ன விஷயம்.இவ்வளவு காலையிலேயே எனக்கு போன் பண்ணி இருக்கே” என்று ஆசரியத்துடன் கேட்டான் நடராஜன்.“நிறைய சமாசாரம் இருக்குங்க பேச.நான் ஒரு ‘அவர்’ பர்மிஷன் போட்டு விட்டு நாலு மணிக்கே நான் சரவண பவனுக்கு வந்து விடறேன்.நீங்களும் தவறாம வந்து விடுங்க.உங்க கிட்டே நிறைய பேசணும்.தயவு செஞ்சி கொஞ்சம் வரீங்களா” என்று கெஞ்சினாள் கமலா.” சரி,நான் நிச்சியமா சரியா நாலு மணிக்கு சரவண பவனுக்கு வந்துடரேன்.பை கமலா” என்று சென்னவுடன் கமலாவும் “பைங்க, நாம நேரில் பேசலாம்” என்று சொல்லி போனை ‘கட்’ பண்ணினாள்.

சாயங்காலம் ஆனதும் கமலா ஒரு ‘அவர்’ பர்மிஷன் போட்டு விட்டு ஆஸ்பீஸில் இருந்து வெளியே வந்து நேராக சரவண பவன் ஹோட்டலுக்கு விரைந்தாள்.ஹோட்டல் வாசலிலேயே கமலாவுக்காக காத்துக் கொண்டு இருந்தான் நடராஜன்.இருவரும் ஹோட்டல் உள்ளே நுழைந்தார்கள்.காலியாக இருந்த சீட்டில் இருவரும் உட்கார்ந்துக் கொண்டார்கள்.”ஏன் இவ்வளவு ‘டென்ஷனா’ இருக்கே கமலா.‘ப்ராப்லெம்’ ஒன்னும் இல்லையே கமலா” என்று கேட்டுப் பதறிப் போனான் நடராஜன்.“ ‘ப்ராப்லெம்’ ஒன்னும் இல்லீங்க..என் அப்பாவும் அம்மாவும் “முதல்லே வேணாம் இந்த ‘காதல்’ ‘கீதல்’ எல்லாம்ன்னு தான் சொன்னாங்க ஆனா நான் எனக்கு வேறே மாப்பிள்ளையெல்லாம் பார்க்க வேணாம்.நாங்க ரெண்டு பேரும் நாலு மாசமா பேசி பழகி வரோம்.ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புகிறோம்.அவர் ரொம்பவும் நல்லவர். என்னிடம் அன்பாக பழகறார்.நான் அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவு பண்ணி இருக்கேன்.நான் ஒரு தரம் அவரை நம்ம வீட்டுக்கு வரச் சொல்றேன்.நீங்க பேசிப் பாருங்கன்னு” என்று மூச்சு விடாமல் என் அம்மாவிடம் கெஞ்சினேன்.வேறு வழி இல்லாமல் ஒரு வழியாக என் அம்மாவும் அப்பாவும் நான் சொன்னதுக்கு ஒத்துகிட்டாங்க. “கையை குடு கமலா.நீ சரியாத்தான் பேசி இருக்கே.நீ கவலையே படாதே.நான் இந்த ‘பெர்சனல் இன்டர்வியூ’ ல்ல நல்ல விதமாகப் பேசி உங்க அப்பா அம்மாவிடம் நல்ல பேர் வாங்கி விடறேன்.நீ கவலையை விடு கமலா” என்று சொல்லி அவளை சந்தோஷப் படுத்தினான் நடராஜன். ’நாம எப்படியாவது கமலாவின் அப்பா அம்மாவிடம் நன்றாகப் பேசி அவர்கள் மனதை கவர வேண்டும்’ என்று முடிவு பண்ணினான்.

‘இருவரும் காப்பி டிபன் சாப்பிட்டார்கள்.பிறகு “உங்களுக்கு எப்போ வர சௌகரியப் படுங்க எங்க வீட்டுக்கு வரங்க” என்று மெல்லக் கேட்டாள் கமலா.சற்று யோஜனை பண்ணி விட்டு ”கமலா நீ வூட்லே இருக்கும் போது தான் நான் உங்க வூட்டுக்கு வரணும்.நீ சனி,ஞாயிறு தான் வீட்டுலே இருப்பே.எனக்கு இந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் ‘மார்னிங்க் டியூட்டி’ தான். சாயங்காலத்திலே நான் ‘ஸ்பிரீயாக’த் தான் இருப்பேன்.முதல் முதல்லே உங்க வீட்டுக்கு நான் சனிக் கிழமையிலே வர மாட்டேன்.அது நல்லது இல்லே.ஞாயித்துக் கிழமையிலே 4-30லே இருந்து 6 மணி வரை ராகு காலம்.போயும் போயும் முதல் முதல்லே நான் ராகு காலத்திலா உங்க வீட்டுக்கு நான் வரது.அப்படி நான் வருவது சரியும் இல்லை கமலா. என்ன பண்றது” என்று சொல்லி சற்று நேரம் யோஜனைப் பண்ணினான் நடராஜன். கமலாவும் யோசனைப் பண்ணினாள்.சற்று நேரம் கழித்து ”கமலா,அடுத்த புதன் கிழமை காந்தி ஜெயந்தி.அன்னைக்கு என் ‘ஸ்பாக்டரி லீவு’. ’பொன் கிடைச்சாலும் கிடைக்கும், புதன் கிடைக்காது’ என்பாங்க பெரியவங்க.நான் புதன் கிழமை சாயங்காலம் சுமார் நாலு மணிக்கு உங்க வீட்டுக்கு வரட்டுமா கமலா.அது சரியாய் இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்.நீ என்ன நினைக்கிறாய் கமலா” என்று கேட்டான் நடராஜன். “வெரி குட் ஐடியாங்க.அப்படி வருவது தான் சரியா இருக்குங்க” என்றாள் கமலா.நடராஜன் ஒரு காகிதத்தில் கமலாவின் ‘அட்ரஸ்ஸை’ எழுதிக் கொண்டான்.பிறகு இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு சந்தோஷமாகக் கிளம்பினார்கள்.கமலாவை ஏற்றிக் கொண்டு வந்து கே.கே நகர்ல்லே அவ வீட்டுக்கு கிட்டே விட்டு வீட்டு நடராஜன் பிரியா விடை பெற்றுக் கொண்டு தன் ஹாஸ்டலுக்குப் வந்து விட்டான்.கமலாவும் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

“அப்பா நான் இன்னிக்கு நான் அவரை பாத்தேம்பா.நான் அவரை ஒரு தரம் ‘எங்க வீட்டுக்கு நீங்க வாங்க’ன்னு கூப்பிட்டேன்ப்பா.ஞாயிறு சாயங்காலம் 4-30 லிருந்து ராகு காலம் வருது.ராகு காலம் முடிஞ்சு நான் வந்தால் பேச நிறைய நேரம் இருக்காது.அந்த நாளும்,நேரமும் சரிப் படாது. அதனால் நான் ரெண்டாம் தேதி காந்தி ஜெயந்தி புதன் கிழமை சாயங்காலம் நாலு மணிக்கு உங்க வீட்டுக்கு வரேன்’ன்னு சொன்னார் அப்பா” என்று சொல்லி நிறுத்தினாள் கமலா.”நல்லதும்மா. அப்படியே வரட்டும்மா” என்று சொன்னார் சிவலிங்கம். “ அவர் வந்தாருன்னா நாம் தீர விசாரிப்போம்ங்க.அப்புறம் அவர் நல்லவர் என்று தொ¢ஞ்ச பிறகு முடிவு பண்ணலாம்ங்க” என்று சொல்லி விட்டு தன் வேலைகளை கவனிக்க சரோஜா சமையல் ரூமுக்குப் போனாள் சரோஜா.கமலாவுக்கு ‘அவர் வந்து பேசி நம்ம அப்பா அம்மா இருவருக்கும் ‘அவரை’ பிடிக்கணுமே, முக்கியமா அம்மாவுக்கு அவரை பிடிக்கணுமே’ என்றெல்லாம் கவலை பட்டு யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தாள்.

புதன் கிழமை சாயங்காலம் மூனு மணிக்கு நடராஜன் கமலாவுக்குப் போன் பண்ணினான் “கமலா,நான் சரியாக நாலு மணிக்கெல்லாம் உங்க வீட்டுக்கு வந்து விடறேன்”. உங்க அப்பா அம்மாவை என்னைக் கேக்க வேண்டிய கேள்விகளை எல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கச் சொல்லு. நான் அவைகளை எல்லாம் சரியாக பதில் சொல்றேன். நீ மறைவாக நின்னுக் கிட்டுக் எனக்கு மார்க்கு போடு. நீ எனக்கு கொஞ்சம் அதிகமாகவே மார்க்கு போடு .நீ என் செல்லம் இல்லே” என்று கிண்டல் பண்ணினான்.“கிண்டல் எல்லாம் அப்புறம் இருகட்டுங்க.முதல்லே நீங்க ‘டயத்துக்கு’ வந்து சேர வழியைப் பாருங்க” என்று மிரட்டினாள் கமலா.

சரியாக நாலு மணிக்கு காலிங்க் பெல் அடிததது.கதவைத் திறந்தார் சிவலிங்கம்.“கையைக் கூப்பி “வணக்கம்ங்க” என்று சொல்லி சிவலிங்கதிற்கு வணக்கம் சொன்னான் நடராஜன்.“வணக்கம், உள்ளே வாங்க தம்பி “என்று சொல்லி நடராஜனை உள்ளே வரச் சொல்லி “சோபாவில் உக்காருங்க” என்று சொல்லி சோபாவில் உட்காரச் சொன்னார் சிவலிங்கம்.சிவலிங்கம் உட்கார்ந்து கொண்டார். நன்றாக இஸ்திரி செய்த கட்டம் போட்ட ஒரு புல் ஹாண்ட் ஷர்ட், அதற்கு ‘மேட்ச்’ ஆகிறாப் போல ஒரு நல்ல பேண்ட். ஷேவிங்க் பண்ணின முகம், எண்ணை போட்டு வாரிய தலை முடி,கால்ல ஷ¥, பார்க்க ஒரு சினிமா நடிகனைப் போல் இருந்தான் நடராஜன்.காலில் போட்டு இருந்த ஷ¥வை ஓரமாக கழட்டி வைத்து விட்டு நடராஜன் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டான் நடராஜன்.கொஞ்ச நேரத்திற் கெல்லாம் சரோஜாவும் வந்து தன் கணவன் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டாள்.சோபாவில் இருந்து எழுந்து சரோஜாவுக்கும் வணக்கம் சொன்னான் நடராஜன்.சரோஜாவும் பதிலுக்கு வணக்கம் சொன்னாள்.பிறகு நடராஜன் உட்கார்ந்துக் கொண்டான்.கமலா அவள் ரூமிலேயே மறைவாக உட்கார்ந்துக் கொண்டு கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தாள்.எல்லாம் நல்ல படி போக வேண்டுமே என்று நினைத்து அவள் மனம் ‘திக்’ ‘திக்’கென்று அடித்துக் கொண்டு இருந்தது.

முதலில் சிவலிங்கம் தான் பேசினார்.”கமலா எங்களுக்கு எல்லா விஷயத்தையும் சொன்னா.நாங்க தான் உங்களே நேரே பாத்து பேசணும்ன்னு சொன்னோம்…..” அவர் சொல்லிக்¢ கிட்டு இருக்கும் போதே நடராஜன் ”சார்,நீங்க வயசிலே பெரியவங்க.என்னை நீங்க ‘வாங்க’ ‘போங்க’ன்னு எல்லாம் சொல்ல வேணாங்க.சாதாரணமா ‘வா’ ‘போ’ ன்னே ஒருமையில் பேசுங்க” என்றான் நடராஜன் சட்டென்று.“சரி தம்பி, நான் அப்படியே பேசறேன்” என்று சொல்லி விட்டு “நீ எத்தனை வருஷமா ‘அஷோக் லேலண்ட்’ கம்பனியில் வேலை பண்ணிகிட்டு இருக்கே”” என்று ஆரம்பித்தார் சிவலிங்கம். “நான் திருச்சியில் ‘ஆட்டோமொபைல் இஞ்சனியா¢ங்க்’ மூனு வருஷ ‘டிப்ளமா’ முடிச்சி விட்டு அதன் பிறகு ‘அசோக் லேலண்ட்’ கம்பனியில் ஒரு சூப்பர்வைசரா வேலைக்கு சேர்ந்தேங்க.அடுத்த மாசம் வந்தா எனக்கு சர்வீஸ் ஆறு வருஷம் ஆகப் போவுதுங்க” என்றான் நடராஜன் அடக்கமாக. “எந்த ஊர் தம்பி உனக்கு ” என்று கேட்டாள் சரோஜா.“திருச்சி பக்கத்திலே அரியலூர்ங்க” என்றான் நடராஜன்.“உங்க அப்பா உடம்பு எப்படி இருக்கு தம்பி” என்று விசாரித்தார் சிவலிங்கம்.“பரவாயில்லீங்க.அவருக்கு அதிக நடை இல்லீங்க.வீட்டிலே கொஞ்சம் இங்கேயும் அங்கேயும் நடமாடிக்கிட்டு இருக்காரு” என்றான் நடராஜன்.

கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தார் அவர்.உள்ளே போய் காப்பி பலகாரம் கொண்டு வந்து வைத்தாள் சரோஜா.“இப்போதைக்கு காப்பி மட்டும் போதுங்க.உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் மனம் ஒத்து போய் எல்லா நல்ல விதமா நாம பேசி நல்ல சுபமான முடிவு பண்ணின பிறகு நான் பலகாரம் எல்லாம் எடுத்துக்கறேன்” என்று சொல்லி வெறும் காப்பி மட்டும் குடித்தான் நடராஜன். அவன் காப்பி குடித்தப் பிறகு சிவலிங்கமும் சரோஜாவும் நடராஜனிடம் இவர்கள் வீட்டு எல்லா விவரமும் சொல்லி நடராஜனின் குடும்பத்தை பற்றி எல்லாம் கேட்டு தொ¢ந்துக் கொண்டார்கள்.

“தம்பி உன் கிட்ட பேசின பிறகு உன்னை எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் உன்னே பிடிச்சுஇருக்குது. நீ,உன் அப்பா அம்மாகிட்டே சொல்லி ஒரு நல்ல நாள் பார்த்து எங்க கமலாவை ‘பெண்’ பார்க்க வர சொல்லு. அவங்களும் எங்க கமலாவைப் பார்க்கட்டும். நாங்க பேசறோம். அப்புறம்மா கமலாவை பிடிச்சு இருந்தா,கடவுள் ‘ப்ராப்தம்’ இருந்தா, உங்க ரெண்டு பேர் கல்யாணமும் நடக்கட்டும் தம்பி” என்றார் சிவலிங்கம் வேதாந்தமாக.அப்போது நடராஜன் “போன வாரம் தான் என் தங்கைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்குங்க,நான் இந்த சனிக்கிழமை கிளம்பி ஊருக்குப் போகப் போறேன்.என் தங்கை குழந்தைக்கு பேர் வைக்கும் விழா முடிந்ததும் அவர்கள் சௌகரியம் கேட்டு நான் உங்களுக்கு சொல்றேணுங்க” என்றான் நடராஜன்.“சரிங்க, நான் அப்போ கிளம்புட்டுங்களா” என்று சொல்லி எழுந்தான் நடராஜன்.எழுந்து போய் தன் ஷ¥வை போட்டுக் கொண்டான்.“ஜாக்கிறதையா போய் வா தம்பி” என்று சொல்லி நடராஜனை வாசல் வரை கூடப் போய் வழி அனுப்பி வைத்தார்கள் சிவலிங்கமும் சரோஜாவும்.

சோபாவில் வந்து உட்கார்ந்தார் சிவலிங்கம்.“பையன் நல்ல அடக்கமா,சாதரணமாத் தான் இருக்கான் சரோஜா. பந்தா ஒன்னுமில்லே.அவன் அப்பா அம்மா வந்து நம்ம கமலாவைப் ‘பெண்’ பார்த்து அவங்க ளுக்கு பிடிக்கணும்.அப்புறம் என்ன சீர் எல்லாம் கேக்கறாங்கன்னு பார்க்கணும். அவங்க கேக்கறதை நம்மால் செய்ய முடியணும்.இன்னும் இதெல்லாம் நல்ல படியா முடியணும்” என்று தன் ‘ப்ராப்லத்தை’ச் சொன்னார் சிவலிங்கம். “ஆமாங்க நம்ம சக்திக்கு மேலே கேட்டா நமக்கு கஷடமா இருக்கும்.நம்ம உமாவுக்கு நாம மாசா மாசம் பணம் தர வேண்டி வேறு இருக்கு.சரவணன் ‘கேஸ்’ இன்னும் நடந்துக் கிட்டு இருக்கிறது.அது எப்போ முடியுமோ.இன்னும் அதெல்லாம் வேறே நாம யோஜனை செய்யணுங்களே” என்றாள் சரோஜா கவலையுடன்.கல்யாணம் நிச்சியமானா அந்த ஓனா¢டம் இருந்து “என் பொண்ணு கல்யாணம் நிச்சியமாய் இருக்குங்க.எனக்கு என் மீதி பணம் உடனே வேணும்ன்னு கேட்க வேணும் சரோஜா’ என்று சொன்னார் சிவலிங்கம்.உடனே “ ஆமாங்க அவர் கிட்டே கண்டிப்பா கேட்டு மீதி பணத்தெ நீங்க வாங்கணுங்க” என்றாள் சரோஜா.

கமலா வீட்டை விட்டு வெளியே வந்த நடராஜன் தன் ஹாஸ்டலுக்கு வரும் வரை கமலா அப்பா அம்மா பேசினதை எல்லாம் எண்ணிக் கொண்டு வந்தான்.இவ்வளவு நல்ல படியாய் முடிந்து அவர்கள் இருவருக்கும் நாம் பிடித்த மாதிரி பதில் சொல்லி அவர்கள் மனதை தான் கவர்ந்ததற்கு தன் முதுகில் அவனே தட்டிக் கொண்டு ‘சபாஷ்’ என்று சொல்லிக் கொண்டான்.கமலாவை அடுத்த தரம் நாம் சந்திக்கும் போது’ கமலா நான் ‘பர்சனல் இன்டர்வியூ’வில் ‘பாஸ்’ பண்ணீ விட்டேனா என்று கேட்க வேண்டும்’ என்று துடிப்போடு இருந்து வந்தான் நடராஜன்.இரவு உணவை சாப்பிட்டு விட்டு நிம்மதயாய் தூங்கப் போனான் அவன்.

அடுத்த நாளே கமலாவை ஹோட்டலில் சந்தித்த நடராஜன், கமலாவைப் பார்த்ததும் ஆவலாக ”கமலா நான் ‘பர்ஸனல் இன்டர்வி வில் ‘பாஸ்’ ஆகி விட்டேனா எனக்கு நீ என்ன மார்க்கு போட்டே. என்னை உன் அம்மா அப்பாவுக்கு பிடிச்சி இருந்ததா.அவங்க என்ன சொன்னாங்க கமலா” ஆவலாய் கேட்டான் நடராஜன்.“ஆமாம் நீங்க ரொம்ப பயந்த,அடக்கமான,ஒரு நல்ல பிள்ளை போல் வேஷம் போட்டீங்களே.‘இந்த பூனையும் பால் குடிக்குமான்னு’ தோணும் படி நடந்து கிட்டீங்களே. ரொம்ப பவ்யமா பதில் சொன்னீங்களே நான் எல்லாத்தேயும் ரூமில் இருந்து கவனிச்சு வந்தேங்க. ஆனா ஒன்னுங்க. உங்க ‘டிரஸ்’ ரொம்ப பிரமாதமாய் இருந்திச்சுங்க பாக்க ரொம்ப ஜோரா இருந்தீங்க. உங்க மார்க்கு நூத்துக்கு தொன்னூறுங்க” என்று அவன் கையைப் பிடித்து குலுக்கினாள் கமலா. “அப்படியா மீதி பத்து மார்க்கு எங்கே போச்சு கமலா.நான் என்ன செஞ்சி இருந்தா எனக்கு அந்த மீதி பத்து மார்க்கும் நீ போட்டு இருப்பே கமலா.இருந்தாலும் எனக்கு இவ்வளவு மார்க் போட்டதுக்கு உனக்கு நான் ரொம்ப தாங்க்ஸ் சொல்லணும் கமலா” என்று சொல்லி கமலாவின் கைகளைப் பிடித்துக் குலுக்கினான் நடராஜன்.“நம்ப கல்யாணம் நிச்சியம் ஆகட்டுங்க.உங்களுக்கு நான் அந்த மீதி பத்து மார்க்கும் போடறேங்க” என்றாள் கமலா.“சரி கமலா நிச்சியம் ஆனதும் நீ எனக்கு அந்த பத்து மார்க்கு போடு.அது சரி, என்னை உன் அப்பா அம்மாவுக்கு பிடிச்சி இருந்ததான்னு நான் கேட்டேனே அதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லயே” என்றான் விடாமல் நடராஜன்.“அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருந்ததுங்க.இது மாதிரி உங்க அப்பா அம்மாவுக்கு என்னைப் பிடிக்க ணுங்க.அப்புறமா பெரியவங்க ரெண்டு பேரும் பேசி நம்ம கல்யாணம் நிச்சியமாகணும்.இது ரெண்டும் முடிஞ்சா மீதி பத்து மார்க் நான் நிச்சியம் உங்களுக்கு போடுவேன். அது வரை அந்த பத்து மார்க்கு எங்கிட்டே தாங்க இருக்கும் அது வரை நாம் இருவரும் இப்படி ஜாலியாக டயம் ‘ஸ்பெண்ட்’ பண்ணலாங்க.நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்டு நடராஜன் முகத்தைக் கவனித்தாள் கமலா. “நிச்சியமா கமலா,நாம் ‘டயத்தை’ இப்படியே ஜாலியாக கழிச்சு வரலாம்.நீ கலைப் படாதே” என்று சொல்லி நடராஜன் மசால் தோசையை ஒரு கை பார்த்துக் கொண்டு இருந்தான் நடராஜன். இருவரும் டிபன் சாப்பிட்டு விட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்ஹார்கள்.“கமலா, நீ ஒரு ஆட்டோ பிடிச்சுக் கிட்டு உன் வீட்டுக்குப் போ.என் நண்பன் ஒருவன் உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடலில் படுத்துக் கொண்டு இருக்கான் இன்னை க்கு நான் அவனை பார்த்து விட்டு வரணும்.உனக்கு லேட்டாகி விடும்.’டயத்திற்கு’ நீ வீட்டுக்குப் போய் சேர்ந்திடு என்ன” என்று சொல்லி கமலாவை ஒரு ஆட்டோ பிடித்து ஏற்றி அனுப்பி விட்டு நடராஜன் தன் ‘பைக்கை’ ‘ஸ்டார்ட்’ பண்ணிக் கொண்டு கிளம்பிப் போனான்.கமலாவிம் ஒரு ஆட்டோ ஏறி தன் வீட்டை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள்.

அடுத்த நாள் டியூட்டி முடித்து விட்டு பகல் உணவை சாப்பிட்டு விட்டு சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு நடராஜன் பனகல் பார்க் போய் தன் அப்பாவுக்கு ஒரு பட்டு வேஷ்டி, நல்ல ஷர்ட், தன் அம்மாவுக்கு பட்டு புடவை, மாச்சிங்க் ப்ளவுஸ், மச்சானுக்கு பட்டு வேஷ்டி, ஷர்ட், தங்கைக்கு பட்டு புடவை மாச்சிங்க் ‘ப்ளவுஸ்’, குழந்தைக்கு நிறைய ‘டிரஸ்’,இரண்டு பவுனில் ஒரு டாலர் வைத்த தங்க சங்கிலி எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தான் நடராஜன். அடுத்த நாள் நடராஜன் தன் ‘பாக்டரியில்’ தனக்கு லீவு வாங்கிக் நடராஜன் ஊருக்கு கிளம்பினான்.

ஊருக்கு வந்த நடராஜன் தன் அம்மா, அப்பா, த்ங்கை மச்சான் எல்லாரையும் பார்த்து தான் வாங்கிக் கொண்டு வந்த துணிமணிகளை எல்லாம் கொடுத்தான்.த்ங்கையின் குழந்தை கழுத்திலெ அவன் வாங்கிக் கொண்டு வந்த த்ங்க செயினைப் போட்டு அழகு பார்த்தான்.தங்கையும் மச்சானும் நடராஜனுக்கு த்ங்கள் நன்றியை சொன்னார்கள்.

எல்லா உறவுக்கார்களுடன் தங்கையின் குழந்தைக்கு பேர் சூட்டும் விழாவை சிறப்பாக கொண்டாடினான் நடராஜன்.ஈல்லா உறவுக்காங்க கிளம்பிப் போனவுடன் மெல்ல நடராஜன் தன் காதலைப் பத்தியும் கமலாவையும் பத்தி விவரமா சொல்லி அவன் கமலாவை கல்யாணம் கட்டிக் கொள்ள ரொம்ப ஆசை படுவதாயும் சொன்னான்.

அம்மாவும்,அப்பாவும் பெண் கமலாவை பத்தியும்,அவங்க குடும்பத்தையும் பற்றி விவரமாக கேட்டார்கள். நடராஜன் அவர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் பத்தில் சொன்னான்.இருவர்களும் ந்டராஜனைப் பார்த்து “ நடராஜா,அந்த பொண்ணு நம்ப குடும்பத்துக்கு ஏத்தவளா இருப்பாளா” என்று கவலையோடு கேட்டார்கள்.உடனெ நடராஜன் “அம்மா,அப்பா,நான் அவ கூட நாலு மாசமா நல்லா பழகி வந்த பிறகு அவந வீட்டுக்குப் போய் கமலா அப்பாவைப் போய் பார்த்தேன்.அந்தப் பொண்ணும்,அவங்க குடும்பமும்,நம்ப குடும்பத்துக்கு ரொம்ப ஏத்தவங்களா இருப்பாங்க.என்னை நம்புங்க” என்று அவர்களுக்கு உறுதி அளித்தான்.

இருவரும் யோஜனைப் பண்ணினார்கள். பிறகு “சரிப்பா,நீ ஆசைப் பட்டு,,உனக்கு அவளைப் பிடிச்சு இருக்குதுன்னு சொல்றே.அவங்க குடும்பம நம்ப குடும்பத்துக்கும் ஏத்தங்களா இருப்பாங்கன்னு வேறே சொல்றே. நாம் மேலே ஆக வேண்டியதே கவனிக்கலாம்” என்று சொன்னார் பரமசிவம்.”நம்ம நடராஜன் அவன் போ¢லே நிறைய நம்பிக்கை இருக்குங்க.நாம போய் அவன் சொல்ற பெண்ணை ‘பெண்’ பாத்து அவங்க குடும்பத் தோடு பேசிப் பாப்போம்.எல்லாம் நல்லா இருந்தா நாம் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் தரலாமே” என்றாள் பார்வதி.

“உங்களே நான் மறுபடியும் வந்து தான் அழைச்சுட்டுப் போகணும்.உங்களால் தனியா சென்னைக்கு வர முடியாது.நான் இன்னொரு தடவை லீவு போட்டு விட்டுத் தன் வரணும் அப்பா. அதனால்லே உங்களுக்கு சௌகரியப் பட்டா,நீங்க சரின்னு சொல்றதாலே,நீங்க ரெண்டு பேரும் என்னோடு சென்னை வந்து அவங்களை நோ¢லே பாத்து பேச முடியுமான்னு யோஜனை பண்ணிச் சொல்லுங்க.உங்களால் முடியும், அசௌகரியம் ஒன்னும் இல்லீன்னா என்னோடு வந்து அந்த பொண் ணைப் பாருங்க இல்லேன்னா நான் இன்னொரு தடவை வந்து அழைச்சுகிட்டுப் போறேன்”. என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்திற்கெல்லாம் “இப்போ உங்களால் முடியுமா” என்று கேட்டான் நடராஜன்.”“சரி,நான் என் தம்பி சம்சாரம் சரசா கிட்டே நம்ப பவானியை ஒரு நாலு நாள் கவனிச்சு க்கிட சொல்லி விட்டு,என் பெரிய அண்ணனையும்,அவன் சம்சாரத்தையும் நம்மோடு வர முடியுமா ன்னு கேட்டு கிட்டு வறேன். அவங்களும் வந்தா நமக்கு சௌகரியமா இருக்கும்ங்க.நீங்க என்ன சொல்றீங்க” என்று கணவனைக் கேட்டாள் பார்வதி.”ஆமாம் பார்வதி,அவங்களும் வரட்டும்.இந்த வீட்டுக்கு பெரியவங்க அவங்க. அவங்களும் வந்தா நல்லது தான்..நடராஜன் கல்யாணம் இல்லையா.எல்லோரும் கலந்து செய்ய வேண்டிய சமாசாரம் இது” என்றார் பரசிவம். ”நான் ஒரு பெரிய கார் ‘இன்னோவா’ ஒன்னை ஏற்பாடு பண்ணிடறேன்.நாம எல்லாரும் அந்த காரில் சௌகரியமா போய் வரலாம்” என்று சொன்னான் நடராஜன்.அப்பாவும் அம்மாவும் ஒத்துக் கொள்ளவே நடராஜன் ஒரு ‘இன்னோவா’ வண்டியை ஏற்பாடு பண்ணினான்.

நடராஜன் உடனே கமலாவைக் கூப்பிட்டு “கமலா,நான் என் அம்மா அப்பா கிட்டே நடந்த எல்லா விஷயங் களையும் ஒன்னு விடாம சொல்லிட்டேன்.அவங்க ‘சரி நாம சென்னைக்குப் போய் ‘பெண்ணை’ப் பார்த்து விட்டு,உங்க அப்பா அம்மாவையும் பாத்து பேசலாம்ன்னு சொல்லிட்டாங்க. அதனால் நான்,என் அப்பா,அம்மா, பெரிய மாமா,பெரிய மாமி எல்லோரும் அரியலூரில் இருந்து வியாழக்கிழமை காத்தாலே கிளம்பி சென்னைக்கு வந்து வியாககிழமை ‘நைட் ரெஸ்ட் எடுத்துக் கிட்டு வெள்ளிக் கிழமை சுமார் நாலு மணிக்கு உங்க வீட்டுக்கு பெண் பார்க்க வரோம்” என்று போன் பண்ணி சொன்னான்.வியாழக் கிழமை காலையில் நடராஜன்,அவன்,அம்மா,பெரிய மாமா,பெரிய மாமி எல்லோரும் நாஷ்டா சாப்பிட்டு விட்டு ‘இன்னோவா’ காரில் ஏறி சென்னைக்குப் புறப்பட்டார்கள்.வழி அனுப்ப வந்த மற்ற உறவினர்கள் எல்லோரும் ”கல்யாணம் முடிவு பண்ணிட்டோம் என்கிற செய்தியோடு திரும்பி வாங்க” என்று நடராஜன் அம்மா,அப்பா கிட்டேசொல்லி அவங்களை வழி சந்தோஷமாக அனுப்பி வைத்தார்கள்.சென்னை வந்து சேர்ந்ததும் நடராஜன் அவன் ஹாஸ்டலுக்குப் பக்கத்திலே இருக்கிற ஒரு ஹோட்ட்லில் எல்லோருக்கும் ரூம் போட்டு தங்க வைத்தான்.எல்லோரும் இரவு உணவு சாப்பிட்டு வந்து படுத்துக் கொண்டார்கள்.

வெள்ளிக் கிழமை எல்லோரும் எழுந்து நன்றாக டிரஸ் பண்ணிக் கொண்டு சரியாக மூனரை மணிக்கு ‘இன்னோவா காரில் கே.கே.நகருக்கு கிளம்பினார்கள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *