குழந்தை – ஒரு பக்க கதை

 

பிரேமாவுக்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியைப் பணிக்காக நேர்முகத் தேர்வு கடிதம் வந்திருந்தது.

உற்சாகமாகக் கிளம்பினாள். வழியில் –

”ஏ. பிரேமா…”

யசோதா அத்தை. பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

ஏண்டி பிரேமா, உன் கல்யாணம் நடந்து நாலு வருஷம் ஆச்சே? குழந்தைங்க…?

இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு இருக்கோம் அத்தை”

”ஏன்டி?”

”என் கணவரோட சம்பளம் குடும்பச் செலவுக்குப் போதாது. அதான் எனக்கும் ஒரு வேலை கிடைச்ச பிறகு குழந்தை பெத்துகலாம்னு..”

”கடவுள் புண்ணியத்திலே சீக்கிரம் உனக்கு வேலை கிடைச்சுடும்டி..”

நேர்முகத் தேர்வு முடிந்து பிரேமா திரும்பும்போது வழியில் மறுபடியும் அத்தையைச் சந்தித்தாள்.

“வேலை கிடைச்சிடிச்சி அத்தை…”

“சந்தோஷம்டி, இனிமேலாவது நீ ஒரு குழந்தைக்குத் தாயாகலாம்”

”இந்த ஸ்கூல்ல பிரசவத்துக்கு லீவு தரமாட்டாங்காம். இன்னும் மூணு வருஷத்துக்கு கர்ப்பம் ஆகக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டுதான் வேலை கொடுத்திருக்காங்க…” என்றாள் பிரேமா விரக்தியுடன்!

- சந்திரா தனபால் (ஆகஸ்ட் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
சில மணி நேரத்திற்கு முன்பு, என்றைக்கும் இல்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த செல்வமலர், இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடுவீதிக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள். தெரு விளக்குகள் கூட எரியாத அந்த நடு ...
மேலும் கதையை படிக்க...
சாலையின் ஓரத்தில் மயக்கமாகி விழுந்த சரண்யாவை பலரும் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தார்கள். அவளோடு துணைக்கு வந்த அவளது தோழி கயல்விழிக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டமானாள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளமதியன் சட்டென்று வண்டியை நிறுத்தி, ஒரு ...
மேலும் கதையை படிக்க...
அம்மா இப்போதுதான் சரளாவைப் பார்க்கப் போகிறாள். வருந்தி வருந்திக் கூப்பிட்டபோதும், தான் வரமுடியாத காரணத்தை நியாயப்படுத்திக் கடைசியில் நிஜமாகவே தனது கல்யாணத்துக்கு அம்மா வராததில், சங்கருக்கு நிரம்பவே வருத்தம். நன்றாகப் படித்துப் பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியை ஏற்றுக்கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ...
மேலும் கதையை படிக்க...
கடந்துப்போன பல வருடங்களாக லட்சுமியை நான் மறந்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். நானும் கூட மறந்திருப்பதாக எண்ணிக்கொண்டேன் அந்த கடிதம் வரும்வரை. பள்ளியில்லாத ஒரு சனிக்கிழமை. மதியம் கடந்த நேரம். கதவிடுக்கின் சிறுவெயில் கீற்றை கிழித்து சர்ரென்று வந்து விழுந்தது அந்த ...
மேலும் கதையை படிக்க...
‘சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்…சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்’ தெருவில் விளையாடிக் கொண்டிருந்த என் மகள் உற்சாகமாய் ஓடிவந்து என் அப்பாவிடம் சொல்லிவிட்டு மறுபடியும் தெருவை நோக்கிச் சென்றாள், நீண்ட நாள் எண்ணை விடாத வீட்டின் காம்பவுண்ட் கேட் ’கிரீச்’ என்று பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட ...
மேலும் கதையை படிக்க...
மரணங்கள் முடிவல்ல
மனைவி – ஒரு பக்க கதை
தழும்புகள்
பெரிய மீசை
தொலைந்த உறவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)