குற்றம் – ஒரு பக்க கதை

 

“எதிர்வீட்டில் குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப் போக ஆட்டோ ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அதற்கு மாதம் ரூ.1000 தருகிறார்களாம்’ என்றாள் சோனியா.

“சரி, தந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன’ என்றான் பிரபு.

“அதுமட்டுமில்லை பாத்திரம் துலக்க, வீடு கூட்ட, துணிமணி துவைக்க சமையல் செய்ய சமையல்காரி என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி வேலைக்காரிகள். மாதம் ரூ.5000-க்கு மேல் தருகிறார்கள்.’

“என்ன, அந்த வீட்டிலிருப்பவர்கள் வேலையில்லாமல் ஜாலியாக இருக்கிறார்கள். அதைச் சொல்ல இவ்வளவு பீடிகையா?’

“இல்லை, இங்கே இந்த வீட்டில் பையனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது முதல் எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன்.’

ஓஹோ! அப்படியா? உனக்கு மாதம் ரூ.5000 வேணும்னு மறைமுகமாகக் கேட்கிறாயா?

“இல்லை. ஒரு பைசாகூட வேண்டாம். “அயர்ன் செய்தது சரியில்லை. டிபன் சரியில்லை. பாத்ரூம் சுத்தமாக இல்லை’ என நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் குற்றம் சொல்லி என் மனதை நிரப்பி வைத்திருக்கிறீர்கள். அது போதும்!’ கண்கலங்க உள்ளே போனாள் சோனியா.

“ச்சே எவ்வளவு கேவலமாக நடந்து வருகிறேன்.’ முதன் முறையாக வருந்தினான் பிரபு.

- கஞ்சநாயக்கன்பட்டி மணியன் 

தொடர்புடைய சிறுகதைகள்
“பாஸ்கர் நான் ஊர் பக்கம் போயிருந்தேன் உங்க அம்மாவால முன்ன மாதிரி வேலை செய்ய முடியல நீதான் இங்க வசதியா இருக்கியே அழைச்சிட்டு வந்திடாலாமில்ல?" சரவணன் கேட்டதும் சுருக்கென்று வந்தது, “ நானென்ன அம்மாவை பார்த்துக்க மாட்டேன்னா சொன்னேன்.. அவங்க வீம்பா கிராமத்த ...
மேலும் கதையை படிக்க...
கடமை ஒன்றே!
தூக்கத்தில் கண் விழித்த பரத், அருகில் படுக்கை காலியாக இருக்க, மங்கிய இரவு விளக்கொளியில், நித்யா, ஜன்னல் அருகில் நிற்பது தெரிய, எழுந்து அவளருகில் வந்தான். ""நித்யா... தூங்கலையா, என்ன இப்படி நடுராத்திரியில் எழுந்து நின்னுட்டு இருக்கே.'' ""மனசு சரியில்லைங்க. அம்மா, அப்பா ஞாபகமா ...
மேலும் கதையை படிக்க...
அவரு பேரு கோட்டசாமியோ இல்லை கோபால்சாமியோ... அது யாருக்குமே தெரியாது. எல்லாருக்கும் அவரை கோட்டாமியாத்தான் தெரியும். அவருக்கு எப்படியும் ஐம்பது வயசுக்கு மேலதான் இருக்கும். இந்த ஊருக்கு வந்து நாலஞ்சு வருசமாச்சு. வரும்போது ஒரு மஞ்சப்பை மூட்டையோடும் அழுக்கு சட்டையுடனும்தான் வந்தார். ...
மேலும் கதையை படிக்க...
இரவானால் போதும், அப்பா! அப்பா! என என்னை ஏலம் போட ஆரம்பித்து விடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப் பிறகு வழக்கமாக இந்த ஏலம் தொடங்கிவிடும். வேறெதற்கு, எல்லாம் கதைகேட்கத்தான். படித்தது,கேட்டது,பார்த்தது என எல்லாம் சொல்லியாகிவிட்டது. கஜானா காலியென்றாலும் இலவசத் திட்டங்களை ...
மேலும் கதையை படிக்க...
காலையில் எழுந்திருக்கும்போதே வயிற்றைச் சுருட்டிப் பிடித்து இழுத்தது, அன்னம்மாக் கிழவிக்கு. குடிசையின் மூலையில் இருந்த அடுக்குப் பானைகளில் கைவிட்டுத் துழாவினாள். கஞ்சி காய்ச்சலாம் என்றால் ஒரு பொட்டுத் தானியம் கூடச் சிக்கவில்லை. முந்தின நாள் இரவு, பச்சைத் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்தது ...
மேலும் கதையை படிக்க...
காலம் மாறும்…!
கடமை ஒன்றே!
கோட்டாமி
தாத்தா
கிழவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)