குற்றம் – ஒரு பக்க கதை

 

ஸ்கூலிலிருந்து வந்த தன் மகன் வாசுவின் டிபன் பாக்ஸைத் திறந்து பார்த்தாள் ரோகிணி. பாதிச் சாப்பாடு அப்படியே இருந்தது.

“என்னதான் அதட்டி மிரட்டி அனுப்பினாலும் இவன் ஏன் ஒழுங்காகச் சாப்பிடாமல் திருப்பிக் கொண்டு வந்து விடுகிறான்?’

ஒருபுறம் கோபம் வந்தாலும் தனது இயலாமையை நினைத்து வருத்தம் வந்தது.

காலிங்பெல் அடிக்க… கதவைத் திறந்தாள். வாசலில் எதிர்வீட்டு அனு.

“பாரு அனு.. சாப்பாட்டை வாசு அப்படியே திருப்பிக் கொண்டு வந்திருக்கிறான். “சாப்பாட்டை மிச்சம் வெச்சா அடிப்பேன்’னு அதட்டித்தான் அனுப்புறேன். அப்படியும் மிச்சம் வெச்சுடறான்… உன் பிள்ளையும் இப்படித்தானா?’ சலிப்பாய்க் கேட்டாள் ரோகிணி.

“இல்லையே! நான் லஞ்ச் பாக்ஸைக் கொடுத்து விடும்போதே… “இன்னிக்கு செம டேஸ்ட்டா செஞ்சிருக்கிறேன். லஞ்ச் போதலைன்னு சொல்லப் போறே பாரு’ன்னு சும்மா சொல்லி அனுப்புவேன். அவனும் முழுசா சாப்பிட்டுட்டு வந்துடறான்.’
அனு சொல்ல.

“சாப்பாட்டை மிச்சம் வெச்சா அடிப்பேன்னு நானே எதிர்மறையா பேசி அனுப்பினால் எப்படி சாப்பிடுவான்? தப்பை என் மீது வைத்துக் கொண்டு வாசுவைக் குற்றம் சொல்வதா?’

உண்மை புரிந்தவளாய் புருவத்தைச் சுருக்கினாள் ரோகிணி.

- கீர்த்தி (ஏப்ரல் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் - எந்த நொடியிலும் ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் குடிசையில் உள்ளே நுழைந்தபோது விளக்கின் ஒளி எங்கும் நிறைந்திருந்தது. சுவற்றில் கண்ணாடி போட்ட அட்டையினுள்ளே புகைப்படமாக கோவிந்தனும் அவனது மனைவி வெண்மதியும் திருமணக்கோலத்தில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் கோவிந்தன் வெண்மதியுடன் அழகான ஒரு ஆண்குழந்தையும் புன்னகை ...
மேலும் கதையை படிக்க...
பாளையங்கால் ஓரத்திலே, வயற்பரப்புக்கு வரம்பு கட்டியவை போன்ற பனைவிளைகளுக்கு அருகே குலமாணிக்கபுரம் எனச் சொல்லப்பட்ட குலவாணிகபுரம் இருக்கிறது. இந்தச் சிற்றூரில் யாதவர்களும் கொடிக்கால் 'வாணியர்'களுமே ஜாஸ்தி. மருந்துக்கு என்று வேளாண் குடிகளும் கிராமப் பரிவாரங்களான குடிமகன், வண்ணான் முதலிய பட்டினிப் பட்டாளங்களுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
ஆரிபா வீட்டில் அன்று காலையில் இருந்தே சலசலப்பு சந்தோசம் களை கட்டிக் கொண்டிருந்தது. ஆரிபாவின் இளைய மகன், மூத்த மகள் குடும்பத்தார்களும் அங்கு சமூகமாயிருந்தனர். இதற்குக் காரணம் ஆரிபாவின் மூத்த மகன் கபில் தனது குடும்ப சகிதமாக 12 வருசங்களுக்குப் பிறகு மலேசியாவிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
ஜான் பீட்டர் தமயோன் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற பெரிய கிணற்றிற்கு எதிர்த்தாற்போலுள்ள வீட்டில் இருப்பவன். ரயில்வே பள்ளியில் இல்லாமல் பக்கத்திலுள்ள சாமியார் ஸ்கூல் என்னும் கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில் படிப்பவன். எஸ்.எஸ். எல். சியில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்றால் எல்லோரும் ...
மேலும் கதையை படிக்க...
மரப்பாச்சி
திரௌபதை
அவதாரம்
மூனுரோத சைக்கிள் வண்டி
நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)