குறை – ஒரு பக்க கதை

 

சரிதா டாக்டர் முன் அமர்ந்திருந்தாள்.

”உங்க இரண்டு பேருடைய ரிசல்டும் வந்திருச்சும்மா..மிஸ்டர் பரிதிகிட்டேதான் குறை…ஸாரி, அவரால அப்பாவாக முடியாது!”

அதைக் கேட்டு சரிதா கொஞ்சம் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

”டாக்டர், எனக்காக நீங்க ஒரு உதவி செய்யணும்..” என்றாள் மெல்லிய குரலில்.

”சொல்லும்மா!”

”மேடம், இதை என் ஹஸ்பெண்ட்கிட்டே சொல்ல வேணாம். குற்ற உணர்ச்சியில் அவர் சங்கடப் -படுவதை என்னால தாங்கிக்க முடியாது. அதனால, என்கிட்ட குறை இருக்கற மாதிரி
அவர்கிட்டே சொல்லிடுங்க…ப்ளீஸ்! எனக்காக இந்த உதவியை நீங்க செய்யணும்!

மறுநாள்..

டாக்டரைப் பார்க்க பரிதி வந்திருந்தான். ”என்ன டாக்டர்…நான் சொன்னமாதிரியே…என் வொய்ப்ஃகிட்டே சொன்னீங்களா? அதை நம்பிட்டாளா? அவகிட்டேதான் குறைன்னு தெரிஞ்சா துடிச்சுப் போயிடுவா! சொல்லுங்க டாக்டர், நீங்க சொன்னதை நம்பிட்டாளா?

சரிதா சொன்னதை டாக்டர் சொல்ல…பரிதி நெகிழ்ந்தான்!

- எஸ்.எஸ்.பூங்கதிர் (28-12-09) 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்று அவளுக்கு முதல் இரவு! வரப்போகும் ஆயிரமாயிரம் இன்ப இரவுகளுக்கு அது ஆரம்ப இரவு! இளம் பெண்கள் சிலர் அவளுக்கு அலங்காரம் செய்துகொண்டிருந்தனர். அவர்களின் கேலிப் பேச்சில், புஷ்பாவின் நெற்றி யிலிருந்த குங்குமம் முகமெல்லாம் பரவியது போல, வெட்கத்தால் அவள் முகம் சிவந்தது. "அடி ...
மேலும் கதையை படிக்க...
“ மனோ, காயத்ரி ! பாட்டி வந்திருக்காங்க பாருங்க! " அம்மா கலா கூவினாள். பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து. மனோவிற்கு வயது ஏழு. காயத்ரி, தங்கை, வயது ஐந்து. “ஐயா ! பாட்டி, பாட்டி! காயத்ரி, பாட்டி வந்திருக்காங்களாம்!” – ...
மேலும் கதையை படிக்க...
RESCUE' என்று சிவப்பு ஸ்டிக்கரில் பெரிதாக எழுதியிருந்த அரசாங்க வாகனம் ஒன்று , பிரதான சாலையான ஷேக் ஜாயித் ரோட்டின் ஓரத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்தது. பார்த்ததும், என்னை உருட்டித் தள்ளிய எங்கள்வீட்டுப் பொடியனின் கேள்விதான் ஞாபகத்திற்கு வந்தது. எவ்வளவோ தடவை ...
மேலும் கதையை படிக்க...
துணை
''நீ கவிதை எழுதுவியா?'' - கேள்வியில் கோபம் அதிகமாக இருந்தது. பத்ரியின் கண்கள் சிவந்திருந்தன. அவனைத் தயக்கத்தோடு பார்த்தாள் புவனா. எழுதுவேன் என்று சொன்னால், அடுத்த விநாடி கன்னத்தில் அறை விழலாம். எழுதத் தெரியாது என்றாலும் அடிக்கலாம். அவனுக்குத் தேவை அடிப்பதற்கான ...
மேலும் கதையை படிக்க...
“நாட்டு நிலைமை மிகவும் மோசமாக இருந்த காலங்களில் கூட, கல்லூரி அனைத்து துறைகளிலும் ஓங்கி நிற்க அயராது பாடுபட்ட மாமனிதர், எமது கல்லூரியின் பொற்கால அதிபர் திருவாளர் சிவசுந்தரம் அவர்களை கல்லூரி பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்” ...
மேலும் கதையை படிக்க...
மணமகள் வந்தாள்!
பொய்கள்
போனாலும்… – மீண்டும் ஒரு சஃபர் கதை
துணை
பிரமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)