குடும்பம் – ஒரு பக்க கதை

 

”ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வர்றேன்…” என்றவாறே அம்மா வெளியேறியதும் வாசு கோபத்தோடு மனைவி பானுவிடம் சத்தம் போட்டான்…

காலங்காத்தால வயசனவங்களை பட்டினியாவா வெளியே அனுப்பறது…டிபன் சாப்பிட்டுப் போங்கன்னு ஒரு வார்த்தை கேட்டியா..?

வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாம ஒரு ஆம்பிளை கத்தக் கூடாது…டாக்டர் அவங்களை வெறும் வயித்தோடதான் வரச் சொல்லியிருக்கிறார்…
ஏதோ டெஸ்ட் எடுக்கணுமாம்.அதான் சாப்பிடாம போறாங்க…”

இதைக் கேட்டதும் வாசுவின் கோபம் இன்னும் வீரியம் ஏறியது.

வெளியே எட்டிப் பார்த்தான். அம்மா .தெரு முனையை எட்டி இருந்தாள்

வேகமாக பைக்கில் சென்று அம்மாவைப் பிடித்தான்.

அம்மா ஒரு நிமிஷம் நில்லு…ஓட்டல்ல இட்லி வாங்கித் தர்றேன். டாக்டரைப் பார்த்ததும் சாப்பிட்டுட்டு நிதானமா வீட்டுக்கு வா…பட்டினி கிடந்தா உனக்குத் தலை சுத்தும்!”

அம்மா சைக்கிளைப் பிடித்தபடி நிதானமாக கேட்டாள்…

”வீடல் என்ன நடக்குதுன்னு நீ கவனிக்கவே மாட்டியா? ஓட்டல் இட்லியை வாங்கித் தர்றேன்னு இப்படி ஓடி வர்றியே…அப்போ,பானு டிபன் பாக்ஸ்ல கொடுத்து அனுப்பின இந்த வீட்டு இட்லியை என்ன செய்யறது..?”

வாசு வழிந்தபடி நின்றான்…!

- ப்ரவதவர்த்தினி (நவம்பர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த அறைக்குள் ஒரு கனத்த அமைதி வெகு நேரமாய் சப்பணமிட்டு அமர்ந்திருந்தது. ஈஸிசேரில் சாய்ந்தபடி மேலே சுழலும் மின் விசிறியைப் பார்த்தவாறே அமர்ந்திருந்த நாகராஜனின் மூளைக்குள் சிந்தனைப் பூச்சிகள் தாறுமாறாய் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. தரையில் அவர் மனைவி பார்வதி சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டியபடி ...
மேலும் கதையை படிக்க...
இரண்டாவது முறையும் அவருக்கு விசா மறுத்துவிட்டார்கள். எவ்வளவு பெரிய அதிர்ச்சி! இந்தத் தடவை அவர் எவ்வளவோ கவனமாகத்தான் விண்ணப்ப பாரங்களைப் பூர்த்தி செய்தார். சுயசரிதை எழுதுவதுபோல நீண்ட பதில்களைக் கொடுத்திருந்தார். இருந்தும் இப்படி நடந்துவிட்டதே! முதன்முறை அவர் விண்ணப்பம் அனுப்பியபோது மிகவும் யோக்கியமாகத்தான் ...
மேலும் கதையை படிக்க...
"மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு..." சௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார். அந்தக் காரினுள் எல்லோரது முகத்திலும் ஒருவித இறுக்கம் வியாபித்திருந்தது. இடையிடையே எழும் கோமதியின் விசும்பல் சத்தத்தைத் தவிர, அங்கே அமைதி குடிகொண்டிருந்தது. அதை விரட்டும் முயற்சியில் ...
மேலும் கதையை படிக்க...
சுந்தரி ஷிஃப்ட் முடித்துக் கிளம்பும்போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்கியது. நவநீதன் கம்பெனி வாசலில் நின்று மழையில் நனைந்தபடி, மினி பஸ்ஸில் ஏறும் சுந்தரியைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு வாழ்வில் இரண்டு சந்தோஷங்கள் இருந்தன. ஒன்று, சுந்தரி. இன்னொன்று, நைட் ஷிஃப்ட் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சனிக்கிழமை அதிகாலை. தந்தையும், மகனும் சாலையோரம் நடந்துசென்று கொண்டிருந்தனர். சிறுவன் கேள்விகளாய் கேட்டு கொண்டே நடந்தான். "அப்பா.. ஏம்ப்பா காந்தி தாத்தா சிலைய நடுரோட்டுல வச்சிருக்காங்க" "அவரு நம்ம இந்தியாவுக்கு வெள்ளைக்காரங்களோட போராடி சுதந்திரம் வாங்கி தந்தாரில்ல...நாட்டுக்கு நல்லது செஞ்சவர். அதனால அவருக்கு ...
மேலும் கதையை படிக்க...
இன்று முதல் இவள் செல்வி!
விசா
ஐயாயிரம் மார்க் அம்மா!
மிச்சமிருக்கும் தறிகளுக்காக ஒருவன்…
சிலை – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)