கிஷோர் சிதம்பரம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 11,409 
 

சிதம்பரம் இவர் கோயம்புததூரை சேர்ந்தவர் .கல்லூரியில் இவருடன் படித்த நஜிம என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பெற்றோர்களின் எதிர்ப்பால் இருவரும் விட்டை விட்டு வெளியேறுகின்றனர் .கல்லூரியில் இவர் படிக்கும் போதே மென்பொருள் ஒன்றை உருவாக்கி தங்க பதக்கம் வென்றவர். அதனால் இவருக்கு தான் படித்த படிப்பு உறுதுணையாக இருந்தது.

தன் கல்லூரி தோழி கோகிலாவின் தந்தையின் உதவியுடன் லண்டன் செல்கின்றனர். அங்கு இவரின் மென்பொருள் அந்நாட்டு அரங்கம் அங்கீகரித்தது பல்லாயிரம் கோடிக்கு லண்டன் அரசாங்கம் ஏற்கிறது. சிதம்பரம் அங்கேயே “கைஸ் டெக்” என்ற மென்பொருள் நிறுவனத்த்தை நிறுவுகிறார். காலப்போக்கில் “கைஸ் டெக்” உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. தான் இந்தியாயாவிலும் அதும் தான் சொந்த கிராமத்தில் தான் வேலை ஆட்களின் உதவியுடன் நிறுவுகிறார். ஆனால் நிறுவிய காலத்திலிருந்து இந்திய் நிறுவனம் மட்டும் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த நேரம்.

சிதம்பரம் நசிமா தம்பதிக்கு பிறந்த மகன் கிஷோர். தந்தையை போல் படிப்பில் கெட்டிக்காரன் ஆனால் பொறுப்பீல்லாமல் தந்தையின் பணத்தையும் செல்வாக்கையும் கெடுக்கும் மகனாக இருக்கிறார். அப்படியே பொறுப்பாக ஒரு வேலையை தொடங்கினாலும் அது அரைகுறையாகவும் , தொடங்கியத்துக்கு பயன் இல்லாமல் போய்விடும் .

சிதம்பரமோ தன் மகனின் நிலையை நினைத்து கிஷோரை அழைத்து கண்டித்து இந்தியாவில் இயங்கி வரும் தனது “கைஸ் டெக்” நிறுவனத்தை கிஷோரை வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறார். ஆனால் சிதம்பரமோ விமான நிலையத்தில் கிஷோர்ரிடம் நீ என் மகன் என்று யாரிடமும் அறிமுகபடுத்தி கொள்ளகூடாது என்று எச்சரித்து அனுப்புகிறார். தந்தையின் இந்த அணுகு முறை கிஷோரை வெறுப்படைய செய்கிறது. விமானத்தில் ஏறியவுடன் தன்னுடன் பயணிக்கும் சகப்பயணியிடம் இருந்து ஆரம்பிக்கிறது கிஷோரின் சோதனை நேரம் விமானத்தில் தன்னுடன் பயணிக்கும் வெற்றிலை போட்டு தான் சட்டையை, செதபடுத்துவதிலிருத்து ,கோயம்பூத்தூர் விமான நிலையம் இறங்கியாவுடன் மற்றவர்களுக்கு என வைத்து இருந்த நேம் போர்டு மேலேயும் தனக்கான வைத்து இருந்த நேம் போர்டு கீழேயும் வைத்து இருந்தத்திலேயும், வெளியே வந்து டாக்ஸி காரர்களிடம் சிக்குவதிலிருந்தும் , சிக்கிய டாக்ஸி காரர்களிடம் இருந்து தப்பித்து ஒரு ஆட்டோகாரரிடம் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு ஊரையே சுற்றிய படி ரயில் நிலையத்தை அடைந்து பொள்ளாச்சி செல்லும் ரயிலை பிடித்து செல்கிறான் அதுவும் சுலபமாக அல்ல. அவஸ்தை படுகிறான் ஒருவழியாக பொள்ளாச்சி ரயில் நிலையத்தை அடைகிறான். மிகவும் களைப்பான நிலையை அடைந்ததும் , கண் எதிரே தென்பட்ட ஒரு சர்பத்கடை , அங்கு சென்று சர்பத் குடிக்கிறான். அப்படியே அவனிடம் சிறிய நட்பை வளர்கிறான். அதே சமயம் தன் நிறுவனத்தில் வேலை செய்யும் “புருஷோத்” என்பவர் கிஷோரை அழைத்துக்கொண்டு சிதம்பரத்தின் கல்லூரி தோழி “கோகிலாவின் வீட்டில் தங்க வைக்கிறான் . அந்த வீட்டை சுற்றி உள்ள பசுமை சூழலும் அவனை இந்தியானாக வடிவமைக்கிறது . அந்த வீட்டில் உள்ள வேலைக்காரியிலிருந்து ,துணி துவைபவனிலிருந்து அனைவருமே அவன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுக்கின்றனர் . பிறகு கிஷோர் மற்றும் புருஷோத்தும் சேர்ந்து தன் நிறுவனத்திற்கு செல்கின்றனர் . நீண்ட நேர கிராம பயணித்திற்கு பிறகு கிஷோர் தனது நிறுவனத்தை அடைகிறான் . நிறுவனம் ஒரு பசுமை நிறைந்த இடத்தில் அமைந்து இருந்தாலும் , கிஷோர்ருக்கு மறுபுறம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது ஒரு கிராமத்தில் ஒரு மென்பொருள் நிறுவனமா என்று யோசிக்கிறான் , பிறகு நிறுவனத்திற்குள் சென்றதும் எந்த ஒரு விஷயமும் அவனை திருப்தி படுத்தவில்லை ,நிறுவனத்தின் மீட்டிங் இடத்தில் ஆடுகளும், மாடுகளும் உள்ளே வந்து நின்று கொண்டு இருந்ததை கண்டு பீதி அடைகிறான் கிஷோர். இதை எல்லாத்தையும் பார்த்ததும் ,கிஷோர்ருக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்தது உடனே புருஷோத் அவனை அழைத்து செல்கிறான். பிறகு எல்லா ஆரவாரத்தையும் கலைத்து விட்டு கிஷோர் யோசிக்க ஆரம்பிக்கிறான். தனது நிறுவனம் நஷ்டம் அடைகிறது என்பதை கண்டறிய புருஷோட்தை ஆலோஸிக்க ஆரம்பிக்கிறான்.

உரை சுற்றிப்பார்க்க கிஷோர்ரும் புருஷோத்தும் வெளியே செல்லும் போது நிறுவனத்தில் தனக்கு கீழ் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறது என்று கிஷோர் புருஷோத்திடம் கூர ,புருஷோத் தாய் தந்தை இல்லாத பெண்ணை பற்றியும் அவர் திறமை பற்றியும் சொல்ல, கிஷொருக்கு அந்த பெண்ணை பார்க்க ஆர்வம் அதிகரிக்கிறது. அப்போது கிஷோர் கடைவீதியிலேயே அந்த பெண்ணை பார்க்கிறான் , ஆனால் பார்க்கும் போதே நீண்ட நாள் பழகிய ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அதுவரை கிஷொருக்கு தெரியாது , புருஷோத் கூறிய பெண் இவள்தான் என்று.

உடனே மறுநாள் நேற்முக தெருவுக்கு புருஷோத் அழைத்து வந்த பெண்ணை பார்த்து கிஷொருக்கு அதிர்ச்சி , தான் நேற்று பார்த்த அதே பெண் என்று தெரிந்து கொண்டு சிலிர்கிறான் அப்போது புருஷோத்திடம் விசாரித்த போது தான் தெரிந்தது ,நேற்று புருஷோத் சொன்ன பெண்ணே இவள்தான் என்றும் இவள் பேர் சந்தியா பானு என்று தெரிந்து கொண்டு நேற்முக தேர்வே வைக்காமல், வேலைக்கு அமர்த்துக்கிறான். தினமும் நிறுவனத்தில் நடப்பதை “கோகிலா”விடம் சொல்லிவிடுவது கிஷோரின் வழக்கம் .அப்போது நிறுவனத்தில் சந்தியாவின் வருகை பற்றி கோகிலா யோசிக்கிறாள். மறுநாள் அந்த பெண்ணை பார்க்க கோகிலா நிறுவனம் வந்து பார்க்கும் போது அது கிஷோரின் அம்மா வழி உறவுக்கற பெண் என்று தெரிய வருகிறது. அதை கிஷோர்ரிடம் எடுத்து சொல்கிறாள்.

பின்பு எதனால் சிதம்பரம் இந்தியாவை விட்டு வெளியேறினார் என்று கிஷோர்ரிடம் சொல்கிறாள். கிஷோர் எல்லாவற்றையும் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறான். மறுநாள் கோகிலாவிடம் உதவியுடன் தன் அப்பா வழி அம்மா வழி உறவுக்காரர்களின் தற்போதைய நிலையை அறிகிறான். இறுதியாக எல்லாவற்றையும் அறிந்த பிறகு புருஷோத் மற்றும் கோகிலாவின் உதவியுடன் தன் அப்பா வழி அம்மா வழி உறவுக்காரர்களின் மகன்கள் ,மகள்கள் அனைவரும் கணினி மற்றும் மென்பொருள் சார்ந்த படிப்புகள் முடித்து இருந்தனர் , இத்தனை கருவாகக்கொண்டு அனைவரையும் வேலைக்கு அமர்த்துக்கிறான். வேலைக்கு அமர்த்தியவுடன் உறவுக்காரர்களின் மகன்கள் ,மகள்களுக்குள்ளேயே பொறாமையும் வேற்றுமையும் ஏற்பட முதலில் ஆட்டத்தை அவர்களிடம் இருந்து ஆரம்பிக்கிறான் கிஷோர். பிறகு நேரம் கிடைக்கும் போது எல்லாம் உறவுக்கர பசங்களிடம் கழிக்கிறான். ஆனால் கிஷோரை ஒரு நண்பர் ஆகவும் இந்த நிறுவனத்தின் ஜாயின் எம் .டி ஆகவும் தான் தெரிகிறது. பிறகு தன் ஊரை பற்றியும் , பழக்க வழக்கங்கள் பற்றியும் சந்தியாவிடம் தெரிந்து கொள்கின்றான். சந்தியவும் ஆர்வமாக எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறாள் . அப்போது கிஷோர் சந்தியா மற்றும் புருஷோத் மூவரும் கோயம்புத்தூர் செல்கின்றனர். அப்போது தன் தந்தையை போல் ஒரு பெரிய மென்பொருள் அமைப்பாளர் தான் நிறுவனதை பற்றியும் நாம் இந்தியாவில் மென்பொருளின் மூலம் லாபம் இட்ட முடியாது என்று ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். அதை பார்த்து முடித்த பிறகு மூவரும் எதையோ யோசித்தவாறு பொள்ளாச்சி சென்று விடுகின்றனர். மறுநாள் தன் உறவுக்கர பசங்களிடம் அந்த தொலைக்காட்சி பேட்டி பற்றி கேட்கும் போது அனைவருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி ஆகிறது . அத்தனை சவாலாக எடுத்துக்கொண்டு ,தந்தை சிதம்பரத்தின் கல்லூரி நாட்களில் பாதியிலேயே விட்டு வைத்த ஒரு பிக்கெஸ்ட் மென்பொருள் அமைப்பை மீண்டும் உருவாக்க கிஷோர் திட்டம் திட்டுகிறான் .கிஷோர் மற்றும் புருஷோத்தும் அந்த நிறுவனத்தை வேறு வடிவில் இயக்க திட்டமிடுக்கின்றனர் .அனைவருக்கும் சுதந்திரமாக வேலை செய்யும் அதிகாரத்தை கொடுக்கிறான்.

இத்தனை பற்றி தான் குழுவிடம் சொல்லி முழு வீச்சில் தாயார் செய்கிறான். எல்லாம் சரியாக நடக்கும் அதே சமயத்தில் சந்தியா பிறந்த நாள் வருகிறது மற்றும் அதே நாளில் கார்த்திகை திருநாளும் வருகிறது. கிஷோர் மற்றும் அனைவரும் வெளியே வந்திருக்கும் போது சந்தியாவிடம் கிஷோர் தன்னை பற்றியும் , தன் தாய் தந்தை பற்றியும் , தான் இங்கு வந்த நோக்கத்தை பற்றியும் ,நாம் உறவுக்கர பசங்கள் எப்படி நம் நிறுவனத்திற்கு வந்தார்கள் என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல , சந்தியாவிற்கு விழி பிதுங்குகிறது. அத்துடன் சந்தியாவிடம் தான் காதலை வெளிப்படியாக கூர சந்தியாவிற்கு ஒன்றுமே புரியாதது போல் நிற்கிறாள். கிஷோரின் காதலை ஏற்கலாமா வேணாமா என்ற மனகுழாப்பத்தில் சந்தியா தள்ளபடுகிறாள் .

– Break

கிஷோர் மற்றும் குழுவினர்கள் அனைவரும் ஒன்றாக மென்பொருளை மீண்டும் உருவாக ஆரம்பிக்கின்றனர்(. song), மற்றொருபுறம் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சந்தியாவின் தாத்தாவிடம் ,தனது மற்ற உறவுக்கர பசங்களின் வீட்டில் உள்ள தனதுஉறவினர்களிடம் தனது உறவை பதிக்கிறான் , அனைவருக்கும் கிஷோரின் நடவடிக்கை பிடிக்க ஆரம்பிக்கிறது .முதலில் தனது அப்பா வழி உறவினர்களை அம்மா வழி உறவினர்களிடம் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறான். முதலில் சந்தியாவின் தாத்தாவிடம் இருந்து ஆரம்பிக்கிறான் ,அப்போது அவனுக்கு துணையாக புருஷோத்தும் உதவுகிறான், இதன் இடையே மென்பொருளை உருவாக்குவதில் அனைவரும் ஆர்வத்தை அதிகாரிகின்றனர். சந்தியா மற்றும் கோகிலா மூலமும் சில சமயம் புருஷோத் மூலமும் தனது உறவுக்காரர்களையும் சந்திக்கிறான் அப்போது எதர்சியாக அம்மா வழி உறவினர்களின் வீட்டில் தன் அம்மா நசிமா சிறு வயது கல்லூரி புகைபடம் இருந்ததை பார்க்கிறான் தன்னை அறியாமலேயே சிரிக்கிறான் பின்பு யாருக்கும் தெரியாமல் தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து கோகிலாவிடம் காண்பிக்கிறான் பெரும் மகிழ்ச்சி அடைகிறான் , பின்பு மென்பொருள் முடியும் தறுவாயில் தான் தந்தையிடம் சொல்லி மகிழ்கிறான் , அத்தனை காண கிஷோர் தித்த மீட்டு வர சொல்கிறான் ,ஆனால் தந்தை சிதம்பரம் வர மறுக்கிறார். அப்போது கிஷோர் தன் அப்பாவின் மீன் அஞ்சலுக்கு தான் எடுத்த புகை படத்தை அனுப்பி வைக்கிறான்.
நீங்கள் யார் என்று எனக்கு தெரியும் பா , இந்தியா வாங்கப்பா என்று உருகி கேட்கிறான் ஆனால் தந்தை பதில் சொல்லாமல் இணைப்பை துண்டித்து விடுகிறார். அப்போது கிஷோர் யோசனையில் உட்கார்ந்து இருக்கும் போது சடகோபன் என்னும் ஒரு துணி துவைக்கும் ஊமை தொழிலாளி கிஷோரை கூப்பிட்டு வேலைக்காரி எங்கே என்று சைகையில் கேட்க , ஒன்றும் புரியாமல் நிற்கும் போது சடகோபன் கிஷோரை தனது இடத்திற்கு வருமாறு சைகையில் கூர கிஷோர் அவனுடன் செல்கிறான். அப்போது அந்த ஊர் மக்களின் வாழ்க்கையை பார்த்தபடியே அவனுடன் பின் தொடர்ந்து செல்கிறான் , பிறகு கடகோபபணின் வீட்டிற்கு கிஷோரை அழைத்து சென்று ,தனது தங்கை மற்றும் அம்மாவை அறிமுகபடுத்துகிறான். அப்போது தன் வீட்டில் சமைத்து வைத்து இருந்த சாப்பாட்டை கிஷொருடன் பகிர்ந்து கொள்கின்றனர் ,அப்போது கிஷோர் சடகோபன் வீட்டில் உதவாத பொருட்களை வைத்து மின் இணைப்பு மூலம் செய்து இருக்கும் சாதனங்களை பார்த்து விட்டு செல்கிறான். மறுநாள் மென்பொருள் கட்டுமானம் நிறைவு பெறுகிறது .அதனால் அனைவரும் சுற்றுலா செல்ல திட்ட மிடுக்கின்றனர். பல ஊர்களுக்கு கிஷோரை கூட்டி செல்கின்றனர். அது ஒரு புது அனுபவத்தை அவனுக்கு தருகிறது. அப்போது அப்பாவின் உறவுக்கார பையன் அதாவது கிஷோரின் தம்பியின் ஊருக்கு திருவிழாவிற்கு (திருநெல்வேலி) செல்கின்றனர். அங்கு இருக்கும் அப்பாவின் உறவினர்கள் அம்மாவின் உறவுக்கார பசங்களை சதிதித்மிடுக்கின்றனர். பிறகு கிஷோர் தான் திட்டமிட்டபடி அனைவரையும் சமாதானபடுத்தி கைகோர்க வைக்கிறான்.

அப்போது கூட கிஷோர் யார் என்று யாரிடமும் சொல்லாமல் தந்தையின் வருகைக்காக காத்திருக்கிறான்.
அந்த சமயம் கிஷோரின் மேல் காதல் வருகிறது , அதை கிஷோர்ரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறாள் சந்தியா , அதை கேட்டதும் கிஷோர்க்கு சந்தோஷமாக இருக்கிறது.
அனைவரையும் ஒன்றாக பார்க்கும் போது கிஷொருக்கும் ,சந்தியாவிற்க்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்று திருநெல்வேலியில் உரியடி மற்றும் மஞ்சள் தண்ணீர் திருவிழாவிற்கு செல்கின்றனர் ,ஆனால் அந்த திருவிழாவை பற்றி கிஷோரேக்கு தெரியாது ,ஒரு புறம் ஆண்கள் ஓட மறுபுறம் பெண்கள் அனைவரும் மஞ்சள்நீரை எடுத்து அனைத்து ஆண்கள் மீதும் ஊற்ற ஆரம்பிகிண்றனர் திருவிழாவில் கிஷோர் மற்றும் குழுவினார்கள் மாட்டிக்கொண்டு ஊரை சுற்றி வருகின்றனர் ,கிஷோர் எல்லா இடத்திலிருந்தும் தப்பித்து இறுதியாக உரியடி திருவிழா களத்திர்குள் நுழைகிறான் ,உரியடி தளத்திற்குள் நுழைந்ததும் கிஷோர்ன் உறவினர்கள் அனைவரும் அதிர்ந்து விடுகின்றனர்,ஆனால் உரியடி விழா முறை பற்றி அதை கையாலும் முறைகள் பற்றியும் இணையதளத்தில் படித்திருக்கிறான் அது உறவினேர்களுக்கு தெரியாது, கிஷோரே சிலம்பத்தை எடுத்து சுழற்ற ஆரம்பித்ததும் சந்தியா மற்றும் குழுவினார்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் விசிலை அடிக்க ஆரம்பித்தனர், அந்த உரியடி திருவிழாவின் எதிர் அணியினர் உள்ளே நுழைந்து ஆட்டத்தை ஆரம்பித்தனர், ஆட்டம் விறுவிறுப்பாக தொடங்கியது கிஷோர் ஆட்டத்தில் புது புது விசயங்களை கையழ்கிறான்,அனைவரும் ரசித்து பார்க்கிண்றனர் இறுதியில் தனக்குரிய ஸ்டைலீல் ஆட்டத்தை முடிக்கிறான். உரியடி திருவிழாவில் எதிர் அணியில் இருந்தவர்கள் கோபம் கொண்டு கிஷோர் மற்றும் குழுவினார்களை தெரு தெருவாக துரத்த ஆரம்பித்தனர்,பயத்தில் கிஷோர் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க திடீரென்று சந்தியா இடையே நுழைந்து அனைவாறதது முகத்திலும் மஞ்சலை தூவி கிஷோரை அங்கிருந்து காப்பாற்றுகிறாள் பிறகு கிஷோர்ரும் அவனது குழுவும் அவர்களது நிறுவன பேருந்தில் ஏறி தப்பித்து மீண்டும் சொந்த ஊருக்கு வருகின்றனர். வந்து இறங்கியதும் கோகிலாவின் வீட்டில் கிஷோரை இறக்கி விட்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரவர் வீட்டிற்கு திரும்புகின்றார் .

கிஷோர் வீட்டிற்குள் வந்து பார்க்கும்போது தனது அப்பா சிதம்பரம் மற்றும் கோகிலாவும் பேசிக்கொண்டிருந்தனர், கிஷோரை பார்த்ததும் ஒரே ஆச்சரியம் , பேச்சில் மரியாதை அடக்கம் எல்லாம் நிறைந்து இருந்தது. ஒரு புறம் பெருமையாக இருந்தும் மறுபுறம் சங்கடமாகவும் இருந்தது சிதம்பரத்திற்கு. பிறகு கோகிலா மூலம் சிதம்பரம் தனது உறவினர்கள் எல்லோரையும் பார்க்க ஏற்பாடு செய்ய சொல்கிறான். ஆனால் கிஷோர் அதை தடுகிறான். இவ்ளோ நாள் நான் கஷ்டப்பட்டது அனைத்தும் இந்த மென்பொருள் கட்டமைப்பில்தான் உள்ளது. இதை இன்று இரவு அமெரிக்க நிறுவனத்திடம் இனயததாளம் மூலம் அனுப்பி வைத்த பிறகு நாம் யார் என்று அனைவரிடமும் கூறலாம் என்று கிஷோர் சொல்கிறான். அப்போது சந்தியவை கோகிலாவின் வீட்டிற்கு வரசொல்லி சிதம்பரத்திடம் அறிமுகபடுத்துகிறான் . சிதம்பரத்தை பார்த்ததும் சந்தியாவிற்கு ஒன்றுமே புரியாது திகைத்து நிற்கிறாள், சிதம்பரம் சந்தோஷத்துடன் பேசி அனுப்புகிறார். பிறகு சிதம்பரம் தனது மனைவி நசிமாவை இந்தியாவிற்கு வர சொல்கிறார். அன்று இரவு கிஷோர் தனது நிறுவனத்திற்கு தனது தந்தையை அழைத்து வருகிறான். அப்போது நிறுவனத்தில் உள்ள அடிக்குளாய் உடைந்து தண்ணீர் உள்ளே வந்து அப்லோடு வொர்க் தடைபட்டு நிற்கிறது , அப்போது கரண்ட் தூண்டிக்கபடுகிறது. கிஷோர் யோசித்தவாறு நிற்க .அப்போது சிதம்பரம் கிஷோர்க்கு ஆறுதல் சொல்கிறார். ஆனால் அதை கிஷோர் கேட்காமல் தன் தந்தைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற , குழுவினர் அனைவரையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு சடகோபனை அழைத்து வருகிறான். குழுவினார்கள் அனைவரும் நிறுவனத்தின் மேற்கூரையில் கணினியுடன் குடி ஏறுகின்றனர் .

பின்பு புருஷோத் தாயார் நிலையில் இருக்க சிதம்பரமும் காத்திருக்கிறார். உடனே சடகோபன் ,கரண்ட் போஸ்டில் இருந்து நேரடியாக கொண்டு வந்ததும், சிதம்பரம் மற்றும் குழுவினார்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். சிதம்பரம் தான் மகனை பெருமையாக பார்க்கிறார். தடை பட்ட அமெரிக்க ப்ராஜெக்ட் அப்லோடு தொடங்கியது , விடியற்காலை 6 மணிக்குள் இந்த ப்ராஜெக்ட் அப்லோடு ஆகவேண்டும் இல்லையெனில் ப்ராஜெக்ட் ரத்து செய்யப்படும். இறுதியாக விடியற்காலை 5.45 க்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்க படுகிறது அந்த மென்பொருளுக்கு ” ப்ராஜெக்ட் இந்தியா ” என்று பெயர் வைக்கின்றனர். அனைவரும் அந்த வெற்றியை கொண்டாடுகின்றனர். பின்பு அனைவரையும் காத்திருக்க சொல்லி தான் யார் என்றும் தனது அப்பா அம்மா யார் என்றும் தன் குழுவிடம் கிஷோர் தனது அப்பாவை அழைத்து அறிமுகபடுத்துகிறான் , அனைவரும் அதிர்சிக்கலந்த சந்தோஷத்தில் சிதம்பரத்தை கட்டிதழுவுகின்றனர் , கிஷோரையும் கொண்டாடுகிறார்கள். கிஷோரின் அம்மா நசிமா தான் சொந்த ஊருக்கு வருகிறாள் , சிதம்பரத்தின் தோழி கோகிலாவும் சிதம்பரமும் நசிமாவும் கிஷோர் மற்றும் தான் உறவுக்கார பசங்களும் சேர்ந்து தன் அப்பா மற்றும் அம்மா வழி உறவினர்களை சந்தித்து நீண்ட நாள் சோகத்தை பகிர்ந்து கொள்கின்றனர் . பிறகு சந்தோஷத்தில் அனைவரும் அவரவரை விசாரிக்கின்றனர். கிஷோர்ரும் தன் உறவுக்கார பசங்களும் அவரவர் என்ன உறவு வேண்டும் என்று கிண்டலாக பேசிக்கொள்கின்றனர் . புருஷோத்திற்கு பெரும் அதிர்ச்சி தான் இந்த நிறுவனத்தை பற்றிய குறைகளை அதிகமாக ஆதாங்கதோடு கிஷோர்ரிடமே சொல்லியதை நினைத்து சங்கடத்தில் ஓரமாக நிற்க அதை கவனித்த கிஷோர் புருஷோத்திடம் சென்று “உன்னால்தான் இந்த நிறுவனம் மாறியது என்று உன்னால்தான் என் உறவு கிடைத்தது என்று அவனை சங்கடத்திலிருந்து வெளிகொண்டு வருகிறான், புருஷோதோ பெருமைபடுகிறான் .
பிறகு சந்தியாவின் காதலை இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. கிஷோரை சீனாவில் இருக்கும் தனது நிறுவணத்தை நடத்த சொல்லி கேட்கிறார். அத்தனை கிஷோர் நிராகரிக்கிறான். அதற்கான காரணத்தை கேட்ட போது புருஷோத் தனது மாமன் மகளை திருமணம் செய்ய வெளிநாடு சென்றாள் மட்டுமே முடியும் என்று சொல்லி புருஷோத்திற்கு அந்த வேலையை ஏற்பாடு செய்து கொடுக்கிறான். பிறகு புருஷோத் தனது மாமன் மகளை திருமணம் செய்து கொண்டு சீனா செல்கிறான் . கிஷோர்ரும் சந்தியாவும் தனது இந்திய நிறுவனத்தையே பார்க்க தொடங்குகின்றனர் அவர்களுக்கு உறுதுணையாக அனைவரும் அவரவர் வேலையை தொடங்குகின்றனர். பிறகு சிதம்பரம் மற்றும் நசிமாவும் லண்டன் செல்கின்றனர்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “கிஷோர் சிதம்பரம்

    1. கருத்து நன்றாக உள்ளது . நடயில் சிறிது சரளம் வேண்டும் . கொஞ்சம் குழப்பம் . மொத்தத்தில் நன்றாக உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *