கிழமை – ஒரு பக்க கதை

 

‘அப்பா… எந்த விசேஷத்தைச் சொன்னாலும் அதை ஞாயிற்றுக்கிழமை வச்சிக்கலாம்ன்னு சொல்றீங்க…இந்த ஞாயிற்றுக்கிழமையை எப்பப்பா விடப் போறீங்க…?’
கோபத்தோடு செல்வி கேட்க…

“என்னம்மா பண்றது… என் உத்தியோகம் அப்படி. லீவே கிடைக்கிறதில்லை. இன்னும் இரண்டு வருஷம் பொறு. ரிடையர் ஆயிடறேன். அதுக்குமேல நீங்க எந்தக் கிழமைல எந்த விசேஷத்தை வச்சாலும் எனக்கு ஆட்சேபனையில்லை’ என்றார் ராமலிங்கம்.

இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. செல்வியின் செல் சிணுங்கியது. “செல்வி… அப்பா பேசறம்மா… நல்லபடியா ரிடையர் ஆயிட்டேன். அதனால் வர்ற புதன்கிழமை
சிங்காரப்பேட்டைல இருக்கிற நம்ப குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தோட போறோம். நீ உன் குடும்பத்தோட வந்துடும்மா…’

“அப்பா… என் பொண்ணு ஸ்ரீநிதியை கான்வெண்ட்ல சேத்திட்டேன். அவளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் லீவு. இனிமேல ஞாயிற்றுக்கிழமைகள்ல வைக்கிற
விசேஷத்துக்குத்தான் என்னால வரமுடியும்… அதனால் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை போலாம்பா…’ என்றாள் செல்வி.

- இரா. வசந்தராசன் (பிப்ரவரி 2012 ) 

தொடர்புடைய சிறுகதைகள்
“ஏனுங்க விடிய எழும்பி வேலைக்கும் போகாமல் அழுதுகொண்டு இருக்கிறியள்" அழுதுகொண்டு இருந்த சாந்தனைப் பார்த்து கனிமொழி மெல்லிய குரலில் கேட்டாள். அப்போது தான் கனிமொழியும் பிள்ளையும் எழும்பியதைக் கண்டான். "ஒன்றுமில்லை கனிமொழி" என்றான். "இப்படித்தான் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று எத்தனை நாளைக்குத் தான் இந்த அரியண்டத்துள் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 ஒரு நாள் இரவு மணி பத்தரை இருக்கும்.சேகர் வேலையிலே இருந்து குடிசைக்குத் திரும்பி வரவில்லை.செங்கலமும் கமலாவும் மிகவும் கவலைப் பட்டார்கள்.இருவருக்கும் என்ன பண்ணுவது என்றே தெரியாமல் தவித்தார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் “அத்தே,நான் என அம்மா அப்பா ...
மேலும் கதையை படிக்க...
ஒரு அடி; ஒரு படி
""இந்த பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு...'' என்றார் பாலகுரு. எதிரில் இருந்த மகளையும், மருமகனையும் பார்த்தபடி. ""சொல்லுங்க மாமா...'' என்றான் ஜெயவேல். "என்ன சொல்லப் போறீங்க?' என்பது போல், அப்பாவைப் பார்த்தாள் திலகா. ""நீங்கள் ரெண்டு பேரும், ஒருமுறை சங்கரை நேரில் பார்த்து பேசுங்க,'' ...
மேலும் கதையை படிக்க...
அலைகடலின் நடுவில், 'எஸ். எஸ். மேனகா' என்னும் கப்பல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கப்பல் அதற்கு முன் எந்த நாளிலும் அவ்வளவு பாரம் ஏற்றிக் கொண்டு பிரயாணம் செய்தது கிடையாது. இந்தத் தடவை அதில் ஏற்றியிருந்த பாரம் முக்கியமாகப் பிரயாணிகளின் பாரமேயாகும். ...
மேலும் கதையை படிக்க...
(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த ராமசாமி மனிதனாகக் கருதப்பட்டதற்குச் சரித்திர மில்லை. தேயிலைச் செடிக்குள் எல்லாமிருக்கும்' என்று நம்பிக் கடல் கடந்த சீவராசிகளின் சந்ததியில் வந்தவன் மனித னாக முடியுமா? காட்டையழித்துப் பச்சைக் ...
மேலும் கதையை படிக்க...
“ ஜெய்… எனக்குதலை வலிக்கிற மாதிரி இருந்தது.. பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்.நீங்க பிக்-அப் பண்ண வர வேண்டாம்…” சுஜிபோனில்சொல்லவும் , “ சரி நான் நேரா வீட்டுக்கே வந்துடறேன்…” போனை வைத்தான். அவனுக்கு தெரியும் தலைவலி எல்லாம் இருக்காது… அவன் தம்பி மனைவிக்கு வளைகாப்பு வைத்திருப்பதாக ...
மேலும் கதையை படிக்க...
"இப்ப ஆனந்திய வித்தே தான் ஆகணுமா....?" கலங்கிய குரலில்... ஒரே கேள்வியைத்தான் தான் வேறு வேறு வடிவத்தில் காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். சித்தப்பா தனக்குள் என்னவோ முணங்கிக் கொண்டார். அதில் வேண்டும் வேண்டாம் இடையே நிற்கும் அவரே தேடும் இடைவெளி இருந்தது. 'ஆனந்தீ.........!' என்று ...
மேலும் கதையை படிக்க...
குகைக்குள் நுழைந்து திரும்பும் பறவை போல ஜிபிஎஸ் கார் திரும்பிய திசையில் தன் வான்பார்வையை திருப்பி இன்னும் இரண்டரை மைலில் என் பயணம் முடியப்போகிறது என்று சொல்கிறது. ரோஜாப்பூ நிறத்தில் நான் செல்கிற சாலையை சுட்டிக் காட்டியபடி அதன் இருபுறத்திலும் வெறும் ...
மேலும் கதையை படிக்க...
வெய்யில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் இந்த பாழாய்ப்போன புழுக்கம்தான் இது சென்னை என்பதை நினைவுபடுத்திகொண்டே இருக்கிறது.. எதிரில் இருந்த அபார்ட்மெண்ட்டைப் பார்த்தான். விற்பனைக்கு என்பது மாதிரியான போர்டு எதுவும் இல்லை. சொல்லப் போனால் அந்தத் தெருவிலேயே for sale போர்டுபோட்ட ...
மேலும் கதையை படிக்க...
இருள் அடர்த்தியாகக் கவிழ்ந்திருந்த நிலவற்ற நள்ளிரவு.சூன்யம் தடவிய கறுப்புவெளி. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய்க் கழன்று விழுகின்றனவோ விழி மணிக்குள்... அந்தகாரமான அமைதிக்குள் டிக்,டிக்கென்று காதுகளைச் செவிடுபடுத்தும் ஓசை.விர்ரென்று அமைதிப் பிரவாகத்தைச் சிதறடித்துக் கீறல் உண்டாக்குகின்ற காற்றின் கூவல்... ஏதோ இம்சிப்பதாய்...ஏதோ ஒன்று மனதை ரணப்படுத்துவதாய்... ஹ..ஹ...ஹய்யோ...சலனங்களைக் கடக்க ...
மேலும் கதையை படிக்க...
வாழ முற்படுதல்…….
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
ஒரு அடி; ஒரு படி
எஸ்.எஸ்.மேனகா
ராமசாமி காவியம்
இனி எல்லாம் சுகமே..!
ஆனந்தி இல்லாத வீடு
நீட்சி
ஒரு முகம், ஒரு பெயர் மற்றும் செல்வி என்றொரு சிநேகிதி..
சாட்சிகள் ஏதுக்கடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)