காலிப் பிளவர்

 

காலி பிளவர் என்றால் கண்ணனுக்கு உயிர்! மாலைநேரத்தில் நாலு பேர் சாப்பிட ஒரு தட்டில் காலி பிளவர் சில்லி செய்து வைத்தால், இவன் ஒருவனே எடுத்து சாப்பிட்டு காலி செய்து விடுவான்.

அவனுக்காக அவனின் தாய் ஏதாவது ஒரு வகையில் காலி பிளவர் கிரேவி, காலி பிளவர் வறுவல், காலி பிளவர் பக்கோடா, காலி பிளவர்65, காலி பிளவர் குழம்பு என்று வித விதமாக செய்து அசத்தி விடுவார்!

கண்ணனின் அண்ணன் குமாரின் மனைவி ராதிகாவின் தந்தை ஒரு பெரிய மிராசுதார். அவர்களின் சொந்த ஊர் திருப்பூருக்கு பக்கம் குமாரவலசு என்ற ஒரு கிராமம்.

அங்கு நடந்த கோவில் திருவிழாவுக்கு கட்டாயம் குடும்பத்தோடு வந்தே ஆக வேண்டும் என்று, மிராசு வந்து வற்புறுத்தி விட்டுப் போய் விட்டார்.

அண்ணன் குமாருக்கு கல்யாணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகிறது! கண்ணன் கோவையில் பொறியியல் கல்லூரி மாணவன். அவனுக்கு சென்னை, மும்பை, டெல்லி எல்லாம் தெரியும். அவன் இதுவரை எந்தக் கிராமத்திற்கும் போனதில்லை!

கிராமம், தேர், திருவிழா எல்லாம் அவன் தமிழ் சினிமாவில் பார்த்தது தான்! அதனால் அவனும் ஒரு ஆர்வத்தோடு கிராமத்திற்குப் போனான்.

மிராசுவின் தோட்டத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை! எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சி! வித விதமான காய்கறிகள்! பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது!

ஒரு பக்கம் காலிபிளவர் செடிகள் நிறைய இருந்தன. பெரிய பெரிய பச்சை இலைகளுக்கு மத்தியில் சின்னச் சின்ன வெள்ளைக் காலிப் பிளவர் பூக்கள் கண்ணனைப் பார்த்து கண் அடித்தன!

நீண்ட நேரம் அவன் அந்த பாத்திகளைச் சுற்றி சுற்றி வந்தான். அவர்கள் கோவையிலிருந்து காரில் தான் வந்திருந்தார்கள்! சம்பந்தியிடம் சொல்லி போகும் பொழுது இரண்டு சாக்குப் பைகளில் நல்ல நல்ல பூக்களாகப் பறித்து மூட்டை கட்டி டிக்கியில் போட்டுக் கொண்டு போய் விட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டான்!

அம்மாவிடம் தனியாக கூப்பிட்டு தன் எண்ணத்தை சொல்லி விட்டான். அம்மாவும் சிரித்துக் கொண்டு சரி என்று சொல்லி விட்டாள்.

திருவிழா முடிந்து கண்ணன் குடும்பத்தினர் கோவைக்குப் புறப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அம்மா சம்பந்தியிடம் சத்தமாகப் பேசிக் கோண்டிருந்ததைப் பார்த்து, ஆச்சரியப் பட்டு அருகில் போனான் கண்ணன். ஏதோ பிரச்னை! “சம்பந்தியம்மா!…தயவு செய்து நம்ம தோட்டத்து காலி பிளவர் மட்டும் கேட்காதீங்க!…நான் கொடுக்க மாட்டேன்!..பிளீஸ் என்னை விட்டிடுங்கோ! அது மார்கெட்டில் விற்பதற்காக பயிரிடுவது!.”

“ நாங்க சும்மா கேட்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்!…அதற்கு உரிய பணத்தை இப்பவே கொடுத்திடறேன்!…உங்க பெண் எங்க வீட்டில் தான் வாழப் போகிறாள் என்பதை மறந்திடாதீங்க!..” என்று அம்மா சத்தமாக கோபத்தோடு சொன்னாள் எல்லோரும் அதற்குள் அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள்! நிலைமை தர்ம சங்கடமாகப் போய் விட்டது!

மிராசுதார் நிறுத்தி நிதானமாகச் சொன்னார்.

“ இந்த காலி பிளவர் மார்கெட்டில் விற்பதற்காகப் பயிரிடுகிறேன். செடி வளர்வதற்குள் பத்து முறையாவது நல்ல பவர் உள்ள பூச்சி மருந்து அடிப்போம்! பூ மலர்ந்தவுடன், கைகளால் பூவை விரித்து அதன் உள்ளேயும் மருந்து அடிப்போம்! அப்படியும் புழு உற்பத்தியாகி விடும்! பூக்களைப் பறித்த பின், மார்கெட்டிற்குப் போகும் முன், ஒரு அண்டாவில் பூச்சி மருந்து கலக்கிய தண்ணீரை நிரப்பி அதில் பறித்த பூக்களைப் போட்டு எடுத்துத் தான் விற்பனைக்கு அனுப்புவோம்! அப்பத்தான் அந்த பூக்களில் இருக்கும் ஒண்ணு ரண்டு புழுக்களும் விழுந்து விடும்!…அத்தனை முறை விஷம் தெளித்த பூக்களை எப்படி என் பெண் வாழும் வீட்டில் சமைக்க கொடுப்பது?…”

அந்த பட்டினத்து கும்பல் வாயடைத்து நின்று விட்டது!

- மக்கள் குரல் 4-7-2018 

தொடர்புடைய சிறுகதைகள்
2054 ஆண்டு ஐனவரி மாதம் 26 ம் தேதி. ஞாயிற்றுக்கிழமை. அந்த பிரமாண்டமான கல்லூரி வளாகத்தில் நுழைவுத் தேர்வுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்தது. காலை 9 மணிக்கே சுமார் ஆயிரம் பேர்களுக்கு மேல் கூடி விட்டார்கள். எல்லோருடைய கைகளிலும் நோட்ஸ் புக், கைடு ...
மேலும் கதையை படிக்க...
“ அம்மா!....வரவர தம்பி ரத்தினத்தின் போக்கே சரியில்லே! தினசரி இரவு வீட்டிற்கு ரொம்ப லேட்டா வருகிறான்.. நேத்து ராத்திரி இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டினான்.. நான் போய் திறந்து விட்டேன்…குடிச்சிருப்பான் போலிருக்கு…எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு!....” “ அவன் சேர்க்கை சரியில்லே! நானும் ...
மேலும் கதையை படிக்க...
விஷ்ணு காந்த் சிங்கத்தின் வாயை கைளால் பிளப்பது போன்ற பதினாறு அடி கட் அவுட்டுகள் நாற்சந்தி, முச்சந்தியில் நின்று நாட்டு மக்கள் அனைவரையும் ஆவலோடு எதிர் பார்க்க வைத்த படம் ‘அடலேறு!’ அதன் ஹீரோ விஷ்ணு காந்தே தயாரிப்பாளரும் கூட. விஷ்னு காந்த்க்காக ...
மேலும் கதையை படிக்க...
“என்ன....சரவணா...பேப்பரில் அப்படி முக்கியமான நியூஸ்?....அம்மாவும் மகனும் அப்படி விரித்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறீங்க?.....” “அப்பா!....நேத்து சாயந்தரம் என்ன நடந்ததுனு உங்களுக்குத் தெரியாதா?..” “சொன்னாத்தாண்டா.....தெரியும்.?....” “நம்ம ரயில்வே கேட் இருக்கல்ல?.....” “நீ காலேஜூக்குப் போகும் வழியில் இருக்கே!...அதுவா?...” “அதே தானப்பா!....நேத்து மாலை 5-30 மணிக்கு வழக்கம் போல கேட் மூட ...
மேலும் கதையை படிக்க...
இரவு இரண்டு மணி.நல்ல தூக்கம். திடீரென்று “.......சத்தியமா எனக்குத் தெரியாதுங்க!....எனக்குத் தெரியாமலேயே அவங்க செய்திட்டாங்க!.....” என்று தூக்கத்தில் உளறிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தார் அருணாசலம்! மனைவி மணிமாலா எழுந்து லைட் போட்டு, கணவனின் அருகில் வந்து ஆறுதலாகக் கைகளைப் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நாளாவே அருணாசலம் ...
மேலும் கதையை படிக்க...
2054
குடியிருந்த கோயில்!
விஷ்ணு காந்த் அழைக்கிறார்! – ஒரு பக்க கதை
இரண்டுமே வேறு! வேறு!
பயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)