ஏற்கெனவே பஞ்சடைந்திருந்த கண்கள் பசியிலும், தாகத்திலும் இன்னும் மங்கலானது போலிருந்தன. அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “அம்மா சுசீலா!” என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள் முதியவள்.
உரக்க அழைத்தாலே வராத மருமகள் இப்போது மட்டும் காதில் வாங்கிக்கொள்வாளா, என்ன!
“குடிக்க கொஞ்சம்..,” அதற்குமேல் பேச முடியாது இருமல் அவளை அலைக்கழைத்தது.
தனது பெரிய உடலைத் தூக்கமுடியாது தூக்கிக்கொண்டு வந்த சுசீலாவுக்கு ஏக எரிச்சல். “அதான் கொஞ்சம் பேசினலே இருமுதில்ல? வாயை மூடிக்கிட்டு இருக்கிறது!”
“என்னோட..!” மீண்டும் இருமல்.
“என்ன?” உறுமல்.
`என்னோட பென்சனுக்காக என்னை ஒன் வீட்டிலே வெச்சுக்கிட்டு இருக்காம, மகள் வீட்டுக்கு அனுப்பிடேன்!’ என்று கேட்கத்தான் நினைத்தாள் முதியவள்.
ஆனால் பயத்தில் சொல்லவந்தது மறந்தே போயிற்று.
மகள் வீடுதான் சிறியது. மனமோ விசாலமானது. அங்கு போனால், சாப்பாட்டுக்கும், குடிநீருக்கும் காசு கேட்கமாட்டாள். பணம் கொடுத்தாலும் வாங்கமாட்டாள். `நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்போ, எங்கிட்ட காசு வாங்கிட்டா சோறு போட்டீங்க?’ என்று முகத்தைச் சுருக்கி, செல்லமாய் முறைப்பாள். வாய் திறந்து தாய் எதுவும் கேட்பதற்குமுன், பக்திப் புத்தகங்கள் வாங்கி, அதை பேரப்பிள்ளைகளை விட்டுப் படிக்கவும் வைப்பாள்.
ஆனால், அவளை நெருங்கவிடாது செய்து, `நடமாட முடியாத மாமியாரை வைத்துக் காப்பாற்றுகிறேன்!’ என்று தன் பெருந்தன்மையை நான்குபேரிடம் மருமகள் பெருமை பேச, தான் அங்குதான் அல்லல்பட்டாக வேண்டும் என்பது முதியவளுக்குப் புரியவில்லை.
35 ஆண்டுகளுக்குப்பின்
“அம்மா எங்கே, சாரு?”
அலட்சியமாக வந்தது பதில். “அவங்க ரூமில ஒக்காந்து, ஏதாவது குருட்டு யோசனை செய்துக்கிட்டிருப்பாங்க!”
“டி.விதான் ஓடுதில்ல? கூப்பிடேன். பாத்துட்டுப் போகட்டும், பாவம்!”
“பாவமென்ன பாவம்! பிள்ளைங்க ஆசையா கார்ட்டூன் பாக்கறாங்க. இவங்க விடுவாங்களா! தமிழிலே இருக்கிற கண்ராவி தொடரையெல்லாம் ஒண்ணு விடாம பாத்தாகணும்!”
“அவங்களுக்கு அதானே புரியுது!”
“இப்ப வர்றதெல்லாம் சின்னப்பிள்ளைங்க பாக்கறமாதிரியா இருக்கு? பெரியவங்க – சின்னவங்க மரியாதை இல்லாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிறாங்க, வாயில வந்தபடி கெட்ட வார்த்தை பேசறாங்க. அதையெல்லாம் பாத்து தானும் கத்துக்கிட்டு, அத்தையும் இதுங்களோட சண்டைக்கு நிப்பாங்க, `எனக்குப் பிடிச்சதைப் போடுங்கடா’ன்னு!”
மனைவியின் புகாரைக் கேட்டதும், மகனுக்கும் தாயின்மேல் ஆத்திரம் வந்தது. “இவங்களோட பெரிய தொல்லையாப் போச்சு. வயசானா, ராமாயணம், மகாபாரதம்னு எதையாவது படிச்சு, போற வழிக்குப் புண்ணியம் தேடிக்கணும். அம்மாவுக்கோ புத்தகங்களைக் கையால் தொடவே பிடிக்கல. அட, அவங்ககிட்ட காசு பணமா இல்ல? சொந்தத்திலே ஒரு டி.வி வாங்கி, ரூமில வெச்சுக்கறதுக்கு என்ன!”
சாரு உதட்டைச் சுழித்தாள். “ஒங்கம்மாதானே? கேக்காம இருப்பாங்களா? நான்தான் கூடவே கூடாதுன்னுட்டேன்”.
“ஏன் சாரு?”
“புரியாம பேசறீங்களே! இந்தப் பசங்க பாட்டி ரூமூக்குப்போய் கண்டதையும் பாத்து, இளிச்சுக்கிட்டு நிக்கறதுக்கா? இப்பவே வீட்டுப்பாடம் ஒழுங்காப் பண்ணறதில்லே!”
கணவன் அடங்கிப்போனான்.
“அதான் நான் கண்டிப்பா சொல்லிட்டேன், `பேசாம ஒங்க ரூமிலேயே ஓய்வா இருங்கத்தை. சாப்பாட்டையும் அங்கேயே அனுப்பறேன்’னு!”
“அதுவும் சரிதான்!” என்று ஒத்துப்பாடினான் சுசீலாவின் மகன்.
தனது அ(சி)றையில் சுவற்றையே வெறித்தபடி அமர்ந்திருந்த பாட்டிக்கு, “அம்மா சுசீலா! குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வாயேன்!” என்று எங்கிருந்தோ மாமியாரின் குரல் கேட்டது.
தொடர்புடைய சிறுகதைகள்
“வர வர, சுதாவை ரொம்ப அடிக்கிறே நீ!”
`ஒன்னோட மூளையும், சுறுசுறுப்பும் அப்படியே சுதாகிட்ட வந்திருக்கு!’ என்று தனிமையில் ஓயாது தன்னைப் புகழும் கணவரிடமிருந்து இப்படி ஒரு குற்றச்சாட்டா!
பெண்ணை முதுகில் அடித்ததன் காரணத்தை இவரிடம் சொன்னால், “குழந்தைகள் என்றால், முன்னே பின்னேதான் இருக்கும்!” ...
மேலும் கதையை படிக்க...
எதிர்பார்த்திருந்ததுதான் என்றாலும், விடுதலை அவ்வளவு சீக்கிரமாகக் கிடைக்கும் என்று மீனாட்சி நினைக்கவில்லை.`குடல் புண்ணாகி இருக்கிறது, உயிருக்கே ஆபத்து,’ என்று டாக்டர்கள் எச்சரித்தாலும், குடியை அவன் விடவில்லை, இல்லை, குடி அவனை விடவில்லை. ஏதோ ஒன்று!எத்தனை தடவை தன் தங்க நகைகளை அடகு ...
மேலும் கதையை படிக்க...
“ராதிக்குட்டியை இன்னிக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்!” என்றாள் அன்னம், முணுமுணுப்பாக.
“இப்பத்தானே போனே?” அலுப்பும் எரிச்சலுமாக வந்தது கேள்வி.
பத்தாண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு தவமிருந்து பெற்ற பெண்! பிறவியிலேயே ஏதோ ரத்தக்கோளாறுடன் பிறந்துவிட்டதே என்ற ஆதங்கம் கருணாகரனுக்கு.
ஆனால், சிரிப்பும் விளையாட்டுமாக இருந்த மகளின் ...
மேலும் கதையை படிக்க...
அன்று பிரேமாவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றிற்று. அவளுடைய கல்யாணத்திற்கு நேரில் வந்து, எவ்வளவு வற்புறுத்தி அழைத்திருந்தாள்!
கோயிலில் நடந்த அந்த வைபவத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என் உடல்நிலைமேல்தான் பழி போடவேண்டும். சொன்னால் ஏற்றுக்கொள்வாளா?
`இதெல்லாம் இயற்கை. தலைக்கு ஜலம் விட்டுக்கொண்டு வந்திருக்க ...
மேலும் கதையை படிக்க...
`அம்மா! நீ இன்னிக்கு அழகா இருக்கே!’
`அடீ, ஏதாவது வேணுமானா நேரடியா கேளு. இது என்ன கெட்ட வழக்கம், காரியம் ஆகணும்னு ஐஸ் வைக்கிறது!’
“இந்தாம்மா. வேண்டியவங்களுக்கெல்லாம் அனுப்பிடு. அழகா அச்சடிச்சிருக்கான்,” என்று அவளுடைய திருமண அழைப்பிதழ் கட்டை அப்பா கொடுத்தபோது, நினைத்தும் பார்த்திருப்பாளா, ...
மேலும் கதையை படிக்க...
“முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு! இன்னும் என்ன, அவனைப்பத்திப் பேச்சு?” சாருவின் குரலில் எரிச்சலும், பொறாமையும் கலந்திருந்தன.
மகளுக்கு என்ன பதில் கூறுவது!
தம்பி நான்கு வயதாக இருந்தபோது, அவன் தாயின் மடியில் அமர்ந்ததைப் பார்த்து, “என்னடா, நீ இன்னும் சின்னக் குழந்தையா?” என்று ...
மேலும் கதையை படிக்க...
“நான் இந்தக் கறுப்புப் பூனையைக் கொல்லாம விடப்போறதில்லே!” தனக்குள் பேசிக்கொள்வதாக நினைத்து, உரக்கவே சொன்னார் மாத்ருபூதம்.
இடுப்பில் குழந்தையுடன், தோட்டத்தில் மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த கவிதாவின் காதுகளிலும் மாமனாரின் வார்த்தைகள் விழுந்தன. முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டாள்.
வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தவர் அருகில் பூனை ...
மேலும் கதையை படிக்க...
`தினேசு! நீயும் ஒங்கப்பாமாதிரி ஆகிடாதேடா!’
அவன் பிறந்தபோது, கோயில் அர்ச்சகரிடம் போய், `ஷ்டைலா ஏதாவது சாமி பேரு வைங்க, சாமி!’ என்று பாட்டி கேட்டதற்கு, `இந்தக் காலத்திலே யாரு பகவான் பேரை வைக்கறா? நீங்க தினேஷ்னு வைங்கோம்மா. சூரியன்மாதிரி குழந்தை அமோகமா பிரகாசிப்பான்! ...
மேலும் கதையை படிக்க...
“சங்கர் முந்திமாதிரி இல்லேம்மா. சிடுசிடுங்கிறாரு!”
சங்கரை அனுபமா தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியபோது, தான் உண்மையை மறைக்காது சொன்னது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது!
‘இவங்கப்பா காண்ட்ராக்டில வீடு கட்டற தொழிலாளியா இருந்தவரு. வேலை பாக்கிறப்போ ஒரு விபத்திலே போயிட்டாரு,’ என்று ஆரம்பித்து, ...
மேலும் கதையை படிக்க...
தாம் பெற்ற செல்வங்களுக்கு இவ்வுலகில் இடம்பெற உயிர் கொடுத்ததே பெரிய காரியம் என்ற இறுமாப்பில், `எப்படியோ போங்க!’ என்று `தண்ணி தெளித்து’ விட்டிருந்தார் முத்துசாமி.
மூத்தவன் வீடு வீடாக பைக்கில் பீட்சா கொண்டு கொடுக்கும் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தான். இதுவரைக்கும் நம்மிடம் பணங்காசு கேட்காது, ...
மேலும் கதையை படிக்க...