காரணம் – ஒரு பக்க கதை

 

‘’பக்கத்து வீட்டு சுதா டீச்சர்கிட்டே நீ அதிகம் வச்சுக்கிறதில்லை மாதிரி இருக்கே… ஏன்?’’ ரம்யா கேட்க…

‘’அவ சாதாரண எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர், நான் ஹையர் செகண்டரி ஸ்கூல்ல பி.ஜி.அஸிஸ்டென்ட். அப்படியிருகிறப்ப அவகிட்டே போய் நான் ஏன் வச்சிக்கிறேன்’’ என்றாள் ஆர்த்தி கர்வத்துடன்.

ஒரு மாதம் ஓடி விட்டது.

துவைத்த துணிகளை எடுத்து வர வீட்டின் பின்பக்கம் சென்றாள் ஆர்த்தி.

சுவருக்கு அந்தப்புறம் சுதா யாருடனோ பேசிக்கொண்டிருப்பது மெதுவாக கேட்டது.

என்ன பேசுகிறார்கள்? யாதார்த்தமாக கவனித்தாள்.

பக்கத்து வீட்டு ஆர்த்தி டீச்சர்கிட்ட, நீ அதிகம் வச்சுக்கிறதிலிலை மாதிரி இருக்கே..ஏன்?

‘என் பெர்சனாலிட்டி என்ன..அவ பெர்சனாலிட்டி என்ன…சினிமா நடிகை மாதிரி இருக்கிற நான் எங்கே…வத்தலும் தொத்தலுமா கரிக்கட்டை மாதிரி இருக்கிற அவ எங்கே..அப்படியிருக்கிறப்ப அவகிட்டே போய் நான் ஏன் வச்சிக்கிறேன்…’’

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் ஆர்த்தி!

- இரா.வசந்தராசன் (பெப்ரவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
“இந்த லக்கேஜை தூக்கி டிக்கியில் வைப்பா’ என்றாள் காலேஜ் படிக்கும் நீரஜா தன் அப்பாவின் டிராவல்ஸ் கார் டிரைவரான கதிரேசனைப் பார்த்து. அதை கேட்டுக் கொண்டிருந்த செல்வநாயகம் மகளிடம், “நீரஜா டிரைவர்கிட்ட சாரி கேளு!’ அதிர்ச்சியான நீரஜா, “எதுக்குப்பா? ஆஃப்ட்ரால், உங்ககிட்ட கைநீட்டிச் சம்பளம் ...
மேலும் கதையை படிக்க...
பழைய திரைப்படம் ஒன்றை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி. படத்தில் தீடீர் பணக்காரனான கதாநாயகன் தான் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு வாரி வழங்கிப் பாடி மகிழ்வது போல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. பாடலில் லயித்திருந்த பார்வதி எதைச்சையாக வாசலைத் திரும்பிப் பார்த்தவளுக்கு ஒரே அதிர்ச்சி. அங்கே…ஒரு ...
மேலும் கதையை படிக்க...
துபாயிலிருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேருவேன் என்ற கோபியின் வார்த்தையில் ஆனந்த பரவசமடைந்தார்கள் அவனது மனைவியும் குழந்தைகளும் உறவினர்களும். மதியம் ஒரு மணிக்கு கோபியின் மனைவியும் குழந்தைகளும் அவனது அப்பா, தம்பி, மச்சான் என ...
மேலும் கதையை படிக்க...
அருவிகளின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதே குற்றாலத்தில் எத்தனையோ நிகழ்வுகள்; நேரில் பார்த்தவை, சொல்லக் கேட்டவை என்று நடந்துபோனவை உண்டு. நேரம் நடு இரவையும் தாண்டிவிட்டது. தூக்கமும் போய்விட்டது. ரகுநாதன் சொல்லிக்கொண்டே வந்தார். காதுகள்தான் கேட்டுக்கொண்டு இருக்கின்றன; மனசு எங்கெல்லாமோ போய்ப் போய் ...
மேலும் கதையை படிக்க...
மாலை மணி ஆறு. அலுவலகத்திலிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். அவன் மட்டும் பியூன் சிங்காரத்தின் வரவிற்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் சிங்காரம் ஒரு அசட்டுச் சிரிப்புடன், “சார் போகலாமுங்களா...கருக்கல்ல போனாத்தான் சீக்கிரம் திரும்பியாரலாம்” என்றான். இவன் ஒரு புன்சிரிப்புடன் மேஜையின் இழுப்பறைகளைப் பூட்டிவிட்டு, சாவிக் கொத்துகளை ...
மேலும் கதையை படிக்க...
ஆஃப்ட்ரால்! – ஒரு பக்க கதை
ஒரு காலத்துல… – ஒரு பக்க கதை
ஊரில் ஒரு மாதம்
அன்பே மனிதமாய்…
சபலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)