காய்க்காத பூக்கள்

 

அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3

ராஜேஷ் வீடு போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. ஃபாரன்சிக் நிபுணர்கள் ரேவதியின் படுக்கையறையை அணு அணுவாக சோதனை கொண்டு இருந்தனர். இன்ஸ்பெக்டர் கவிதா ஏட்டு கதிரவனிடம் நடந்த சம்பவங்களை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.

“ரேவதி ரொம்ப நேரமா கதவ திறக்காததால வேற வழியில்லாம தான் மேடம் கதவ உடைச்சு உள்ள வந்தோம்”

“கதவோட லேச் உடையாம இருக்கு”

“சாவி போட்டு மட்டும் தான் பூட்டி இருக்காங்க மேடம். தாழ்ப்பாள் எதுவும் போடல”

“அப்ப வெளில இருந்து கூட பூட்டி இருக்க முடியும் இல்லையா”

“பாசிபிள் மேடம்”

“இத தவிர வேற எதாவது எண்ட்ரி பாயிண்ட் இருக்கா?”

“இது ஒண்ணு தான் மேடம். இத விட்டா மொட்டை மாடி போற கதவு தான். அதுவும் தாழ்ப்பாள் போடாம தான் இருக்கு. அந்த வழியா வீட்டுக்குள்ள வரணும்னா பக்கத்து வீட்டு மாடில இருந்து குதிச்சு தான் வரணும்”

இன்ஸ்பெக்டர் கவிதா மொட்டை மாடியை பார்வையிட்ட பின்,

“க்ரைம் சீன்ல எதாவது கிடைச்சதா?”

“யெஸ் மேடம். சாகுறதுக்கு முன்னாடி ரேவதி எழுதுன லெட்டர்”

ரேவதியின் படுக்கையறைக்கு சென்று அவளின் தற்கொலை கடிதத்தை படிக்கிறார் இன்ஸ்பெக்டர் கவிதா.

“ஹ்ம்ம் சாகுறதுக்கு முன்ன ரேவதி அப்படி என்ன சொல்லி இருக்காங்கன்னு பார்ப்போம்”

ரேவதியின் தற்கொலை கடிதம்:

“புகுந்த வீட்டில் என்னுடைய மதிப்பு என்னன்னு எனக்கு இன்னைக்கு தான் தெரிஞ்சது. எனக்கு திருமணமான நாள்ல இருந்து இன்று இரவு 8:10 மணி வரை என்னிடம் பேச பழகிய மாமியாருக்கும் அதன் பிறகு தற்போது பார்க்கும் மாமியாருக்கும் உள்ள வித்தியாசமே அதை எனக்கு உணர்த்தியது. என் மாமியார் மாமனார பொறுத்தவரை நான் அவங்க குடும்ப வாரிசை பெற்று தர வேண்டிய இயந்திரம். என் கணவருக்கு என் மேல ஆசையும் காதலும் நிறைய இருக்கு. ஆனா சமீபத்துல அவருக்கும் குழந்தையின்மை ஏக்கத்தை குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. இதுக்கு மேலேயும் அவர நான் கஷ்டப்படுத்த விரும்பல. நான் உயிரோட இருக்குற வரை அவர் வேற எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டார். அதனால் என் முடிவை நானே தேடிக் கொள்கிறேன். அப்புறம் நான் கர்ப்பமா இருக்குறதா சொன்னது உண்மை இல்ல. ஆனா சில நொடிகளாவது என் ராஜேஷோட சந்தோஷமான குரல கேட்க அந்த பொய் எனக்கு உதவியா இருந்தது. நான் ராஜேஷ் கிட்ட சொன்ன முதலும் கடைசியுமான பொய் அது தான். ராஜேஷ் நான் தற்கொலை பண்ணிக்குறதே நீங்க இன்னொரு திருமணம் செய்து கிட்டு குழந்தைகள் பெத்துகிட்டு சந்தோஷமா வாழத்தான். அதான் என்னோட கடைசி ஆசையும் கூட. போலீசார் கவனத்திற்கு என்னை யாரும் தற்கொலை செய்துக்க தூண்டல. இது முழுக்க முழுக்க என்னோட முடிவு. என் தற்கொலை முடிவுக்கு நான் மட்டும் தான் காரணம்”

கடிதத்தை படித்து முடித்த இன்ஸ்பெக்டர் கவிதாவின் முகம் சற்றே மாறியது.

“என்ன ஜீவா சார் Foresnic searchல எதாவது கிடைச்சதா?”

“Nothing மேடம். மெடிக்கல் ரிப்போர்ட் பார்தததுல இவங்க ஒரு Insomniac. டாக்டர் இராத்திரில மட்டும் தூங்க குடுத்த மாத்திரைகள எக்கசக்கமா சாப்பிட்டு ஓரேடியா தூங்கிட்டாங்க போல”

“எப்படி Autopsy கூட பண்ணாம கன்ஃபார்மா சொல்றீங்க?”

“காலி மாத்திரை ஸ்ட்ரைப்ஸ் இருக்கு. யாரும் கட்டாயப்படுத்தி குடுத்ததுக்கு உடம்புல எந்த தடயமும் இல்ல. அது வெச்சு தான் சொன்னேன். நீங்க கொலையா இருக்கும்னு சந்தேகப்படுறீங்களா?”

“ஒரு விஷயம் க்ளியரா தெரியல. அதனால சூசைட்னு முடிவுக்கு வர முடியல’

“எந்த விஷயம் உங்கள கன்ஃப்யூஸ் பண்ணுது?”

“டோர்ஸ். வெளிய இருக்கவங்களும் ஈஸியா அக்சஸ் பண்ண முடியுற மாதிரி லாக் பண்ணி இருக்காங்க. அதான் கொஞ்சம் நெருடலா இருக்கு”

“ஓகே மேடம். உங்க சந்தேகத்தையும் மைண்ட்ல வெச்சிக்குறேன். Autopsy முடிஞ்சதும் சொல்றேன்”

“ஓகே சார். கதிர் சார் நீங்க இருந்து எல்லாம் பார்த்துக்கங்க. அப்புறம் ரேவதி ஹஸ்பண்ட் வந்ததும் அவரோட ஃபிங்கர் பிரண்ட்ஸ் எடுத்து லேப்’க்கு அனுப்பிடுங்க. அப்படியே ரேவதி கையெழுத்த கன்ஃபார்ம் பண்ண அவங்க எழுதுன லெட்டர்ஸ், வீட்டு கணக்கு எதாவது வாங்கி வைங்க”

“சரிங்க மேடம்” என கதிரவன் கூற கவிதா அங்கிருந்து கிளம்பினார்.

மார்ச் 21 வியாழக்கிழமை. இன்ஸ்பெக்டர் கவிதா போலீஸ் ஸ்டேஷனில் தனது இருக்கையில் அமர்ந்தபடி ரேவதியின் மரணம் பற்றிய சிந்தனையில் இருந்தார். அப்பொழுது ஜீவாவிடம் இருந்து ஃபோன் வந்தது.

“சொல்லுங்க ஜீவா. Autopsy report என்ன சொல்லுது?”

“மேடம் நீங்க சொன்னதுனால கண்ணுல விளக்கெண்ணெ விட்டுட்டு தேடுனோம். ஒரு சாதாரண கணவன் மனைவி வாழ்ந்ததற்கான அடையாளங்கள், ஃபிங்கர் பிரிண்ட்ஸ் தான் இருக்கு. தேர்ட் பர்சன் வந்ததுக்கான எந்த தடயமும் கிடைக்கல. Autopsy report கூட க்ளியரா இருக்கு. லெட்டர்ல இருக்க மாதிரி அவங்க கர்ப்பமா இல்ல. Insomniaவுக்கு குடுத்த மாத்திரைகள் அதிகமா சாப்பிட்டது தான் மரணத்துக்கு காரணம். அத அவங்களுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்தாங்கனு சொல்ல எந்த ஆதாரமும் இல்ல. அப்புறம் இறந்து போன நேரம் அதிகாலை 3-3¼ மணி. அதுலருந்து தோராயமா 5 மணி நேரத்துக்கு முன்னாடி பில்ஸ் எடுத்து இருக்கலாம்”

“அப்ப இது தற்கொலை தானா?”

“அதான் இல்ல.. இது ஒரு கொலையா இருக்க தான் சான்ஸஸ் அதிகம்”

தொடரும்…. 

தொடர்புடைய சிறுகதைகள்
அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 "எத வெச்சு கொலைக்கு வாய்ப்பு அதிகம்'னு சொல்றீங்க?" "ஃபிங்கர் பிரிண்ட்ஸ் வெச்சு தான்" "இப்ப தான் தேர்ட் பர்சன் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் எதுவும் கிடைக்கலனு சொன்னீங்க" "ஆமா. இங்க ஃபிங்கர் பிரிண்ட்ஸ் இல்லங்கிறது தான் லீடே. ...
மேலும் கதையை படிக்க...
அறிமுகம்: ராஜேஷ் ரேவதி தம்பதிகள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். ராஜேஷ் டெக்ஸ்டைல் பிஸினஸ் செய்து வருகிறார். இவரது குடும்பம் தென் தமிழகத்தின் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள். ராஜேஷின் தந்தை மாணிக்கம் அந்த கிராமத்திலேயே பெரும் பணக்காரர். அவர் சொல்வது தான் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 மணிகண்டன் தனியாக வந்து கவிதாவிற்கு ஃபோன் செய்கிறான். "ஹலோ மேம்" "தனியா இருக்கியா மணி?" "யெஸ் மேம்" "எவிடென்ஸ் கலெக்ட் பண்றது மட்டும் இப்ப உன் வேலை இல்ல. கதிரவன் ஆக்டிவிட்டீஸ் அப்சர்வ் பண்ணு. கண்டிப்பா அவர் எதையோ மறைக்கிறாரு" "கதிர் சார் ...
மேலும் கதையை படிக்க...
காய்க்காத பூக்கள்
காய்க்காத பூக்கள்
காய்க்காத பூக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)