காய்க்காத பூக்கள்

 

அத்தியாயம் 10 | அத்தியாயம் 11

ரேவதி:

“ராஜேஷ் என்னை கொல்ல வந்தவங்க உங்கள பணயமா காட்டி என்னை சாக சொன்னாங்க. ஆனா நான் அவங்க மிரட்டுறதுக்கு முன்னாடியே சாக தயாராகி மாத்திரைகளையும் சாப்பிட்டுட்டேன். எனக்கு இருந்த ஒரே பயம் எதிர்காலத்துல அவங்களால உங்க உயிருக்கு ஆபத்து வருமோனு தான். அவங்க போனதுக்கு பிறகு உங்கள எப்படி காப்பாத்துறதுனு யோசிச்சேன். எதாவது ஏடாகூடமா பண்ணி அதுவே உங்க உயிருக்கு ஆபத்தா ஆயிடக் கூடாதுன்னு தோணுச்சு. அதனால சின்ன சின்னதாக சில விஷயங்கள சந்தேகம் வர்ற மாதிரி செய்தா போலீஸ் இந்த தற்கொலைய கொலைனு யோசிப்பாங்கனு முடிவு பண்ணேன். அவன் வீட்டுக்குள்ள எப்படி வந்தான்னு எனக்கு தெரியாது. உங்க கிட்ட இருந்து சாவி எடுத்துட்டு வந்து வாசல் கதவு வழியா வீட்டுக்கு வர அதிக வாய்ப்பு இருக்குன்னு தாழ்ப்பாள் எல்லாத்தையும் திறந்து வெச்சேன். மாடிக் கதவ எப்பவும் போல நான் பூட்ட மறந்துட்டேன். அப்புறம் அந்த லெட்டர் நான் தான் எழுதினேன். சந்தேகம் வர்ற மாதிரி கைப்படாம எழுதினேன். வேணும்னே ழகரம் எழுதும் போது மட்டும் என்னோட பாணியில் எழுதாம மாத்தி எழுதினேன். இதெல்லாம் வெச்சு யாருக்காவது சந்தேகம் வந்து விசாரிச்சு உங்கள காப்பாத்துவாங்கனு நம்பினேன். கடவுள் கருணையால இப்ப நீங்க பாதுகாப்பா இருக்கீங்க. என்ன தான் சந்தேகத்துக்குரிய விதத்துல அந்த லெட்டர எழுதினாலும் நான் பொய் சொன்னதா எழுதி இருந்தது தவிர அதுல இருக்குற எல்லா விஷயங்களும் உண்மை தான். ராஜேஷ் நான் காய்க்காத ஹைப்ரிட் பூ தான். உங்க சந்ததி வளர விதைகளை தர முடியாத மலட்டு பூ தான். ஆனா வாழ்ந்த வரைக்கும் நல்ல நறுமணத்த குடுத்து இருப்பேன்னு நம்புறேன். அந்த உரிமையில ஒரு வேண்டுகோள் வைக்கப் போறேன். எனக்காக நீங்க அத செய்யணும். நான் ஒருத்தருக்கு ஒரு வார்த்தை குடுத்து இருக்கேன். அத நீங்க நிறைவேற்றணும். கடைசியா நான் உங்க கிட்ட ஃபோன்ல பேசும் போது நம்ம ஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாம்’னு தான் சொல்ல வந்தேன். நீங்க தான் தப்பா புரிஞ்சிட்டு என்னை பேச விடல. நேசக்கரங்கள் ஆர்ஃப்னேஜ்ல ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கிறதா சொல்லி இருந்தேன். கல்யாண நாள்ல உங்கள சர்ப்ரைஸ் பண்ணி அந்த ஆர்ஃப்னேஜ் கூட்டிட்டு போற ஐடியால தான் இருந்தேன். ஆனா அது நடக்கல. அவங்க நான் ஒரு குழந்தைய தத்து எடுத்துக்க வருவேன்னு நம்பிட்டு இருப்பாங்க. அந்த வார்த்தையை காப்பாத்துங்க. அப்புறம் ஆர்ஃப்னேஜ் ரூல்படி சிங்கிள் டேட் நம்பி குழந்தைய தத்து குடுக்க மாட்டாங்க. அதனால உடனே நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும். நீங்க யார கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சரி. எத்தனை குழந்தைகள பெத்துக்கிட்டாலும் சரி. எனக்காக அந்த ஆர்ஃப்னேஜ்ல இருந்து ஒரே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்துங்க. எனக்கு அது போதும்”

திடுக்கிட்டு தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தான் ராஜேஷ். அவனது ஃபோனில் ரிங் டோன் அலறியது. எடுத்து பேசினான்

“ஹலோ”

“ஹலோ நேசக்கரங்கள் ஆர்ஃப்னேஜ்ல இருந்து பேசுறேன். Mrs. ரேவதி இருக்காங்களா?”

***முற்றும்*** 

தொடர்புடைய சிறுகதைகள்
அத்தியாயம் 7 | அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 குறிப்பு: இந்த பகுதியில் சில விஷயங்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டி இருக்கிறது. அதனால் சில தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மேற்கொண்டு படிப்பதை தவிர்க்கவும் எனக் கேட்டுக் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் 9 | அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 "ஒரு நிமிஷம் இரு" நந்தினிக்கு ஃபோன் பண்ணேன் நந்தினி: "ஹலோ" நந்தா: "என்னை பெரிய வம்புல மாட்டிவிட்ருவ போல" நந்தினி: "என்ன வம்பு. சும்மா உளறாம சொல்றத செய்ங்க" நந்தா: "இது எதோ பைத்தியம் போலருக்கு" ரேவதி பலமாக சிரிக்கிறாள் நந்தா: "பாரு. கத்திய காட்டுனா பயப்படாம சிரிக்குது. ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 | அத்தியாயம் 10 "ஹே நந்தினி உண்மையாவே நீதான் பேசுறியா? ஹ்ம்ம் சரியா தான் சொல்ற. ஆனா இதுக்கு நீ ராஜேஷ சரி கட்டணுமே. ஒத்து வருவானா?" "இல்லக்கா. ஆனா அவனுக்கு குழந்தை ஆசைய தூண்டப் போறேன். ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 | அத்தியாயம் 6 "வாட்? அப்ப ராஜேஷ் சேலத்த விட்டு வெளியவே போகலயா?" "ஆமாம் மேடம். உங்கள கேட்காமயே இன்னும் சில விஷயங்கள் சேகரிச்சேன். அதுல சில புது விஷயங்கள் கூட கிடைச்சு இருக்கு" "அது என்ன?" "ராஜேஷோட லாஸ்ட் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் 5 | அத்தியாயம் 6 | அத்தியாயம் 7 கதிரவன்: "என்ன மேடம் சொல்றீங்க?" கவிதா: "சம்பவம் நடந்த அன்னைக்கு ராஜேஷ் எங்க இருந்தாரு தெரியுமா?" கதிரவன்: "வெளியூர் போய்ட்டதா சொன்னாரு மேடம்" கவிதா: "இல்ல. அன்னைக்கு வீட்டுல இருந்து கிளம்பின ஆள் நேரா நந்தினி வீட்டுக்கு தான் போய் இருக்காரு. ...
மேலும் கதையை படிக்க...
காய்க்காத பூக்கள்
காய்க்காத பூக்கள்
காய்க்காத பூக்கள்
காய்க்காத பூக்கள்
காய்க்காத பூக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW