காப்பி போடுவது எப்படி? – ஒரு பக்க கதை

 

சனியனே! உனக்கு ஒரு காப்பிகூட போடத்தெரியலை!” என்று டபராவைத் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டான்.

ஆபிசில் இருப்புக் கொள்ளலை.

புது மனைவியிடம் இப்படி கடிந்து எரிந்து விழுந்திருக்கக் கூடாதுதான். போன் செய்தான். அதை அணைத்து வைத்திருந்தாள்.

ஒரு எஸ்.எம்.எஸ். ஏற்கனவே வந்து இருந்தது.

நான் அம்மா வீட்டுக்குப் போறேன் அவனுக்குப் பகீரென்றது.

மாலை ஆபிஸ் முடிந்ததும், மல்லிகைப் பூ, அல்வா எல்லாம் வாங்கிக்கொண்டு 15 கி.மீ ஸ்கூட்டரை விட்டு அவளது அம்மா விட்டில் போய் நின்றான்

‘மாப்பிள்ளை என்ன தனியா வந்திருக்காரு?’ என்று மாமியார் பதறியதைப் பார்த்ததும் அவள் இங்கு வரவில்லை என்று புரிந்தது. அசடு வழிந்தபடி சமாளித்து விட்டு திரும்பினான்.

வீடு பூட்டிதான் கிடந்தது. ‘சனியன், எங்கே போனா? சேச்சே…மறுபடியும் சனியன் வேணாம்’

அடுத்த தெருவில் அண்ணனுடன் அம்மா இருக்கிறாள்,அங்கே போயி அம்மா கையில காபி குடிச்சிட்டு வரலாம்.

அம்மா வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே பல் இளிக்க வரவேற்றாள். அவன் அருமை மனைவி.

என்னமோ அம்மா விட்டுக்குப் போறேன்னு எஸ்.எம்.எஸ். அனுப்பினே?

ஆமா…எங்க ஆம்மா வீடுன்னு நெனைச்சீங்களா. உங்க அம்மா வீடுதான் அத்தை கிட்ட காபி போட கத்துக்கிட்டேன்’ என்றாள் கீச்சுக் குரலில்

- வசீரகன் (ஜூலை 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
என்னைவிட மோசமான கணவன் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. சதைக்குள் சென்று தலை நீட்டிக்கொண்டிருக்கும் முள்ளை நெருடி நெருடிப் பார்ப்பது போல, என்னை நானே வருத்திக்கொண்டிருந்தேன். ஹரிணி, விநய், நான் – மூவரும் மெயின் ரோட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். நான் ஹரிணியிடமிருந்து ...
மேலும் கதையை படிக்க...
வீட்டின் முன் பக்க இரும்பு கேட் துருப்பிடித்துக் கிடந்தது. மெல்லத் தள்ளினாள் சிவகாமி. மெதுவாகக் கிறீச்சிட்டுத் திறந்து கொண்டது. நாதாங்கி பொருத்தப்பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது. காம்பவுண்டில் புல் மண்டிக் கிடந்தது. சின்னக் காம்பவுண்டுதான். புல் ...
மேலும் கதையை படிக்க...
கொட்டும் மழையில் மெட்டியில்லாத இரு பாதங்கள் மெல்லத் தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களாகப் பார்த்துப் பார்த்து நடக்க, மாலை இளம் இருட்டு, ஒதுங்கிநிற்க ஒத்துழைக்காத காரணத்தால் நனைந்துகொண்டே வீட்டை அடைந்தாள் வித்யா. "ஏம்மா இப்படி நனைஞ்சிட்டு வர்றியே போகும்போதே குடை கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
ரயில்வே காலணியின் கோடியில் அமைந்திருந்த அந்த இரண்டு ப்ளாக்குகள் எங்களுக்கு அமானுஷ்யமாகத் தெரியும். அவற்றின் முன்புறம் ஒரு பெரிய புளியமரம் அடர்ந்து கிளைபரப்பி நிற்கும். சாதாரணக் குருவிகள், காக்கைகள் மற்றும் எப்போதாவது குரல் கொடுக்கும் கிளிகளோடு பெயர்தெரியாத பல இறகு ஜீவன்கள் ...
மேலும் கதையை படிக்க...
குமார் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவன் அதனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து நல்ல மகிழ்ச்சியாகம் ஆடம்பர வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணதில் இருந்தான். கல்லூரியில் நன்றாக எல்லோரிடமும் பழகும் குணம் கொண்டவன் ...
மேலும் கதையை படிக்க...
ஆயிரமாயிரம் இரவுகள்
உண்மை அறிந்தவர்…
மெல்லச் சிரித்தது அல்லிக்குளம்!
சொல்லவந்த ஏகாதசி
இரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)