Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கல்வெட்டு

 

ஆயிரம்,500 ,நூறு 50,20,10,5,2,1 என வகை வாரியாய் எழுதப்பட்டிருந்த பேப்பரில் இன்னும், இன்னுமுமாய் நிறைய எண்களும் எழுத்துக்களுமாய் எழுதிக் காணப்பட்டிருந்தது.

எல்லாம்இவனால்எழுதப்பட்டிருந்தஎழுத்துக்கள்.இவனுக்கும்ஒருகாலத்தில்அப்படியானதொரு ஆசை இருந்ததுண்டு.குண்டுகுண்டாய்அழகாகஎழுதவேண்டும்.

எழுத்தை அழகான முறையில் பதிப்பிக்க வேண்டும். பேப்பரில் நோட்டில்,சுவரெழுத்துக்களில், தட்டி போர்டில் என நிறைய நிறைய கனவுகண்டிருக்கிறான்.அப்படிமனதில் சுமந்து கட்டிக் கொண்டிரு ந்த கனவு பஞ்சுப் பொதியாய்கலைந்துபோனமேகம் போல காணா மல் போய்விட ஆசை கொண்ட நினைப்பும் விருப்பமும் பள்ளிப் பருவத்திலிருந்து இன்று வரை நிறைவேறவும் கைவரப் பெறவும் இல்லாமலேயே இவனுக்கு நினைவு தெரிந்து சிலரை சொல்வது போல அலுவலக நண்பர் கே.வி.கேவின் எழுத்தை தீர்மானமான எழுத்து எனச் சொல்வான்.அச்சடிக்கப்பட்டது போல் இல்லா கூட எந்த நேரத்தில் எந்த மனோநிலையில் எழுதினாலும் கூட ஒரே மாதிரியாகவே காணப்பட்டஅவரது எழுத்து.(தூக்கத்தில் எழுப்பிஎழுதச் சொன்னா லும் இப்படித்தான்எழுதுவாரோதெரிய வில்லை இவன் அறிந்த வரை அவர் தூக்கத்தில் விழித்தோ எழுந்தோ பார்த்ததிலை.)

நணபர் K K S எழுத்தும்,டாக்டரின் எழுத்தும் அவ்வளவு பிரமாத மாய் இருக்கும். இது போல இவனைஆக்ரமித்த தொழிற்சங்க தலைவரின் எழுத்து மற்றுமான வேறு சிலரின்எழுத்து என இன்னும் பலபேரின் எழுத்து இவன்மனதை ஆக்ரமித்த போதும், இவனைஆட்கொண்டு இவனுள் ஆறாத ஆசையாய் முளை கொண் ட எழுத்து இன்று வரை இவனுக்கு கைவரப் பெறாதது குறித்து இருந்த வருத்தம்முன்புபோலஇப்போது இல்லை.அது குறித்து கவலை கொள்ளவும் இவனுக்கு நேரமும் இல்லை.

ஆளை அமுக்குகிற வேலைப்பளுவின் முன் அதெல்லாம் ஒன்றும் பிரமாதமில்லை என்கிற  நினைப்பும் அதெல்லாம் இரண்டாம் பட்சமே என்பதான சொல்லாடலும் கூடிப்போன பின் ஏன் அது குறித்த அனாவசிய மனக்கவலை எனத்தோணிப் போகிறதுதான்.

சுற்றிலுமாய் வலைக்கம்பி கட்டப்பட்டிருந்த சின்னதான ஒரு கவுண்டர்,அந்த வழியாகத்தான் அன்றாடம் லட்சங்களிலும் ஆயிரங்களிலுமாய் பட்டுவாடாவும் பணம் வாங்குவதுமாய் நடந்து கொண்டிருக்கிறது.

கையிருப்பு பணத்டை கணக்கில் கட்ட,தேவைபடுவோர் கணக்கிலிருந்து எடுக்க ,நகைக் கடன் வாங்க,மற்ற கடன் பெற என அன்றாடங்களில் மலர்ந்துபூத்த மனித முகங்க ளும், வாடிப்போன உள்ளங்களுமாய் நிறைந்து குடிகொண்டு வருகிற இடமா யும் பண வரவு செலவு நடக்கிற தனியார் நிறுவனமாயும் பணம் சுமந்து நிறைந்து காணப்படுகிற இந்த நிதி நிறுவனத்திற்கு வருகிறவர்களில் முக்கிய மாய் இவன் உட்பட அந்த நிறுவன ஊழியர்களால் அறியப்பட்டவர் லட்சுமிப்பாட்டிதான். லட்சுமி ப் பாட்டி, லட்சுமிப்பாட்டி,லட்சுமிப்பாட்டி எனஅவளை மூன்று தடவைக்கு மேல் கூப்பிட வேண்டும் அவள் இங்கு வருகிற நாளன்றின் போதெல்லாம் மாதம் ஒருமுறை பணம் எடுக்க வருவாள்.அது அவளுக்கென அவளது மகன் இங்கு போட்டு வைத்துள்ள பணம்.அதிலிருந்து மாதா மாதம் இவ்வளவு என்கிற அளவு மீறாத கணக்கில் எடுத்துக்கொளவாள்.அளவு மீறியும் எடுக்க மாட்டாள்.எடுக்கவும் முடியாது.கணக்கில் அளவாகத்தான் பணம் இருக்கும். தேவை யான நேரங்களில் வந்து கணக்கில் பணம் கட்டிவிட்டுப்போவார் நகரத்தில் இருக்கிற மகன். மகனுக்கும் லட்சுமிப்பாட்டிக்கும் மட்டுமில்லை,மருமகளுக்கும் அவளுக்கும் கூட ஆகாது. அவள் ஒரு போங்கு என்பார்கள்.

மகன் நகரத்தில் சின்னதான தொழிற்சாலை ஒன்று வைத்திருக்கிறார். ஏதோ இன்ஜி னிய ரிங் ஒர்க்ஸ் எனச்சொன்னதாய்ஞாபகம்.மாதம்ஒருமுறைஅவளது அம்மாவைப்பார்க்க வருவார். விருப்பப்பட்டால் உடன் வருவாள் மருமகளும் மருமகள் வந்த தடயம் தெரிந்து கொள்ள அவள் அணிந்திருக்கும் நகைகளே சாட்சி சொல்லும். பாட்டி சொல்வாள்,பாருப்பா இப்பிடித் திரிஞ்சா,,,,,,,,நகைக கெடந்தா வீட்ல வச்சிகிட்டு வர வேண்டியதுதான இப்பிடிப்போட்டு அளப்பீட்டுவராட்டி என்ன? என/ அவள் வந்து போகி ற ஒவ்வொருமுறையும் பாட்டியின் இந்த ஆதங்கத்திற்கு அர்த்தம் இல்லாமல் இல்லை.இப்பிடி நகைமாட்டுற ஸடாண்டு மாதிரி வந்துநின்னாமாமியாள சரியா கவனிக்காம நகையப் போட் டுட்டு மினிக்கீட்டு திரியிறான்னு லேசா பேசிக்கிற மாட்டாங்களா ஊருக்குள்ள.இப்பயே அப்பிடித்தான் ஏங்காதுல பட்டும்,படாமயும் பேசிக்கிட்டு திரியிறாங்க என்பாள்.

காலையில் அலுவலகம் திறந்தவுடன் முதல் ஆளாக வந்து நிற்பாள். சமயங்களில் அலுவலகம் திறப்பதற்கு முன்பாகவே வந்திருப்பாள்,கேட்டால் அரைமணி முன்பாகவே வந்துவிட்டதாகச் சொல்வாள்.என்ன அப்படிஅவசரம் என்றால் ஆமாம் சம்பளம் போடுங்க,ஏங் மகன் எனக்கு குடுத்துருக்குற சம்பளப்பணத்த எடுக்க நாயா வந்து நிக்கிறேன் என்பாள் இவனிடம்.

இவனிடம் எப்பொழுதுமே பிரியமாகவும், அன்பாகவும் பேசுகிற பாட்டி என்னப்பா இன்னைக்கு என்ன சாப்பாடு சாப்ட்ட காலையில, காலையில் வீட்ல சாப்ட்டயா இல்ல இனிமேதான் கடைக்குப் போயி சாப்ட்டு வருவியா, நீ எங்கயாயாவது பெரிய ஓட்டலா இல்ல போயி சாப்பு டுவ என்கிற அவள் இந்தக்கெளவியவும் அப்பிடியே ஓட்டலுக்கு கூட்டிக்கிட்டு போவியா என்பாள்.

வருகிற தினங்கள் தோறுமாய் அவளது பேச்சு பெருமாபாலுமாய் சாப்பாடு பற்றிதான் இருந்தி ருக்கிறது. காலைச்சாப்பாட்டை அலுவலகத்திற்கு கொண்டுவந்து கொண்டு வந்து சாப்பிட்டு க் கொண்டுக்கிற நேரமாகிப்பொன நாட்களில் லட்சுமிப் பாட்டி வந்தி ருந்தால் டிபன் பாக்ஸை எட்டிப்பார்க்க மறக்கமாட்டாள் மதியம் என்ன சாப்பாடு என கையோடு கேட்டும் வைப்பாள். அவள் வந்தவேளைமுடிந்துபோவதற்குள்ளாய் எப்படியும் மற்ற பேச்சின் ஊடாக சாப்பாடு பற்றியபேச்சைபத்துமுறையாவதுபேசியிருப்பாள். இல்லையெனில் அந்தப் பேச்சே பிரதானப் பட்டு நின்றிருக்கும்.

வலதுபக்கமாய் இருக்கிற கம்பூட்டர்.இடது பக்கமாய் தன் இருப்பு காட்டி அமர்ந்தி ருக்கிற ரூபாய் எண்ணுகிற மெஷின்,மற்றும் ஸ்டாம்ப் பேட், சீல், பேனா, பென்சில், வெகுமுக்கியமாய் அழிரப்பர்,,,,,என மற்றும் மற்றுமான பொருட்கள் ஆக்ரமித்திருந்த சின்னோண்டான கவுண் டரில் இதற்கெல்லாம் இடம் போக இவனது இருப்பும், வேலையுமாயும் பெருக்கல் குறி போட்டது போல மூன்றுபக்கமுமாய் அலுமினிய கம்பி வலைகள் அடித்தி ருக்க மேலே மூடப்பட்டிருந்த மரப்பலகையின் ஒருபக்கமாய் நின்றிருந்த சுவர் இவன் அமர்ந் திருந்த இடத்தை நான்கு பக்கமுமாய் அடைப்புக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த உணர் வைத் தந்ததாக இவனுக்கு பின்பக்கமாய் முதுகைத்தொட்டவாறு இருந்த சுவரில் காணப்பட்ட கப்போர்டில் என்ன இருக்கிறது என இவனும் இந்த இரண்டு வருடங்களாய் தெரிந்து கொள்ள விரும்பி யதில்லை.அதை திறந்தும் பார்த்ததில்லை,அது போல மரக்கப் போர்டுகள் இந்த கட்டிடத்தில் 7 இருந்தது.ஏழிலும் என்ன இருக்கும் என சரியாகச் சொல் லத் தெரியாவிட்டாலும் கூட அலுவலகப்பொருட்கள்தானிருக்கும் என மிக உறுதி யாகச் சொல்லிவிடமுடியும்.

நெடித்து உயர்ந்த கட்டிடமாய் அது.சொல்வார்கள் இந்த வீட்டை கட்டுகையில் பர்மா தேக்கை இழைத்துக்கட்டினார்கள் என.

சுத்தமாக 12 அடி உயரம் இருக்கிற கட்டிடத்தில் இவன் அமர்ந்தி ருந்த கவுண்டரின் பின்பக்க மாய்தான் கழிப்பறையும் ,பாத்ரூமும் இருந்தது. பாத்ரூமில் நெருக்கிப்படுத் தால் பத்து பேர் படுக்கலாம் போல அவ்வளவு விசாலமாய் இருந்தது.

பாத்ரூம் ,கழிப்பறை அதை ஓட்டி அமைந்திருந்த விசாலமான ரூம்,ரூமிலிருந்தே புறப்பட்டு மேல்சென்றஏணிப்படிகள்,,, என இன்னும் இன்னுமாய் இருந்த வீடு அலுவலகம் இருந்த இடத்தின் பரப்பையும் சேர்த்து ஆயிரம் சதுரடிகளாவது இருக்கலாம்.ஆனாலும் ஆபீஸ் இடம் காண வில்லை.

வருகிற கூட்டத்திற்கும், நடக்கிற வேலைக்குமாய் இடம் காணாமல் போய்விடுகிறது. ஒரு வேளை கட்டிடத்தை இப்போது இருக்கிற பொஷிசனிலிருந்து அப்படியே மாற்றி திருப்பிவைத்தால் சரியாகிப் போகுமா இடம் எனத்தெரியவில்லை.அப்படி மாற்றி வைக்கலாமா, சம்மதிப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள்?என்பது கேள்விக் குறியாகவே  இருந்தாலும் யோசிக்கலாம், மாற்றி வைப்பதுபற்றி.

81ன்னும்,54 கும் 33 றும் 26 மாய் எண்கள் இருந்த பேப்பரில் 1000 மும் 500றும்,,,, இன்னும் பிறவுமாய் கூட்டுச்சேர்ந்து கொண்ட சங்கமத்தின் மீது வைத்துதான் மதியம் சாப்பிடுவடுவ தற்காய் டிபன்பாக்ஸைதிறந்தான்.

மதியச்சாப்பாடு இன்று என்னவாய் இருக்கும் தெரியவில்லை. காலையில் கிளம்பும் போதே மனைவி சொன்னாள்.இவன் தான் ஏதோ ஞாபகத்தில் அவளது சொல்லை காதில் போட்டுக் கொள்ளவில்லை.அதுதானே நடக்கிறது பெரும்பாலுமாய் என்கிற தெல்லாம் இல்லாவிட்டாலும் கூட எப்பொழுதாவது ஒருமுறை இப்படிநடந்து போகிறது. அது சகஜமாகவும் ஆகிபோனது அண்மை களில் மதியச் சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்ள எதுவும் வைத்திருக்க வில்லை. வடை அல்லது ஏதா வது வாங்கிக்கொள்ளுங்கள் எனச் சொன்னதாய் ஞாபகம்.வருகிற அவசரத்திலோ அல்லது ஞாபகப் பிசகோ வாங்காமல் வந்துவிட்டான்.

வழக்கம் போல சாத்தின் மீது குழம்பு ஊற்றி வைத்திருந்தாள்.தயிர் பிளாஸ்டிக் டப்பாவில் தனியாக பலசரக்கு வாங்குகையில் வேறு ஏதோ பொருள் வாங்கியசின்ன டப்பா அது இப்பொழுது தயிர்டப்பா ஆகிப்போனது.இவன் வைத்திருக்கிற தண்ணீர் பாட்டிலும் அப்படித்தான். ஒண் ணரை லிட்டர் கலர் பாட்டில் அது.வாங்கிய கலர் காலியானதும் பாட்டிலை கீழே போட மனம் வராமல் தண்ணீர் கொண்டு வருகிற பாட்டிலாக உருமாற்றி விட்டான்.

ஒரு வேளை அவள் எப்பொழுதும் சொல்வது போல் வடை வாங்கிகொள்ளச்சொல்லியிருக் க லாம்.சரி இபோது இங்கு ஒன்றும் கிடைக்காது. மாரிக்கண்ணு கடைக்குப் போ னால் ஆம்ப்ளேட் வாங்கி வரலாம். அல்லது போன் பண்ணினால் கொண்டு வரலாம். அதில் எப்படியும் கால்மணிநேரம் ஆகிப்போகும். அந்த நேரத்தில் சாப்பிட்டு முடித்து விடலாம்.என குழம்பின் மணத்தையும் காரத்தையும் துணைக்குவைத்துக்கொண்டே முதல் கவளம் எடுத்து வாயில் வைக்கப்போகிற நேரம் டீக்கடைக்கார அம்மாள் வந்து விட்டாள்வடை எதுவும் வேணுமா எனக் கேட்டு அவள் உடுத்தியிருந்த சாயும் போன கலரில் இருந்த சேலை அவளில் ஒட்டாமல். ஏனோ அவளை ப்பார்க்க நேர்கிற கனங்கள் தோறும் மனம் கனத்துப்போவதாய் அவள் அப்படித்தான் மதிய வேளை ஸ்கூல்பிள்ளைகளுக்கு விற்பதற்காய் வடை போடுவாள். வடை என்றால் உள்ளங்கை அளவிற்கெல்லாம் இல்லை.சின்னதாய் பிறந்த குழந்தைக்கூட சாப்பிடுகிற சைஸிற்கு போட்டு முடித்துவிடுவாள்.

நடராஜன் அண்ணன் போட்ட அதே சைஸ்வடைதான்.அப்போது இண்னரை ரூபாய்தான். என்ன இப்போது வடைக்கு கொஞ்சம் ருசி கூடியிருந்தது.மாவு ஆட்டுகிற கையும், வடை சுடு கிற பக்குவமும், எடுத்துக் கொடுக்கிற மனதும் சேர்ந்தே இது மாதிரி ஆகிப்போனதாக நடராஜன் இருக்கும் போது இட்லி,தோசை,மொச்சை,வடை சமயங் களில்பூரிஎனக்கடை களைகட்டும், அங்கு சாப்பிட வருகிறவர்களு ம் தன்னை ஏதோ ஒருவிதத்தில் திருப்திபடுத்திக் கொள்ப ர்களாகவே வந்திருக்கிறார்கள்.அவர்கள் அப்படி திருப்திப் பட்டுக் கண்டது பண்டங்களின் ருசியாலா அல்லதுநடராஜனின் பேச்சா லா என்பது தெரியாமலேயே சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடன் சொல்லிப்போனவர்களே அந்தக்கடையின் வாடிக்கையாளர்களாக நிறைந்து தெரிந்த போதும் கூட கடை நஷ்டப்பட்டுக் கொண்டதாக அவர் போ தை நிறைந்தபொழுதுகளில் கூட தன்னை மறந்து சொன்னதில்ல.

போதை,போதை,போதை,மாலை வேளையாகிபோனால் அவரது தினசரி பொழுது போக்கு இதுதான்.பக்கத்து ஊரில் இருக்கிற ஒயின் ஷாப்புக்கு சென்று விடுவார். கருப்பண்ணன்தான் துணை அவருக்கு,போதை தலைக்கேறி கீழேசாய்ந்து விட்டால் தூக்கி வருவதற்கு இல்லை. அவர் அவ்வளவுக்கெல்லாம் போகவும் மாட்டார். மூடியை மோந்து பாக்குற கேஸீ என்பார்கள் அவரை ஊருக்குள் சக குடிகாரகள்.அவரது செய் கையும் அப்படித்தான் இருக்கும்.ஆனால் பேச்சு சுத்தமாக இருக்கும் எவ்வளவு போதையிலும் கூட யாரிடம் எப்படி பேச வேண்டும் என்கிற நிதான ம் கடை பிடிப்பவராக/ பின் கருப்பண்ணன்,,,,,,,,??? ஒரு சப்போட் டுக்காகத் தான்.தனியாகப்போகிற நினைப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆனால்அவரது திடீரான இறப்பு நாட்களின் நகர்வுகளில் டீக்கடை யையும் அவரது மனைவி யையும் தனிமைப் படுத்திவிட்டுப் போய் விட்டது.அதிகம் குடித்ததால் கல்லீரல் கெட்டுப் போய் விட்டது, மருத்துவம் பார்ப்பதில் இனி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் அவரை வீட்டுக்கு கூட்டிப்போங்கள் என மருத்துவர்கள் சொன்ன தினத்தன்றிலிருந்து வீட்டுக்கு கொண்டு வந்த இரண் டாம் நாள் இறந்து போனார்.

ஓயாத குடியினால் வந்த வினை என்கிற பேச்சுடன் அவர் இது நாள் வரை அடையாளம் சுமந்து நின்ற கடையில் டீக்காரம்மா என அவரது மனைவி நிற்கவேண்டியதாகிப் போகிறது. அந்த நிற் றலே அவளை இரண்டரை ரூபாய்க்கு வடை போட வைத்திருக்கிறது.

அவள் விற்கும் இரண்டரை ரூபாய்க்கு இந்த சைஸே அதிகம் என்கிறார்கள். ஆனாலும் ஸ்கூல் ப்பிள்ளைகளை மனதில் தக்க வைத்துசெய்யும் போது இப்படித்தான் செய்யவேண்டியிருக்கி றது என்கிற அவளது சொல்லுடன் வடையைகொண்டு வரச் சொல்லி விட்டுகையில்அள்ளிய இரண்டாம் கவளம் சாப்பாட்டை சாப்பிடான்.

1000, 500, 100, 50,20,10,5,2,1எனஎழுதப்பட்டிருந்த பேப்பரில் 81,54,66,33,,,,,,,,,,,,,,என இன்னும், இன்னமுமான எண்களும், எழுத் துக்களுமாய்கைகோர்த்துக் கொண்டு. 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த நேரத்தில் அவளை அங்கு வைத்துப பார்ப்போமென எதிர்பார்த்திருக்கவில்லைதான். மென் பனி பொழிந்த முன் மாலைப்பொழுது, இன்று பனியின் தாக்கம் சற்று கூடுதலாகவே தெரிந்தது, அழுத்திய உடல் சோர்வை விடவும் பசியும்,ஒண்ணுக்கும் நெருக்கிக்கொண்டு வந்தது, இதில்பசியைதாங்கிக்கொள்ளலாம்,முட்டிக்கொண்டுவருகிறஒண்ணுக்கை என்ன செய்து எங்கிட்டுக்கொண்டு போய் தள்ளுவது எனத்தெரியவில் லை, தள்ள ...
மேலும் கதையை படிக்க...
இடதுக்குத்தெரியாமல் வலது கையில் ஒட்டிக்கிடக்கிற மண் துகள்கள்உதிர்ந்துவிடுகின்றன,கையில்மெலிதாயும்அடர்ந்துமாய்இருக்கிறபூனை முடிகளிலிருந்தும்அதுஅல்லாத வெற்று இடங்களில் இருந்து மாய்/ கையில்அடர்ந்து நிற்கிற மென் முடிகளை எடுத்துவிடலாம் ஷேவிங் பண்ணும்போதுஎனநினைப்பதுண்டு வெயில் நேரங் களிலும் அதிகமாய் வியர்த்து உப்புப்படிந்து விடுகிற பொழு துகளிலுமாய்/ஆனால்என்ன தான்கறாராகமுடிவெடுத்தாலும் அதை அமுல் செய்ய ...
மேலும் கதையை படிக்க...
அப்பாக்களின் இறப்பு தவிர்க்க முடியாததும் நடப்பதும் தான் என்றாலும் கூட அவர்களின் இழப்பு எற்படுத்திவிட்டுச் செல்கிற வெற்றிடம் மிகப் பெரியாதாகவே. நண்பரின் அப்பா இறந்து போகிறார் ஒரு அதிகாலைப் பொழுதாக என போன் வந்த வேலை காலை 8.00 அல் லது 8.05 ...
மேலும் கதையை படிக்க...
பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தது கரிசல் காட்டு வேப்பமரத்தில் தூக்கிட்டு இறந்து போன சுப்புராமின் மகள் கஸ்தூரியக்காவைப் போலவே தெரிந்தது.மஞ்சள்க்கலர் சேலை,கட்டி அதற்கு மேட்சாய் ஜாக்கெட் அணிந்து தலைநிறைந்த மல்லிகைப் பூவுடனுமாய்த் தெரிந்தாள். வட்ட வட்டமா ய் சக்கரம் தாங்கியோ, உதிராமல் நின்ற ...
மேலும் கதையை படிக்க...
அன்பு நண்பருக்கு வணக்கம்.ரொம்பவுதான் நாளாகிப்போனது உங்களுக்கு கடிதம் எழுதி. ஆமாம்,,,,,,பெண்குழந்தைபிறந்திருக்கிறதாமே, சந்தோசம்,வாழ்த்து க்கள். தங்க ளுக்குதிருமணமாகி நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை. மனைவி கருவுற்றவுடன் ஸ்கேன் பார்த்து பெண் குழந்தை என்றவுடன் கலைத்து, “இனியும் கலைத்தால் மனிவியின் உயிரு க்கு ஆபத்து” ...
மேலும் கதையை படிக்க...
சிலந்தி வலை தட்டான்கள்…
இடம் வலம்…
விநாடி முள்ளின் நகர்வுகள்…
கரிசத்தரை…
பந்தக்காலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)