கல்யாண வைபோமே – ஒரு பக்க கதை

 

“அத்தே, இந்த மாசத்துலேருந்து எனக்கு இன்கிரிமெண்ட் வரும். பவானிக்காக நகைச்சீட்டில் சேரட்டுமா?” என்ற கங்காவை ஏறிட்டுப் பார்த்த கமலா, “ஆமா கங்கா, ஒன் தங்கச்சிக்குத் தான் யார் இருக்கா, ஒன் அம்மா ஒத்தை ஆளா என்ன செய்வா? நீயும் என் புள்ளையும்தான் பவானிக்குக் கல்யாணம் காட்சி செய்யணும்…தாராளமா சீட்டுல சேரு’’ என்றாள்.

“நீங்க மாமியாரக் கிடைக்கறதுக்கு நா குடுத்து வச்சிருக்கணும், அத்தே. என் கல்யாணத்தின் போதும், நீங்க அது வேணும், இது வேணும்னு
நச்சரிக்கலே. இப்பவும் என் தங்கச்சி கல்யாணத்துக்குக்கு உதவி செய்து பெருந்தனைமையா பேசுறீங்க’’ என்று கங்கா தெரிவித்தாள்.

பவானிக்கு கல்யாண ஏற்பாடு தொடங்கியது. மாப்பிள்ளை வீட்டார், ”பொண்ணுக்குப் பதினந்து பவுன் போடுங்க’’ என்று கறாராய்ச்
சொன்னார்கள்.

கங்கா, ‘’மாமி, இப்போதைக்குப் பத்து பவுன் நகை போடுறோம்…தீபாவளியின் போது மீதியைச் செய்றோம்’’ என்றதற்கு அவர்களும் சம்மதிக்க திருமணம் சிறப்பாய் நடந்தது.

கணவன் வீட்டுக்குக் கிளம்பும்போது, பவானி, அக்காவிடம், ‘’அக்கா, தீபாவளி வரைக்கும் காத்திருக்காதே, சீக்கிரமே நகைக்கு ஏற்பாடு
பண்ணிடு’’ என்ற போது கங்கா முகத்தில் சலனமேயில்லை.

- மு.சிவகாமசுந்தரி (பிப்ரவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
அலர்
மழை நாள் ஈரத் துணிகளுக் குன்னே ஒரு வாசனை உண்டு. ஜோதிக்கு அந்த வாசனை ரொம்பப் பிடிக்கும். ஜோதியும் நானும் ஹாஸ்டல்ல இருக்கிறப்ப, வேணும்னே துணி காயப் போடுற இடமா மூக்கை நுணுக்கிட்டுப் போய் நிப்பா. மழைன்னா, அவளுக்கு உசிர். பல்லவன் ...
மேலும் கதையை படிக்க...
"ஏண்டி பாமா, இன்னைக்கு நான் கண்டிப்பா வந்துதான் ஆகணுமா? நீயே கூட்டிகிட்டுப் போய்ட்டு வரவேண்டியதானே?" என்று குளிக்கக் கிளம்பியவன் நின்று சமையலறையை நோக்கி ஒரு முறை சத்தமிட்டான். "அப்பா, அம்மா இரண்டு பேரும் கண்டிப்பா வரணுமாம். அப்புறம் அங்கே ஏதாவது கேள்வி கேட்டாங்கன்னா ...
மேலும் கதையை படிக்க...
ரோசக்காரி
சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள். பெட்டியைத் திறந்து ‘சார்டிபிகேட்’ எல்லாவற்றையும் எடுத்து கவரில் வைத்தாள். ‘நான் போறேன்…!’ என்றாள் மொட்டையாக. ‘எங்கே.. பிறந்த வீட்டிற்கா..?’ என்றான் சுரேஷ் கிண்டலாக. முறைத்துப் ...
மேலும் கதையை படிக்க...
எதையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை கடைப்பிடித்து வரும் பரமசிவம், அன்றிரவு பின்வாசல் விளக்குகளை வேண்டுமென்றே எரியவிட்டது குமரனுக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் உண்டு பண்ணியது! விடிந்ததும்… “ஏம்பா… தொலைக்காட்சியையோ ஃபேனையோ நாங்க அணைக்க மறந்தாலே எங்களை திட்டி “எதையும் விரயம் பண்ணக்கூடாது’ன்னு ஆலோசனை சொல்ற நீங்களே… ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 உடனே ஜான் “நீங்க எல்லாம் ரொம்ப படிச்சவங்க.அவங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிக்கறாங்க.உங்க பொண்ணு சொன்னதே நீங்க கேட்டீங்களே.அவங்களே தயவு செஞ்சி பிரிச்சி விடாதீங்க” என்று மறுபடியும் ராமநாதனை கெஞ்சினார். ராமநாதன் பிடிவாதமாக ”நீங்க மூனு ...
மேலும் கதையை படிக்க...
அலர்
இனம் புரியாத வலிகள்
ரோசக்காரி
மன்னிப்பு – ஒரு பக்க கதை
ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW