கல்யாணமாம் கல்யாணம்!

 

விஜியிடமிருந்து குறுஞ்செய்தி வந்து இருந்தது பிரபுவுக்கு.

மாலை சந்திக்கவும் என்று.

என்னவாக இருக்கும் என்ற குழப்பத்தில் ஆபிஸ் வேலைகள் தேங்கின. இப்படி அழைக்கமாட்டாளே, என்னவாகிருக்கும் என்று குழம்பினான் பிரபு.

விஜி நல்ல வயதும், வனப்பும் மிகு, பிரபுவிற்கு ஏற்ற காதலியாகி வீட்டிற்கு தெரியாமல் இரண்டு வருடமாகிறது. அப்ப அப்ப ஏற்படும் சண்டையில் பிரிந்து எப்போது சகஜமாவார்கள் என்று இருவருக்கும் தெரியாது.

என்னவாக இருக்கும் என்ற கவலையிலே வழக்கமாக சந்திக்கும் இடம் வந்து காத்து இருந்தான்.

வழக்கம் போல் தாமதமாக வந்த விஜி, நீ இப்படியே உட்கார்ந்து இரு, எங்க அப்பா வேற யாருக்காவது கழுத்தை நீட்டுனு சொன்னா நான் கட்டிக்கிட்டு போயிகிட்டே இருப்பேன், அப்புறம் அவ்வளவுதான் என வந்ததும் எறிந்து விழுந்தாள்.

ரிலாக்ஸ் விஜி. ஏன் இப்ப டென்சன் ஆகிற? என்ன விஷயம் சொல்லு.

நீ எப்பதான் எங்க அப்பாவைப் பார்த்து பேசப்போறே? நானும் உன்கிட்ட சொல்லிகிட்டே இருக்கேன்.

நானும் உன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கேன். என் தங்கையின் கல்யாணம் ஆகட்டும், நான் இப்படி காதல் கல்யாணம் பண்ணினது தெரிஞ்சா என் தங்கையின் வாழ்க்கை பாதிக்கும், அதுவரை சமாளிப்போம் என்றுதானே பேசினோம் ,இப்ப இப்படி நெருக்கினால் என்ன செய்ய? என்றான்.

நேத்து கூட அப்பாவின் நண்பர், இருவரும் ஒன்றாக ஆர்மியிலே வேலைப் பார்த்தவங்க, வந்து அவரது சொந்தத்திலே ஒரு பையன் இருக்கான், நல்ல இடம் முடிச்சுடு என்று பேசிப் போனார். இவரும் ஆர்வமாக என்ன ஏதுனு விசாரிக்க ஆரம்பிச்சுட்டார். இதுக்கு மேலே நான் சொல்லாம இழுத்தேன்னா அவருக்கு சந்தேகம் வந்திடும், அவருக்கா தெரிஞ்சு என்மேலே கோபப் பட்டு, அதை மட்டும் என்னால தாங்கிக்க முடியாது என தன் தந்தை மேல் உள்ள பாசத்தை அவனிடம் கொட்டினாள்.

நல்லா இருக்கு, உன் நியாயம். நீயாவும் சொல்ல மாட்டே, நான்தான் உங்க அப்பாகிட்ட பேசனும், நீ ரொம்ப நல்லவ அப்படின்னு உங்க அப்பா மட்டும் நினைக்கனும், அவர் முழியைப் பார்த்தாலே நான் பயந்துடுவேன் , நான் வந்து அவர்கிட்டே பேசி உன்னை கல்யாணம் செய்துக்கனும்.

சில பல நல்ல விஷயம் நடக்கனும்னா, சில இழப்புகளை சந்திக்கனும் பிரபு. நீ வந்து பேசினா அதை வச்சே நான் ஆமாம், அப்படித்தான்னு சொல்லிடுவேன்.

ஓகே ஓகே.. நாளைக்கே பேசறேன்,என்றான் உறுதியாக.

மறுநாள் வீட்டிற்கே வந்து விட்டான்..

சார்,நான் பிரபு, எங்கப்பா இங்கே உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலிலே பட்டரா இருக்கார்.

நான் உங்கப் விஜியை என இழுத்தான் எச்சில் முழுங்கி…

என்ன விஜியை? என்று திரும்பி அவர் முறைத்தபடி கேட்கவே.. மனம் பதறியது.

காதலில் இருக்கிற தைரியம் அதை சொல்லும் போது ஏன் வரமாட்டேங்குது?

விஷயத்தை அப்பாவிடம் சொல்லி விட்டு பிரபுவை வரச்சொன்னதே விஜிதான், உள்ளே அடுபங்கரையிலே தாயும் மகளும் இருந்து கவனித்துக் கொண்டு இருந்தனர்.

படுபாவி நம்மளை இப்படி எக்கச்சக்கமா மாட்டி விட்டுட்டாளா?

கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கச் சொன்னா?!

யாரோட?

உங்களோட!

உள்ளே இருந்த இருவரும் கலுக் என்று சிரித்தனர்.

வாட்? என்றார்

சாரி,சார் உங்க மகளோட,

அவ கேட்கச் சொன்னாளா? நீயா வந்து கேட்கிறீயா?

நான்தான், இல்ல, அவதான்! என்றான் படப்படப்பாக!

என்னடீ! ஓவரா ஜாம் ஆவுது -இது அவள் அம்மா!

ரிலாக்ஸ் ! மை டியர் ….

பிரபு..என்றான்

எஸ் ,மை டியர் பிரபு,
ஏற்கனவே அவளுக்கு ஒரு இடம் பார்த்தாச்சு, அவங்களும் எங்களை மாதிரியே நல்ல வசதியான இடம், அங்க வாழ்ந்தால் என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்குமுன்னு நான் நினைக்கிறேன், நீ என்ன நினைக்கறே? என்று திருப்பிக் கேட்டார்.

அப்படின்னா உங்க பொண்னுக்கும் அந்தப் பையனுக்கும் கல்யாணம் இல்லையா? என்றான் பிரபு.

என்ன குழப்புகிறாய்?

இப்போ போடுவான் பாரு என் ஆளு ஒரு யார்க்கர். இது விஜி.

இல்ல சார், அப்போ அவங்க பணத்துக்கும் உங்க பணத்துக்கும்தான் கல்யாணம்?

அவங்க வசதிக்கும் உங்க வசதிக்கும்தான் கல்யாணம், இல்லையா? என கேட்க..

அப்படிதான் வச்சுக்கோயேன். என்றார்.

நாங்க ஒருவரை ஒருவர் மனசார விரும்புகிறோம்,
ஒன்றாக வாழ்ந்தால் மகிழ்ச்சியாக இருப்போம்,

மேலும் கல்யாணங்கிற பேரிலே நீங்க கஷ்டப்பட்டு உழைத்து சேமித்ததை செலவு செய்துட்டு பின்னாடி நீங்க கஷ்டப்படறதிலே என்ன அர்த்தம் இருக்கு சார்.

சிம்பிளா கோயில்ல திருமணத்தை முடிச்சு, அந்த பணத்தையும் நீங்களே வைத்து இருந்து உங்க வாழ்க்கையை ஜாம் ஜாம்னு வாழலாமே சார், என்று மாற்றுச் சிந்தனையாக கூறினான்.

இவர் கிளீன் போல்டாகி உள்ளே சென்றார்,

என்ன அப்பா? என் ஆளு எப்படி? என்றாள் விஜி.

இவன் பட்டர் பையன் இல்லடி!

பெட்டரான பையன்.என்று சம்மதம் தெரிவித்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
அனைவரின் இருப்பை அழிக்கும் கடைசி இடம். ஓ வென்று இருந்தது, கடைசியாக எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று எரிந்தபடி இருக்க, அருகே உள்ள கொட்டகையில் புல் பூண்டு முளைத்து , பயன்பாடாற்ற கொட்டகையில் ஆடு ஒன்று விளையாடிக் கொண்டு இருந்தது, தன் குட்டியுடன். வெட்டியான் ஈசானம் ஓரமாக அமர்ந்து தனது ...
மேலும் கதையை படிக்க...
யோவ்..இங்க வாய்யா! இதை போட்டுக்க, 202 எண் கொண்ட கைதி உடையை கொடுத்தனர். ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும், இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கனும், அங்கே போ! உடல் பரிசோதனைக்கு டாக்டர் வருவார்! என்று விரட்டினர். மருத்துவர் வந்த பின் அவரது உடல் முழு பரிசோதனை ...
மேலும் கதையை படிக்க...
அப்போ நாங்க கிளம்புறோம்! நல்லா யோசித்து முடிவைச் சொல்லுங்க! எனக் கூறி கிளம்ப எத்தனித்தனர். யோசிக்க ஒன்றுமில்லை! தாத்தாவின் முடிவே என் முடிவும் என திட்டவட்டமாக கூறினாள். லக்ஷ்மி. லக்ஷ்மி, ஒரே பெயர்த்தி, அரசு என்கிற திருவரசு தாத்தாவுக்கு. அப்போது லக்ஷ்மிக்கு பத்து வயதேயிருக்கும்! ஐந்தாம் வகுப்பு ...
மேலும் கதையை படிக்க...
மாவட்ட நீதிமன்றம், காலை நேர பரபரப்பு,புதிய நீதிபதி திரு. ராமன், பதவியேற்று இன்று முதல் அமர்கிறார், வழக்கத்திற்கு மாறாக போலிஸ் பாதுகாப்பு,குழு குழு வாக வழக்கறிஞர்கள்,பல தாலுக்கா மாஜிஸ்ட்ரேட்கள்,முன்சீப்கள், வாழ்த்துச்சொல்ல கூடியிருந்தனர். நீதிபதி அவர்களின் சொந்த மாவட்டம் இது,இங்கேதான் பள்ளி ,மற்றும் இளங்கலை படிப்பை ...
மேலும் கதையை படிக்க...
என்னம்மா! என்ன பன்றது உனக்கு, தலைவலி எல்லாம் எப்படி இருக்கு? பசங்க எல்லோரும் சொளக்கியமா இருக்கா, நீ கவலைப்படாதே!, நான் இருக்கேனே!, இந்தா! இந்த பூவை வச்சுக்கோ, இன்னிக்கு வெள்ளிக்கிழமை,நீ எப்போதும் செய்வியே விளக்கு பூஜை, இன்னிக்கு நான் பன்னினேன்,என்ன சிரிக்கிற, ஏதோ எனக்கு தெரிஞ்சதை ...
மேலும் கதையை படிக்க...
மயானம்
கைதி எண் 202
விவசாயி மகள்
ஒளஷதலாயம்
ஒற்றை நாணயம்

கல்யாணமாம் கல்யாணம்! மீது ஒரு கருத்து

  1. Janakiraman says:

    Mr.Ayyasamy, lovers love + parents permission=kalyanam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)