கரையும் உருவங்கள்

 

தலையைக் குனிந்த படியே நடந்து வந்து கொண்டிருந்தான். அந்தத் தெருவில் நடமாட்டம் குறைந்துவிட்டது. ஒரு வீட்டுக்குள்ளிருந்து.

‘ராதையின் நெஞ்சமே…’ கேட்டது. வழக்கமாக எந்த இடத்தில் அந்தப் பாடலைக் கேட்டாலும் நின்று ரசித்துக் கேட்பவன். இன்று நிற்காமல் போகிறான்.

தெருவின் திருப்பத்தில் மட்டும் ஒரு டியூப்லைட் எரிந்து கொண்டிருந்தது. டீக்கடைக்காரன் சாமான்களையெல்லாம் ரொம்பச் சொந்தத்துடன். தெருவில் பரப்பிவைத்துக் கழுவிக் கொண்டிருந்தான்.

“என்ன அண்ணாச்சி… படத்துக்குப் போய்ட்டு வர்றீங்களா?”

“இல்லேப்பா…” என்று தேங்கிக்கிடந்த கரித் தண்ணீரைத் தாண்டிக் குதித்தான். செருப்பு அறுந்து விட்டது. இரண்டு நாள்களாகப் பயமுறுத்தி வந்த செருப்பு. இன்று வீட்டுக்கருகில் ஆள் நடமாட்டமற்ற ராத்திரி வேளையில் அறுந்து போனது ஓரளவு நிம்மதியாய் இருந்தது; ஆனாலும்
நாளைக்குத் தைக்க வேண்டும். பதினைந்து பைசாவாவது ஆகும்….

குனிந்து அந்தச் செருப்பையும் மற்றொரு செருப்பையும் கழற்றிக் கையில் எடுத்துக்கொள்கையில் மனத்துள் பொங்கிய வேதனையை. ‘சே’ எனக் கூறிக் குறைக்க முயன்றான். பலசரக்குக் கடையின் முன்னால் பலகை பெஞ்ச் காறீயாய்க் கிடந்தது. அதிலேகூடப் படுத்துவிடலாம். எஸ். எஸ். எல். சி.படிக்காதிருந்தால் ஒருவேளை அதில் படுக்கத் தைரியம் வந்திருக்கக் கூடும்.
தொடர்ந்து நடந்தான்.

வீட்டுக்குள் விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

அடுப்படியில் விளக்கொளி தெரிகிறது. கதவைத் தட்டக் கூச்சப்பட்டு வெளியே நிற்கிறான். தெருவாசல் ஜன்னறீருட்டில் முகம் தெரிகிறது.

யாரென்று தெரிகிறதுக்குள் வாசல் கதவு திறந்து கொண்டது. அக்காதான் கதவைத் திறந்தது. அந்த அரை இருட்டில் அவள் தலையிலிருந்த பிச்சிப் பூவின் வாசனை தனியே குளிர்ச்சி தந்தது.

“ஏண்டா ஊமையா வாசல்லே நின்னுக்கிட்டிருக்கே? கதவைத் தட்டினா என்னடா? இவ்வளவு நேரமாச்சே. வெளியே வந்து பாத்துட்டுப் படுப்போமேன்னு. வாசலுக்கு வந்தேன்… எவ்வளவு
நேரமா இப்படி நிக்கிற…? ஏண்டா இப்புடி ஆயிட்டே.. கதவைத் தட்டினாத்தானே யாரும் திறப்பாங்க… நல்ல புள்ளைடா நீ? சரி… சரி…வா…”

திண்ணைக்கு அடியில் குனிந்து மெதுவாக சத்தம் கேட்காமல் செருப்பைக் கீழே வைத்தான். அக்கா கதவை தாழ்ப்பாள் போட்ட சத்தத்தில் விழித்துக் கொண்ட அப்பா தலையைத் தூக்கிப் பார்த்தார்.

“யாரு சங்கரனா? எங்கேடா இவ்வளவு நேரமா சுத்திப்பிட்டுவாரே? காலாகாலத்துல வந்து கடனப் பத்திட்டுப் படுத்தா என்ன? பொட்டப்புள்ள எம்புட்டு நேரத்துக்கிடா முழிச்சிக்கிட்டு இருப்பா…?”

சுவரோடு சுவராய் ஒதுங்கி நின்றவனைப் பார்த்து நீ வாடா எனக் கூறி உள்ளே போனாள் அக்கா. அடுப்படியைக் கழுவி விட்டிருக்க வேண்டும். இளம் பச்சை வர்ணத்தில் பளபள வென்றிருந்த சில
இடங்களில் ஈரம் காய்ந்து போயிருந்தது. ஒரு சாக்குத் துண்டை விரித்து.

சங்கரனை உட்காரச் சொன்னாள்.

“எனக்குச் சாப்பாடு வேணாம்” என்று நிலைப்படியருகே வந்து சொல்றீ விட்டுத் திரும்பிப் போக முயன்றான் அவன். வேகமாக வந்து.

அவன் கையைப் பிடித்திழுத்து நிறுத்தினாள்.

அவனது முகத்தையே கொஞ்ச நேரத்துக்குப் பார்த்தாள். அவன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான்.

“எதுக்குடா வேண்டாம்ங்கிற…. வா வந்து சாப்டுட்டுப்படு…பெரிய இவன் மாதிரிதான்…..”

இழுக்காத குறையாக இழுத்து வந்து. தோளைப் பிடித்து அமுக்கி. சாக்கின் மீது உட்காரப்பண்ணினாள். தயாராய்ப் பிசைந்து வைத்திருந்த சாப்பாட்டுத் தட்டை அவன்முன் வைத்துவிட்டு சிறிய மரப்பலகையைப் போட்டுக் கொண்டு எதிரே உட்கார்ந்து கொண்டாள்.

அவன் சாப்பிடவில்லை. தட்டையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா பார்த்துகிட்டேயிருக்கே… சாப்பிடு… ம்…. மத்தியானம் சாப்பிட்டதுதானே….. சாயந்தரங் காப்பிகூடக் குடிச்சிருக்க மாட்டியே…சாப்பிடு.”

அவளுடைய அழுத்தமான பிரியத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பொங்கி வந்த அழுகை தொண்டைக் குழியில் மரக்கட்டை மாதிரி தடுக்கிக்கொண்டு நின்றது.

பலகையை இழுத்துப் பக்கத்தில் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.

“ம்… கையைக் காட்டு…” சோற்றை உருட்டிக் கையில் போட்டாள்.

“ஒனக்கு மட்டுமாடா வேலையில்லாமே ஊர்ல இருக்கே? எவ்வளவு பிள்ளைகள் வேலையில்லாம உன்னைமாதிரி படிச்சுப் போட்டு வீட்ல இருக்கு. வீட்டுக்கு வீடு வாசப்படி. எனக்கும் தான் வயசும். பொழுதும் ஏறிகிட்டே போகுது. நான் யார்கிட்டேடா போய் அழட்டும்?…ம் கையை நல்லா விரி. சோறு கீழே சிந்திரப் போகுது..யார் வீட்டுக்கோ வர்ற மாதிரி தயங்கித் தயங்கி வாரே…. யார் வீட்லேயோ சாப்பிடுத மாதிரி கூச்சப்படுறே….. ம்…… வாயில் போடு. இன்னும் கொஞ்சம் சோறு கேட்டு வாங்கிச் சாப்பிட்டான். அங்கணத்தில் கைகழுவத் தண்ணீர் ஊற்றினாள்.

“பார்த்துப் போ… இதுதான் கால்மாடும் தலைமாடுமா படுத்துக் கெடக்கும். இந்தா. இதெல்லாம் எடுத்து வச்சிட்டு வாரேன். போயிப் படுத்துக்கோ…”

வேட்டியில் கையைத் துடைத்தபடி அறைக்குள் போனவன் விளக்கைப் போட்டான். பெரிய தம்பி புரண்டு படுத்தான். ஊஞ்சல் சத்தம் எழும்பித் தேய்ந்தது. அந்தச் சத்தத்தை அவனுக்கு நினைவு
தெரிந்த நாளிறீருந்து கேட்டு வருகிறான். அது அவனுக்கு ரொம்பப் பிடித்தமான சத்தம். அந்த ஊஞ்சறீல் தம்பி. அக்கா. அவன் எல்லோரும் லீவு நாள்களில் பஸ் விளையாடுவார்கள். அவன்தான் டிரைவர் கை நிறைய காலண்டர் தாளைக் கிழித்து வைத்திருக்கும் தம்பி கண்டக்டர். ஊஞ்சலை ஓடி ஓடி ஆட்டிவிட்டுவிட்டுக் கடைசியில் ஏறிக்கொள்ளும்போது. ஒரு முறை தவறி விழுந்து நெற்றியில் வெட்டிவிட்டது. நெற்றித் தழும்பிற்கு அவனது கை தானாகவே போயிற்று.

தம்பியின் சிதறிக்கிடந்த புத்தகங்கள் எல்லாம் எடுத்து அடுக்கி வைத்தான். நன்றாகப் படிக்கும் தம்பியைக் கஷ்டத்தோடு கஷ்டமாய் அப்பா படிக்க வைக்கிறார். ஆனால் அவனுக்கோ…..படிப்புமில்லை. வேலையுமில்லை.

சட்டையைக் கழற்றிக் கொடியில் போட்டான். படுக்கையில் சுவரோரமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். தூங்கப் போறதில்லை.

இருந்தாலும் படுத்தே ஆகவேண்டும். இது என்ன கஷ்டம்? வீட்டுக்குள்ளிருக்கவே சங்கடமாக இருந்தது.

அக்கா வந்தாள். அவனுடைய தலைமாட்டில்தான் அவளுக்குப் படுக்கை. “இன்னும் என்ன யோசனை பண்ணிக்கிட்டிருக்கே! படுக்க வேண்டாமா?”

பெருமூச்சுவிட்டான்.

இவன் தலையணையிலும் அவள் தலையணையிலுமாகச் சேர்ந்து உட்கார்ந்து கொண்டாள். மங்கிய விடி விளக்கு வெளிச்சத்தில் ரொம்ப அழகாக இருந்தாள். வீட்டில் எல்லாரையும்விட அவள் நல்ல சிகப்புதான்.

இருந்தும் கல்யாணம் ஆகவில்லை.

“அந்த கம்பெனில யாரோ உன் பிரண்ட் இருக்கான். வேலை விஷயமா வரச்சொன்னான்னு சொன்னியே. பார்த்தியா?”

கொஞ்சநேரம் பேசாமல் இருந்துவிட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தான்.

“பார்த்தேன். நாளன்னைக்கு வரச்சொல்றீ விட்டிருக்கான். வழியில் லாலா சத்திர முக்கில் ஆறுமுகத்து மாமாவப் பார்த்தேன். நாளைக்குத் தாளையூத்துக்கு வா. எங்க சூபர்வைசர்கிட்ட
சொல்லலாம்னு சொன்னா…”

ரொம்பப் பயந்து தாழ்ந்த குரலில் பேசினான்.

“அவுஹ வீட்டுல எல்லோரும் சௌக்கியந்தானா? அவுஹ பையன் வேலையிலே சேர்ந்தாச்சாமே…ம் பின்னே நம்ம அப்பாவை மாதிரியா? இவுஹளுக்கு இருக்கிற செல்வாக்குக்கு யார்கிட்டயாவது சொல்லியடிச்சு முயன்றாக் கிடைக்கும்…”

அந்த மாமாவின் பையனைக்கூட அக்காவுக்குப் பேசி விட்டு. ஒன்றும் நடக்கவில்லை.

“நாளைக்கு நீ தாளயூத்துக்கு எப்பப் போகப்போற?”

“என்னத்தைப் போகச் சொல்லுதே. அங்கேன்னாப்பலே வேலையை வெச்சுகிட்டுக் காத்திட்ருக்காஹளாக்கும்.”

“போடா முட்டாள். அந்த மாமா ஒன்னைய மெனக்கெட்டுப் பாத்துக்கூப்பிட்டிருக்கா; போய்ட்டு வருவியா….ம் பஸ்ஸக்குக் காசு வைச்சிருக்கியா? நீ காசு இல்லாட்டா சொல்லாமக் கொள்ளாம நடந்தேக் கூட போயிருவியே…”

“ம் இருக்கு…..”

“பொய்… சொல்லாதே.” கொடியில் கிடந்த அவன் சட்டையை உட்கார்ந்தபடியே கையை நீட்டி இழுத்தாள். ஒரு ஐந்து பைசா கீழே விழுந்தது. சட்டையில் இருந்து ஒரே வியர்வை வாடை.. பைக்குள் கையை விட்டுத் தேடினாள். இரண்டு கசங்கிப்போன பஸ் டிக்கெட்டை எடுத்து வெளியே போட்டாள்.

“எங்கடா காசு வச்சிருக்க! எனக்கு ஒன்னையத் தெரியாதாடா” என்று எழுந்துபோய் பீரோவைத் திறந்தாள். அவளுடைய துணிகள் இருந்த தட்டிலிருந்து ஒரு சாக்லெட் டப்பாவை எடுத்தாள். டப்பாவிலிருந்த சின்ன குங்குமச் சொப்பை எடுத்துக்கொண்டு வெளிச்சத்திற்கு வந்தாள். மடக்கி வைத்திருந்த ஒரு ரூபாய் நோட்டைப் பிரித்து அவனிடம் நீட்டினாள்.

“எதுக்கு அக்கா…” மெல்லச் சொன்னான் அவளை அண்ணாந்து பார்த்து.

“சரிதாண்டா… ரொம்ப பிகு பண்ணிக்கிடாதேடா…” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள். மீண்டும் அருகில் வந்து அமர்ந்தவள்.

சட்டையை எடுத்துக் கைமடிப்பைப் பிரித்தாள். அவனிடமிருந்த ரூபாயை வாங்கி அந்த மடிப்புக்குள் சுற்றினாள்.

“இன்னைக்குத்தானே இந்தச் சட்டையைப் போட்டே…அதுக்குள்ளே ஒரே வேர்வையா ஆக்கிட்டு வந்திருக்கியே. சோப்புப் போட்டுக் குளிக்கிறதை ஐயா விட்டாச்சு போலிருக்கு.”

அவளை நேருக்கு நேர் பார்த்தான்.

“எல்லாம் நான் பார்த்துகிட்டுத்தானே இருக்கேன். இவ வீட்ல கெடக்கவதானே இவளுக்கு என்ன தெரியும்னு நெனச்சுகிட்டு 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: வண்னநிலவன். ”அங்க போயி மரம் மாதிரி நிக்காதீங்க… ஒங்க தங்கச்சிகிட்டவும் அம்மாகிட்டவும் பேசுங்க!” ”என்னய போகச் சொல்லுதியே… நீயே போயிட்டு வந்தா என்ன?” ”ஒங்க தலையில என்ன களிமண்ணா இருக்கு? பொம்பள போயிப் பேசதுக்கும் ஆம்பள பேசதுக்கும் வித்தியாசம் இருக்குய்யா. நீங்க ஒங்க ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: வண்னநிலவன். ‘என்னடா இந்தப் பொம்பளை இத்தனை கண்டிஷன் போடுதாளென்னு வருத்தப் படாதீய.. எதையுமே கறாராப் பேசிக்கறது ஒங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. . என்ன சொல்லுதீய.. ? ‘ ‘சரிதான் சொல்லுங்க… ‘ ‘பம்பு அடிக்கும் போது மெதுவா அடிக்கணும். தக்கு புக்குன்னு ...
மேலும் கதையை படிக்க...
கம்பெனிக்குப் போகும்போதே எதிரே ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் வேலை இல்லையென்பது தெரிந்து போயிற்று. வெங்கடேஸ்வரா கபே திருப்பத்திலேயே கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததை அவனும் ஆவுடையும் பார்த்து விட்டார்கள். பேசாமல் அப்படியே வீட்டுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் ஆவுடை வீட்டுக்குத் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: வண்னநிலவன். எல்லாம்  முடிந்து விட்டது. இனிமேல் மதுரைக்கும் உடன்குடி ஜமால்மைதீன் குடும்பத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. பஸ்ஸில் சுபைதாளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த மெஹ்ருன்னிஸாவுக்கு சுபைதாளைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாகத்தான் இருந்தது. எவ்வளவு தங்கமான பையன் சுலைமான். ஒரு கெட்ட ...
மேலும் கதையை படிக்க...
ஊரிலே என்ன நடந்தால் தான் என்ன? அறுப்பின் பண்டிகை வந்துவிட்டது. கோயில் முன்னே இருக்கிற உயரமான கொடிக் கம்பத்தில் சிவப்புப் பட்டுத்துணியில் காக்காப் பொன்னிழைகள் பதிக்கப்பட்ட கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது. தினமும் காலையிலும் மாலையிலும் ஆராதனைகள் நடந்தன. அனேகமாக எல்லா வீடுகளிலும் விருந்தினர்கள் ...
மேலும் கதையை படிக்க...
மழைப் பயணம்
வீட்டுக்கார சொர்ணத்தாச்சி
அவனுடைய நாட்கள்
துக்கம்
கடல்புரத்தில்

கரையும் உருவங்கள் மீது 2 கருத்துக்கள்

  1. சேதுராமன் says:

    விழிகள் தன்னை அறியாமல் கலங்கிவிடுகின்றன . எழுத்துகள் காட்சிகளாய் கண்முன்னே விரிகின்றன .முடிவு என்ன என்றே சொல்லாமல் இருப்பது ஏனோ ??
    அருமையான படைப்பு

  2. Senthilkumar says:

    நடுத்தர குடும்பத்தின் ஒருவர்க்கு ஒருவர் சேர்ந்து துடிக்கும் இதயங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)