டீச்சர் வகுப்பில் நுழைந்ததுமே முத்துவை அழைத்தார்.
“இன்ணைக்கும் நீ பேரண்ட்ஸை அழைச்சிக்கிட்டு வரலியா?” டீச்சரின் கேள்வியால் தலை குனிந்தான் முத்து.
சுண்டினால் சிவக்கும் செம்மேனி உடைய தன் வகுப்புத் தோழர்களின் அப்பாக்களோடு, கருத்த மேனியும் தும்பையாய் வெளுத்த தலையுமாய் இருக்கும் தன் அப்பாவை ஒப்பிட்டு… அதனால் தாழ்வு மனப்பான்மை முத்துவுக்கு.
‘நான் என்ன பாவம் பண்ணினேன்… எனக்கு மட்டும் ஏன் அட்டைக் கரியில் இப்படி ஒரு அப்பா..?’ என்ற வேதனையோடு வீடு திரும்பிய முத்துவுக்கு அதிர்ச்சி.
அந்த குப்பத்திலேயே சிறிய அந்த ஓலைக் குடிசை முன் கலெக்டரின் சைரன் வைத்த கார். ஆங்காங்கே நின்றிருந்த அரசு அலுவலர்கள்.
என்னமோ ஏதோ என்று பதட்டத்துடன் குடிசை அருகே வந்தான் முத்து.
“நாளைக்கு டவுன்ல அமைச்சர்தலைமையில் அரசு விழா நடக்க இருக்குது. அதுல இயற்கை விவசாயத்தில் நிறைய சாதனையும், விவசாயத்துல புதுப் புரட்சியும் செய்து மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருக்கற உங்களைப் பாராட்டி கொரவிக்க இருக்கோம்… அதுக்கு ஸ்பெஷலா வெல்கம் பண்ண அமைச்சர் சார்பா நான் வந்திருக்கேன் ஐயா…” என்று முத்துவின் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் கலெக்டர்.
முத்துவின் மனதில் இப்போது கருப்பு வைரமாய் ஜொலிக்க ஆரம்பித்தார் அவனின் அப்பா.
- கதிர்ஸ் – பிப்-16-28-2021
தொடர்புடைய சிறுகதைகள்
பதினாலு வருடங்கள் என்பது ஒரு ஜெனரேஷன் என்று கணக்கு வைத்தால் சிவ முதலியார் ஐந்து ஜெனரேஷன்களைக் கடந்தவர். நல்லது கெட்டது எதுவாயிருந்தாலும் பத்திரிகையோ அழைப்போ வந்துவிட்டால் மட்டுமில்லை... தகவல் காதில் விழுந்துவிட்டால் கூடப் போதும், “பல வேலைகள்’ல நம்மை மறந்திருப்பாங்க …!” ...
மேலும் கதையை படிக்க...
"லதா மாதிரி மருமகளை பெற நான் கொடுத்து வச்சிருக்கணும் வேணி ." என்றாள் அகிலாண்டம்.
"அப்படியா! அவ்வளவு உயர்ந்த குணமா ஆன்ட்டி அவளுக்கு?" – போனில் வியந்தாள் வேணி
"சொன்னா நம்ப மாட்டே! அவள் வந்ததிலிருந்து என் துணிகளைக்கூட என்னை துவைக்க விடாம, அவளேதான் ...
மேலும் கதையை படிக்க...
"இதென்ன வீடா சினிமா தியேட்டரா..??"
நந்தினியின் எதிர்பாராத தாக்குதலில் மூவரும் நடுங்கினார்கள். குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டார்கள்.
"என்னதான் மனசுல நெனச்சிக்கிட்டிருக்கீங்க.. நீங்க செய்யிறது உங்களுக்கே நல்லாருக்கா.."
வால்யூமைக் குறைத்தார்கள்.
"எதிர்த்த வீட்டு கோபு சார் மாதிரி டிவியே கூடாதுன்னு கண்டிப்பா இருந்திருக்கணும். அவர் அப்பிடி ...
மேலும் கதையை படிக்க...
பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு கபாலி அரிவாளை வீசவில்லை.
‘சும்மா மிரட்டி வைப்போம்,’ என்ற எண்ணத்தில் கபாலி அரிவாளைச் சுழற்ற; தற்காத்துக் கொள்ள கையை நீட்டிய சுந்தரலிங்கத்தின் கை துண்டாகி விட்டது.
ஓரிரு வருடங்கள் எங்கெங்கோ ...
மேலும் கதையை படிக்க...
அமிர்தா ஆவி பறக்கும் ஸ்நாக்ஸ மற்றும் தேநீரோடு வரும்போது எல்லாம் மானேஜர் கரிகாலம் முகம் சுழிப்பார்.
அமிர்தா அலுவலக துப்புறவுப் பணியாளர். அவள் கணவன் அலுவலகத்துக்கு டீ, ஸ்நாக்ஸ் சப்ளை செய்பவன். இவள் வருகைக்குப் பின் அலுவலக ரெஸ்ட் ரூம் அனைத்தும் ஆபரேசன் ...
மேலும் கதையை படிக்க...
ஆறு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமியை ஒருவன் கையில் ஏந்தியிருக்க சுற்றிலும் ஆணும் பெண்ணுமாய்ப் பரபரப்போடு கூட்டம் தொடர அந்தச் சிறுமியின் வலது கண்ணில் குத்திநிற்கும் மரச்சிராய். ரத்தக் குழியில் முளை அடிதத்தைப் போல பார்க்கவே படு பயங்கரமாக.
டாக்டர் தாமஸ் ...
மேலும் கதையை படிக்க...
“டாக்டர் பசுபதி. பிரசித்திபெற்ற நரம்பியல் நிபுணரின் வருகைக்காக அந்த அந்த முதியோர் இல்லம் தயாராக இருந்தது.
“ரொம்ப கைராசி டாக்டராம்..”
“நோயாளிகளை ரொம்ப அக்கரையோட கவனிப்பாராம்…”
“அவரோட பிஸி ஷெட்யூல்ல நம்ம இல்லத்துக்கு வாரம் ஒருநாள் சேவை செய்ய வர்றது நம்ம அதிர்ஷ்டம்.”
இல்லம் முழுதும் இதே ...
மேலும் கதையை படிக்க...
"வழக்கு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது…" என்று சொன்ன மேஜிஸ்ட்ரேட் அடுத்த வழக்குக்கு ஆயத்தமானார்.
"சவ்வு மாதிரி இந்த இழு இழுக்கிறாங்களே எப்பதான் முடியப் போவுதோ…" அவிழ்ந்த தன் முண்டாசைக் கட்டியவாறு, தனக்குத்தானே புலம்பிக் கொண்டார் பக்கிரிசாமி.
"வக்கீல் சமூகம்… வருஷம் நாலு ஆகுது..இப்படியே ...
மேலும் கதையை படிக்க...
ராமநாத கனபாடிகளின் பேரன் மகேஷ்க்கு தீராத குழப்பம்.
மகேஷின் அப்பா சோஷாத்ரி அரசு மருத்துவ மனையில் ‘டி எம் ஓ’. அம்மா லெக்ஷ்மி மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்.
மகேஷுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். பெரிய சகோதரி ஊர்மிளா. இளைய அக்காள் மிருதுளா.
ஊர்மிளாவும் மிருதுளாவும் கூட ...
மேலும் கதையை படிக்க...
“மகேஷ்... தாத்தா உன்கிட்டே பேசணுமாம்...” – செல் போனை ஊஞ்சலில் வைத்துவிட்டு மீண்டும் சுந்தரகாண்டம் பாராயணத்தைத் தொடர்ந்தாள் பாட்டி.
“சொல்லுங்க தாத்தா...” என்றான் மகேஷ். அடுத்த நொடி “ சரி தாத்தா...” என்றான்.
வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஜெனரல் மெர்ச்சன்ட்டில் தாத்தாவுக்கு ‘அதை’யும், கடை ...
மேலும் கதையை படிக்க...
மாமியார் மெச்சிய மருமகள் – ஒரு பக்க கதை
மைண்ட்ஃபுல்னஸ் – ஒரு பக்க கதை
மதி நுட்பம் – ஒரு பக்க கதை