கதை!

 

பிரபல தமிழ் எழுத்தாளர் எழிலரசு அவர்கள் தன்னுடைய 86 – வது வயசில் காலமானார்.

கடந்த ஒரு வாரமாக தமிழ் நாட்டிலிருந்து வெளி வரும் அனைத்துப் பத்திரிகைகளிலும், அவரைப் பற்றிய செய்திகளையும், கட்டுரைகளையும் பிரசுரம் செய்து சிறப்பு செய்தன.

சில வாரப் பத்திரிகைகள் எழுத்தாளரின் போட்டோவை கறுப்பு வண்ணத்தில் அட்டைப் படமாகப் பிரசுரம் செய்து கௌரவப் படுத்தியிருந்தன.

அவர் எழுதுவதை நிறுத்தி பதினைந்து வருடங்களுக்கு மேலாகி விட்டன. எழுத்தாளர் எழிலரசு தன்னுடைய 86 – வது வயசிலும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். நல்லா இருந்த மனுஷன் இடுப்பு எலும்பு முறிந்து அகால மரணம் அடைந்ததில் நெருங்கிய உறவினர்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம்.

பதினாறாம் நாள் காரியத்திற்கு வந்திருந்த ஒரு உறவுக்காரக் கிழவி, எழுத்தாளரின் மனைவியை துருவித் துருவிக் கேட்டாள்!

“ மாமி!…அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீங்க?…பரண் மேல் ஏற ஏணி வைத்து ஏறி தவறி விழுந்திட்டார்!…”

“வயசான காலத்தில் கொஞ்சமாவது அறிவு வேண்டாம்?….ஏணி மேல் ஏறுகிற வயசாடி அவருக்கு?…அப்படி பரண் மேல் எதற்கடி ஏறினார்? …”

“ பரண் மேலே அவர் 50 வருஷத்திற்கு முன்பு அவர் எழுதி பத்திரிகைகளிலிருந்து திரும்பி வந்த கதைகளையெல்லாம் கட்டிப் போட்டு இன்னும் பத்திரமா வச்சிருக்கார்!…அதையெல்லாம் எடுக்கத் தான் ஏறினார்….”

“அதெல்லாம் இப்ப எதுக்குத் தேவை?….”

“ பாட்டி! ஐப்பசி மாசம் பல பத்திரிகைகள் தீபாவளி மலர் வேலையை ஆரம்பிச்சிடுவாங்க!.இவரிடம் கதை கேட்டு இரண்டு மூன்று பத்திரிகைகளிலிருந்து போன வாரமே லெட்டர் வந்திட்டது…”

“ இவர் தான் பத்து வருஷமா கதை எழுதறதில்லையே?..”

“ அது என்னமோ இந்தப் பத்திரிகைக்காரங்க இவங்க மாதிரி வயசானவங்களை விடறதில்லே! தீபாவளி மலர் தயாரிக்கும் பொழுது, எழுதறதை மறந்தவங்களை எப்படியாவது தேடிப் பிடிச்சு அவங்க பேரிலே ஒரு கதையைப் போட்டிருவாங்க!

அதனால் தான் பரண் மேல் ஏறி 50 வருஷத்திற்கு முன்பு திரும்பி வந்த கதைகளை எடுத்து எந்தக் கதையை எந்தப் பத்திரிகை திருப்பி அனுப்பியதோ அதே பத்திரிகைக்கு அனுப்பி அதை அவங்க தீபாவளி மலரிலேயே வரவச்சிடுவார்! .இவரைப் போல தீபாவளி மலர் எழுத்தாளர்கள் என்று ஒரு இருபது பேர்கள் இருக்கிறாங்க!…10 வருஷத் தீபாவளி மலர்களை எடுத்துப் பாருங்க! எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்!…தீபாவளி மலரிலே ஒருத்தர் கதை எழுத வேண்டுமென்றால் அவருக்கு குறைந்தது 15 வருடம் தீபாவளி மலர்களில் எழுதிய அனுபவம் இருக்க வேண்டும்!…”

“ இவரும் பரண் மேல் இருக்கும் குப்பையைத்தான் இந்த பத்து வருஷமா காலி பண்ணிட்டு இருந்தார்!…என்னவோ அவருக்குப் போதாத நேரம்!!…இந்த வருஷம் தவறி விழுந்திட்டார்!…” என்று சொல்லி விட்டு கண்ணைக் கசக்கினாள் அந்த எழுத்தாளரின் மனைவி! .

- பாக்யா நவம்பர் 7-13 2014 இதழ் 

தொடர்புடைய சிறுகதைகள்
எங்கள் வீட்டிற்கு நேர் பின் பக்கத்து வீட்டுப் பொன்னம்மாவுக்கு நிறைய சிநேகிதிகள். காலையில் இருந்து அவர்கள் வீட்டில் யாராவது வந்து விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். “ எப்ப பிரவம் ஆச்சு?...” “ இன்று காலையில் தான்!...” “ ஆச்சரியமா இருக்கே…. ஒரே பிரசவத்தில் மூன்றா?.....” “ ஆமாம்! ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் காலத்தில் வயசானவங்கதான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வெற்றிலையை மென்று கொண்டே அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம்! இந்தக் காலத்துப் பசங்க சில சினிமாக்களைப் பார்த்து விட்டு மதில் மேல் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டாங்க! அன்று மாலை ...
மேலும் கதையை படிக்க...
சபேசன் வீட்டு ‘கேட்’டை திறந்து கொண்டு மூன்று இளம் பெண்கள் வீட்டிற்குள்ளே நுழைந்தார்கள். விற்பனை பிரதிநிதிகளாக இருக்கலாம்! இனி மேல் பகலில் கூட வெளிக் ‘கேட்’டிற்கும் பூட்டு போட்டு விட்டால் தான், இந்த தொல்லையை தவிர்க்க முடியும் என்று சபேசன் நினைத்துக் ...
மேலும் கதையை படிக்க...
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில்தான், தினசரி மாலை நடைப் பயிற்சியை முடித்த பிறகு லலிதாவும், சித்ராவும் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக்கொள்வார்கள் . இருவருக்குமே அறுபத்தி ஐந்து வயசிருக்கும். சித்ராவின் கணவர் சென்ற ஆண்டு தான் காலமானார். அவர்களுக்கு கோவையிலிலேயே ஐந்தாறு பங்களாக்கள்உண்டு. ...
மேலும் கதையை படிக்க...
நேரு மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடத்தை பராமரிக்கும் வேலையை ஒரு தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைந்திருந்தது. செல்வம் காரை பார்க் செய்தவுடன், ஒரு தடித்த மனிதன் ஒரு துண்டுச் சீட்டை நீட்டி முப்பது ரூபாய் கேட்டான். “ என்னப்பா!...அநியாயமா இருக்கு….சைக்கிளுக்கு இரண்டு ரூபாய்…பைக்கிற்கு ஐந்து ரூபாய்…கார்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஒரே பிரசவத்தில் மூன்று!
தொப்பை!
இலவசம்!
அக்கரைப் பச்சை!
திருந்தாத சமுதாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)