கண்டிப்பு..!! – ஒரு பக்க கதை

 

கைபேசி அலறியது. எடுத்துப் பார்த்த சேகர் முகத்தில் பிரகாசம்.

மாலதி.! தலைப் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குச் சென்றவள்.

வீட்டை விட்டு வெளியே வந்து….

”சொல்லு மாலதி ? ” குசுகுசுத்தான்.

”உன் பிள்ளை வயித்தை விட்டு சீக்கிரம் வெளியே வர பாடாய்ப் படுத்துது.”

”சந்தோசம். உன் புருசன் வந்து பார்த்தாரா ? ”

”அவருக்கென்ன…அஞ்சு வருசமா தவமாய் தவமிருந்து கண்ட சொத்து. கட்டின பெண்டாட்டி நல்லவிதமா பெத்து எடுக்கனும்ன்னு கவலை. வாராவாரம் வந்து பார்த்துப் போறார். அப்புறம் ஒரு முக்கியமான விசயம்.? ”

”சொல்லு ? ”

”நான் ஊர்ல இல்லேங்குற தைரியத்துல அக்கம் பக்கம் பாயாமல் நான் பிரசவம் முடிச்சு திரும்புறவரை என்னையே நினைச்சு ஒழுங்கா இருக்கனும். என்ன ? ” என்றாள் கறாராய்.

”ச….ரி.” சேகர் பவ்வியமாய் தலையசைத்தான்.

”அது!!” அவள் கைபேசியை அணைத்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
முந்தானையால் மூடிய குழந்தையை இன்னும் நெருக்கி மார்போடணைத்து ஜன்னலோரம் இன்னும் நெருக்கி அமர்ந்து, வெளியே வெறித்தாள் தனலட்சுமி. பேருந்து ஏறி இவளுக்குப் பக்கத்தில் அமர்ந்த அம்புஜம் இவளை ஆச்சரியமாகப் பார்த்தாள். தனலட்சுமியின் அழுதழுது வீங்கிய முகமும், பரட்டைத் தலையும், அழுக்கில் கசங்கிய புடவையுமாக இருந்தவளை ...
மேலும் கதையை படிக்க...
கையில் பூக் கூடையுடன் கோயில் பக்கவாட்டில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டில் திரும்பியவளை நெருங்கினாள் அவள். . தொட்டில் கட்டியவளுக்கு வயது 28. நல்ல களையான முகம். எடுப்பான நாசி. அழகு சொட்டும் நல்ல அகலமான கண்கள். புருவ மத்தியில் பொட்டு. இவளை நெருங்கியவளுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
'பதினெட்டு வயசுப் பையனைப் பையனாய் நெனைக்காம பாலகனாய் நெனைக்கிறீயேய்யா பாவி.! புள்ளையைச் செல்லமா வளர்க்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா ?!' - இடியாய் எனக்குள் இப்படி ஏகப்பட்ட கடுப்பு, கொதிப்பு. ஆனாலும் என்ன செய்ய ? வகையாய் வந்து மாட்டிக்கொண்டேன். எல்லாம் காலத்தின் ...
மேலும் கதையை படிக்க...
அறிவழகன் என்னை நோக்கி நேராக வந்தான். இவன் என் நண்பன். பக்கத்து ஊர். ஆறு மாதங்களுக்கு முன் இப்படித்தான் வந்தான். முகம் ரொம்ப வாட்டமாக இருந்தது. '' என்னடா. .? '' என்றேன். '' எ. ..என் ம. .. மனைவி. .. எ. ..மனைவி. ..'' ...
மேலும் கதையை படிக்க...
அறையில் படுத்திருந்த தினகருக்கு உள்ளமெல்லாம் தித்திப்பு. நான்கு வருட இடைவெளிக்குப் பின் முதலிரவு ! வனிதா இன்று மதியம்தான் வீடு வந்து சேர்ந்தாள். எட்டு, பத்து வயது ராமு, கோமு குழந்தைகளுடன் கார் எடுத்துக் கொண்டு சென்று சென்னை விமான நிலையத்திலிருந்து அவளை ...
மேலும் கதையை படிக்க...
என்னாச்சு இவளுக்கு?!
ரம்யா…!
அப்ப்பா…ஆ !!
அவள்..! அவள்..! அவள்..!
வெளிநாட்டு வேலைக்காரி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)