அதிகாலை மணி 5.30. கூப்பிடு தூரத்தில் எதிரே வேகுவேகுவென்று வியர்வை வழிய நடந்து வரும் கதிரேசனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி, ஆச்சரியம்.
வயது ஐம்பது. ஓமக்குச்சி நரசிம்மன் உடல். அதில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு எதுவும் மருந்துக்குமில்லை என்பது சத்தியம். அப்படி இருக்கும்போது எதற்கு நடைப்பழக்கம் ?
‘பொழுது போகவில்லை என்றால் காலை எழுந்து பல் துலக்கி, காபி குடித்து…. வாசலில் வந்த தினசரியை எடுத்து மேய்ந்தால் மணி எட்டு. அப்புறம் அலுவலகம். அதற்கு எதற்கு நடை.? மனுசன் நடந்து எதைச் சாதிக்கப் போகிறார் ? ‘
‘எனக்குத்தான் இழவு எல்லாம் !’ மூச்சு வாங்க… அமர்ந்தேன்.
சிறிது நேரத்தில் அருகில் கதிரேசன்.
”வணக்கம் சார். என்ன நீங்களும் நடைப் பயிற்சியா ? ”
”ஆமாம்.”
”ஏன் ? ”
”ஒன்னுமில்லே….. என் மனைவி அதிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து வாசல் தெளிச்சு கோலம் போட்டு, அப்புறம் நான் அலுவலகம் கிளம்புறதுக்கு சமையல் அதுஇதுன்னு வேலை செய்துகிட்டே இருப்பாள். அதுல நான் எழுந்து பல் தேய்ச்சி, குளச்சி, காபி குடிச்சி, ஹாயா பேப்பர் படிச்சேன்னா…..அவளுக்கு வருத்தமாய் இருக்குமோ இல்லியோ… எனக்கு மனைவி வேலை செய்ய நாம உட்கார்ந்திருக்கிறோம் ஆணாதிக்கம்ன்னு கஷ்டமாய் இருக்கு. அதைத் தவிர்க்கத்தான் நான் இப்படி நடைபயிற்சி. இதுல அந்த வருத்தம் மறைஞ்சி உடல் ஆரோக்கியத்துக்கான பயிற்சி மனநிறைவு மட்டுமில்லாம நாம சுவாசிக்க நல்ல காத்துக்குக் காத்து, ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்.” முடித்து நடந்தார்.
அவர் எனக்குள் உயர்ந்தார்.
தொடர்புடைய சிறுகதைகள்
கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. அலமேலு முகம் சிவந்து புசுபுசுவென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
எழுந்து போய் கதவு திறந்தவளுக்கு சின்ன அதிர்ச்சி. கூடவே மலர்ச்சி.
''வா வா.....'' உள்ளே நுழைந்தவளை ஒருமாதிரியாக வாயார வரவேற்றாள். ...
மேலும் கதையை படிக்க...
சாலையோர குடிசை வாசலில் வலிகனைசிங் கடை. என்னையும், இன்னொரு ஆளையும் தவிர வேறு யாருமில்லை. என்றாலும் சாமுவேல் பிசியாக இருந்தான்.
பத்தடி தூரத்தில் பெரிய பெரிய இரும்பு குழாய்கள் ஏற்றிய லாரி ஒன்று ஜாக்கியில் நின்றது. அதன் பின் இரண்டு சக்கரங்களைக் கழற்றி ...
மேலும் கதையை படிக்க...
இரண்டாவது ஆட்டம். கொட்டிக் கவிழ்த்து நெல்லிக்காய்கள் போல கூட்டம் கொலேரென்று சிதறி பிரிந்தது.
நேற்று வெளியான படம் நான்காட்டத்தோடு கடைசி என்பதால் பார்க்க வேண்டிய நிலை. நண்பன் நடித்தான் என்பதற்காக கஷ்டம்.
சாந்தியிலிருந்து மாம்பலம் போகவேண்டும்.
ஆட்டோவைப் பார்த்தான் சேகர். இரண்டு மூன்று நின்றதில் கிடைத்தவர்கள் ...
மேலும் கதையை படிக்க...
உங்களுக்குச் சாமியைப் பிடிக்குமா ? எனக்குப் பிடிக்காது.!! - ஆத்திகமும் நாத்திகமும் எதிரெதிர் துருவங்கள் ஒன்று சேர முடியாத புகைவண்டி தண்டவாளங்கள், இணை கோடுகள். இருக்கு, இல்லை என்று எவரும் நிரூபித்தது இல்லை. இது இப்போதல்ல. ஆதி காலம் தொட்டே அப்படி.
இருக்கிறவர்களுக்குக் ...
மேலும் கதையை படிக்க...
பாலுவிற்குக் குழப்பமாக இருந்தது. எப்படி யோசித்தும் விடை கிடைக்கவில்லை.
இதற்கு மேலும் சிந்தித்தால் மூளை சிதறிவிடும். சம்பந்தப்பட்ட ஆளையேக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.! தீர்மானித்து நண்பன் வீட்டுப் படியேறினான்.
''வாடா.'' வரவேற்றான். ''என்ன ?'' விசாரித்தான்.
''கையில உள்ள பணத்தை வைச்சி ஏழை மக்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
கடவுள் பாதி மிருகம் பாதி…
நுணுக்கம்…! – ஒரு பக்க கதை