கணவனும் நானே! கயவனும் நானே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 6,158 
 

கார்த்தியும் கயல்விழியும் கூடி கலவி செய்த களைப்பில் பிரிய மனமில்லாமல் கட்டித் தழுவியபடி படுக்கையில் இருந்தனர். ஒற்றை வஸ்த்திரம் போர்த்திய நிலையில் உடுத்தியிருந்த ஆடைகள் யாவும் கட்டிலிலும் தரையிலுமாக கிடந்தன.

கயல்விழி, நான் ஒவ்வொரு சமயமும் உன்னை விட்டு பிரிய முடிவு எடுக்கும் போதெல்லாம், இப்படி வளைச்சு போட்டு கொல்றீயே டீ.. நான் என்ன செய்யட்டும் சொல்லு.?

வயசும் வாலிபமும் இருக்கிற வரையில் அனுபவிக்கப் போறோம், என் பையனும் உன் பொண்ணும் வளர வரையில் கூடிக்களித்திருபோம், அவர்களுக்கு வினவு வந்ததும் இப்படி முழுசா இல்லாமல் இலைமறை காயா இருப்போம்.

அது என்ன உன் பையன், என்பொண்ணுன்னு, சொல்றே நம்முடையதுன்னு சொல்ல வேண்டியது தானே, நான் எப்படி உன்னுடையவனோ அது போல பொண்ணும் உன்னுடையவள் தானே.!.?

ஐய்யோ சாமி, இலக்கியாவை நான் சொந்தம் கொண்டாடினாள், உம் பொண்டாட்டி என்னை உயிரோடு எரித்துடுவாள்.

ரொம்பத்தான் பயப்படுகிறாய் அவளுக்கு,

இதுக்கு பேரு பயம் இல்லை, உன் நிம்மதி.

என்னை நீ புரிந்து கொண்ட வகையில் உன்னை நான் புரிந்துக் கொள்ளவில்லை. அதை நினைக்கையில் எனக்கு வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கு. உன்னை விட்டுப் பிரிந்து போக மனசில்லாததற்கு இதுவும் ஒரு காரணம்.

நான் மனம் சார்ந்த உணர்வு பூர்வமா இருக்கேன், நீ உடல் சார்ந்த உணர்ச்சி பூர்வமாக இருக்கே அதான் வித்தியாசம். நாம எப்படி இருந்தாலும் நமக்குப் பின்னால் அக்கா தம்பி இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நானும் அதைத்தான் நினைக்கிறேன், இருந்தாலும் நாம, முன்ன இருந்தது போல நமது தனிப்பட்ட விருப்பத்துக்கு இருக்க முடியாது. ஒரு காலக்கட்டத்துக்குப் பிறகு நாம், நம் சல்லாபங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளின் வளர்ச்சி, அவர்களின் சந்தோஷத்தை பெரிதா எதிர்ப்பார்க்கிறதால சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். அப்படி அதை எதிர்கொள்கிற போது ஏற்படும் சிரம்மங்களை நம்மால் ஜீரணிக்க முடியாமல் போகும். நாம பிரிந்து விடலாம்.

நீ முடிவே பண்ணிட்டியா கார்த்திக்.,

இப்போது கூட நான் உன்னை விட்டு நிரந்தரமாக பிரிந்து விடுகிறேன் என்று சொன்னாலும் பிரிவு எனக்கு நரக வேதனையாக இருக்கிறது. உன்னை விட்டு பிரிந்து இருக்க முடியும் என்ற வைராக்கியம் உன்னை பார்க்க முடியாத ஏக்கத்தில் சுக்கு நூறாக உடைந்து விடுகிறது.

நானாக உன்னைப் போகச்சொல்லலை, நீ எப்பவும் என்கூட இருக்கனுமென்னு தான் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

இல்ல கயல்விழி இனிமேல் இது சாத்தியப்படாது.

இப்போ கவலைப்படுற நீ, என்னை காதலிக்கிற போது, நம்மைப் பற்றி நம் காதலைப் பற்றி நாம் இழக்கும் எதிர்க் காலத்தைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அப்போதைய சந்தர்ப்பத்தில் உன் தாயும், தகப்பனும், உறவுகளும் உனக்கு முக்கியமானவர்களாக பட்டனர். உன் வீட்டுக்கு சம்பந்தமில்லாமல் எங்கேயோ பிறந்த என்னை வேண்டாதவளாக்கி விட்டாய்.

உனக்கு அநீதி இழைத்தமைக்கு அன்று நீ என்னை அடித்து விரட்டி இருந்தால், இன்று நீ இருக்கும் பக்கம் தலை வைத்து படுத்திருக்க மாட்டேன்.

கயல்விழி களுக்கென்று சிரித்தாள்.

ஏன்டீ சிரிக்கிறே.?

சிரிக்காமல் என்ன செய்ய.? என் தனங்களின் மீது தலை சாய்த்து படுத்துக்கொண்டு பேசுற பேச்சா இது. அதை நினைச்சேன் சிரிச்சேன் என்று சொல்லி மீண்டும் சிரித்தாள்.

கார்த்திக் சடாரென எழுந்துக் கொண்டான். போர்வை விலகவே, கயல்விழி ஆடையில்லா தனங்களின் குறுக்கில் கை வைத்து மறைத்துக் கொண்டாள்.

வீட்டுக்குள்ளே, நாலு சுவத்துக்குள்ள நாம எப்படி வேணுமானாலும் இருக்கலாம், வெளியில் தெரியாது என்று நாம இருந்தாலும், நான் வந்து போவதை பார்ப்பவர்கள் நமக்குள் நெருக்கமான உறவு இருப்பதாகவே நினைப்பார்கள். அது உனக்கு உறுத்தலாக இல்லையா.?

ஹாங்… இருக்கத் தான் செய்யும், நான் உனக்காக மட்டும் என்று முடிவெடுத்து உன்னோடு வாழ்கின்ற போது மற்றவர்களைப் பற்றி நான் எதற்காக யோசிக்க வேண்டும்.?

ஆனால் நான் யோசிக்க வேண்டியதிருக்கிறது. என் மனைவியால் உனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனா உன்னால் அவளுக்கும், என் மகளுக்கும் பாதிப்பு இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமில்லை எனக்கும் கூட இருக்கு. ஊர்ல சிலர் என்னை, ஏற இறங்கப் பார்த்து ஏளனமாக சிரிக்கிற போது எண்சான் உடம்பும் கூசுது. முகத்துக்கு முகம் நேரில் பார்த்து ஏன்டா இப்படி என்று கேட்கிற போது சவுக்கடி படராற்போல இருக்கிறது.

நீ இங்கு வர்ற ஒவ்வொரு முறையும் இதைத்தான் சொல்றே, இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லை., இங்க பாரு கார்த்திக் நான் எப்பவும் ஒரு மனசோடு தான் இருக்கேன் நீ தான் பச்சோந்தியா பறிதவிக்கிறே. என்னை மறந்துடுன்னு சொன்னே, முடியாதுன்னு சொல்லியும் நீ கவிதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டே, அதோடு நிற்காமல் என்னக்கொரு மாப்பிள்ளையை பார்த்து கூட்டி வந்து இவனை கல்யாணம் பண்ணிக்குன்னு சொன்னே, அதுக்கும் முடியாதுன்னு சொன்னேன். என்ன காரணமென்று உனக்குத் தெரியும், உன்னை விட்டு பிரியா மனசில்லாமல் மறக்க முடியலை, மணக்க முடியலை.

மனமிருந்தால் மார்க்கமிருக்கும்.

என்னால உன் பொண்டாட்டிக்கு எந்த விதத்தில் பாதிப்பு ஏற்பட்டுச்சு.? அதனால அவளுக்கு என்ன இழப்பு வந்துடுச்சுன்னு நீ இப்போ புலம்பிக்கிட்டு இருக்கே.!.? நீ அவகிட்டேயும் உடல் உறவு வச்சுக்கிட்டு வர்றேல்ல., அதில் அவளும் சொகம் அடையறாள் தானே.?

ஐய்யோ . . இப்போ பிரச்சினை அதுவல்ல, நீ புரிந்து பேசுரியா இல்ல, புரியாமல் பேசுரியா என்று எனக்குத் தெரியலை. என் கெளரவத்துக்கு இழுக்கு வருகிற போது, நான் என்னை திருத்திக் கொள்ள வேண்டியதாகிறது. அதிற் ஒரு கட்டம் தான் நாமிருவரும் பிரிவது.

உன் இஷ்டம் அதுவானால் அதன்படியே செய்துகொள். நான் தடை செய்யப் போறதில்லை, கடைசியா என் ஆசையை மட்டும் நீ நிறைவேற்றுவதாய் எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடு.

கண்டிப்பாக செய்றேன். சொல்லு நான் என்ன செய்ய வேண்டும்.?

இது தான் கடைசி முத்தம், இது தான் கடைசி உறவு என்று அடிக்கடி சொல்லி ஒவ்வொரு முறையும் புதுசு புதுசா லீலைகள் செய்வாயே அது இல்லை இது.

எதுவா இருந்தாலும் சொல்லு கயல்விழி,

உடனடியா நிறைவேற்றுகிற காரியமில்லை அது, நீ என்னை விட்டு பிரிந்து விட்டாய் என்பதற்காக, நான் என் உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டேன், பிரிவின் தாக்கமே என்னை சிறுக சிறுக சாகடித்து விடும். அப்படி நான் இறந்து போகும் அந்த நாளில் என்னை நீ உன் மடியில் கிடத்தி ஒரு தாலியை கட்டி சுமங்கலியா வழி அனுப்பி வைக்க வேண்டும், செய்வாயா கார்த்திக்.

சோகம் இழையோடிய கண்ணீருடன் கார்த்திக் அவளின்

ஆசையை நிறை வேற்றுவதாய் சத்தியம் செய்து கொடுத்து விட்டு தன் வீடு திரும்பினான்.

கணவன் திருந்தி, முழுதாக கிடைத்த மகிழ்ச்சியில், மாமா இப்ப தான் நான் ரொம்பவும் சந்தோஷமா இருக்கேன் என்றாள் கவிதா.

கவிதா இப்போ மட்டுமில்லை எப்போதுமே நீ சந்தோஷமா இருக்கனும் என்பது தான் என் ஆசை, அதில எந்த குறையும் வராமல் பார்த்துக்கொள்வதில் நான் கவனமாக இருக்கிறேன். நீ தான் புரிந்துக் கொள்ளாமல் என்னை உதாசீனப்படுத்தி பேசுகிறாய்.

நீங்க நடந்துக்கொண்ட முறை தான் அதற்கு காரணம், தோழமையாகத் தான் பழகுகிறேன் என்று பொய் சொல்லி அவளை வப்பாட்டியாகத்தானே வச்சுக்கிட்டு இருந்து வந்தீங்க, உண்மையை மறைத்து உரக்க பேசமுடியுமா உங்களால, என்னையன்றி வேறு எவளும் உங்க ஞாயத்தை பொறுத்துக்க மாட்டாள்.

இனிமேல் நான் அப்படி தவறாக ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன், உன்னை கடுஞ்சொல் பேச மாட்டேன்.

நீங்கள் இனி அவள் வீட்டுப் பக்கம் போகமாட்டீர்கள் தானே.,

கண்டிப்பாக போக மாட்டேன். எனக்கு நீயும் நம்ம பொண்ணும் தாம் உலகம்.

சத்தியமாகத்தான் சொல்றீங்களா.? உங்களை நம்பலாமா.?

உன் மீதும் நம்ம பாப்பா மீதும் ஆணையிட்டு சொல்றேன், இனி நான் கயல்விழி வீட்டுப்பக்கம் போகமாட்டேன் போதுமா .? என்று சொல்லி சத்தியம் பண்ணினான்.

இரண்டு நாள் கழித்து. . கவிதா கேட்டாள். . நாம வாரணாசி போயிட்டு வரலாம் மாமா. அங்கப் போய் கங்கையில குளிச்சு, பரத்தையின் பாவத்தை கழிச்சுட்டு, நல்ல வாழ்க்கைக்காக காசி விசுவநாதர் கிட்ட வேண்டிக்கிட்டு வந்துடலாம் மாமா. என்ன சொல்றீங்க.?

நீ பரத்தையின்னு யாரை சொல்றே.,? கார்த்திக் கேட்டான்.

எல்லாம் அந்த சக்காளத்தி கயல்விழியைத் தான் சொல்றேன். சனியன் என்ன மாய் மாலம் பண்ணினாளோ,? எந்த மருந்து வச்சு தொலைச்சாளோ,? தெரியலை உங்களை பாடாபடுத்தி எடுத்துட்டா.,

பரத்தையின்னு, கயல்விழி தொழில் ரீதியா உடலை வித்து நயந்து வாழ்ந்தவள் கிடையாது. தலைவன் ஒருவனே, அது நானே என்று வாழ்ந்தவள். அன்புக்காக மட்டுமே என்னிடம் பழகினாள். உடல், பொருள், ஆவி என்று அனைத்தையும் எனக்காக மட்டுமே அர்ப்பணித்தாள். என்னிடம் காசு, பணம், நகை, என்று எதையும் எதிர்ப்பார்க்காமல் இருந்த உத்தமி அவள். காதல் என்ற ஒன்றுக்காக தன்னை தானே புடம் போட்டுக்கொண்ட தங்கம் அவள். அவளைப் பற்றி தப்பாக ஏதும் பேசாதே,

இருந்தாலும் என் புருஷனை களவாண்ட களவானி சிறுக்கித் தானே அவள்.

பெண்ணுக்கும் ஆணுக்கும் கற்பு நெறி ஒன்று தான். ஒருத்திக்கு இரண்டு பேரிடம் சுகம் கண்டு வாழ்ந்த நான் தான் பரத்தை. காதலித்த பெண் ஒருத்தி இருந்தும் உன்னை கட்டிக்கிட்டது முதல் குற்றம், தாலி கட்டிய மனைவி இருக்கும் போது காதலித்தவளுடன் வாழ்ந்தது இரண்டாவது குற்றம். கற்பிழந்த கயவன் நான், மாபாதகம் செய்த பாவி நான். நான்தான் என் பாவத்தை கரைக்க கங்கையில் தலை முழுக வேண்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *