கணவனா ஏத்துகிவீங்கலா?

 

ப்ரியா இன்னைக்கு நீ ஆப்டே லீவாமே! எங்கயாசும் வெளியில போரயா?

வெளியில எங்கயும் இல்லப்பா, இன்னைக்கு என்ன பொண்ணு பாக்க வாராங்க.

பொண்ணு பாக்கவா சொல்லவே இல்ல!

எங்கிட்டயே யாரும் சொல்லல.

என்னடி சொல்ற?

அம்மா இப்பதா போன் பண்ணி விஷயத்த சொன்னாங்க.

ஓ அதா ரோமியோ ஆபிசுக்கு வரலயா,

ரோமியோவா! யாருடி அது?

என்னடி தெரியாத மாதிரி கேக்குற உன்னோட ரோமியோதா.

என்னடி சொல்ற.

நம்ம ரமேசதாபா சொல்றே. அவனும் உனக்கு ரெண்டு வரு~சமா நூல் விட்டுக்கிட்டு இருக்கா, ஆனா நீ இதுவரைக்கு அவன ஏறெடுத்து பாக்கல. பாவம் ரமேஷ் இந்நேரம் எந்த பார்ல உட்காந்து இருக்கானோ!

கண்டதையும் உளறிக்கிட்டு இருக்காத நா கௌம்புறேன். ஆபீஸ் முடிஞ்சதும் நீயும் சாயாங்காலம் வீட்டுக்கு வந்துடு.

என்னடி இது இவ்வளவு லேட்டா வர்றே கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம்ல?

ஏம்மா இப்டி கால்ல ரெக்கைய கட்டிக்கிட்டு பறக்குற எப்டியும் மாப்ள வீட்டுக்காரங்க வரதுக்கு ஆறு மணியாயிடும். மணி இப்போ நாலுதானே ஆகுது. நா அவுங்க வரதுகுள்ள ரெடியாகிறேன் போதுமா?

சரிசரி பேசிக்கிட்டே இருக்காத இந்தா இந்த பொடவைய கட்டிட்டு சீக்கிரம் ரெடியாகு.

ஏதுமா இந்த ஸாரி! எப்ப எடுத்த?

நா எடுக்கல இப்ப உன்ன பொண்ணு பாக்க வர்ராரே மாப்ள அவர் எடுத்தது.

என்னது மாப்ள எடுத்ததா! ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு ப்ரியா கேட்டாள்.

மகளின் கேள்விக்கு சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு அம்மா காமாட்சி அடுப்படியை நோக்கி நடந்தாள்.

மணி ஐந்தரை ஆனதை காட்டிய கடிக்காரத்தை பார்த்துவிட்டு மீண்டும் கண்ணாடியை பார்த்து தன் சேலையை ப்ரியா சரிசெய்துக்கொண்டு திரும்பினாள்.

பின்னால் தீபா நின்றிருந்தாள். “வாவ்” ப்ரியா இந்த ஸாரி சூப்பரா இருக்குடி. யாரோட செலக்சன்?

மாப்பிள்ளையோட செலக்சன்.

என்னது மாப்பிள்ளையோட செலக்சனா! அப்பனா பொண்ணுப் பாக்குறதுக்கு முன்னாயே மாப்ள உன்னோட போட்டோவ பார்த்து உன் அழகுல மயக்கிட்டாரா?

தோழிகள் இருவரின் சுவாரஸ்ய பேச்சுக்கிடையயே காமாட்சி குறுக்கிட்டாள்.

ப்ரியா ரெடியா? மாப்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க.

உன்னோட அழகுல மயங்கி சொக்கிப்போன மாப்பிள்ளையோட அழக நா பாக்கவேண்டாமா, இரு நான் போய் மொதல்ல மாப்பிள்ள எப்படி இருக்காருன்னு பாத்துட்டு வந்துரேன் .

தீபா கதவுக்கு இடுக்கில் ஒளிந்துக் கொண்டு வந்திருந்த கூட்டத்தின் மீது பார்வையை மேயவிட்டாள். தும்பைப் பூ நிறத்தில் மல்லுவேட்டிக் கட்டிக்கொண்டு ஜோராக சோபாவில் உட்காந்திருந்த மாப்பிள்ளையை பார்த்தவுடன் தீபா அதிர்ச்சியடைந்தாள்.

எல்லோரும் அமைதியாய் இருக்க கூட்டதிலிருந்து ஒரு குரல் வந்தது. நல்ல நேரம் போரதுக்குள்ள பொண்ண பாத்துரலாமேன்னு.

ப்ரியாவின் கையில் காபி டம்ளரை கொடுத்து அவளை முன்னால் அனுப்பிவிட்டு அம்மா காமாட்சி மகளை பின்தொடர்ந்தாள். ப்ரியாவின் காதில் காமாட்சி ஏதோ கிசுக்கிசுத்தால், ப்ரியா காபி குடுக்கும் போது அப்டியே மாப்ளயோட மொகத்த பாத்துக்கோ.

ப்ரியா அவருதாமா மாப்ள பாத்துக்கோ அப்பா சண்முகம் சொன்னார்.

மாப்பிளையை நிமிர்ந்து பார்த்த ப்ரியாவுக்கு பேரதிர்ச்சி.

என்ன ப்ரியா அதிர்ச்சியா இருக்கா ! நீங்க என்னை இங்க எதிர்ப்பார்கலேல? இரண்டு வருஷம் இல்லீங்க, இன்னும் பத்து வருஷம் ஆனாலக் கூட நீங்க என்னோட காதல ஏத்துக்க மாடடேங்கறத நா புருஞ்சுக்கிட்டேன், அதாங்க வேற வழியே தெரியாம நா இந்த ரூட்ல வந்தேன் . நீங்க என்னை காதலனாதா ஏத்துக்கல, கணவனா ஏத்துகிருவீங்கலா?

வழக்கம் போல் பொண்ணு வெட்கப்பட்டுக்கிட்டு ரூமுக்குள்ள ஓடிருச்சு. அப்பறம் என்ன டும்டும்டும்…………..தான்.. 

தொடர்புடைய சிறுகதைகள்
இதுவரை பல விலங்குகளின் உயிருக்கு எமனாக இருந்த நரிக்கு இன்று ஒரு சிறிய முள் எமனானது. இரண்டு நாளைக்கு முன் தன் காலில் குத்திய முள்ளை எடுக்க முடியாமல் நரி வலியால் துடித்துக் கொண்டிருந்தது. நரியின் குகைக்கு பக்கத்தில் இருக்கும் புதரைதான் முயல்கள் காலம்காலமாக ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம். பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை ...
மேலும் கதையை படிக்க...
சகுந்தலையும் அஞ்சலையும் கட்டினாள் தன் மாமன் வீரையனைதான் கட்டுவோம் என்று இருவரும் பிடிவாதம் பிடித்தனர். ஆனால் வீரையனுக்கு தான் கிருஷ்ணனாக இருப்பதைவிட ராமனாக இருக்கவே நினைத்தான். என்ன செய்வதென்று தெரியாமல் வீரையன் சோக்கடலில் மூழ்கினான். குளக்கரையில் உட்காந்துக்கொண்டு தரையில் கிடந்த கற்கள் ஒவ்வொன்ரையும் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் எழுந்ததிலிருந்து சுமதிக்கு மனதே சரியில்லை. ஏனோ மனம் நிம்மதியில்லாமல் தவித்துக்கொண்டிந்தது. சுமதிக்கு மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸில் வைத்துவிட்டு இப்போது சாப்பிடுவதற்கு தட்டில் இட்லி வைத்து சாம்பாரை ஊற்றிக் கொண்டே மகளின் அறையை அம்மா ராஜேஸ்வரி திரும்பி பார்த்தால். அறை ...
மேலும் கதையை படிக்க...
கையில் திருப்பதி பிரசாதத்துடன் வீட்டு வாசலில் நின்ற பக்கத்து வீட்டு சுதாவை புன்னகையோடு உள்ளே வரவேற்றாள் சந்தியா. "அடடே, உள்ளே வா சுதா. திருப்பதியில இருந்து எப்ப வந்தீங்க?.  தரிசனமெல்லாம் எப்படி இருந்துச்சு! கூட்டமெல்லாம் அதிகம் இல்லயே?", என்று சந்தியா கேள்விகளை அடுக்கிகொண்டே ...
மேலும் கதையை படிக்க...
உதவி
விடாமுயற்சி
குளத்துக்கன்னி
வாழ்க்கைச் சக்கரம்
நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)