ஓடிப் போகலாமா? – ஒரு பக்க கதை

 

கல்யாண மண்டபத்தில் மணப்பெண் அதிகாலையில் தன் காதலனுடன் ஓடி விட்டாள் என்ற செய்தி எங்கும் பரவியது.

இரு வீட்டாருக்கும் மானப் பிரச்சினையானது. உடனடியாக மணப்பெண்ணின் தங்கையை சம்மதிக்க வைத்து திருமணம் முடிந்தது.

அதே நேரம் தன் காதலனுடன் மணப்பெண் ரிஜிஸ்தர் ஆபிஸில்.

“இருந்தாலும் நீ செய்தது துரோகம் மாலா” என்று காதலன் கேட்கவே,

“நான் இப்ப ஓடி வந்ததாலேதானே, என்னோட தங்கச்சிக்குத் திருமணம் நடந்திருக்கு. இதுக்கு முன்னால நான் உங்களை கலப்புத் திருமணம் செய்துகிட்டேன்னு தெரிஞ்சா என் தங்கச்சியை யாரு கல்யாணம் செய்துக்குவா?.

ஒரு வகையில் இது தப்பா இருந்தாலும் என் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திட்டேனே!” என்று தன் காதலன் கைப்பிடிக்க திருமணப் பதிவு செய்யப்பட்டது.

- மு.சிவசுப்பிரமணியன் (12-5-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
கிருஷ்ணன் மறுபடியும் தரையில் படுத்துக் கொண்டான். அவன் கால்களை நீட்டிய போது இடது கால் பெருவிரலை கௌவுவது போல் பற்றிக் கொள்ளும் பார்வதி, இழுத்து அதனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டாள். கிருஷ்ணனின் முகம் வேதனையில் பொங்கி வாடிக்கிடக்கிறது. பற்கள் நெரிபட கண்கள் ...
மேலும் கதையை படிக்க...
இரவானால் போதும், அப்பா! அப்பா! என என்னை ஏலம் போட ஆரம்பித்து விடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப் பிறகு வழக்கமாக இந்த ஏலம் தொடங்கிவிடும். வேறெதற்கு, எல்லாம் கதைகேட்கத்தான். படித்தது,கேட்டது,பார்த்தது என எல்லாம் சொல்லியாகிவிட்டது. கஜானா காலியென்றாலும் இலவசத் திட்டங்களை ...
மேலும் கதையை படிக்க...
“எல்லாரும் செட்டிலிருந்து பேக் அப் பண்ணுங்க. ஹீரோ போர்ஷான்ஸ் நாளைக்குத்தான்..." டைரக்டரின் குரல் அயர்வாய்க் கேட்டது. ஆர்யன் கேரவானில் ஏறி கதவுகளை அறைந்து மூடினான். சேரில் அமர்ந்து கால்களை நீட்டி பொத்தானை அமுக்கிவிட்டு ஜன்னலை லேசாய் திறந்து விட்டான். சேர் நீண்டு ...
மேலும் கதையை படிக்க...
நாளைய எட்டாம் நாள் கலியாணம். இந்நேரம் தாலி கட்டி முடிந்திருக்கும். வரிசை வைத்து காப்புக் களைந்து விட்டிருப்பார்கள். பந்திக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தாலும் இருக்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் இருப்பார்கள், புதுக்கயிறு கழுத்திலே ஏறி விட்டிருக்கும். பச்சை மஞ்சள் பூச்சோடு பசபசவென்று தவழும், ...
மேலும் கதையை படிக்க...
அலுவலக அறைக்குள் நுழைந்ததும், தன் இருக்கைக்கு எதிரே தீப்தி உட்கார்ந்திருந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்துக்குப் போகாமல் அங்கே அவள் வந்த காரணம் என்ன? ''என்னாச்சு? ஏதாவது பிரச்னையா? இல்லே, உடம்பு கிடம்பு சரியில் லையா?'' என்றான் கரிசனத்துடன். ''இல்ல நிக்கி, இந்தப் பக்கம் ...
மேலும் கதையை படிக்க...
கால்கள்
தாத்தா
கள்ளநெருப்பு
தற்செயல்
அந்தரங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)