ஒழுக்கம்

 

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்திருந்தது. கந்தசாமியின் இல்லம்.

“டேய் சரவணா..வாடா.. பரிட்சைக்கு நேரமாச்சு…”. என்.றான் கந்தசாமி. “இதோ வந்துட்டேன்டா… சாரி… இன்னிக்கு லேட்டாயிடுச்சு… வா..போகலாம்” என்.றான் சரவணன்.

இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வேக வேகமாக சென்றுகொண்டிருந்தார்;கள்.
கந்தசாமியின் அடுக்குமாடி வீட்டில் வாடகைக்கு குடியிருப்பது தான் சரவணனின் குடும்பம். இதனால் இவர்களின் நட்பு நகமும் சதையும் போன்றிருந்தது.

கந்தசாமி படிப்பில் புலி. ஆசிரியர் பாடம் நடத்தும் போதே அதை நன்.றாக புரிந்து படித்திடுவான். ஆனால் சரவணனக்கோ படிப்பு என்.றால் அப்படியொரு வெறுப்பு. இருந்தாலும். கந்தசாமியுடன் பழகியதிலிருந்து தான் எப்படியாவது பொதுத்தேர்வில் வெற்றிபெற்றால் போதும் என்ற எண்ணத்தில் தான் தேர்வுக்கு ஒருவித பயத்துடன் சென்று கொண்டிருந்தான்.

பொதுத்தேர்வு முடிந்தது. கந்தசாமியும். சரவணனும் கோடை விடுமுறைறை ஒய்யாரமாய் கழித்தார்கள்.
தேர்வுமுடிவு வெளிவந்தது. கந்தசாமி தான் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றான். சரவணணோ எப்படியோ தேறிவிட்டான். இது அவனுக்கு முதல் மதிப்பெண் பெற்ற சந்தோசத்தைக் கொடுத்தது.

இருவரும் தாங்கள் பெற்ற வெற்றியை சந்தோசமாக கொண்டாடினார்கள். அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் சரவணனின் அப்பாவுக்கு திருச்சிக்கு டிரான்ஸ்பர் கிடைத்ததால் அவன் கந்தசாமியை பிரிய நேரிட்டது.

கந்தசாமி தன் நண்பனுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தான்.

“நண்பா..நீ நலமா… நான் நலமாக இருக்கிறேன். உன்னுடைய அப்பா. அம்மாவைக் கேட்டதாகச் சொல்லவும். என் உயிர் நண்பனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்… உன்னை சந்திக்கும் நாள் தான் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருக்கும் நண்பா…” என கந்தசாமிக்கு சரவணன் வாழ்த்துமடல் அனுப்பியிருந்தான்.

வாடியிருக்கும் பூக்களெல்லாம்; தன்மீது தண்ணீர் படும்போது பூத்துக்குலுங்குவது போல கந்தசாமி இந்த கடிதத்தைப் படித்தவுடன் மகிழ்ச்சியில் திளைத்தான்.

பிரிவு நிரந்தரமல்ல என்பதுபோல நிiiவும் நிரந்தரமல்ல என்று காலம் செல்ல செல்ல இவர்கள் தம்தம் வேலையைப் பார்ப்பற்கே நேரம் சரியாயிருந்தது. அதனால் எந்தவித தகவல் பரிமாற்றமும் இல்லாமல் வேறு நண்பர்கள். வேறு சு{ழ்நிலை. வேறு வாழ்க்கை என மாறிவிட்டார்கள்.

சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து.

“அப்பா… நான் ரெடியாயிட்டேன்; அம்மா தான் லேட் ; சரி நாம அம்மாவை விட்டுட்டே டு்ர் போகலாமாப்பா.” என்றாள் சரவணனின் இரண்டு வயது மகள் சத்யா.

“மம்மி வரட்டும்டா செல்லம் ; மம்மி பாவமில்லையர் மம்மியையும் கூடிட்டுப்போகலாம்.” என்.றான்.
சரவணன் திருச்சியிலுள்ள Bழநுடு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைபார்க்கி.றான். இவனுக்கு தனது மகள் சத்யா என்றால் உயிர்; அவள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டான்; இப்போ அவளுக்காகத்தான் டு்ர் போக தயாராகிக்கொண்டுருக்கிறார்கள்.

சரவணன் பல ஊர்களுக்குச் சென்று சுற்றுலாவை முடித்துவிட்டு ஊருக்கு சேலம் வழியாகத் திரும்பி வந்துகொண்டிருந்தவேளையில். தான் பத்தாம் வகுப்பு படித்தப் பள்ளியைப் பார்த்தவுடன் சட்டென்று பிரேக் அடித்தான். அப்போது காரில் உள்ள அவனது மனைவி. தலையை முன்சீட்டில் இடித்து. “ஆ..அம்மா… ச்ச்ச்..வலிக்குது. ஏங்க பார்த்து போக மாட்டீங்களாங்க.” என்.றாள்.

இவன் அவள் பேசிய எதையும் பொருட்படுத்தாமல். சிறிது நேரம் அமைதியானான். அவன் மனதில் ஆயிரக்கணக்கான சிந்தனைகள் ஓடியது. பிறகு இயல்பான நிலைக்கு வந்து தனது மனைவியிடம். “நானும் என் நண்பன் கந்தசாமியும் இந்தப் பள்ளியில் தான் படித்தோம். அவன மாதிரி யாராலும் படிக்க முடியாது. எனக்கு எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தவனே அவன்தான். எனக்கு படிப்பு என்.றால் சுத்தமாக பிடிக்காது. அவனுடைய நட்பிற்குப் பிறகு தான் எனக்கு படிப்பில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. நான் இன்று ஒரு நல்ல வேளையில் இருக்கிறேன் என்.றால் அதற்கு முக்கியக் காரணம் அவன் தான்;. இத்தனை நாள் நான் எப்படி அவனை மறந்தேன் என்றே தெரியவில்லை. வா… பக்கத்தில தான் அவன் வீடு இருக்கு. பாத்திட்டு வந்திடலாம்.” என்றான்.

அவளும் ஆமோதித்தாள். அவன் மேலும் தொடர்ந்தான்.

“கண்டிப்பா கந்தசாமி இங்கிருக்கமாட்டான் என்று தான் நினைக்கிறேன். ஒருவேளை அவன் இங்கிருந்தால் நான் அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கனும்”. என்று கூறிக்கொண்டே கந்தசாமியின் வீட்டு முன்பு காரை நிறுத்தினான்.

“இங்கே இருங்க. நான் போய் பாத்திட்டு வந்திடுறேன்.” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு கந்தசாமியின் வீட்டு வாசலை நோக்கி நடந்தான்;.

கந்தசாமியும் அவனும் ஒன்றாக விளையாடிய அந்த இடத்தை தனது நினைவில் கொண்டே வீட்டுக்கதவைத் தட்டினான்.

கதவு எந்த சப்தமின்றி லேசாக திறந்தது.

காலைக்கதிரவனின் கதிர்களை கையில் தடுத்து. தலையில் முக்காடிட்டு ஒரு வயதான பெண்மணி. “யாருப்பா நீ” என்றாள்.

“கந்தசாமியின் வீடு இதுதானே..” என்றான்.

அதைக்கேட்டவுடன் அவள் வாயில் கைவைத்துக் கொண்டு குமுறி அழுதுகொண்டே உள்ளே ஓடினாள்.
உடனே கந்தசாமியின் தந்தை. “கந்தசாமியின் வீடு இதுதான்பா. ஆனா அவன் இப்போ உயிரோடு இல்லை.” என்று மெல்லிய குரலில் சொன்னார்.

அதைக்கேட்டதும் அவன் தலையில் இடி விழுந்தாற்போல் ஆயிற்று.

“அங்கிள். என்ன தெரியுதர் நான் உங்க வீட்ல வாடகைக்கு குடியிருந்த சுப்ரமணியின் மகன் சரவணன்.”

ஓ அப்படியா…

“அங்க்ள் நான் கந்தசாமிக்கூட இந்த ஊரில் தான் பத்தாம் வகுப்பு படிச்சேன்”.

“ம்..ம்..ம்… தெரியுது.. தெரியுது.. உங்க அப்பா பக்கத்தில இருக்குற அரிசி குடோனில் வேலை பாத்தவரு தானே..” என்றார்.

ஆமாம் அங்க்ள்.

கந்தசாமி நல்லா தானே படிச்சான். அப்புறம் எப்படி அங்கிள்.

“படிப்புல கெட்டிக்காரன் தான்; பத்தாம் வகுப்பில் ஸ்கூல் பர்ஸ்ட் வந்தான்; +2 ல சேர்க்கை சரியில்லாததால மார்க் குறைஞ்சிது; பிறகு மார்க் கம்மியானாலும் பரவாயில்ல. நான் உன்ன பணம் கட்டியாவது காலேஜ; சேத்திடுரேன்னு சொன்னேன்; ஆனா அவன் மார்க் கம்மியாயிடுச்சு. இனிமேல் நான் படிக்க மாட்டேன்னு வீட்டிலேயே தான் இருந்தான் ; சரி. நானும் பையன் சும்மாதானே இருக்கான்; ஏதாவது தொழில் செஞ்சித் தரலாம்னு அவனுக்கு ஒரு டிராக்டர் வாங்கிக் கொடுத்தேன்; அவனும் முதல்ல நல்லாதான் சம்பாதிச்சான்; அப்புறம் சேரக்கூடாதவங்களோட சேந்து கெட்டப்பழக்கத்துக்கு அடிமையானான்; நாங்களும் ஒரே பையன் என்பதால் இவனை கண்டிக்காமல் விட்டுவிட்டோம்; பேர் கெடும் பின்னே. மதி கெடும் முன்னே என்பது போல் அவன் புத்தி மாறியது. யார் பேச்சையும் கேக்கறதில்லை; யாருக்கும் பயப்படறதுமில்லை. சிகரெட். தண்ணி என முதலில் மறைமுகமாக செய்து வந்த அவன் பிறகு துணிச்சலாக கண்ணில்படும் இடமெல்லாம் செய்து வந்தான். இதனால் எனக்கு ரொம்ப கோபம் வந்திடுச்சு; ஒருமுறை அவனை அடிச்சுட்டேன். அன்றிலிருந்து என்னிடமும் பேசுவதில்லை. அவுங்க அம்மாகிட்ட மட்டும் தான் பேசிக்கிட்டு வந்தான்; பிறகு தொழிலை சரிவர கவனிக்காமல் நஷ்டமடைந்தான்; எல்லாத்தையும் வித்துட்டு தொடர்ந்து குடிக்க ஆரம்பிச்சான்; என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக திருந்துவான்னு தான் நினைச்சோம்; அதிகமா குடிச்சதால குடல் வெந்து செத்துட்டான். இப்படி அற்ப ஆயுசுல போவான்னு நான் நினக்கவே இல்ல தம்பி.” என்று கண் கலங்கினார்; ; இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியல் எதுவும் பேசாமல் மௌனமாக அந்த இடத்தை விட்டு எழுந்து வெளியே வந்தான்.

“ என்னங்க… உங்க ப்ரண்டப்பத்தி விசாரிச்சீங்களா… எங்க இப்ப இருக்கா.றாம்.”என்றாள் அவன் மனைவி.
சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு. “ அவன் இப்ப இங்க இல்லையாம் ; டெல்லியில மாசம் ஒரு லட்ச ரு்பா சம்பளத்தில வேல பாக்குறானாம் ; ஐந்து வருசத்துக்கு ஒருதடவ தான் வருவானாம் ; வந்தா உன்னப்பத்தி சொல்றேன்னு அவுங்க அப்பா சொன்னாரு.”

“அப்பவே நான் நினச்சேன்க் நீங்களே நல்ல ஒரு உத்தியோகத்துல இருக்கிறப்போ உங்களுக்கு சொல்லிக் கொடுத்த அவரு எவ்வளவு பெரிய வேலையில இருப்பாருன்னு”. என்றாள்.

அவள் சொல்வது எதையும் காதில் வாங்காமல் தனது மனசுக்குள்ளே. “எப்படி படிக்க வேண்டும் என்று கத்துக்கொடுத்தவனே. எப்படி வாழக்கூடாது என்றும் சொல்லிக்கொடுத்துட்டானே; ஒரு மனிதனின் வெற்றி என்பது அவன் திறமையில் மட்டும் இல்லை. அவனுடைய நடத்தையிலும் உள்ளது; ஒழுக்கமில்லாதவனின் கல்வி பயனற்றது.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.”

ஒழுக்கத்தை ஏன் உயிரினும் மேலாக கருதுகின்றனர் என்று இப்பொழுது தான் புரிந்துகொண்டேன்; நான் வேற வாரம் ஒருமுறை மது குடிக்கிறேன். விட்டால் தினமும் குடிக்க ஆரம்பித்து எனது குடும்பத்தை அழித்திடுவேன். இனிமேல் மது அருந்துவதை கைவிட வேண்டும். நல்லவேளை சிகரெட் பழக்கம் எனக்கு இதுவரை இல்லை. நம்ம குழந்தைகள் நல்லாயிருக்கனம்னு நாம கஷ்டப்படுறேhம். ஆனால் அதிக செல்லம் கொடுத்து நாமே அவர்களுடைய வாழ்வை சீரழிக்க காரணமாகிவிடக்கூடாது. வாழ்க்கையில் நாம் எப்போதும் எதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.” என்று தனக்குத்தானே எச்சரித்துக்கொண்டு காரை கவனமாக ஓட்டினான். 

ஒழுக்கம் மீது ஒரு கருத்து

  1. Thavam.s says:

    nice bro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)