ஒரு வீடு பெயரிடப்படுகிறது..

 

“சுத்தம் சோறு போடும்..” வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை நிறுத்தி நிதானமாக வாசித்து விட்டு வீட்டைச் சுற்றிப்பார்ப்பதற்காக நகர்ந்தனர் புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தவர்கள்.

“சும்மா சொல்லக்கூடாது. வீட்டை நல்லா பார்த்துப் பார்த்துதான் கெட்டியிருக்கான் உம்ம மருமவன்..” என்றார் ஒரு பெரியவர்.

“ஏன் பெரியத்தான் பிரிச்சுப்பேசறீங்க?.. எனக்கு மருமவன்னா ஒங்களுக்கு மவன் முறை வருது இல்லையா?.. தம்பி மகன் தன் மகனைப் போலன்னு சொல்லுவாங்க. ஆனாலும் உங்களுக்கு இந்த எடக்குத்தானே வேணாம்கறது” என்று சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்தார் இன்னொருவர்.

அந்தச் சின்னத்தெருவில் பாதியை அடைத்துக்கொண்டு போடப்பட்டிருந்த பந்தலில் நாற்காலிகள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடந்தன. குழந்தைகள் அங்குமிங்குமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். பந்தல் வாசலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தை உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டிருந்த சிறுவர்கள், கடைசியில் அலுத்துப்போய் அதனுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கூந்தல் பனையின் சாட்டைகளை அறுத்து எடுத்து, அதில் விளையாடுவதில் ஈடுபட்டிருந்தனர்.

மூன்றாம் பந்தியும் முடிந்து, சாப்பிட்டு விட்ட திருப்தியில் நான்கைந்து நாற்காலிகளை ஆங்காங்கே வட்டமாகச் சேர்த்துப் போட்டுக் கொண்டு வெகு நாட்கள் கழித்துச் சந்தித்த உறவினர்கள் பல கதைகளையும் வெற்றிலை பாக்குடன் சேர்த்து மென்று கொண்டிருந்தனர்.

“ஆமா,.. அதென்ன?. புது வீட்டுக்கு ஒண்ணு அப்பா, அம்மா பேரை வைக்கணும். இல்லைன்னா குலதெய்வம் பேரை வைக்கணும். புள்ளைங்க விருப்பப்பட்டா அதுங்க பேரையும் வைப்பாங்க சில பேர். அதெல்லாம் விட்டுட்டு “சுத்தம் சோறு போடும்”ன்னு அதென்ன அப்படியொரு பேரை வெச்சிருக்கான். புத்தி கித்தி கொழம்பிப்போச்சா அந்தப்பயலுக்கு?” என்று வம்பை ஆரம்பித்தார் ஒருவர்.

“எங்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்?. இன்னா அவனே வாரான். அவங்கிட்டயே கேட்டுக்கிடுங்க” என்ற இன்னொருவர், “மக்கா விசுவநாதா,.. கொஞ்சம் இங்கே வந்துட்டுப்போப்பா. ஒங்க பெரியப்பாவுக்கு ஒனக்க கிட்ட என்னவோ கேக்கணுமாம்” எனவும்,

‘கேளுங்க..’ என்று சொல்வது போல் தன் பெரியப்பாவைப்பார்த்தான் விசுவநாதன்.

“அது ஒண்ணுமில்லேடே.. ஒன் வீட்டுக்குப் பேரு வெச்சிருக்கேல்லா, அதப்பத்தித்தான் கேட்டுட்டிருந்தேன். ஒங்க அப்பாவுக்க பேரோ இல்லைன்னா தாத்தாவுக்க பேரோ வெச்சிருக்கப்டாதா மக்கா. காலாகாலத்துக்கும் அவங்க பேரு தொலங்கியிருக்குமே” என்றார் பெரியவர்.

“பெரியப்பா,.. நாஞ்சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்ன்னு இல்லே. குடும்பத்தைக் கவனிக்காம குடிச்சுக்குடிச்சே கொடல் வெந்து எங்கப்பா செத்தப்புறம் நாங்க நடு ரோட்டுக்கு வந்துட்டோம். வீட்ல உள்ளவங்க விருப்பத்துக்கு மாறா எங்கம்மாவை எங்கப்பா கல்யாணம் முடிச்சுக்கிட்டதால ‘அவனே போயிட்டான்.. அவன் குடும்பம் என்ன ஆனா எனக்கென்னா’ன்னு எங்களை நம்ம குடும்பத்துல இருக்கற யாரும் திரும்பிக்கூட பார்க்கலை. பொழைப்பு தேடி எங்களைக்கூட்டிக்கிட்டு சென்னைக்கே போயிருச்சு எங்கம்மா. அங்க நாலு வீட்டுல தூத்து, தொளிச்சு, பத்துப்பாத்திரம் தேய்ச்சு, துணி துவைச்சுன்னு எல்லா வீட்டு வேலையும் பார்த்துத்தான் எங்களை வளர்த்து ஆளாக்கிச்சு.”

“என்னிக்காவது ஒரு நாள் நாங்களும் நல்ல நிலைமைக்கு வருவோம். அப்படி வரப்ப நம்ம ஊருக்குத்தான் போயி செட்டிலாவணும்ன்னு சொல்லிச்சொல்லியே வளர்த்தாங்க எங்கம்மா. வனத்துல மேய்ஞ்சாலும் இனத்துல அடையணும்ன்னு சொல்லுவாங்களாமே. நாங்க, வெரட்டப்பட்ட எடத்துலயே நாலு பேரு முன்னாடி தலை நிமிர்ந்து வேரூணி நிக்கணும்ன்னுதான் இந்த ஊருலயே ஒரு வீட்டையும் கட்டி குடி வந்திருக்கோம். காலம் முழுக்க ஒரு வேலைக்காரியாவே காலத்தைக் கழிச்ச எங்கம்மாவை இன்னிக்கு ஒரு வீட்டுக்கு எஜமானியாக்கி அழகு பார்த்துட்டோம். இன்னிக்கு நாங்களும் ஆளாகி, நாலு பேர் மெச்சற மாதிரி இருக்கோம்ன்னா அது அன்னிக்கு அடுத்தவங்க வீட்டு அழுக்கைச் சுத்தப்படுத்தி எங்கம்மா சம்பாதிச்ச காசாலதான். எங்களுக்குச் சோறு போட்டது அந்தச் சுத்தப்படுத்துற வேலைதான். அந்த வாழ்க்கையை என்னிக்கும் மறக்கக் கூடாதுன்னுதான் வீட்டுக்கு இப்படிப் பேரு வெச்சிருக்கேன். நாஞ்செஞ்சது சரிதானே?..”

பெயருக்கான விளக்கத்துடன், தங்களுக்கும் சேர்த்து ஊசி செருகிய விசுவநாதனின் கண்களைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்து நின்றனர் வயதால் மட்டுமே பெரியவர்களான அவர்கள். 

தொடர்புடைய சிறுகதைகள்
நண்பனுடன் லயித்துப் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு உருவம் தொம்மென்று முன்னால் வந்து குதித்ததும் திடுக்கிட்டுத்தான் போனான் காசிநாதன். அனிச்சையாக டக்கென்று ஓரடி பின்னால் நகர்ந்து, நண்பனின் கையை இறுகப்பற்றிக்கொண்டு ஏறிட்டபோது, ஈயென்று இளித்துக்கொண்டு முன்னால் நின்றான் அந்தப்பையன்.... "பாத்துடே.. குத்தாலத்து ...
மேலும் கதையை படிக்க...
வீடு களை கட்டியிருந்தது… வாசலில் போட்டிருந்த ரங்கோலியின் வண்ணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன, ஒவ்வொரு பெண்களும் உடுத்தியிருந்த பட்டுப் புடவைகள். துளிர்க்காத வியர்வையை ஒற்றியெடுக்கும் சாக்கில் ஒவ்வொருத்தியும் தன் கழுத்திலிருந்த நகையை சரி செய்து கொண்டே மற்றவர்கள் தன்னுடைய நகை, புடவையை ...
மேலும் கதையை படிக்க...
சூட்கேஸையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கிய கீதா, மக்கள் வெள்ளத்தினூடே நீந்தி வேகமாக வந்து கொண்டிருந்த ரமேஷைக் கண்டதும் தேர்தல் நேரத்து இலவச அறிவிப்புகளைக் கேட்ட வாக்காளர் போல் மலர்ந்தாள். “ஹாய்… பிரயாணம் நல்லாயிருந்ததா?..” சூட்கேஸை அவன் எடுத்துக் கொண்டான். “ஓயெஸ்.. ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
சிவகாமிக்குக் கோபம் கோபமாக வந்தது.. “என்ன மனுஷர் இவர்?.. ஊர்ல உலகத்துல இல்லாததையா நான் கேட்டுப்பிட்டேன். வாங்கித் தரத் துப்பில்லைன்னாலும் ஆ..ஊ..ன்னா ஒண்ணொண்ணுக்கும் லெக்சர் கொடுக்கறதுல ஒண்ணும் குறைச்சலில்லை. போயும் போயும் இப்படி ஒரு கசத்துல தள்ளினாளே எங்கப்பாம்மா.. அவங்களைச் சொல்லணும்…”. ...
மேலும் கதையை படிக்க...
ஆயிரம் முயன்றும் தன்னுடைய மனப்போராட்டங்களை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் தீப்தி. 'கீச்..கீச்.. ' என்று குரலெழுப்பியபடி அவள் காலடியில் சிந்திக்கிடந்த கடலையொன்றை கொறிக்க முயன்றுகொண்டிருந்தது குருவியொன்று. அதை ஏதோ விளையாட்டுப்பொருளாய் எண்ணி, அதைப்பார்த்து நகைத்துக்கொண்டிருந்தது, பக்கத்திலிருந்தவளின் கைக்குழந்தை. வழக்கமான மனநிலையில் இருந்திருந்தால் அவளும் ...
மேலும் கதையை படிக்க...
நிழல் யுத்தம்!
கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின்மதியத்தின் மங்கிய வெய்யில் காற்றில் அசைந்து கொண்டிருந்த தென்னையோலைகளின் கைங்கர்யத்தால் தாழ்வாரத்தைத் தொட்டுத்தொட்டு விளையாடிக்கொண்டிருந்தது. தென்னையோலைகளின் மேல் ஓடுவதும் பின் அங்கிருந்து மதில் சுவரின் மேல் பாய்வதுமாக இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே.." கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட்டின் மாடியில் மறுபடியும் முளைத்தது. "யாரது.. கூரைல கல்லெறியறது..??" வீட்டுக்காரனின் குரல் கோபத்துடன் ஒலித்தது. "தெனமும் ராத்திரியானா இதே தொல்லையா போச்சு.." ஒரு வாரமாக வீடுகளிலும், பைப்பில் ...
மேலும் கதையை படிக்க...
வானத்துக்கும் பூமிக்குமாய் கொசுவலை விரித்ததுபோல் மெல்லிய பனி பரவி நின்றது. மேலாக ஒரு ஷாலைப்போர்த்திக்கொண்டு விடிகாலை இளங்குளிரை அனுபவித்தபடி மெதுநடை போட்டுக்கொண்டிருந்தவள்,.. அதை ரசித்தபடியே கட்டிடத்தின் பின்பக்கம் வந்தாள்.. கம்மென்று காற்றில் மிதந்து வந்து மோதிய பவளமல்லியின் வாசத்தை, முழுவதும் உள்வாங்கிக்கொள்வதுபோல் ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு நாட்களாய் எப்படியெப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்து விட்டாள் ரங்கம்மா. நயமாகவும் பயமாகவும் விசாரித்துப் பார்த்தாலும் பயல் பிடி கொடுத்துப் பேசவில்லை. சரி,.. அவன் போக்கிலேயே விட்டுப்பிடிக்கலாம் என்று அவன் ஓரளவு நல்ல மன நிலையில் இருக்கும்போது, “உனக்கு எந்தூருப்பா.. சொல்லு மக்கா.” ...
மேலும் கதையை படிக்க...
"என்னா வெயில்.. மனுசன் வெளியில தலைகாட்ட முடியலை. மக்கா... வீட்டுலதான் இருக்கியா?.." குரலைக்கேட்டதும் சமையலறையிலிருந்தே யாரென்று எட்டிப்பார்த்தேன்.. அட.. செல்லம்மக்கா. செருப்பை வாசலில் கழட்டி விட்டுவிட்டு, வியர்த்திருந்த முகத்தை சேலைமுந்தானையால் துடைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தார். "அடடே.. வாங்கக்கா, ரெண்டு வாரமா ஆளையே காணலியே!! ...
மேலும் கதையை படிக்க...
அட்சிங்கு
இங்கேயும் அங்கேயும்…
மீண்டும் துளிர்த்தது..
எது சரி?
தெளிந்த மனம்
நிழல் யுத்தம்!
சகுனம்..
பவளமல்லி..
உதவிக்கரங்கள்
ஓடமும் ஓர் நாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)