ஒரு பேரக் குழந்தை, என் மடியிலே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 3,756 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

ராஜு அழுதுக் கொன்டே”என் அப்பா சேட்டிடம் ஒட்டிக்கு ரெட்டி விலைக் கொடுத்து இந்த வைரத்தோடையும்,வைர மூக்குத்தியையும்,வாங்கிண்டு வந்து உங்க கிட்டே கொடுத்து இருக்கார். அந்த ரெண்டுக்கும் அந்த சேட் விலையையும் அதிகமா வாங்கிண்டு, ’மூனு வட்டி’யும் போட்டு இருக் கான்.என் அப்பாவால் இந்த அதிக அசலையும் ‘மூனு’ வட்டியையும் கட்டவே முடியாது.இப்போ நான் ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ணின்டு இன்னும் நாலைந்து மாசத்திலே வயிறும் வாயுமாகப் போய் நின்னா வளைகாப்பு, சீமந்தம்,பிள்ளை பெறும் செலவு எல்லாம் ஒன்னா சேந்து என் அப்பாவை ரொம்பவே நெருக்கும்.நான் அந்த செலவையாவது அவருக்கு குறைக்க லாம்ன்னு இருக்கேன்.நான் என் அப்பாவுக்கு பெண்ணா பொறந்துட்டேன்.அவர் என்னை நன்னா படிக்க வச்சார்.எனக்கு ஒரு குறையும் இல்லாமல் என்னை வளத்தார்.அவருக்கு நான் சந்தோஷம் தர வேணாம்.இந்த கஷடத்தையாவது நான் தராம இருக்கலாமேன்னு தான் யோசிக்கிறேன்.அதனால் எனக்கு இப்போ ‘சாந்தி முஹூர்த்தம்’ வேணாம். என் அப்பாவுக்கு என்னைக்கு இந்த வைரத்தோடு,வைர மூக்குத்தி கடன் அடையறதோ அன்னிக்கி ‘என் சாந்தி முஹூர்த்ததை’ வச்சுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.நான் இதுவரைக்கும் உங்க மூனு பேர் கிட்டேயும் ரொம்ப மா¢யாதையுடனும்,அன்பாகவும் தான் இருந்து வந்துண்டு இருக்கேன்….” என்று சொல்லும் போது அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

ராஜீ கண்களில் கண்ணீர் தளும்பியது.

“என் அப்பா,அம்மாவுக்கு சின்ன பொண்களான ராதாவையும்,மீராவையும் நன்னா படிக்க வச்சி, துணி மணீகள் எல்லாம் வாங்கிக் குடுத்து,முன்னுக்கு கொண்டு வந்து, அவாளுக்கும் ஒரு கல்யா ணத்தே பண்ணனும்”என்று சொல்லும் போது அவள் அழுதே விட்டாள்.

அவள் விருட்டென்று ‘பெட் ரூமு’க்குள் போய் விட்டாள்.

ஒன்னும் புரியாமல் நின்றுக் கொண்டு இருந்தாள் சாரதாவும் அவர் கணவர் ராமசாமியும்.

ஒன்னும் பேசாமல் அவளைப் பின் தொடர்ந்தான் ரவி.உள்ளே வந்த ரவி ‘பெட் ரூமின்’ கதவை தாழ்ப்பாள் போட்டான்.

உள்ளே வந்த ரவியின் காலில் விழுந்து அழுதுக் கொண்டே”என்னை மன்னிச்சிடுங்கோ. என்னை மன்னிச்சிடுங்கோ.எனக்கு வேறு வழி ஒன்னும் தெரியலே.என் அப்பா, அம்மா படும் கஷ்டம் எனக்குத் தான் தெரியும்”என்று சொல்லி அவன் மடியில் படுத்துக் கொண்டு சின்ன குழந்தையைப் போல் விக்கி விக்கி அழுதாள்.

ரவி கட்டி இருந்த வேஷ்டி முழுக்க நனைந்து விட்டது.

‘அவ மனச் சுமை அவ தீர அழட்டும்’ என்று சும்மா இருந்தான் ரவி.

ஓரு பத்து நிமிஷம் கழித்து “அழாதே ராஜீ,உன் நிலமை எனக்கு நன்னா புரியறது.நான் உனக்கு பூரண ஒத்துழைப்பு தரத் தயாரா இருக்கேன்.நீவேணுமானா உன் சம்பளத்லே பாதியை உன் அப்பாவுக்கு மாசா மாசம் குடுத்து வாயேன்.இதை நீ என் அப்பா அம்மாவுக்கு சொல்ல வேணாம். நீ இப்படி பணறதிலே எனக்கு ஒரு ஆக்ஷபணையும் இல்லே.நீ நிம்மதியா இருந்து வா.அது தான் எனக்கு வேணும்.எல்லாரும் சாப்பிட காத்துண்டு இருக்கா.போய் மூஞ்சியை நன்னா அலம்பி ண்டு வா.சாப்பிட போகலாம்” என்று சொல்லி அவளை எழுப்பினான் ரவி.

“உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’.இந்த உதவியை என் உயிர் உள்ள வரைக்கும் நான் மறக்கவே மாட்டேன்” என்று சொல்லி அவன் காலைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டாள் ராஜீ.

பிறகு ராஜி ‘பாத் ரூம்’ போய் முகத்தை நன்றாக அலம்பிக் கொண்டு வந்து,ரவியுடன் சாப்பிட உட்கார்ந்தாள்.அவள் கண்கள் கோவைப் பழம் போல் சிவந்து இருந்தது.
இருவரும் சாப்பிட வந்து உட்கார்ந்ததும் சாரதாவுக்குக் கோவம் வந்தது.

உடனே சாரதா மாமி சம்மந்தி மாமாவையும் ‘போன்லே கூப்பிட்டு “உங்க கிட்டே ஒரு முக்கி யமான விஷயம் பேசணும்.நீங்கோ ரெண்டு பேரும் எங்க ஆத்துக்கு வாங்கோ” என்று கோவமாகச் சொன்னாள்.

“சம்மந்தி மாமி ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு கூப்பிடுடறாளே.இந்த நேரத்லே என்ன முக்கியமான சமாசாரம் சொல்லப் போறா. நேக்கு ஒன்னும் புரியலையே” என்று கவலைப் பட்டுக் கொண்டு தன் மணைவி இடம் சொன்னார் சிவராமன்.உடனே சிவகாமி “என்னவா இருக்கும். ஏன் இத்தனை லேட்டா கூப்பிடறா” என்று அவளும் கவலைப் பட்டாள்.

‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு சிவராமனும் சிவகாமியும் சம்மந்தி வீட்டுக்கு ஓடி வந்தார்கள்.

“வாங்கோ,உக்காருங்கோ”என்று சிவராமனையும், சிவகாமி மாமியையும் உள்ளே கூப்பிட்டு உட்காரச் சொன்னாள் சாரதா.

“நான் ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ண வாத்தியாரை வரவழைச்சு நல்ல நாள் நல்ல நேரம் பாத்து தரச் சொன்னேன்.அவரும் பாத்து எனக்கு சொல்லி விட்டுப் போனார்.நான் இவா ரெண்டு பேரும் ‘ஆபீஸி’ல் இருந்து ஆத்துக்கு வந்தவுடன் இவா கிட்டே சொன்னேன்.உங்க பொண்ணு என்னவோ ‘இப்போ எனக்கு ‘சாந்தி முஹூர்த்தம்’ வேணாம்.என் அப்பா சேட்டிடம் பட்ட கடன் முழுக்க அடை ஞ்ச அப்புறமா, ‘சாந்தி முஹூர்த்தத்தை வச்சுக்கலாம்ன்னு சொல்றா.நீங்களே கொஞ்சம் கேளுங்கோ இந்தக் கூத்தை”என்று சற்று கோவமாகச் சொன்னாள் சாரதா.

சிவராமன் உடனே ராஜீயைக் கூப்பிட்டு “என்னம்மா இதெல்லாம்” என்று சற்று கலவரத்தோடு கேட்டார். எல்லாவற்றையும் கவனித்து வந்தாள் சிவகாமி.

“நான் இப்போ ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ணிண்டு இன்னும் நலைஞ்சு மாசத்லே வாயும் வயிறு மா வந்து நின்னா,நீங்க வளைகாப்பு,சீமந்தம்,பிள்ளை பேறு செலவு எல்லாம் பண்ண வேண்டி இருக் கும்.இப்படியே உங்களுக்கு கடன் சுமை ஏறிண்டே போனா அது எங்கே போய் நிக்கும் சொல்லுங் கோ.இன்னும் உங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க படிப்பு வேறே இருக்கு.அவா ரெண்டு பேருடைய படிப்பு முடிஞ்சதும்,நீங்க அவா ரெண்டு பேரையும் சுமாரான ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் குடுக்க வேண்டாமாப்பா.உங்க வயசான காலத்துக்கு நீங்க கொஞ்சம் பணம் வச்சுண்டு வர வேணாமா.உங்களை காப்பாத்த உங்களுக்கு என்ன ஒரு பையனா கூட இருக்கான்,உங்க வயசான காலத்திலே உங்களை கவனிச்சுண்டு வரதுக்கு.என்னோடு உங்க பிரபஞ்சம் முடியலையேப்பா. இதெல்லாம் மனசிலே நினைச்சுத் தான் நான் இப்போதைக்கு ‘சாந்தி முஹூர்த்தம்’ வேணாம்ன்னு சொன்னேன்.’இவரும்’ அது தான் சரின்னு சொல்லிட்டார்.இது தான்ப்பா நடந்தது” என்று சொல்லி நிறுத்தினாள் ராஜீ.

ராஜி சொன்னதுக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியாமல் எல்லோரும் மௌªனமாய் இருந்தார்கள்.

‘இந்த மாதிரி பண்ணுவது தப்பு ‘ ‘இந்த மாதிரி தான் பண்ணவது தான் சரி’ என்று சொல்ல யாருக்கும் ¨தா¢யமில்லை.

ஒன்றை ஒன்று ‘சார்ந்த்து’ இருக்கிற சமாசாரம் தான் இந்த ‘சாந்தி முஹூர்த்தம்’ என்னும் ஒரு முக்கியமான நிகழச்சி.

ஒருவருக்கு ‘சரி’ என்று படுவது மற்றவருக்கு ‘சரி’ என்று படவில்லையே.

அவரவருக்கு அவரவர்கள் சொல்லுவது ‘சரி’ என்று தானே படுகிறது.

‘சாந்தி முஹூர்த்தம்’ என்னும் ஒரு நல்ல நிகழ்ச்சி எல்லோரையும் மகிழ்விக்க வைக்கும் ஒரு சந்தோஷ குடும்ப நிகழ்ச்சி.இதில் சம்பந்தப் பட்டவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் ‘நவக்கிர விக்கிரங்கள்’ போல் ஒவ்வொறு திசையைப் பார்த்துக் கொண்டு இருந்தால்,ஒருவர் முகத்தை மற்றொருவர் நேருக்கு நேர் பார்ப்பது என்பது எப்படி முடியும்.

அது வரை பொறுமையாக இருந்த ராமசாமி “நான் சொல்றேன் யாரும் தப்பா எடுத்துக்க வேணாம்.ராஜீ சொல்வதிலும் அர்த்தம் இருக்கு.எந்தப் பொண்ணுக்கும் தன் அப்பா அம்மா கஷ்டப் படறதே பாத்து சகிச்சுக் கொள்ள முடியாது தான்.சம்மந்திகளுக்கு இன்னும் நிறைய ‘பிரபஞ்சம்’ இருக்கு என்கிறது என்னவோ உண்மை தான்” என்று சொல்லி நிறுத்தினார்.

கொஞ்ச நேரம் கழித்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “சேட்டு பீரோவில் தூங்கிக் கொண்டு இருந்த வைரத்தோடும்,வைர மூக்குத்தியும்,இப்போ நம்ம ஆத்து பீரோவில் நிம்மதியா தூங்கிண்டு இருக்கு.நிம்மதியா தூங்க வேண்டிய நாம எல்லாம் தூக்கம் இல்லாம,நிம்மதி இல்லாம, இருந்து வரோம்.என்ன பண்றது.இப்போதைக்கு நாம எல்லாம் சும்மா இருக்கலாம்.கொஞ்ச ‘டயம்’ போகட்டும்.அப்புறமா நாம இதைப் பத்திப் பேசலாம்” என்று சொல்லி எழுந்து விட்டார் ராமசாமி.

சிவராமனும் சிவகாமியும் ஒன்னும் சொல்லாமல் எழுந்து வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

வழி நெடுக ‘நாம வைரத் தோடும்,வைர மூக்குத்தியும் வாங்கிக் குடுத்தும் ராஜீ சாந்தி முஹூர் த்தம் நடக்கலையே’ என்று கவலைப் பட்டுக் கொண்டே வந்துக் கொண்டு இருந்தார்கள் சிவராமன் தம்பதிகள்.

சிவராமன் தம்பதிகள் கிளம்பிப் போனவுடன் ராமசாமி மறுபடியும் சோபாவில் வந்து உட்கா ர்ந்துக் கொண்டு தன் பழைய கால நினைவுக்குப் போனார்.

ராமசாமிக்கு அப்போது தான் கல்யாணமாகி ஒரு வாரம் ஆகி இருந்தது.

‘தன் ‘சாந்தி முஹூர்த்தத்தை’ எப்போ ஏற்பாடு பண்ணுவா’ என்று ஆவலோடு காத்துக் கொண் டு இருந்தார் அவர்.

ஒரு வழியாக பத்து நாள் கழித்து ஒரு ‘நல்ல முஹூர்த்தம்’ இருக்கு என்று வாத்தியார் சொல் லவே அந்த நாளில் ‘சாந்தி முஹூர்த்தம்’ ஏற்பாடு பண்ணினார்கள் ராமசாமியின் பெற்றோர்கள்.

அந்த பத்து நாள் அவர் தவித்த ‘தவிப்பு’ அவருக்கு ஞாபகத்துக்கு வந்தது.

ராமசாமி தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து மூன்றும் பிறந்த ஐஞ்சு வருஷத்துக்குள் ஒன்றின் பின் ஒன்றாக இறந்து விட்டன.இருவரும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.
மிகவும் கவலைப் பட்டு ராமசாமியும் சாரதாவும் நோண்புகள்,விரதங்கள் இருந்து,கோவில்களுக் கு எல்லாம் போய் குழந்தைக்கா வேண்டி வந்தார்கள்.

தன் நண்பன் ஒருவன் ‘ராமேஸ்வரம் போய் சமுத்திரத்தில் குளித்து விட்டு ஈரத் துணியுடன் ராம நாதஸ்வாமியை வேண்டிக் கொண்டு வந்தா குழந்தைப் பிறக்கும்’ என்று சொன்னதால் உடனே ராமசாமி தன் மணைவி சாரதாவை அழைத்துக் கொண்டு ராமேஸ்வரம் போய் சமுத்திரத்தில் குளித்து விட்டு ஈரத் துணியுடன் வந்து ராம நாதஸ்வாமியை மனம் உருகி வேண்டிக் கொண்டு வந்தார்கள்.

அடுத்த வருஷமே ராமசாமிக்கும் சாரதாவுக்கும் ரவி பிறந்தான்.

குழந்தை ரவியை சாரதாவும் ராமசாமியும் இரவு பகல் இருபத்தி நாலு மணி நேரமும் கண்ணும் கருத்துமாய் கவனித்து வளர்த்து வந்ததார்கள்.

‘இந்த குழந்தையாவது நல்ல தீர்காயுசாக இருக்க வேண்டும்’ என்பதற்காக அவர்கள் இருவரும் வாத்தியாரை வைத்துக் கொண்டு ஹோமம் பூஜை எல்லாம் செய்தார்கள்.
இதைத் தவிர குழந்தை ரவியை அழைத்துக் கொண்டு பல கோவில்களுக்கு எல்லாம் போய் பூஜை செய்து விட்டு வந்தார்கள் ராமசாமி தம்பதிகள்.

ரவி பிறந்த பிறகு ராமசாமி தம்பதிகளுக்கு குழந்தையே பிறக்க வில்லை.

அதனால் ரவிக்கு அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவனை ஆசையாய் வளர்த்து வந்தார்கள் ராமசாமி தம்பதிகள்.

‘இப்படி செல்லமாய் வளர்த்து வந்த தன் பையனுக்கு கல்யாணமாகியும் சீக்கிரம் ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ணி அவனை சந்தோஷப் படுத்த முடியவில்லை’ என்று எண்ணி வருத்தப் பட்டார் ராமசாமி.
மனதுக்குள் புழுங்கிக் கொண்டு இருந்தார் ராமசாமி.

கல்யாணம் பண்ணிக் கொண்ட தன் பெண்ணுக்கு இப்படி ‘ஒன்னும்‘ நடக்கலையே.எப்போ இதெல்லாம் சரி ஆகி ராஜீக்கு ‘சாந்தி முஹூர்த்தம்’ நடக்குமோ’ என்ற ஏக்கத்தில் சிவகாமிக்கு உட ம்பு படுத்த ஆரம்பித்தது.

சிவராமனுக்கு நாளுக்கு நாள் ஏறி வரும் விலைவாசி,மணைவி ‘ஹாஸ்பிடல்’ செலவு,வளர்ந்து வரும் பெண் குழந்தைகளின் துணி மணீ செலவு,’ஸ்கூல் பீஸ்’,புஸ்தகம்,நோட் புக் செலவு,சேட்டின் வட்டிக் கடன்,எல்லாம் சேர்ந்து மேலும் மேலும் அழுத்தத் தொடங்கியது.

இங்கே கொஞ்சம்,அங்கே கொஞ்சம்,என்று தன்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்து வந்து எப்படியோ சமாளித்து வந்தார் சிவராமன்.

வீட்டில் நடக்கும் எல்லாவற்ரையும் மனதில் போட்டு புழுங்கி வந்த ராமசாமிக்கு மன அழுத்தம் அதிகமாகி ஒரு நாள் காலையில் நெஞ்சு வலி அதிகமாகியது.

நல்ல வேளை அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், ரவி உடனே ‘ஆம்புலன்ஸ்க்கு’ ‘போன்’ பண்ணி,‘ஆம்புலன்ஸ்’ வந்தவுடன்,அப்பாவையும்,அம்மாவையும்,ராஜியையும் தன் கூட அழைத்துக் கொண்டு போய் அருலில் இருந்த ஒரு ‘ஹாஸ்பிடலில்’ அப்பாவை ‘எமர்ஜென்ஸியிலே’ இருந்த டாக்டா¢டம் காட்டினான்.

டாக்டர் ராமசாமியை நன்றாக பாசோதனைப் பண்ணி விட்டு உடனே அவரை ICU வில் ‘அடமிட்’ பண்ணி விட்டு வெளியே வந்து “இதோ பாருங்கோ மிஸ்டர் ரவி, உங்க அப்பாவுக்கு வந்து இருக்கிறது ‘ ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக்’.நல்ல வேளை நீங்க உடனே அவரை ‘ஹாஸ்பிடலுக்கு’ அழைச்சு வந்து இருக்கீங்க.நான் அவருக்கு மருந்து ‘இஞ்ஜெக்ஷன்’ உடனே கொடுத்து இருக் கேன்.இப்போ பய பட ஒன்னும் இல்லே. ஆனா….” என்று டாக்டர் சொல்லி முடிப்பதற்குள் சாரதா “டாக்டர்,நாங்க என்ன பண்ணனும் சொல்லுங்க.நாங்க பண்றோம்” என்று பதறிப் போய் கேட்டாள்.

டாக்டர் பொறுமையாக “அவருக்கு இருக்கும் இந்த மன அழுத்தம் அதிகமாகி, இன்னொரு ‘அட்டாக்’ வந்து,நீங்களும் அவருக்கு உடனே ‘ட்¡£ட்மெண்ட்’ பண்ண நேரமாயிட்டா,அது அவர் உயி ருக்கே ஆபத்தா முடியும்.’ஹார்ட் அட்டாக்’ எப்போ வரும்ன்னு யாருக்கும் தெரியாதே,அதனால் நீங்க அவரை ஜாக்கிறதையா கவனிச்சுங்க.அவருக்கு மன அழுத்தம் இல்லாம அவரை சந்தோஷமா நீங்க வச்சுக்குங்க” என்று சொல்லி விட்டு டாக்டர் போய் விட்டார்.

பிறகு சாரதாவும்,ரவியும்,ராஜீயும் I.C.U. க்குள் போய் ராமசாமியைப் பார்த்தார்கள்.

அவர் சாதாரணமாய் தான் இருந்தார்.

அவர் எல்லோரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டு இருந்தார்.

“நான் இன்னிக்கு பூராவும் இங்கேயே அப்பாவோடவே இருக்கேன்.நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குப் போய் குளிச்சுட்டு,சீக்கிரமா சமையல் பண்ணி,எனக்கும் இவருக்கும் சாப்பாடு கொண்டு வாங்கோ.போங்கோ” என்று சொல்லி பையனையும், மாட்டுப் பொண்ணையும் வீட்டுக்குப் போக சொன்னாள் சாரதா.

அவர்கள் போனதும் ‘டாக்டர் என்ன சொன்னார்’ என்று சாரதாவை நிதானமாக விசாரித்தார் ராமசாமி.

சாரதா எதையும் மறைக்காமல் டாக்டர் சொன்ன விவரத்தை எல்லாம் பூராவும் சொன்னாள்.

அதை கேட்டவுடன் ராமசாமியின் முகம் சற்று வாடியது.

‘‘எனக்கு இப்போ வந்தது ‘ஹார்ட் அட்டாக்கா’ என்று இரண்டு மூன்று தரம் கேட்டார் ராசாமி.

அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.அவர் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “எனக்கு இவா கொடுத்த மருந்து தூக்கம் துக்கமா வரது சாரதா. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்”என்று சொல்லி விட்டு தன் கண்களை மூடிக் கொண்டு தூங்க ஆரம் பித்தார் ராமசாமி.

அவர் தூங்குவதைப் பார்த்த சாரதாவுக்கு பாவமாய் இருந்தது.

அவள் மிகவும் வேதனைப் பட்டாள்.

’ஏன் இவருக்கு இந்த மாதிரி ‘ஹார்ட் அட்டாக்’ வந்தது.அவருக்கு என்ன மன வருத்தம் இருக் கும்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.இரண்டு மணி நேரம் கழித்து மெல்ல கண் விழித்து பார்த்தார் ராமசாமி.கணவன் கண் விழித்துப் பார்த்ததும் சாரதா சந்தோஷப் பட்டு “நீங்கோ கண் முழிச்சி பாக்கறேளே.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அவர் என்னவோ முக்கியமான விஷயத்தை சாரதாவிடம் சொல்லணும் போல தன் முகத்தை வைத்துக் கொண்டு யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்ததை கவனித்தாள் சாரதா.அவள் கவலை ப் பட்டாள்.’ஏன் என் கிட்டே சொல்ல இவ்வளவு யோஜனைப் பண்றார்.நான் யாரோ இல்லையே” என்று நினைத்து கவலைப் பட்டாள் சாரதா.
உடனே சாரதா ”உங்களைப் பாத்தா,நீங்க என் கிட்டே ஏதோ முக்கியமா சொல்லணும்ன்னு நினைக்கிறாப் போல தோண்றது.அது என்னன்னு கிட்டே சொல்லுங்க” என்று கவலையோடு கேட் டாள் சாரதா.

ராமசாமி தயங்கி தயங்கி “சாரதா,நாம ரெண்டு பேரும் ரவி நமக்குப் பொறக்க எவ்வளவு தவம் இருந்தோம்ன்னு உனக்கு நன்னாத் தெரியும்.அவனுக்கு முன்னாடி பொறந்த மூனு குழந்தைகளும், ஐஞ்சு வருஷத்துகுள்ளே நம்மை விட்டுப் போயிடுத்துன்னு உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்.ரவி பொறந்தவுடன் அவனை நாம் ரெண்டு பேரும் எவ்வளவு செல்லமா வளர்த்து வந்து இருக்கோம்ன்னும் உனக்கு நன்னாத் தெரியும்.அவனுக்கு ஒரு ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ணி என்னால் பார்க்க முடியலையே சாரதா”என்று சொல்லி விட்டு தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தார்.

சாரதா பயந்துப் போய் “என்ன கண்ணே மூடுண்டு இருக்கேள்.உங்களுக்கு மறுபடியும் நெஞ் சே வலிக்கறதா என்ன”என்று கேட்டாள்.“இல்லே சாரதா.எனக்கு நெஞ்சே எல்லாம் வலிக்கலே.நான் என்ன சொல்ல வந்தேன்னா,நான் என் கண்ணை மூடுறதுக்கு முன்னடி,நான் ஒரு பேரக் குழந்தை யை என் மடியிலே வச்சு கொஞ்சுவேனா.அது நடக்குமா…….இல்லை,அதுக்கு முன்னாடி…”என்று அவர் தட்டுத் தடுமாறி சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவர் கண்களில் இருந்து தாரை தாரை யாக கண்ணீர் கொட்டியது.
அவர் குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டு இருந்தார்.

சாரதா உடனே “அழாதீங்கோ,அழாதீங்கோ.நீங்க நிச்சியம் ஒரு பேரனையோ பேத்தியையோ இன்னும் ஒரு வருஷத்திலே பாப்பேள்.நான் உடனே அந்த வைரத் தோட்டையும்,வைர மூக்குத்தியை யும் சம்மந்தி மாமா கிட்டே குடுத்து அவர் வாங்கின சேட் கிட்டே திருப்பி கொடுக்கச் சொல்லிட்டு, வாத்தியாரேப் பாத்து அடுத்த முஹூர்தத்லேயே,ரவி ராஜி ரெண்டு பேருக்கும் ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ண ஏற்பாடு பண்றேன்” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் சாரதா தன் கண்களைத் துடைத்துக் கொண்டே “எனக்கு நீங்க தான் வேணும்.என் மஞ்சள் குங்குமம் தான் எனக்கு வேணும்.பீரோலே தூங்கும் வைரத்தோடோ,வைர மூக்குத்தியோ,எனக்கு முக்கியமே இல்லே.என் கழுத்தில் தொங்கும் மாங்கல்யமும்,என் காதில் வைரத் தோடும்,என் மூக்கில் வைரமூக்குத்தியும் எனக்கு நிலைச்சு நின்னா எனக்கு அதுவே போதும்.எனக்கு வேறே ஒன்னும் வேணாம்.எனக்கு வேறே ஒன்னும் வேணாம்” என்று அவள் சொல்லும் போது அவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.

தன் கணவன் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாரதா அழுதுக் கொண்டு இருந்தாள்.

”அழாதே சாரதா அழாதே.கண்ணேத் துடைச்சுக்கோ.எனக்கு என்னமோ உன்னை கேக்கணும் ன்னு தோணித்து.அதான் நான் கேட்டேன்.உன்னை நான் அழ வைக்கணும்ன்னு நினைச்சு நான் இதை உன் கிட்டே கேக்கலே.ஏதோ என் மனசிலே இதை உன் கிட்டே கேக்கணும்ன்னு தோணித்து. நான் கேட்டேன்.அவ்வளவு தான் சாரதா” என்று சொல்லி மணைவியை சமாதானப் படுத்தினார் ராம சாமி.இருவரும் கண்களிலும் கண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தது.அவர்கள் இருவரும் தங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது சாப்பாட்டு காரியருடன் ரூமில் நுழைந்த ராஜீயும் ரவியும் அப்பாவும் அம்மாவும் அழுதுக் கொண்டு இருப்பதைப் பார்த்து பதறிப் போனார்கள்.”ஏம்மா,என்ன ஆச்சு,ஏன் ரெண்டு பேரும் அழறேள்” என்று கேட்டு ரவியும் ராஜீயும் ஒரே நேரத்தில் ‘கோரஸாக’க் கேட்டார்கள்.

”ஒன்னுமில்லே ரவி.ஏதோ அந்த காலத்திலே எங்க வாழ்க்கைலே நடந்த ஒரு கஷ்டமான சமா சாரத்தை பத்தி பேசிண்டு இருந்தோம்.ரெண்டு பேருக்கும் ரொம்ப தாங்கலே.அதான் அழுதுண்டு இருந்தோம்” என்று சொல்லி அவர்கள் அழுத காரணத்தை மறைத்தாள் சாரதா.

“டாக்டர் தான் அப்பாவை பத்தி ஏதோ பயப் படறாப் போல சொல்லிட்டாரோன்னு,நினைச்சு நாங்க பயந்தே போயிட்டோம்”என்று ராஜியும் ரவியும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

கொண்டு வந்த சாப்பாட்டை மாமனார் மாமியார் இருவருக்கும் இரண்டு தட்டில் வைத்து கொடுத்தாள் ராஜீ.மாமனார், மாமனார் ரெண்டு பேரும் சாப்பிட்டவுடன் அவர்கள் தட்டை வாங்கி தூர வைத்து விட்டு, ‘பிளாஸ்கில்’ கொண்டு வந்து இருந்த வென்னீரை ரெண்டு ‘டம்ளா¢ல் விட்டு மாமி யாருக்கும் மாமனாருக்கும் கொடுத்தாள் ராஜி.இருவரும் ராஜி கொடுத்த அந்த வென்னீரை நிதான மாகக் குடித்தார்கள்

உள்ளே நுழைந்த டாக்டர் “இப்போ எப்படி இருக்கீங்க.நீங்க நல்லா தூங்கினீங்களா”என்று கேட்டு விட்டு அவர் நாடியை பிடித்து பார்த்து விட்டு,தன் கழுத்தில் மாட்டி கொண்டு இருந்த ‘ஸ்டெதஸ்கோப்பை’ எடுத்து காதில் வைத்துக் கொண்டு ராமசாமியை பரிசோதனைப் பண்ணீனார்.

”இவர் இப்போ நார்மலாக இருக்காருங்க.நீங்க இவரை வீட்டுக்கு அழைச்சுக் கிட்டு போவலாம். மறுபடியும் இவருடைய B.P.அதிகமா ஆவாம பார்த்து கொள்ளுங்க. முக்கியமா இவர் மன வேதனைப் படாமல் சந்தோஷமாய் இருந்து வரணும்.அது தான் இவர் B.P.யை ‘கண்ட்ரோலில்’ வச்சு வர உதவும்” என்று சொல்லி விட்டுப் போனார்.

டாக்டர் கிளம்பிப் போனதும் ரவி ஒரு டாக்ஸியை அழைத்து வந்தான்.எல்லோரும் அதில் ஏறி வீடு வந்து சேர்ந்தார்கள்.அப்பாவை சோபாவில் உட்கார வைத்து, அவர் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டான் ரவி.அப்பாவுடன் அவன் பேசிக் கொண்டு இருந்தான் ரவி.ராமசாமி தன் பையனின் கைகளை ஆசையுடன் தடவிக் கொண்டு இருந்தார்.ராஜீ சமையல் கட்டில் ஏதோ வேலையாய் இருந் தாள்.

சாரதா யாருக்கோ ’போன்’ பண்ணி ரகசியமாகப் பேசிக் கொண்டு இருந்தாள்.சிவராமனும், சிவகாமியும் ‘எதுக்காக நம்மை சம்மந்தி மாமி இப்படி திடீரென்று வரச் சொல்லி இருப்பா’ என்று கவ லைப் பட்டுக் கொண்டு,யோஜனைப் பண்ணிக் கொண்டே சம்மந்தி வீட்டுக்கு வந்தார்கள்.

“வாங்கோ, வாங்கோ”என்று அவர்களை வரவேற்று சோபாவில் உட்கார சொல்லி விட்டு,உள்ளே போய் பீரோவில் வைத்து இருந்த வைரத்தோடையும்,வைரமூக்குத்தியையும், எடுத்துக் கொண்டு வரப் போனாள் சாரதா.வந்து உட்கார்ந்த சிவராமன் சிவகாமியிடம் ”மாமா,மாமி,இந்தாங்கோ,நீங்கோ அந்த சேட் கிட்டே வாங்கிக் குடுத்த வைரத் தோடும்,வைர மூக்குத்தியும்.இதை உடனே அந்த சேட் கிட் டே திருப்பி குடுத்துட்டு கடனை அடைச்சிடுங்கோ.நான் வாத்தியாரை வரச் சொல்லி….” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “நமஸ்காரம் உள்ளே வரலாமா” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் ஜோஸ்யர் ராமமூர்த்தி கணபாடிகள்.”வாங்கோ,வாங்கோ”என்று அவ ரை வரவேற்றாள் சாரதா.

“வாத்தியார்,குழந்தைகளுக்கு நீங்க முன்னே வைச்சுக் குடுத்த தேதியிலே அவா ரெண்டு பேரு க்கும் ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ண முடியலே.ஏதோ ஒரு அசந்தர்ப்பம் ஆயிடுத்து.இப்போ வேறே ஒரு ‘முஹூர்த்த நாள்’ சீக்கிரமா பாத்து சொல்லுங்கோ.இவா ரெண்டு பேருக்கும் ‘சாந்தி முஹ¤ர்த்தம்’ பண்ணலாம்ன்னு இருக்கோம்” என்று அவசரப் படுத்தி சொல்லி விட்டு பஞ்சாங்கத்தையும் கொண்டு வந்து கொடுத்தாள் சாரதா.தன் கைப்பையில் இருந்து மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டு நல்ல நாள் பார்க்க ஆரம்பித்தார் ஜோஸ்யர் கணபாடிகள்.

“இன்னும் ரெண்டு நாள் போனா புதன் கிழமை வருது.நாள் ரொம்ப நல்ல நாளா இருக்கு. ’பொன் கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்காதுன்னுவா பொ¢யவா சொல்லி இருக்கா. அன்னை க்கே ராத்திரி பத்து மணிக்கு மேலே நல்ல நேரம் வரது.அன்னிக்கே நீங்க இந்த ‘பங்க்ஷனை’ வச்சுக் கலாம்” என்று தனக்கு தெரிந்த இங்கிலிஷில் சொல்லி விட்டு,தன் பொக்கைப் பல்லை எல்லாம் காட்டி சிரித்தார் ஜோஸ்யர் கணபாடிகள்.

”ரொம்ப சந்தோஷம் வாத்தியார்,அன்னைக்கு நீங்க வந்து இந்த ‘நல்ல காரியத்தை’ கொஞ்சம் பண்ணி விட்டுப் போங்க.அப்படியே நம்மாத்திலேயே அன்னைக்கு ராத்திரி விருந்து சாப்பாடும் சாப் பிட்டு விட்டு போகலாம்”என்றாள் சாரதா.வாத்தியார்” சரி மாமி,நான் நிச்சியமா அன்னைக்கு வந்து ’ப்ங்க்ஷனை’ நடத்திக் குடுத்து உங்க ஆத்லே ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போறேன்” என்று சொல் லி விட்டுக் கிளம்பிப் போனார்.

சிவகாமிக்கும், சிவராமனுக்கும் சந்தோஷம் தாங்க வில்லை.இருவரும் சாரதா மாமிக்கு தங்கள் நன்றியைச் சொன்னார்கள்.சாரதா அவர்களுக்கு காபி ‘டிபன்’ கொடுத்தாள்.’டிபன் காபியை’ சாப்பிட்டார்கள் இருவரும்.அவர்கள் சாபிட்டு விட்டு எழுந்து கை அலம்பி கொண்டதும்,சாரதா அவர் களை புதன் கிழமை மத்தியானமே அவர்கள் வீட்டிக்கு வரச் சொன்னாள்.

வழி நெடுக சிவகாமி ”நான் தினமும் அந்த காமாக்ஷ¢ கிட்டே ‘என் பொண்ணு சாந்தி முஹூர் த்தத்தை நடத்திக் குடுத் தாயே’ ன்னு மனசார வேண்டி வந்தேண்ணா.அந்த அம்மன் இன்னைக்குத் தான் கண்ணைத் திறந்து இருக்கா.நம்ம குழந்தைக்கு சம்மந்தி மாமி ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ணி வைக்க ஒத்துண்டு இருக்காளே.அவ மகிமையையே மகிமை” என்று சொல்லி தன் கன்னத்தில் போட் டுக் கொண்டாள்.

புதன் மாலை ஐந்து மணிக்கெல்லாம் சிவராமன் தம்பதிகள் வெள்ளிச் சொம்பு, வெள்ளி டம்ளர், நன்றாக சுண்ட காய்ச்சின பால்,திரட்டிப்பால்,நிறைய பூ,மூனு தினுசு பழங்கள்,பொண்ணுக்கு பட்டுப் புடவை,மாப்பிள்ளைக்கு சரிகை வேஷ்டி,சரிகை அங்க வஸ்திரம் எல்லாம் வாங்கி எடுத்துக் கொண்டு வந்தார்கள்.கனபாடிகள் வந்து மந்திரம் சொல்லி பூஜைகளை முடித்தார்.எல்லோரும் சந்தோஷமாக விருந்து சாப்பாடு சாப்பிட்டார்கள்.ரவி,ராஜீ ‘சாந்தி முஹூர்த்தம்’ நல்ல படி நடந்து முடிந்தது.

அடுத்த நாள் சிவராமன் தம்பதிகள் சம்மந்தி மாமாவுக்கும் சம்மந்தி மாமாவிடமும் சொல்லிக் கொண்டு விட்டு சந்தோஷமாய் அவர்கள் வீடு போய் சேர்ந்தார்கள்.

பதினைந்து மாதம் தான் ஆகி இருக்கும்.ராமசாமி தன் மடியில் பேத்தியை கொஞ்சிக் கொண்டு இருந்தார்.அதைப் பார்த்த சாரதா கண்களில் கண்ணீர் சுரந்தது.சந்தோஷத்தில் யாரும் பார்க்காத இருந்த போது சாரதா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *