ஒரு எம்.எல்.ஏ டிக்கெட்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 18,744 
 

உன்னைத்தான்.. எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்றேன்.. பேசாம இருந்தா எப்படி

ஹும்

அப்படின்னா உனக்கு சந்தோஷம் இல்லையா ?

என்ன பெரிய சந்தோஷம் வேண்டியிருக்கு.. சம்பாதிச்ச காசையெல்லாம் இப்படியே அழிக்கப் போறீங்க..

கவலைப்படாதே.. தனியா இல்லே கூட்டணிதான்.

கூட்டணியா ? யார் யாரோட ?

‘சே.ப.க’ வோட

ரொம்ப அழகுதான், சுத்த தகராறு செய்ற பார்ட்டியோட கூட்டாக்கும் ? உருப்படாப்பலதான்.

பயப்படாதே.. அதனாலதான் இ.தி.க வையும் சேர்த்திருக்கு. சே.ப.க வை சமாளிச்சுடலாம்.

எப்படி பிரிக்கப் போறீங்க ?

செலவை சமமா பிரிச்சுக்கிறதாலே, எதுவானாலும் சமாமாதான் பங்கு.

எனாமோ சோம்பேறிக் கூட்டமெல்லாம் ஒண்ணா சேர்ந்து கூத்தடிக்கறீங்க.

உழைக்காம நாலு காசு பார்க்கலாம்னுதான்

எப்ப ரிசல்ட்’டாம் ?

முன்ன மாதிரி இல்ல, இப்ப எல்லாம் ஒரு நாள்ல தெரிஞ்சுடும். அடுத்தமாசாம் 10ம் தேதி முடிவா தெரிஞ்சுடும்.

இதை ஒரு தொழிலாவே பண்ணறீங்க.. கஷ்டம். பாவம் ஏழை ஜனங்க.

பின்னே லட்சம், கோடின்னு வேற எதிலே சுலபமா சம்பாதிக்க முடியுமாம், சொல்லேன்.

கிழிஞ்சுது முடிவு தெரியற வரைக்கும் எல்லாம் ஒத்துமையா இருப்பீங்க, அப்புறம் எல்லாம் புஸ்ஸூன்னு போயிடும்.

‘நீ வாய வைச்சுத் தொலைக்காதே. ஆயிரம் சாமியை வேண்டிட்டு நான், சேத்துப்பட்டு ப.கணபதி, இந்திராநகர் தி.கருப்புசாமி மூணு பேரும் கூட்டணியா சேர்ந்து மகாநதி லாட்டரி ஏஜென்ஸி டிக்கெட் வாங்கியிருக்கோம். மே எட்டாம் தேதி குலுக்கல். அதிருஷ்டம் அடிச்சா ஒரு கோடியே ஐம்பது லட்சம் குலுக்கல். மூணு பேரும் சமமா பிரிச்சிட்டா கூட லட்சக்கணக்கிலே தேறும். விழுந்தா இதைச் செய்யலாம் இப்பவே ஒரு ஐடியா

பண்ணி பேசிக்கதிலே என்ன தப்பு ? தொடர்ந்து வெறியோட வாங்கிட்டேயிருக்கேன்.. எப்பயாவது ‘லக்’ அடிக்காமலா போயிடும், பார்ப்போம்.

– ஆகஸ்ட் 05, 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *