ஒன்றே ஒன்று கேட்கணும்! – ஒரு பக்க கதை

 

ஒரே பரபரப்பாக இருந்தது வெங்கடாச்சலம் இல்லம்.

“ஏங்க சாயங்காலத்துக்கு டிபன் சொல்லிட்டீங்களா? ராகுகாலத்துக்கு முன்னாடியே வந்துருவாங்களா?’

பாக்கியம் பூக்கட்டிக் கொண்டே தங்கள் பொண்ணை பெண் பார்க்க வரும் மகிழ்ச்சியில் விசாரித்துக் கொண்டிருந்தார்.

“என்ன பாக்கியம், ஏற்பாடெல்லாம் ஒரே தடபுடலா இருக்கே? பெண் பார்க்க வரும் போதே இவ்ளோ கவனிப்பா?’ என்று பக்கத்து வீட்டு பெண்மணி கேட்டாள்.

“ம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சும்மாவா, மூணு அடுக்கு மாடி வீடு இருக்கு. கார் இருக்கு, காம்ப்ளக்ஸ் இருக்கு, கை நிறைய சம்பாதிக்கிறார்… அவங்கள நல்லா கவனிக்க வேண்டாமா?’ என்று பெருமை பேசினாள் பாக்கியம்.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்தார்கள்.

பெண்மைக்குரிய அனைத்து அழகும் அமைய பைரவி சபைக்கு வந்து நின்றாள். மாப்பிள்ளையையும் பெண்ணையும் தனியாக பேச அனுமதித்தார்கள்.

அவன் பைரவியிடம் நிறைய கேள்விகள் கேட்டான்.

அனைத்திலும் பணச்செருக்கு தெரிந்தது. பதிலுக்கு அவள் ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்.

“எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. நாம் இருவரும் எச்.ஐ.வி. டெஸ்ட் செய்து கொண்டு விருப்பத்தை வீட்டில் சொல்வோமா?’ என்றாள். அவன் திடுக்கிட்டான்.

வீட்டிற்குச் சென்றவன் இரண்டு நாட்களில் “பெண்ணைப் பிடிக்கவில்லை’ என்றான். இதைக்கேட்ட பாக்கியம் பைரவியிடம் “தனியாக என்னடி பேசி தொலச்ச? உன் வாய்க் கொழுப்புனால வீணாப் போகப் போறடி’ என்று திட்டித் தீர்த்தாள்.

சட்டென்று பைரவி முன்வந்து, “உங்க மாப்பிள்ளைகிட்ட வீடு இருக்கு, கார் இருக்கு, காம்ப்ளக்ஸ் இருக்கு, ஆனா ஒழுக்கம்?’

– மு. சிந்து தர்ஷினி (ஜூலை 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
பால்ய நண்பன் செல்வராஜைப் பார்த்து ஐந்து வருடமிருக்கும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கல்லூரியில் எனக்கு ரொம்ப நெருக்கம்.எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன் முகவரிச் சீட்டைக் காட்டி ஒருவரிடம் விசாரித்தேன். பக்கத்துச் சந்தைக் காட்டினார்.நல்ல வேளை செல்வராஜ் வீட்டில் இருந்தான். ஆர்வத்தோடு வந்து கைகளைப் பற்றிக் கொண்டான். ...
மேலும் கதையை படிக்க...
எல்லாரையும் போல காலையில் தன் உள்ளங்கை பார்த்துதான் கண்விழித்தான் விக்னேஷ். அப்போது தான் சட்டென்று நினைவுக்கு வந்தது நேற்று நிகழ்ந்த சம்பவம். அவனது வளர்ப்பு மாமாவின் சட்டென்ற மனநிலை மாற்றம். மனைவியை இழந்து பிள்ளையில்லாத அவருக்கு எல்லாமாக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்ட விக்னேஷை சட்டென்று ...
மேலும் கதையை படிக்க...
என்னப்பா ஆறுமுகம்! இந்த வாரமும் ஒம் பையன் சந்துரு, ஊருக்கு வரலையாக்கும்?" என்றவாறு எதிர் சோபாவில் வந்தமர்ந்தார் கந்தசாமி. "இல்லப்பா" ஆறுமுகத்தின் குரல் உற்சாகமின்றி இருந்தது. "அது சரி! ஒம் பொண்ணு சீதா வந்திருக்காளா?" என்று ஆறுமுகம் பதில் கேள்வி எழுப்பினார். "இல்லை" என்பதை உதட்டை ...
மேலும் கதையை படிக்க...
காலை ஆறு மணி. அலாரம் அடித்தவுடன் அஜயின் தூக்கம் லேசாக கலைந்தது. வீட்டு கூடத்தில் அவன் அம்மாவும், அப்பாவும் எதோ பேசி கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது. "தஞ்சாவூரிலிருந்து வந்த ஜாதகம் நம்ம அஜய்க்கு பொருந்தியிருக்கு. பொண்ணு படிச்சிருக்கு, நல்ல வேலை. எங்க ...
மேலும் கதையை படிக்க...
முதலில் கடித்தது தும்பு இலையான். தும்பு இலையான் உண்மையில் கடிக்காது, முட்டைதான் இடும். என்னுடைய மகள் கைக்குழந்தை. அவள் தோள்மூட்டில் முட்டையிட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்துக்குள் புகுந்து வளர ஆரம்பித்தது. சருமம் வீங்கி குழந்தை நிறுத்தாமல் அழுதது. நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து ...
மேலும் கதையை படிக்க...
புருஷ லட்சணம் – ஒரு பக்க கதை
ஷாக்
வரம் வேண்டுமே!
கனவு கலைந்தது
உடனே திரும்பவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)